ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2011




வெள்ளிமேடை منبر الجمعة

தமிழ் பேசும் நிலமெங்கும் தரமான ஜும்ஆ உரைகள்







வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி







Thursday, August 11, 2011திரும்பிப்பார்

Labels: திரும்பிப்பார்









يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا تُوبُوا إِلَى اللَّهِ تَوْبَةً نَصُوحًا عَسَى رَبُّكُمْ أَنْ يُكَفِّرَ عَنْكُمْ سَيِّئَاتِكُمْ وَيُدْخِلَكُمْ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ يَوْمَ لَا يُخْزِي اللَّهُ النَّبِيَّ وَالَّذِينَ آمَنُوا مَعَهُ نُورُهُمْ يَسْعَى بَيْنَ أَيْدِيهِمْ وَبِأَيْمَانِهِمْ يَقُولُونَ رَبَّنَا أَتْمِمْ لَنَا نُورَنَا وَاغْفِرْ لَنَا إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ(8)

ஒரு பகுதி ரமலான் முடிந்து விட்ட்து.





இப்போது தான் பிறை பார்த்தோம் அதற்குள் இரண்டு ஜும் ஆக்கள் முடிந்து விட்டன.





நமது வாழ்வு எவ்வளவு வேகமாக கடந்து செல்கிறது என்பதை ரமலான் அப்பட்டமாக உணர்த்துகிறது.





ஒரு நாளின் / ஒரு மாதத்தின் தொடக்கத்தையும் இறுதியையும் அடிக்கடி கணக்கு கூட்டி சரி பார்ப்பவரே வெற்றி கரமான வியாபாரியாகிறார்.





சிறந்த நிர்வாகிகள் நிர்வாகத்தின் நடவடிக்கையை கலாண்டுக்கு ஒரு தடவை சரி பார்த்து தவறுகள் இருப்பின் உடனடியாக திருத்திக் கொள்ள முயற்சி செய்கிறார்கள். அறிவுறுத்துகிறார்கள்.





தோல்வி அடையாமல் இருக்கவும். ஒரு வேளை தோல்வி அடைந்திருந்திருந்தால் அதன பாதிப்பை குறைக்கவும் தேவையான ஏற்பாடு என நிர்வாக இயல் இதை புகழ்கிறது.





ஈமனிய வாழ்க்கைகைகும் இத்தகைய திரும்பிப்பார்தல் அவசியம், ஈமானை பாதுகாக்கவும் தக்கவைக்கவும் இது அவசியம்





ரமலானின் நடுப்பகுதியை மன்னிப்பிற்குரியது என்று சொன்ன பெருமானார் (ஸல்) அவர்கள் மன்னிப்புக் கேட்பது பற்றி யோசிக்கத் தூண்டுகிறார்கள்.





ரமலானில் அல்லாஹ் மக்களுக்கு மன்னிப்பை வாரி வழங்குகிறான்.

من صام رمضان إيماناً واحتساباً غفر له ما تقدم من ذنبه - صحيح البخاري

ரமலானின் நடுப்பகுதியில் அந்த மன்னிப்பு இன்னும் நிறையக் கிடைக்கும்.





தவறு செய்வது இயல்பு, அதற்கு மன்னிப்பு பெற முயற்சிப்பது புத்திசாலித்தனம்

எவ்வளவு பெரிய நிலையிலும் மனிதன் தவறு செய்கிறான். மன்னிப்புக் அவனை பாதுகாக்கிறது.

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ لَوْ كَانَ لِابْنِ آدَمَ وَادٍ مِنْ ذَهَبٍ أَحَبَّ أَنَّ لَهُ وَادِيًا آخَرَ وَلَنْ يَمْلَأَ فَاهُ إِلَّا التُّرَابُ وَاللَّهُ يَتُوبُ عَلَى مَنْ تَابَ - مسلم





இன்றைய நிர்வாகப் படிப்பு இப்படிச் சொல்கிறது





· தவ்று செய்து விட்டீர்களா? யோசிக்கவே செய்யாதீர்கள்! மன்னிப்புக் கேடு விடுங்கள்.

· அது உங்களுக்கு கீழே வேலை செய்ப்வரிடமாக இருந்தாலும் சரி.

· இதில் உங்களது அந்தஸ்து உயரவே செய்யும் , மற்றும் உறவு சீராகும்





மனிதர்களிட்த்திலே இப்படி என்றால் அல்லாஹ்விடம் ?





அல்லாஹ் மன்னிப்பை வாரி வழங்குபவன் – கோபிப்பதை விட மன்னிப்பதையே அவன் விரும்புகிறான்





عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِيمَا يَحْكِي عَنْ رَبِّهِ عَزَّ وَجَلَّ قَالَ أَذْنَبَ عَبْدٌ ذَنْبًا فَقَالَ اللَّهُمَّ اغْفِرْ لِي ذَنْبِي فَقَالَ تَبَارَكَ وَتَعَالَى أَذْنَبَ عَبْدِي ذَنْبًا فَعَلِمَ أَنَّ لَهُ رَبًّا يَغْفِرُ الذَّنْبَ وَيَأْخُذُ بِالذَّنْبِ ثُمَّ عَادَ فَأَذْنَبَ فَقَالَ أَيْ رَبِّ اغْفِرْ لِي ذَنْبِي فَقَالَ تَبَارَكَ وَتَعَالَى عَبْدِي أَذْنَبَ ذَنْبًا فَعَلِمَ أَنَّ لَهُ رَبًّا يَغْفِرُ الذَّنْبَ وَيَأْخُذُ بِالذَّنْبِ ثُمَّ عَادَ فَأَذْنَبَ فَقَالَ أَيْ رَبِّ اغْفِرْ لِي ذَنْبِي فَقَالَ تَبَارَكَ وَتَعَالَى أَذْنَبَ عَبْدِي ذَنْبًا فَعَلِمَ أَنَّ لَهُ رَبًّا يَغْفِرُ الذَّنْبَ وَيَأْخُذُ بِالذَّنْبِ اعْمَلْ مَا شِئْتَ فَقَدْ غَفَرْتُ لَكَ





பாவ மன்னிப்பு கேட்பவர்கள் புன்னியவான்கள்

عَنْ أَنَسٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ كُلُّ ابْنِ آدَمَ خَطَّاءٌ وَخَيْرُ الْخَطَّائِينَ التَّوَّابُونَ – ترمذي

ஆணால் தவறை உணராதோர்

عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ الْعَبْدَ إِذَا أَخْطَأَ خَطِيئَةً نُكِتَتْ فِي قَلْبِهِ نُكْتَةٌ سَوْدَاءُ فَإِذَا هُوَ نَزَعَ وَاسْتَغْفَرَ وَتَابَ سُقِلَ قَلْبُهُ وَإِنْ عَادَ زِيدَ فِيهَا حَتَّى تَعْلُوَ قَلْبَهُ وَهُوَ الرَّانُ الَّذِي ذَكَرَ اللَّهُ كَلَّا بَلْ رَانَ عَلَى قُلُوبِهِمْ مَا كَانُوا يَكْسِبُونَ قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ- ترمذي

மன்னிப்புக் கோரும்படி பெருமானாரின் வலியுறுத்தல்

عَنْ ابْنَ عُمَرَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَا أَيُّهَا النَّاسُ تُوبُوا إِلَى اللَّهِ فَإِنِّي أَتُوبُ فِي الْيَوْمِ إِلَيْهِ مِائَةَ مَرَّةٍ – مسلم 4871

ஒரு மனிதன் தவ்பா கேட்கிற போது அல்லாஹ்விற்கு ஏற்ப்டும் மகிழ்ச்சி





عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَلَّهُ أَشَدُّ فَرَحًا بِتَوْبَةِ أَحَدِكُمْ مِنْ أَحَدِكُمْ بِضَالَّتِهِ إِذَا وَجَدَهَا –









َ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ التَّائِبُ مِنْ الذَّنْبِ كَمَنْ لَا ذَنْبَ لَهُ – إبن ماجة

மனிதனின் மன்னிப்பை பெற பெரு முயற்சி தேவை. அப்படியே மன்னித்தாலும் முழு மனதுடனான மன்னிப்பா என்பது சந்தேகமாகவே இருக்கும்









மன்னிப்பு கோருவதற்கான கால அவகாசம் நிறைய உண்டு





عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ تَابَ قَبْلَ أَنْ تَطْلُعَ الشَّمْسُ مِنْ مَغْرِبِهَا تَابَ اللَّهُ عَلَيْهِ - مسلم









عَنْ ابْنِ عُمَرَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ اللَّهَ يَقْبَلُ تَوْبَةَ الْعَبْدِ مَا لَمْ يُغَرْغِرْ - ترمذي

ஆனால் நமக்குள்ள வாய்ப்பை தவற விட்டு விடக் கூடாது.





அல்லாஹ்வின் மன்னிப்ப்பை பெற சிறு முயற்சி போதும்





عَنْ أَبِي سَعِيدٍ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ قَالَ حِينَ يَأْوِي إِلَى فِرَاشِهِ أَسْتَغْفِرُ اللَّهَ الْعَظِيمَ الَّذِي لَا إِلَهَ إِلَّا هُوَ الْحَيَّ الْقَيُّومَ وَأَتُوبُ إِلَيْهِ ثَلَاثَ مَرَّاتٍ غَفَرَ اللَّهُ لَهُ ذُنُوبَهُ وَإِنْ كَانَتْ مِثْلَ زَبَدِ الْبَحْرِ وَإِنْ كَانَتْ عَدَدَ وَرَقِ الشَّجَرِ وَإِنْ كَانَتْ عَدَدَ رَمْلِ عَالِجٍ وَإِنْ كَانَتْ عَدَدَ أَيَّامِ الدُّنْيَا – ترمذي





மன்னிப்புக் கேட்பது எப்படி?





நம்மில் பலரது நினைப்பு நான் எதுக்காக மன்னிப்புக் கேட்கனும் என்பது போல இருக்கிறது.





முதலில் தவறுகள் பாவங்களைப் பற்றிய பிரக்ஞை வேண்டும். அதுவே

மன்னிப்பை தேடிய மேற்கொள்ளும் ஒரு சரியான முயற்சியாகும்





عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ كَانَ فِي بَنِي إِسْرَائِيلَ رَجُلٌ قَتَلَ تِسْعَةً وَتِسْعِينَ إِنْسَانًا ثُمَّ خَرَجَ يَسْأَلُ فَأَتَى رَاهِبًا فَسَأَلَهُ فَقَالَ لَهُ هَلْ مِنْ تَوْبَةٍ قَالَ لَا فَقَتَلَهُ فَجَعَلَ يَسْأَلُ فَقَالَ لَهُ رَجُلٌ ائْتِ قَرْيَةَ كَذَا وَكَذَا فَأَدْرَكَهُ الْمَوْتُ فَنَاءَ بِصَدْرِهِ نَحْوَهَا فَاخْتَصَمَتْ فِيهِ مَلَائِكَةُ الرَّحْمَةِ وَمَلَائِكَةُ الْعَذَابِ فَأَوْحَى اللَّهُ إِلَى هَذِهِ أَنْ تَقَرَّبِي وَأَوْحَى اللَّهُ إِلَى هَذِهِ أَنْ تَبَاعَدِي وَقَالَ قِيسُوا مَا بَيْنَهُمَا فَوُجِدَ إِلَى هَذِهِ أَقْرَبَ بِشِبْرٍ فَغُفِرَ لَهُ





இந்த ஆண்டு நான் என்ன தவறுகள் செய்தேன் என்று ஒரு பட்டியலை மனதுக்குள் தயார் செய்து கொண்டால்





இறவனிடம் கண்ணீர் பொங்க கையேந்துகிற மனோ நிலை தானாக வரும்.





இந்த ரமலானில் வாழ்க்கையின் கசப்பான பகுதிகளை கொஞ்சம் திருப்பிப்பாருங்கள்,, அல்லாஹ்வின் முன்னிலையில் அழுவதற்கான காரணங்கள் அடுக்கடுக்காக தோன்றும்





அந்தப் பாவங்களை எந்த மனிதனிடமும் சொல்லிப் புலம்ப வேண்டியதில்லை. சொல்லக் கூடாது.





அல்லாஹ்விடம் முறையி வேண்டும்.





எப்படி முறையிட வேண்டும்





செய்வதையெல்லம் செய்து விட்டு கங்கையில் குளித்து விட்டால் பாவம் போய்விடும் என்று இந்து மதம் சொல்கிறது. ஊரைக் கொள்ளை யடித்து சாமி உண்டியலில் காணிக்கை போட்டு விட்டால் போதும் என்று ஆசாமிகள் நினைக்கிறார்கள்.





நீ செய்கிற பாவத்திற்கெல்லாம் சேர்த்து இயேசு சிலுவையில் அறையப் பட்டு விட்டார். அதனால பாதிரியாரிடம் பாவத்தை சொல்லி மன்னிப்பை பெற்றுக் கொள் என்று கிருத்துவம் சொல்கிறது.





பெரும் பாவத்திற்கு தண்டனை மரணமே என்று யூத மதம் சொல்கிறது.





இவை எதுவும் தவ்று செய்யும் மனிதனை திருத்தவோ, அவனுக்கு உணர்த்தவோ அவனை மீட்சி பெறச் செய்வதாகவோ இல்லை.





பாவ மன்னிப்பு பெறுவதற்கு இஸ்லாமிய வழிகாட்டுதல் அற்புதமானது.





قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ النَّدَمُ تَوْبَةٌ -– إبن ماجة

பாவமன்னிப்புக்கோரும் இஸ்லாமின் வழி

· தவ்றுகளிலிருந்து விலக வேண்டும்

· செய்த்த்து தவ்று என்பதை உணர்ந்து வருந்த வேண்டும்

· இனி இந்த தவ்று செய்ய மாட்டேன் என்று உறுதியேற்க வேண்டும்





இதுவே தவ்பதுன்ன்ஸூஹா





இந்த மூன்று அம்சங்களும் இருந்தால் எந்த மனிதனிடமும் தன் பாவத்தை சொல்லி புலம் வேண்டியதில்லை. காசை கொட்டி செலவழிக்க வேண்டியதில்லை. உட்கார்ந்த இட்த்திலிருந்தே அல்லாஹ்வின் மன்னிப்பை அளவின்றி பெறலாம்.





வாய்ப்புக்க கிடைக்கிற போது அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளாவிட்டால் நாம் புத்திசாலிகளாக இருக்க முடியாது.





எச்சரிக்கை:





அல்லாஹ் மிக நல்லவன் அதே நேரம் மிக்க வல்லவனும் கூட

நம்மையே நமகெதிராக மாற்றும் சக்தி படைத்தவன்





பிர் அவ்னிடம் ஒரு தடவை – நானே எகிப்தின் அரசன் என்று ஒருத்தன் சொன்னால் என்ன செய்வது என்று கேட்கப்பட்ட்து. உயிரோடு அவனை கடலில் மூழ்கடிக்க வேண்டும் என்று அவன் சொன்னான். அவனது பதிலே அவனுக்கு வினையாக அமைந்த்து.





புனித மிக்க ரமலானில் நமது தவறுகளை எண்ணிப் பார்த்து அல்லாஹ்விடம் இறைஞ்சுவோம். கருணை மிக்க ரஹ்மான் நமது தவறுகளை சரி செய்ய போதுமானவன்.

























Posted by கோவை அப்துல் அஜீஸ் பாகவி at 1:52 PM 0 comments

Older Posts Home

Subscribe to: Posts (Atom) அன்பிற்கினிய ஆலிம் நண்பர்களே!





பதிவிறக்கம்

ஈ கலப்பை

தழிழ் எழுத்துருக்கள்

Audio

பராஅத் இரவுச் சொற்பொழிவு 2010

ஜும்ஆ பயான்கள்

சிறப்புச் சொற்பொழிவுகள்

புதியவை



மேலதிக தகவல்கள்

நோன்பின் மருத்துவக் குணங்கள்.

நீரிழிவு நோயாளர்களும் ரமழான் நோன்பு பிடித்தலும்

நோன்பின் சில முக்கிய சட்டங்கள்

بعض أحكام الصيام

அருளிறங்கும் பருவ காலம்

மற்ற தலைப்புக்கள்

அதிகப்பட்ச பொறுமை தேவை

அரபு நாடுகளில் தொடரும் கிளர்ச்சி

அருளிரங்கும் பருவ காலம்

அர்த்தமுள்ள புத்தாண்டுக் கொண்டாட்டம்

அல்லாஹ்வின் உதவியோடு அபாரமான மீட்பு

அல்லாஹ்வின் நிழலில்

அழிவு தரும் தெளிவு

இறைநேசர்ளை நேசிப்போம் வாசிப்போம்

இஸ்லாமிய தண்டனை வேண்டும்

இஸ்லாம் விளையாட்டுக்களுக்கு எதிரானதா?

உலக நாகரீகத்தின் தந்தை

கடை பிடிக்க வேண்டிய பெருமானாரின் பண்புகள்

கோடை விடுமுறை

சாலை விழிப்புணர்வு

ஜனநாயகம் சீர் செய்யப் பட வேண்டும்

தலாக விளையாட்டல்ல..

நமது கலாச்சாரம்

நல்லதொரு குடும்பம்

நீர் நிவாகம்

பதற வைக்கும் பெண்குழந்தை படுகொலை..

பத்ரின் அரசியல்

பத்ரின் வரலாறு

பெருநாள் சிந்தனை

பெருமைக்குரிய பெருமானார் (ஸல்)

மக்காவின் மாண்பு

மரியாதை மிக்க அன்பு வேண்டும்

வரலாற்று நாயகர் பெருமானார் (ஸல்)

ஷஹீத உஸாமா

ஹஜ் மீண்டும் மீண்டும்

மற்ற தலைப்புக்கள்

Aug (2)

Jul (5)

Jun (6)

May (4)

Apr (5)

Mar (5)

Feb (4)

Jan (4)

Dec (5)

Nov (6)

Oct (5)

Sep (6)

Aug (8)

இணைப்புக்கள்

திருக்குர்ஆன் திலாவத், கிராஅத், தர்ஜமா

ஸஹீஹுல் புகாரி தமிழ் - ரஹ்மத் பதிப்பகம்

azeezbaqavi

إمام المسجد

LIBAS

செய்திகள்

வருகை

19518 உடன்வருவோர்



பகிர்ந்து கொள்ளவும்



உங்கள் கருத்து













Simple template. Template images by luoman. Powered by Blogger.





வேதங்களில் இறைக்கோட்பாடு

இஸ்லாமும் இந்துமதமும் ஓர் ஒப்பீடு
 
வேதங்களில் இறைக்கோட்பாடு
ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்கள் இந்து மதத்தின் மிகப் புனித வேதங்களாகும்.
 
"ந தஸ்ய ப்ரதிமா அஸ்தி" அவனை உருவகிக்க முடியாது, அவன் தான் தோன்றி. நமது வணக்க வழிபாடுகளுக்கு தகுதியுள்ளவன். உருவமற்ற அவனின் கீர்த்தி மிகப்பெரிது. வானில் உள்ள அத்தனை கோள்களின் இயக்கங்களையும் தன்னகத்தே வைத்துள்ளவன். (தேவிசந்த் - யஜூர் வேதம் பக்கம் 377)

அவன் உருவமற்றவன். தூய்மையானவன். ஓளிமயமான உருவமற்ற, காயமற்ற, பாவங்களற்ற, தூய்மையான பாவங்கள் அண்டாத ஞான வடிவானவன். அவன் நித்திய ஜீவன். 40:8
(யஜீர்வேத சம்ஹிதா- ரால்ப் T.H. கிரிப்ட் பக்கம் 538)
 
"அன்தாதம் ப்ரவிசன்த்தியே அசம்புத்தி முபாஸ்தே" இயற்கைப் பொருட்களை வணங்குவோர் இருளில் புகுவர் (காற்று, நீர், நெருப்பை வணங்குவோர்) அவர்கள் மேலும் இருளில் மூழ்குவர். எவர் படைக்கப்பட்ட பொருளை வணங்குகிறாரோ (மரம் சூரியன், சிலை வணங்குவோர்) இருளில் மூழ்குவர். 40:9
(யஜீர்வேத சம்ஹிதா- ரால்ப் வு.ர். கிரிப்ட் பக்கம் 538)
 
அதர்வண வேதம் (20:58:3)(புத்தகம் 20, அத்தியாயம் 58, சுலோகம் 3)
'தேவ் மஹா ஓசி" கடவுள் மகா பெரியவன்
 
குர்ஆன் கூறுகிறது:
 
...அவன் மிகவும் பெரியவன் மிகவும் உயர்ந்தவன் (13:9)
 
மிகப் பழம்பெரும் வேதம், ரிக்வேதம் கற்றறிந்த துறவிகள் ஓரிறையை பல பெயர் கொண்டு அழைத்தனர். அவர்கள் கடவுளை வருணன், இந்திரன், மித்திரன், சூரியன், அக்னி என பல பெயர்களில் அழகுபட அழைத்தனர். இவை அனைத்தும் அவனின் தன்மைகளை சிறப்பை உணர்த்துவதாக இருந்தன. கடவுளின் 33 தன்மைகளை ரிக் வேதம் குறிப்பிடுகிறது. அதில் ஒரு தன்மை பிரம்மா(படைப்பவன்) என்ற தன்மையை 2:1:3ல் குறிப்பிடுகிறது. 
 
குறிப்பு: இஸ்லாம் படைக்கும் தன்மையை "காலிக்" எனக் கூறுகிறது. ஆனால் சிலர் கூறுகிற பிரம்மாவுக்கு 4-தலைகளும் 4-கைகளும் உண்டு, என்ற இத்தோற்றத்தை உருவகத்தை இஸ்லாம் மறுக்கிறது. மேலும் யஜூர் வேதத்தின் 32:3-ன் கூற்றுப்படி ''அவனை உருவகிக்க முடியாது" என்ற சுலோகத்ததுக்கும் ப்ரம்மாவுக்கு 4-தலைகளும், 4-கைகளும் உள்ளன என்ற வாதம் முரண்படுகின்றது.
 
ரிக் வேதம் (2:2:3)
விஷ்ணு-பாதுகாப்பவன், உணவளிப்பவன் எனும் கடவுளின் தன்மையைக் கூறுகிறது. இஸ்லாம் இத்தன்மையை ''ரப்" என அரபியில் அழகுபட கூறுகிறது. ஆனால் சிலர் கூற்றுப்டி விஷ்ணு 4 கரங்களைக் கொண்டவன் ஒரு கையில் சக்கரம் மற்றொரு கையில் சூலம், பறவையை வாகனமாய் கொண்டவன் ன்று உருவகப்படுத்துவதை இஸ்லாம் மறுக்கிறது.
 
குறிப்பு:- யஜூர் வேதத்தின் 40:8ன் படி அவன் உருவமற்றவன் என்ற விளக்கத்திற்கு முரணானது.
 
ரிக் வேதம் (8:1:1)
''மா சிதான்யதியா ஷன்ஸதா" அவனையன்றி யாரையும் வணங்காதீர்கள், அவன் மட்டுமே வணக்கத்திற்குரியவன்.
 
(ரிக் வேத சம்ஹிதி 9-ம்பாகம், பக்கம் 1, 2 சத்ய ப்ரகாஷ் சரஸ்வதி)
 
ரிக் வேதம் (5:81:1)
படைக்கும் அவன் மிகப்பெரும் கீர்த்தியாளன்.
(ரிக்வேத 6-ம்பாகம், பக்கம் 1802, 1803 சத்ய ப்ரகாஷ் சரஸ்வதி)
 
குர்ஆன் கூறுகிறது: (அவன்) அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் (1:2)

ரிக் வேதம் (3:34:1)
கடவுள் மிகப்பெரும் கொடைத் தன்மை கொண்டவன் எனக் கூறுகிறது.
 
குர்ஆன் கூறுகிறது: (அவன்) அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் (1:2)
 
யஜூர் வேதத்தின் (40:160)
எங்களை நல்வழியில் செலுத்து. எங்களின் பாவங்களைப் போக்கு, பாவங்கள் நரகில் சேர்க்கும் ''யஜூர் வெது சம்ஹிதி-ராலப்" (யஜீர்வேத சம்ஹிதி- ரால்ப் T.H.  கிரிப்ட் பக்கம் 541)
 
குர்ஆன் கூறுகிறது: நீ எங்களை நேர்வழியில் நடத்துவாயாக!, அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி. (அது) உன் கோபத்திற்கு ஆளானோர் வழியுமல்ல. நெறி தவறியோர் வழியுமல்ல. (குர்ஆன் 1:5, 6&7)
 
ரிக் வேதம் (6:45:16)
 
''யா எக்கா இட்டமுஸ்ததி" தனித்தவனான இணையற்ற அவனுக்கு எல்லாபுகழும்.

 
''ஏகம் ப்ரஹம் த்வித்ய நாஸ்தே எநன் நா நாங்தே கின்சான்" கடவுள் ஒருவனே, இருவர் இல்லை, இல்லவே இல்லை! இல்லவே இல்லை. சிறிது கூட இல்லை!
  
ஆக இந்துப் புனித வேதங்கள், புராணங்களைக் கற்றறிந்தால் கூட ஓரிறைக் கொள்கை உறுதியாகக் கூறப்பட்டதை நன்கு உணரலாம்.

மலக்குகள் அல்லது தேவதூதர்கள் (ANGELS)    
 
மலக்குகள் என்பவைஅல்லாஹ்வின் படைப்பினங்களில் ஒன்று. ஒளியினால் படைக்கப்பட்டவை. நம்மால் காணவியலாது. தங்களின் விருப்பப்படி எதுவும் செய்வதில்லை. அல்லாஹ்வின் கட்டளைக்கு அப்படியே அடிபணியக்கூடியவை. பல்வேறுப்பட்ட காரியங்களுக்காக அவற்றை நிறைவேற்ற அல்லாஹ்வால் பணிக்கப்பட்ட மலக்குகள் உள்ளன.

உதாரணம்:
ஜிப்ராயீல்(அலை)-வஹீ என்னும் இறைச் செய்திகளை கொண்டு வரும் மலக்கு
மீக்காயீல்(அலை)-மழை கொண்டு வரும் மலக்கு
 
மலக்குகளுக்கு என்று எந்த கோட்பாடும் இல்லை. இருப்பினும் இவை மனிதர்களைக் காட்டிலும் மிகப் பலம் வாய்ந்தவை. மலக்குகளை சிலர் தெய்வங்களாக வழிபடுவதுமுண்டு.
 

கஸ்ருத் தொழுகை - தூரம், காலம்

கஸ்ருத் தொழுகை - தூரம், காலம்


அஸ்ஸலாமு அலைக்கும்

நான் குடும்பத்துடன் இப்போது (UNHCR இல் பதிந்து மூன்று மாதங்கள்) துர்கியில் நான்கு மாதங்கள் அகதியாக இங்கிலாந்து போவதற்காக வந்துள்ளேன் நான் இது வரையிலும் சுருக்கி தொழுது வருகிறேன் இங்கு இன்னும் எவ்வளவு காலம் இருக்க வேண்டும் என்பதை அல்லாஹ் தான் அறிவான் எனது வினா எங்களுக்கு சுருக்கி தொழுவதற்குரிய கால எல்லை உண்டா? அல்லது தொடர்ந்தும் தொழலாமா( UK) போகும் வரை. குர்ஆன் ஹதீஸ் லிருந்து பதில் தரவும்.

Nasoordeen Seyed
.............................

ஜம்வு - கஸ்ர் விஷயத்தில் சற்று தடுமாற்றமான நிலையே நம் மக்களிடம் நீடிப்பதால் இது குறித்து கொஞ்சம் விரிவாகவே நாம் தெளிவுப் பெற வேண்டியுள்ளது.

முதலில் எவ்வளவு சென்றால் சுருக்கித் தொழலாம் என்பதை எடுத்துக் கொள்வோம்.

இதற்கு பரவலான மாறுபட்ட அபிப்ராயங்கள் நிலவுகின்றன. சிலர் 48 கி-மி, சிலர் 25 கி-மீ, வேறு சிலர் 8 கி-மீ என்று கருத்தை முன் வைக்கிறார்கள்.

அதிகப்படியான தொலைவை காரணமாக்கக் கூடியவர்கள் எடுத்துக் காட்டும் ஆதாரம் என்ன?

இப்னு உமர்(ரலி), இப்னு அப்பாஸ்(ரலி) ஆகியோர் நாற்பத்தெட்டு மைல் தொலைவிற்குப் பயணம் செய்யும்போது கஸ்ருச் செய்பவர்களாகவும் நோன்பை விடுபவர்களாகவும் இருந்தனர். (புகாரி)

இந்த செய்தி நபித்தோழர்களின் சொந்த முடிவாகத்தான் அறிவிக்கப்பட்டுள்ளதே தவிர இதற்கு நபிவழியிலிருந்து எந்த ஆதாரத்தையும் எடுத்துக் காட்டவில்லை என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

25 கிமீ - 8 கிமீ எது சரி?
இருபத்தி ஐந்து கிலோ மீட்டர் என்று முடிவு செய்பவர்களும் - எட்டு கிலோ மீட்டர் என்று முடிவு செய்பவர்களும் ஒரு ஹதீஸையே தங்களுக்கு ஆதாரமாகக் கொள்கிறார்கள்.

'நபி(ஸல்) பிரயாணத்தில் கஸ்ர் செய்து தொழுதார்கள்' என்ற ஒரு செய்தி முஸ்லிமில் ஆதாரப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த செய்தியை நபித்தோழரிடமிருந்து கேட்டு அறிவிக்கும் அறிவிப்பாளர் நபி(ஸல்) மூன்று பர்ஸக்கில் கஸ்ர் செய்தார்களா.. ஒரு பர்ஸக்கில் கஸ்ர் செய்தார்களா.. என்பதை நான் மறந்து விட்டேன் என்று கூறியுள்ளார்.

 إن رسول الله صلى الله عليه وسلم إذا خرج ثلاثة أميال أو ثلاثة فراسخ صلى ركعتين

எவ்வளவு தூரம் என்பதில் சந்தேகம் வந்து விட்டதால் கருத்து வேறுபாடு தவிர்க்க முடியாமல் போய் விட்டது. நவவி இமாம் போன்றவர்கள் பேணுதல் அடிப்படையில் அதிகப்படியான தூரத்தையே எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற கருத்தை முன் வைத்துள்ளார்கள். 1 பர்ஸக் என்பது சுமார் 8 கிலோமீட்டர் அளவைக் கொண்டதாகும். 3 பர்ஸக் 24 கிமீயை உள்ளடக்குவதால் அந்த அளவிற்கு பயணம் செல்பவர்கள் கஸ்ர் செய்யலாம் என்பது அவர்களின் அபிப்ராயம்.

அந்த செய்தியில் ஒரு பர்ஸக் என்ற தூர அளவும் முன் வைக்கப்பட்டுள்ளதால் இஸ்லாம் இலகுவானது என்ற அடிப்படையில் அதை எடுத்துக் கொள்ளலாம் என்பது சிலரது அபிப்ராயம்.

இதில் இரண்டாவது அபிப்ராயமே (அதாவது 1 பர்ஸகில் கஸ்ர் செய்யலாம் ) நமக்கு சரியாகத் தெரிகிறது. இதற்கு காரணம் உண்டு.

குறைவான தூர அளவை எடுத்துக் கொள்ளலாம் என்பதற்கு கிடைக்கக் கூடிய கூடுதல் ஆதாரங்கள்.

நாம் நபி(ஸல்) அவர்களுடன் லுஹர்த் தொழுகையை மதீனாவில் நான்கு ரக்அத்களாகத் தொழுதோம். பின்னர் துல்ஹுலைஃபாவில் அஸர் தொழுகையை இரண்டு ரக்அத்களாகத் தொழுதோம். (அனஸ்(ரலி) புகாரி - முஸ்லிம் - திர்மிதி).

மதீனா வழியாக மக்காவிற்கு உம்ரா - ஹஜ் செய்ய செல்பவர்களுக்கு உள்ள (மீக்காத்) இஹ்ராம் எல்லை துல்ஹூலைபாதான். இது மதீனாவிலிருந்து ஏறத்தாழ எட்டு கிமீ தூரத்தில் உள்ளது.

ஒரு பர்ஸகில் கஸ்ர் செய்யத் துவங்கலாம் என்பதற்கு இந்த செய்தி வலுவான ஆதாரமாக உள்ளது.

தொழுகை ஆரம்பத்தில் இரண்டு ரக்அத்களாகத்தான் கடமையாக்கப்பட்டது. பயணத் தொழுகை அவ்வாறே நீடித்தது. (சொந்த) ஊரில் தொழும் தொழுகை (நான்கு ரக்அத்களாக) முழுமைப் படுத்தப்பட்டது. (ஆய்ஷா (ரலி) புகாரி - முஸ்லிம் - திர்மிதி)

உள்ளுரில் நான்கு ரக்அத் பிரயாணத்தில் இரண்டு ரக்அத் என்று தெளிவாக இந்த செய்தி அறிவிக்கின்றது. இதில் உள்ளுர் - பிரயாணம் என்று தெளிவாக குறிப்பிடப் பட்டுள்ளதால் பிரயாணம் கிளம்பி சொந்த ஊர் எல்லையை கடந்தவுடன் கஸ்ர் செய்யலாம் என்பதை சாதாரணமாக விளங்கலாம்.
இதற்கு கூடுதல் வலு சேர்ப்பதற்காக ' அல்லாஹ் உங்களுக்கு இலகுவையே நாடுகிறான்' என்ற குர்ஆன் வசனத்தையும் (2:183),

அலீ(ரலி) (வெளியூர்) புறப்பட்டுச் செல்லும்போது (உள்ளூரிலுள்ள) வீடுகள் கண்களுக்குத் தெரியும் போதே கஸ்ருச் செய்தார்கள். திரும்பி வந்தபோது 'இதோ கூஃபா வந்துவிட்டது' என்று அவர்களிடம் கூறப்பட்டது. அப்போது அவர்கள் 'இல்லை! நாம் ஊருக்குள் நுழையும் வரை (கஸ்ருச் செய்வோம்) என்று குறிப்பிட்டார்கள். (புகாரி) என்ற அலீ (ரலி) அவர்களின் செய்தியையும் யாராவது பொருத்திப் பார்த்தால் அவை இன்னும் கூடுதல் ஆதாரமாகும்.

3 பர்ஸக் கடந்த பிறகே நபி(ஸல்) கஸ்ர் செய்தார்கள் என்பதற்கு நாம் அறிந்த வரை எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. அப்படியே கிடைத்தாலும் அது நமது ஒரு பர்ஸக் என்ற அளவை இல்லாமலாக்கி விடாது. ஏனெனில் ஒரு பர்ஸக் என்பதற்குரிய ஆதாரங்களும் உள்ளன.

இனி கஸ்ர் தொழுகைக்கான கால அளவு என்ன என்பதைப் பார்ப்போம்.
இங்கும் பல கருத்தோட்டங்கள் இருக்கத்தான் செய்கின்றன.

இப்னு அப்பாஸ், அலி போன்ற நபித்தோழர்கள் மாறுபட்ட கருத்தில் இருக்கிறார்கள். இப்னு அப்பாஸ்(ரலி) பத்தொன்பது நாட்கள் என்ற கருத்திலும், அலி(ரலி) பத்து நாட்கள் என்ற கருத்திலும், இப்னு உமர்(ரலி) பதினைந்து நாட்கள் என்ற கருத்திலும் உள்ளார்கள். திர்மிதியின் பயணத் தொழுகைப் பாடத்தில் இந்த விபரங்களைப் பார்க்கலாம்.

இதில் பத்தொன்பது நாட்கள் என்ற முடிவிலிருக்கும் இப்னு அப்பாஸ் அவர்கள் அந்த முடிவுக்கு ஆதாரமாக ஒரு ஹதீஸையும் எடுத்துக்காட்டுகிறார்கள்.

மக்கா வெற்றியின் போது நபி(ஸல்) பத்தொன்பது நாட்கள் தங்கினார்கள். அப்போதெல்லாம் கஸ்ர் செய்தார்கள். (இதனால்) நாங்கள் பத்தொன்பது நாட்கள் கஸ்ர் செய்வோம் அதை விட அதிகமாக தங்கினால்  முழுமையாகத் தொழுவோம். (புகாரி - திர்மிதி - நஸயி).

ஆனாலும் இந்தச் செய்தியை வைத்து கஸ்ருக்குரிய நாட்கள் பத்தொன்பது தான் என்று முடிவு செய்ய முடியாது. ஏனெனில் நபி(ஸல்) மக்காவில் தங்கியது மொத்தம் பத்தொன்பது நாட்கள் தான். வெளியில் தங்கிய நாட்கள் முழுவதும் கஸ்ரு செய்துள்ளார்கள். இதிலிருந்து வெளியில் தங்கும் நாட்கள் (காலங்கள்) முழுதும் கஸ்ரு செய்யலாம் என்று தான் விளங்க முடியும்.

நபி(ஸல்) இருபது நாட்கள் தங்கி அதில் பத்தொன்பது நாட்கள் மட்டும் கஸ்ரு செய்திருந்தால் கஸ்ருக்குரிய கால அளவு பத்தொன்பது நாட்கள் தான் என்று முடிவு செய்வதில் மாற்று கருத்து எதுவுமிருக்காது. ஆனால் அப்படி நடக்கவில்லை. தங்கியதே மொத்தம் பத்தொன்பது நாட்கள் தான். தங்கிய காலம் முழுதும் கஸ்ரு செய்துள்ளார்கள்.

நபி(ஸல்) தபூக் போரின் போது அங்கு இருபது நாட்கள் தங்கினார்கள். தங்கிய காலம் முழுதும் கஸ்ரு செய்தார்கள் என்ற விபரம் 'நஸயி'ல் பதிவாகியுள்ளது.

பத்தொன்பது நாட்கள் என்ற முடிவை இந்த செய்தி மறுத்து விடுகிறது. இருபது நாட்கள் கஸ்ரு செய்த விபரம் கிடைத்தாலும் கஸ்ருக்குரிய காலம் இருபது நாட்கள் என்றும் முடிவு செய்ய முடியாது. இங்கும் தங்கிய காலம் முழுதும் கஸ்ரு செய்துள்ளதால் நாமும் அப்படித்தான் விளங்க வேண்டும்.

'அஜர்பைஜான்' என்ற சந்தைக் கூடும் பகுதிகளில் சில நபித்தோழர்கள் நான்கு மாதங்கள் கஸ்ரு செய்து தொழுதுள்ளார்கள் என்ற விபரம் 'பைஹகி' என்ற நூலில் கிடைக்கின்றது.  இது எல்லாவற்றையும் ஒருங்கிணைத்துப் பார்க்கும் போது 'இத்துனை நாட்கள் தான் கஸ்ரு செய்ய வேண்டும் என்று நபி(ஸல்) வரையறுத்து சொல்லாததாலும் அவர்கள் வெளியில் தங்கிய காலம் முழுதும் கஸ்ரு செய்து தொழுதுள்ளதாலும், உள்ளுர் - பிரயாணம் என்று ஆய்ஷா(ரலி) அறிவிக்கும் செய்தி பிரித்துக் கூறுவதாலும் பிரயாணத்தில் ஒருவர் எவ்வளவு காலம் தங்கினாலும் (அவர் விரும்பினால்) கஸ்ரு செய்து தொழுதுக் கொள்ளலாம் என்ற முடிவே சரியாகத் தெரிகிறது.

இதற்கு மாற்றமாக நாட்களை தீர்மானித்து வெளியிடப்பட்டுள்ள கருத்துக்கள் அனைத்திலும் ஆதாரங்களுக்கு மாற்றமாக அனுமானங்களே மிகைத்து நிற்கின்றன என்பதையும் சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.

கேள்விக் கேட்ட சகோதரர் வெளிநாட்டில் இருப்பதாலும், அதிலும் நிலையில்லாத தொடர் பயணமாக அது இருப்பதாலும் அவர் காலம் முழுவதும் தொழுகையை சுருக்கி - கஸ்ரு செய்து தொழுதுக் கொள்ளலாம்.

சென்னையிலிருந்து செங்கல்பட்டு செல்பவர் தினமும் பிரயாணி என்ற அந்தஸ்தில் இருப்பதால் அவர் (செங்கல்பட்டு சென்ற பிறகு அல்லது வழியில்) சுருக்கித் தொழுதுக் கொள்ளலாம். வெளிநாடுகளிலிருந்து  வருபவர்களுக்கும் இதுதான் பொருந்தும். (அல்லாஹ் மிக்க அறிந்தவன்.)

.நிஜாமுத்தீன் (ஜி என்)
http://tamilmuslimgroup.blogspot.com

தமிழ் யுனிகோட் டவுன்லோட்

நல்ல உடைகளே நல்ல கலாச்சாரம

நல்ல உடைகளே நல்ல கலாச்சாரம
மிஸ்பாஹி
 
 


அண்மையில் ஜெர்மனியிலும் பிரான்சிலும் ஹிஜாப் எனும் இஸ்லாமிய உடை அணிதலுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட சட்டங்கள் முஸ்லிம் பெண்களின் உடைநெறி சம்பந்தப்பட்ட கருத்துக்களை மீண்டும் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளது. இது சம்பந்தமாக பலவித விவாதங்களும் நடைபெருகின்றன. ஹிஜாப் என்பது இஸ்லாமிய மார்க்க கடமையா? அல்லது சுயவிருப்பின் பிரகாரம் அணியும் உடையா? இஸ்லாமிய உடைநெறி ஒரு குறிப்பான வடிவமைப்பை கருதுகிறதா? அல்லது எது கண்ணியமான உடையென கருதப்படுகிறதோ அதனை தன் விருப்பத்திற்கேற்ப தேர்ந்தெடுத்து அணியலாமா? எனப் பல கேள்விகளும் எழுப்பப்படுகின்றன.

ஹிஜாப் அல்லது ஹிஜாப் மற்றும் ஹிமார்(முக்காடு) என்பது இஸ்லாமிய கடமை அல்ல, மாறாக சுயவிருப்பின் பேரில் அணியும் உடையென முஸ்லிம்களில் சிலர் வாதிக்கின்றனர். பெண் கண்ணியத்தை பேணும் வகையில் இருக்குமேயானால் எவ்வித உடையையும் அணியலாம் என்பதே இவர்களின் வாதமாக இருக்கிறது. உதாரணமாக இஸ்லாம் குறித்த பல புத்தகங்களின் ஆசிரியரும், இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பின் (அல் இஹ்வானுல் முஸ்லிமூன்) ஸ்தாபகரின் சகோதரருமான எகிப்திய நாட்டைச் சார்ந்த கம்மல் பன்னா ''தலையை மறைத்தல் ஒரு கடமை அல்ல. இது குர்ஆன் தவறாக மொழிபெயர்க்கப்பட்டதன் விளைவாகும். ஹிஜாப் அணிவதோ அல்லது சிறு பாவாடை அணிவதோ தன் சுயவிருப்பத்திற்கேற்ப எடுக்கும் சுயமான முடிவே"" எனக் கூறுகிறார். மேலும் தனது விருப்பிற்கேற்ப உடை அணியும் சுதந்திரத்திற்கு தடையாக இருப்பதாலேயே அத்தகைய ஹிஜாப்-எதிர்ப்புச் சட்டங்களை நான் ஆதரிப்பதில்லை என்றும் கூறுகிறார்.

.அண்மைக் காலங்களில் மேற்கத்திய சிந்தனைகளின் பாதிப்பிற்கு உள்ளானோரால் இத்தகைய விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இத்தகைய வழிதவறிய கருத்துக்கள் கடந்த கால இஸ்லாமிய வரலாற்றில் இருந்திருக்கவில்லை. இஸ்லாமிய கட்டளைகளும், விலக்கல்களும், குர்ஆனிலும் சுன்னாவிலும் பதியப்பட்டுள்ளவற்றின் மூலமாகவே நாம் பெற முடியும். இவற்றை ஆராய்வதன் மூலம் அல்லாஹ்(சுபு)வின் கட்டளை யாதென அறியலாம். மகரம் அல்லாத வேறு ஆடவர் முன்னிலையில் 'ஹிஜாப்" அல்லது 'ஹிமார்" உதவியுடன் தலைமுடியை மறைப்பது கட்டாயம் என்பது இஸ்லாத்தில் விளக்கப்பட்டுள்ளது.அல்லாஹ்(சுபு) கூறுகிறான்.

அவர்கள் தங்கள் முந்தானையால்(குமுர்) தங்கள் கழுத்தையும் மார்பையும் மறைத்துக்கொள்ளட்டும்.(24-31)

குமுர் என்பது முஹம்மது(ஸல்) அவர்களின் காலத்தைய குறைஷியப் பெண்களால் அணியப்பட்டது. இது தலையை மறைத்து, கழுத்தையும் மார்புப் பகுதியையும் வெளிக்காட்டியவாறு உடலின் பின்புறமாக கீழ்நோக்கி விழுந்து காணப்பட்டது. இத்தகைய சூழ்நிலையில் அருளப்பட்ட இவ்வசனம் வெளிக்காட்டப்படும் கழுத்தையும் மார்பையும் தலையுடன் சேர்த்து மறைக்குமாறு கட்டளையிடுகிறது.

ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார்கள்.

அஸ்மா-பின்-அபுபக்கர் அவர்கள் மெல்லிய ஆடை அணிந்தவராக நபிகளார்(ஸல்) அவர்கள் முன் வந்தபோது, நபிகளார்(ஸல்) முகத்தை அப்பாற் திருப்பியவாறு 'ஏ அஸ்மாவே, ஒரு பெண் பருவ வயதை அடைந்தால் இதையும் இதையும் தவிர ஏனையவற்றை காண்பித்தல் ஆகுமானதல்ல" எனக்கூறி முகத்தையும் மணிக்கட்டையும் காண்பித்தார்கள்.

அதிர்ஷ்ட வசமாக பல முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் ஒரு கடமை என அறிந்திருந்தாலும்கூட அடிக்கடி குழப்பத்திற்கும் தவறான கருத்திற்கும் உள்ளாக்கப்பட்டு இஸ்லாமிய உடைநெறி யாதென விளங்காத நிலையில் காணப்படுகின்றனர். ‘துப்பட்டா’ என அழைக்கப்படும் மிக மெல்லிய துணி மூலம் தலைமுடியையும் கழுத்தையும் மறைப்பதே போதும் என எண்ணுகின்றனர். அத்துணியின் ஊடாக அப்பகுதிகள் தெupந்தாலும் தவறல்ல எனக் கருதுகின்றனர். வேறு சிலர் தலைமுடியின் ஒருபகுதி தெரியுமாறு தலைமுக்காடை தளர்த்தி அணிவது போதுமென எண்ணுகின்றனர். சிலரோ தலைமுடி, காது, கழுத்துப்பகுதி தெரியுமாறு 'பந்தனா" அணிகிறார்கள். ஒருசாரரோ தலைப்பகுதியை சரியாக மறைத்துப் பின்னர் உடலின் வடிவம் தெரியுமாறு டி-சர்ட் மற்றும் ஜீன்ஸ் அல்லது கணுக்காலுக்கு மேலான பாவாடையை கை கால் தெரியுமாறு அணிகின்றனர்.

பொது இடமானாலும் சரி தனிமையானாலும் சரி உடை சம்மந்தமான இஸ்லாமிய கட்டளைகள் சுயவிருப்பு, சுயகருத்து அல்லது கண்ணியம்பேணல் என்ற கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்கப்படுவதல்ல. மாறாக அது அல்லாஹ்(சுபு)வின் கட்டளையாகும். அல்லாஹ்(சுபு) தொழுகையை கடைமையாக்கிய பின்னர் தொழும் முறையை அவரவர் விருப்பிற்கேற்ப விட்டுவைக்கவில்லை. தொழும் முறையும் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. அதைப்போன்றே உடலை மறைக்கும் உடை விசயத்திலும் அதைப்பற்றிய விவரங்கள் விளக்கப்பட்டுள்ளன. தொழுகையைப் போன்றே உடை விவகாரத்திலும் இறைவனின் கட்டளைப்படி நடப்பது அவசியமாகும். சுயசிந்தனையோ அல்லது சுயவிருப்போ எவ்வாறு தொழுகையில் ஆதிக்கம் செலுத்தவில்லையோ அதைப்போல உடை விவகாரத்திலும் ஆதிக்கம் செலுத்துவது கூடாது.

அல்லாஹ்(சுபு) கூறுகிறான்.

“ உம் இறைவன் மீது சத்தியமாக, அவர்கள் தங்களுக்குள் ஏற்பட்ட சச்சரவில் உம்மை தீர்ப்பளிப்பவராக ஏற்றுப் பின்னர் நீர் தீர்ப்புச்செய்தது பற்றி எவ்வித அதிருப்தியையும் தங்கள் மனதில் கொள்ளாது முழுமையாக ஏற்றுக்கொள்ளும் வரையில் அவர்கள் உண்மை விசுவாசிகள் ஆகமாட்டார்கள்.”(4:65)

அல்குர்ஆன் வசனங்கள் மூலமும் நபி(ஸல்) அவர்களின் வாக்குகளாலும் தெளிவாக கூறப்பட்டிருப்பதற்கேற்ப ஒவ்வொரு பருவமடைந்த பெண்ணும் கை, முகம் தவிர்த்து ஏனைய பகுதிகளை மகரமற்ற ஆண்கள் முன்னிலையில் மறைத்தல் கடமையாகும். ஆடையானது தோல் தெரியும் அளவிற்கு மெல்லியதாகவோ உடற்கட்டமைப்பை வெளிக்காட்டும் வகையிலோ இருத்தலாகாது. மணிக்கட்டு வரையிலான கை, முகம்; தவிர்த்து, கழுத்து, முடி உட்பட பெண்ணின் முழு உடம்பும் 'அவ்ரா" ஆகும் (மறைக்கப்படவேண்டிய பகுதிகளாகும்).

சூரா அந்நு}ரில் அல்லாஹ்(சுபு) விவரிக்கின்றான்

“ முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும். தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும். தங்கள் அழகை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது. இன்னும் தங்கள் முந்தானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும். மேலும், (முஃமினான பெண்கள்) தம் கணவர்கள், அல்லது தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள் அல்லது தம் புதல்வர்கள் அல்லது தம் கணவர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரர்கள் அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரிகளின் புதல்வர்கள், அல்லது தங்கள் பெண்கள், அல்லது தம் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள், அல்லது ஆடவர்களில் தம்மை அண்டி வாழும் (பெண்களை விரும்ப முடியாத அளவு வயதானவர்கள்) பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர, (வேறு ஆண்களுக்குத்) தங்களுடைய அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது. மேலும், தாங்கள் மறைத்து வைக்கும் அழகலங்காரத்திலிருந்து வெளிப்படுமாறு தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம். மேலும், முஃமின்களே! (இதில் உங்களிடம் ஏதேனும் தவறு நேரிட்டிருப்பின்,) நீங்கள் தவ்பா செய்து (பிழை பொறுக்கத் தேடி), நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு, நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள்.” (24:31)

இப்ன் அப்பாஸ் அவர்கள் 'வெளியில் தெரியக்கூடியவை" என்பதற்கு மணிக்கட்டு வரையிலான கைப் பகுதி மற்றும் முகம் என விளக்கமளித்துள்ளார்கள்.

மேலும் பெண்கள் வெளியிடங்களுக்கு செல்லும் பொழுது கிமாரையும் (தலை, கழுத்து, மார்புப் பகுதிகளை மறைக்கும் துணி) ஜில்பாபையும் (கழுத்திற்கு கீழ் உடலின் மற்ற அனைத்து பகுதிகளையும் மறைத்து மேலிருந்து நிலத்தை நோக்கி தொங்கும் ஒரு தனி ஆடை) அணியுமாறு கட்டளையிடப்பட்டுள்ளார்கள். அதாவது கிமாருடன் சட்டையும் பாவாடையுமோ அல்லது முழுக்கால் சட்டையுமோ அணிவது ஆகுமானதல்ல.

அல்லமா இப்ன்-அல்-ஹசாம் எழுதுகிறார்கள் ''நபி அவர்கள் காலத்திலிருந்த அரபிமொழியில் ஜில்பாப் என்பது முழு உடம்பையும் மறைக்குமாறு அமைந்திருக்கும் தனி உடையாகும். முழு உடம்பையும் மறைக்க முடியாத உடையை ஜில்பாப் எனக் கூறமுடியாது."" (அல்-முஹல்லா தொகுதி 3)
பெண்கள் இவ்விரு உடையையும் அல்லாமல் வேறு உடையணிந்து வெளியில் நடமாடுவார்களாயின் அவர்கள் அல்லாஹ்(சுபு)வின் கட்டளைக்கு மாறிழைத்து பாவத்திற்கு ஆளாவார்கள்.

ஜில்பாபுக்கான ஆதாரங்களை அல்லாஹ்(சுபு) சூரா "அல்-அஹ்சாப்" யில் கூறுகிறான்.

“நபியே! நீர் உம் மனைவிகளுக்கும், உம் பெண்மக்களுக்கும், ஈமான் கொண்டவர்களின் பெண்களுக்கும், அவர்கள் தங்கள் வெளி ஆடைகளால்(ஜிலாபீப்) முழு உடலையும் பாதுகாக்குமாறு கூறுவீராக.”(33:59)

மேலும் உம்மு அதியா(ரலி) கூறுகிறார்கள்
“அல்லாஹ்வின் து}தர் ஈத் பெருநாள் தினத்தன்று, இளம் பெண்கள், மாதவிடாய் பெண்கள், மற்றும் மறைப்பு அணிந்த பெண்கள் ஆகியோரை அழைத்து வர ஆணையிட்டார்கள். மாதவிடாய் பெண்கள் தொழும் இடத்திற்கு அப்பாலிருந்து பிரசங்கத்தை கேட்குமாறு அமரவைக்கப்பட்டார்கள். 'அல்லாஹ்வின் தூதரே ஜில்பாப் இல்லாத பெண்களின் நிலை என்ன" என வினவியதற்கு அவர்கள் கூறுகிறார்கள் 'ஏனைய சகோதரியிடம் ஒரு ஜில்பாபை இரவல் வாங்கி அணியட்டும்." என பதிலளித்தார்கள்.

ஆகவே நபி அவர்கள் ஜில்பாப் இல்லாவிட்டால் இரவல் வாங்கியேனும் அணியுமாறு கூறியுள்ளார்கள் என்பது அதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறதல்லவா.

ஒரு முஸ்லிம் பெண் மேற்கத்திய பெண்களை ஒப்பாக்கி தாம் எதை அணியவேண்டும் என சுயமாக முடிவெடுத்தல் கூடாது. பனி-தமீம் இனத்தைச் சார்ந்த சில பெண்கள் மெல்லிய துணிகளை அணிந்து ஆயிஷா அவர்களை சந்தித்தபோது 'இது முஃமீனான பெண்ணிற்கு தகுந்த உடையல்ல. நீங்கள் முஃமீன்கள் இல்லாவிடில் உங்கள் விருப்பப்படி நடந்து கொள்ளுங்கள்." என ஆயிஷா(ரலி) அவர்கள் கூறியதாக அறிவிக்கிறார்கள்.

இன்றைய முஸ்லிம் பெண்கள் நபி (ஸல்) அவர்களின் மதிப்பிற்கும் அல்லாஹ்(சுபு)வின் பொருத்தத்திற்கும் ஆளான அன்றைய முஸ்லிம் பெண்களின் முன்மாதிரியை பின்பற்றி நடத்தல் அவசியம். அன்றைய நாளில் உடை சம்பந்தமான குர்ஆன் வசனம் இறக்கப்பட்ட போது அப்பெண்கள் ஒரு நிமிடமேனும் தாமதிக்காது கிடைத்தவற்றைக் கொண்டு அவ்ராவை மறைத்துக் கொண்டார்கள்.

சய்பாவின் மகளான சஃபீயா கூறியதாவது,
“ஆயிஷா(ரலி) அவர்கள் அன்சார் பெண்களை புகழ்ந்து நல்வார்த்தை கூறினார்கள். பின்னர் 'சூரா அந்நு}ர் வசனங்கள் இறங்கிய பொழுது அவர்கள் வீட்டிலுள்ள திரைகளை கிழித்து அதனை தலைமறைப்பாக்கிக் கொண்டார்கள்" எனக் கூறினார்கள். (சுனன் அபுதாவூத்)

ஆகவே ஹிஜாப் என்பது கண்ணியம் பேணுதலுக்கான உடை அல்ல. பாரம்பரிய நடைமுறை பழக்கவழக்கம் என்பவற்றிற்காக அணியும் ஆடையும் அல்ல. இது இஸ்லாத்தின் ஒரு கடமையாகும். அதற்குறிய சட்ட விதிப்படி உடை அணிதல் ஒவ்வொரு முஸ்லிம் பெண்ணின் மீதும் அல்லாஹ் (சுபு) விதித்துள்ள கட்டாயக் கடமையாகும். அல்லாஹ்(சுபு) எமது முஸ்லிம் பெண்களையும் நேர்வழியில் செலுத்துவானாக!

பெண்களின் ஜனாஸாவை

பெண்களின் ஜனாஸா
 
 

ஒவ்வொருவர் மீதும் அல்லாஹ் மரணத்தை விதித்துவிட்டான். நிரந்தரமாக இருப்பது என்பது அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே சொந்தம்.

''(மிக்கவல்லமையும்) கண்ணியமும் சங்கையும் உடைய உம் இறைவனின் முகமே நிலைத்திருக்கும்.'' (அல்குர்ஆன் 55:27)
'நீங்கள் எங்கிருந்த போதிலும் உங்களை மரணம் வந்தடைந்தே தீரும் மிகவும் உறுதியாக கட்டப்பட்ட கோட்டைகளில் நீங்கள் இருந்தாலும் சரியே" (4:78)

ஜனாஸாக்களில் கடைபிடிக்க வேண்டிய சில விதிமுறைகள் உள்ளன. அவற்றைச் செயல்படுத்துவது உயிரோடு உள்ளவர்கள் மீது கடமையாகும். அவற்றில் பெண்கள் சம்பந்தப்பட்டவைகளை மட்டும் இங்கு குறிப்பிடுகிறோம்.

1. பெண்களின் ஜனாஸாவை பெண்களே குளிப்பாட்ட வேண்டும்.

ஆண்கள் பெண்கள் ஜனாஸாவை குளிப்பாட்டுவது கூடாது இறந்துபோன பெண்ணின் கணவன் மட்டும் தன் மனைவியை குளிப்பாட்ட அனுமதியுண்டு, ஆண் ஜனாஸாவை ஆண்களே குளிப்பாட்ட வேண்டும். இறந்து போன ஆணின் மனைவி மட்டும் தான் கணவனைக் குளிப்பாட்ட அனுமதியுண்டு.

அலி(ரழி) அவர்கள் தம் மனைவியான பாத்திமா (ரழி) அவர்கள் இறந்தபோது அவர்களின் ஜனாஸாவை குளிப்பாட்டினார்கள்.

அபூபக்கர்(ரழி) அவர்கள் மரணமடைந்தபோது அவர்களின் மனைவி அஸ்மா பின்த் உமைஸ்(ரழி) அவர்களின் ஜனாஸாவை குளிப்பாட்டினார்கள்.

2. பெண் ஜனாஸா ஐந்து துணிகளில் கஃபன் செய்யப்படுவது சிறந்தது.

கீழங்கி, தலையில்போடும் துணி, சட்டை அதற்குமேல் இரண்டு துணியைக் கொண்டு ஜனாஸாவின் உடம்பு முழுவதும் மூடப்படும்.

''நபி(ஸல்) அவர்களின் மகள் உம்மு குல்ஸ_ம்(ரழி) மரணமடைந்தபோது அவர்களின் ஜனாஸாவை குளிப் பாட்டியவர்களில் நானும் ஒருத்தியாக இருந்தேன். நபி(ஸல்) அவர்கள் ஜனாஸாவிற்கு அணிவிப்பதற்காக முதல் முதலாக எங்களிடம் தந்தது கீழங்கி, பின்னர் சட்டை பின்னர் தலையில் போடும் துண்டு, பின்னர் ஜனாஸாவை மூடுவதற்குண்டான துணி, பின்னர் அதே மாதிரி இன்னொரு துணியிலும் மூடப்பட்டார்கள்'' என லைலா அத்தகபிய்யா(ரழி) அறிவிக்கிறார். (நூற்கள்: அஹ்மத், அபூதாவுத்)

3. பெண் ஜனாஸாவின் தலைமுடியை மூன்று பிரிவாகப் பின்னி பின்னால் போடவேண்டும்.

நபி(ஸல்) அவர்களின் மகளுடைய ஜனாஸாவை குளிப்பாட்டுவது பற்றி உம்முஅதிய்யா(ரழி) அறிவிக்கும் போது ''அவர்களின் தலைமுடியை மூன்று பிரிவாகப் பின்னி பின்பக்கம்போட்டோம்'' என்று குறிப்பிடுகிறார். (நூற்கள்: புகாரி, முஸ்லிம்)

4. ஜனாஸாவைப் பின் தொடர்ந்து பெண்கள் செல்லுதல்.

''ஜனாஸாவைப் பின் தொடர்ந்து செல்வது எங்களுக்கு தடுக்கப்பட்டிருந்தது. ஆனாலும் அது கண்டிப்பான முறையில் தடுக்கப்படவில்லை'' என உம்மு அதிய்யா(ரழி) அறிவிக்கிறார். (நூற்கள்: புகாரி, முஸ்லிம்)

5. கப்ர் ஸியாரத் பெண்களுக்கு தடுக்கப்பட்டுள்ளது.

''கப்ருகளை ஜியாரத் செய்யும் பெண்களை நபி(ஸல்) அவர்கள் சபித்துள்ளார்கள்'' என அபூஹாரைரா(ரழி) அறிவிக்கிறார். (நூற்கள்: அஹ்மத், திர்மிதி மற்றும் இப்னுமாஜா.)

6. ஒப்பாரி வைப்பது தடை செய்யப்பட்டுள்ளது.

ஒப்பாரி வைப்பதும், ஆடைகளைக் கிழிப்பதும் கன்னத்தில் அடிப்பதும் முடியைப் பிடுங்குவதும் முகத்தைப் பறண்டுவதும், தகாத வார்த்தைகளைக் கூறுவதும் இதுபோன்ற அல்லாஹ் விதித்த விதியில் பதட்டத்தை ஏற்படுத்துகின்ற செயல்களைச் செய்வது தடுக்கப்பட்டுள்ளது. சோதனையின் போது பொறுமை இழந்து நிற்பது பெரிய குற்றமாகும்.

''துன்பத்தின்போது கன்னத்தில் அடிப்பவனும் சட்டையை கிழிப்பவனும் அறியாமை காலத்து பிரார்த்தனையைச் செய்பவனும் நம்மைச் சார்ந்தவனல்ல'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

மேலும், ''சோதனையின்போது சப்தத்தை உயர்துப வளை விட்டும் தலைமுடியை மளிப்பவளை விட்டும், ஆடையை கிழித்துக் கொள்பவளை விட்டும் நான் ஒதிங்கிக் கொண்டேன்'' என்றும் நபி(ஸல்) கூறினார்கள்.

''ஒப்பாரி வைப்பவளையும் ஒப்பாரியைக் கேட்டு மகிழ்பவளையும் நபி(ஸல்) அவர்கள் சபித்தார்கள்.'' (நூல்: முஸ்லிம்)


முஸ்லிம் சகோதரியே! சோதனையின்போது இதுபோன்ற தடுக்கப்பட்ட செயல்களை விட்டும் ஒதுங்கிக்கொள்! சோதனையின்போது பொறுமையைக் கடைபிடித்துக் கொள்! உனக்கு ஏற்படக்கூடிய சோதனை உன்னுடைய பாவத்திற்கு பரிகாரமாகவும் உன்னுடைய நன்மையை அதிகரிக்கக் கூடியதாகவும் அமைந்துவிடும்.

அல்லாஹ் கூறுகிறான்: ''நிச்சயமாக நாம் உங்களை அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச் சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம், (ஆனால்) பொறுமையுடையோருக்கு நபியே! நீர் நற்செய்தி கூறுவீராக!''

''அவர்களுக்கு துன்பம் ஏற்படும்போது நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள். நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்' என்று கூறுவார்கள். இத்தகையோர் மீதுதான் அவர்களுடைய இறைவனின் நல்லாசியும், கிருபை யும் உண்டாகின்றன. இன்னும் இவர்களே நேர்வழியை அடைந் தவர்கள். (அல்குர்ஆன்: 2:155, 157)


அதேநேரத்தில் ஒப்பாரியும், அனுமதிக்கப்படாத செயல்களும், அல்லாஹ்வின் விதியின் மீது கோபப் படுவதும் இல்லாத அழுகை ஆகுமானதாகும். ஏனெனில் அப்படி அழுவது மரணித்தவரின் மீதுள்ள அன்பையும் உள்ளத்தில் மென்மையையும் காட்டுவதுடன் மனிதனால் தடுக்கமுடியாத ஒன்றாகவும் உள்ளது. எனவே அது ஆகுமானதாகிறது. சில வேளை அது அனுமதிக்கப் பட்டதாகவும் சில வேளை அது விரும்பத்தக்கதாகவும் ஆகிறது. அல்லாஹ் உதவப் போதுமானவன்

ஜின்கள் - ஷெய்த்தான்கள் பற்றி அறிய வேண்டியத் தகவல்கள்

ஜின்கள் - ஷெய்த்தான்கள் பற்றி அறிய வேண்டியத் தகவல்கள்
 
 
 ஷைத்தான் பிடித்தல்:
    ஜின்கள் நமது உடலில் புகுந்து கொண்டு ஆதிக்கம் செலுத்துகிறது, அது தான் பேய் என்பது மற்றொரு சாரார் கருதுகிறார்கள். அதற்கு ஆதாரமாக இந்த குர்ஆன் வசனத்தை தருகிறார்கள்.
    'யார் வட்டியை உண்கிறார்களோ அவர்கள் மறுமையில் ஷைத்தான் பிடித்தவனைப் போலவே எழுவார்கள்' (அல்குர்ஆன் 2:275)
    அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்களின் தோழரும் திருக்குர்ஆன் விரிவுரையாளருமான இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் இந்த வசனத்தை விளக்கும் போது, ஷைத்தானின் தீண்டுதல் அல்லது ஷைத்தான் பிடித்தல் என்பது பைத்தியம் பிடித்தல் என்று சொன்னார்கள்.
    அதாவது, 'யார் வட்டியை உண்கிறார்களோ அவர்கள் மறுமையில் பைத்தியம் பிடித்தவனைப் போலவே எழுவார்கள்' என்பது பொருளாகும்.
    ஜின்களாலும் பேய் பிடிக்க வாய்ப்பில்லை.
ஜின்களால் பாதிப்புக்கள்:
    ஜின்களால் மனிதர்களுக்கு எப்படிப்பட்ட பாதிப்புக்கள் ஏற்படுகின்றது என்பதை அறிந்து கொள்வது மிகவும் அவசியமாகும். அப்போது தான் ஜின்கள் பற்றிய சந்தேகங்கள் முழுமையாக நீங்கும்.
ஷைத்தானின் தூண்டுதல்:
    'ஆதமுடைய மக்களிடம் ஷைத்தானுக்கு ஓர் ஆதிக்கம் உண்டு. அதுபோலவே வானவருக்கும் ஒர் ஆதிக்கம் உண்டு' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு மஸ்வூது (ரலி), நூல்: திர்மிதி)
    இந்த ஹதீஸின் படி நம் உடலில் உள்ள ஷைத்தான் தவறைச் செய்யும்படி தூண்டுவான். அதே நேரம் வானவர் அந்த தவறைச் செய்யாதே என்ற விஷயத்தை மனதில் ஏற்படுத்துவார். இரண்டும் சரிசமமான தூண்டுதல்கள் தான். அந்தத் தவறை செய்வதும் செய்யாது விடுவதும் மனிதனின் விருப்பத்தைப் பொருத்தது.
    மாறாக அந்த ஷைத்தான் அந்தத் தவறை செய்யும் படி மனிதனை வற்புறுத்த முடியாது. அந்த அளவுக்கு சக்தியும் அவனுக்கு கொடுக்கப்பட வில்லை.
    தூண்டுதல் மட்டும் தான் இந்த ஷைத்தானின் வேலை.
சந்தேகத்தை உண்டாக்கும் ஷைத்தான்:
    பதுங்கியிருந்து வஸ்வாஸ் எனும் வீண் சந்தேகங்களை உண்டாக்குபவனின் (ஷைத்தானின்) தீங்கை விட்டும் (இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்). அவன் மனிதர்களின் இதயங்களில் வீண் சந்தேகங்களை உண்டாக்குகிறான். (இத்தகையோர்) ஜின்களிலும், மனிதர்களிலும் இருக்கின்றனர். (அல்குர்ஆன் 114:4-6)
    நபி (ஸல்) அவர்கள் தன் மனைவியோடு பேசிக் கொண்டிருந்த போது அவர்களைக் கடந்து சென்ற தனது தோழர்களை அழைத்து இவர் எனது மனைவி இன்னார் என்று சொல்கிறார்கள். ஆச்சர்யப்பட்டுப் போன தனது தோழர்களிடம், 'ஷைத்தான் மனிதர்களின் இரத்த நாளங்களில் ஓடுகிறான்' என்ற விஷயத்தை சொல்கிறார்கள். (அறிவிப்பவர்: ஸபிய்யா (ரலி), நூல்கள்: முஸ்லிம், அபூதாவூது - ஹதீஸின் சுருக்கம்)
சந்தேகம் தன் மீது வந்து விடக்கூடாது என்பதற்காக நபி (ஸல்) அவர்கள் தெளிவு படுத்தியிருக்கிறார்கள்.
தொழுகையை கெடுக்கும் ஷைத்தான்:
    ஷைத்தான் என் தொழுகையையும் ஓதுதலையும் குழப்பிக் கெடுக்கிறான் என்று நபி (ஸல்) அவர்களிடம் முறையிட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் 'அவன் கின்ஸப் என்ற ஷைத்தானாவான். அந்த நிலையை நீ உணர்ந்தால் அவனை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடி உமது இடப்புறம் நீ மூன்று முறை துப்பு' என்றார்கள். நான் அவ்வாறு செய்தேன் அதை அல்லாஹ் என்னை விட்டும் நீக்கி விட்டான் என்று உஸ்மான் பின் அபில் ஆஸ் (ரலி) அறிவிக்கிறார்கள். (நூல்: முஸ்லிம்).
    மற்றொரு ஹதீஸில் தொழுகைக்காக தக்பீர் கட்டி விட்டால் ஷைத்தான் வந்து அதை நினைத்துப் பார், இதை நினைத்துப் பார் என்று சொல்லி தொழுகையை கெடுப்பான் என்று வந்துள்ளது.
தொழுகையை ஷைத்தான் கெடுப்பான், ஆனால் பேய் பிடிக்க வைக்க முடியாது.
வழிகெடுக்கும் ஷைத்தான்:
    'உன் கண்ணியத்தின் மீது சத்தியமாக, நான் அவர்கள் யாவரையும் நிச்சயமாக வழிகெடுப்பேன் என்று இப்லீஸ் கூறினான், எனினும் அவர்களில் அந்தரங்க சுத்தியுள்ள உன் அடியார்களைத் தவிர என்றான்' (அல்குர்ஆன் 38:82,83)
    இக்லாஸ் எனும் உள்ளத்தூய்மை இல்லாதவர்களை ஷைத்தான் எளிதில் வழிகெடுத்து விடுவான் என்று இந்த குர்ஆன் வசனம் கூறுகிறது.
ஜோதிடர்கள்:
    ஆயிஷா (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம் ஜோதிடர்கள் கூறுவதில் சில உண்மைகள் உள்ளதே! எனக் கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் இப்படி உண்மையென ஒன்றை நம்ப வைத்து நூறு பொய்களை மிகைப்படுத்திச் சொல்வார்கள். இது ஷைத்தானின் விளையாட்டாகும் என்றார்கள். (நூல்: முஸ்லிம்)
    ஜோதிடர்கள் உண்மைகளை அறிய முடியாத அளவிற்கு அல்லாஹ் எரிநட்சத்திரங்களை வானத்தில் ஏற்பாடு செய்து வைத்து ஜின்களுக்கு தடையை ஏற்படுத்தி விட்டான். இனிமேல் ஜோதிடர்கள் வானத்திலிருந்து கிடைக்கும் செய்தியை அறிந்து கொள்ள முடியாது.
    மொத்தத்தில் இஸ்லாத்தோடு தொடர்பில்லாத அதன் சட்டதிட்டங்களை அறிந்திராதவர்களின் மனங்களை ஷைத்தான் ஆக்கிரமிப்பு செய்வான். அவர்களை படாதபாடு படுத்துவான் என்பதை ஒருவரியில் சொல்ல முடியும்.
தீய ஜின்களிலிருந்து பாதுகாப்பு:
    1. 'உங்களுக்கு ஷைத்தானிடமிருந்து ஏதேனும் ஊசலாட்டம் (தீயதைச் செய்ய) உம்மை தூண்டுமாயின் உடனே அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடிக்கொள்வீராக' (அல்குர்ஆன் 41:36)
    2. 'நீர் கூறுவீராக! என் இறைவனே! ஷைத்தானின் தூண்டுதல்களிலிருந்து நான் உன்னைக் கொண்டு காவல் தேடுகின்றேன்' (அல்குர்ஆன் 23:97)
    3. 'நீங்கள் இரவில் நாய் ஊளையிடுவதைக் கேட்டால், கழுதை கத்துவதைக் கேட்டால் அவைகளிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடுங்கள். ஏனெனில் அவை நீங்கள் காணாத (கெட்ட)வைகளைக் காண்கின்றன' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: அபூதாவூது)
    4. 'ஆயத்துல் குர்ஸி' (2:255) வசனத்தையும் சூரத்துல் பகராவின் கடைசி இரு வசனங்களையும் (2:285,286) ஓதினால் ஷைத்தானின் தீங்குகளிலிருந்து இறைவனின் பாதுகாப்பு கிடைக்கும். (நூல்: புகாரி)
'ஆயத்துல் குர்ஸி' வசனத்தை எவர் காலைப் பொழுதை அடையும் போது கூறினாரோ அவர் மாலைப்பொழுதை அடையும் வரை ஜின்களின் தீங்குகளிலிருந்து காக்கப்படுவார். இன்னும் மாலையில் அதை எவர் கூறினாரோ அவர் காலைப் பொழுதை அடையும் வரை ஜின்களின் தீங்குகளிலிருந்து காக்கப்படுவார்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்கள்: ஹாக்கிம், தப்ரானி)
    5. நபி (ஸல்) அவர்கள் ஷைத்தானை விட்டும் மனித கண்ணை விட்டும் (பல வகைகளில்) பாதுகாப்புத் தேடிவந்தார்கள். ஃபலக், நாஸ் (அத்தியாயம் 113,114) அத்தியாயங்கள் இறங்கியதும் அவ்விரண்டையும் எடுத்துக் கொண்டு மற்றவைகளை விட்டுவிட்டார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்கள்: திர்மிதி, இப்னுமாஜா)
நகரங்கள்:
    ஜின்கள் மனிதர்கள் வசிக்கும் நகரங்களில் அல்லது ஊர்களில் வசிக்கிறார்கள் அதற்கு ஆதாரமாக இந்த ஹதீஸ் உள்ளது.
    '...நஸீபைனிலிருந்து ஜின்களின் பிரதிநிதிகள் என்னிடம் வந்தார்கள்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி)
    இங்கே நஸீபைன் என்பது ஒர் ஊரையோ அல்லது இடத்தையோ குறிக்கும்.
குப்பை கொட்டும் இடங்கள்:
    '...அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்கப்பட்ட கால்நடைகளின் எலும்புகள் உங்களின் உணவாக இருக்கின்றன. இறைச்சி நிறைந்ததாக அதை நீங்கள் பெற்றுக் கொள்வீர்கள்.' என்று ஜின்கள் தங்களது உணவு எது என்பது பற்றி கேட்ட கேள்விக்கு நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். (அறிவிப்பவர்: இப்னு மஸ்வூது (ரலி), நூல்: முஸ்லிம் 903)
கழிப்பிடங்கள்:
    எலும்புகளாலும் கால்நடைகளின் விட்டைகளாலும் சுத்தம் செய்வதற்கு நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு தடை விதித்தார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம் 504)
    ஜின்களின் இருப்பிடமாக கழிப்பிடங்கள் இருப்பதால் ஒரு துஆவை ஓதும் படி நபி (ஸல்) அவர்கள் கற்றுத்தந்துள்ளார்கள்.
    'அல்லாஹும்ம இன்னீ அவூது பிக மினல் ஹுப்தீ வல் ஹபாஇத்' - (பொருள்: இறைவா! ஆண் பெண் ஷைத்தான்களின் தீங்குகளை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்.) (நூல்: முஸ்லிம் 729, திர்மிதி 6)
ஒட்டகங்கள் கட்டுமிடங்கள்:
    'ஒட்டகத் தொழுவத்தில் தொழ வேண்டாம், அது ஷைத்தான் குடியிருக்கும் இடமாகும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அல்பர்ரா இப்னு ஆஸிப் (ரலி), நூல்: அபூதாவூது)
    ஷைத்தான் என்பது கெட்ட ஜின்களைக் குறிக்கும் சொல்லாகும்.
    'அவன் (இப்லீஸ்) ஜின் இனத்தைச் சேர்ந்தவனாக இருந்தான்' (அல்குர்ஆன் 18:50)
மண்ணறைகள்:
    மண்ணறைகளிலும் கழிப்பறைகளிலும் தொழுவது தடுக்கப்பட்டுள்ளது' நபிமொழி (அறிவிப்பவர்: அபூஸயீது அல்குத்ரீ (ரலி), நூல்கள்: திர்மிதி, அபூதாவூது)
    மண்ணறைகளில் தொழுவது சிலை வணக்கத்தை ஒத்ததாக இருக்கும் அதேவேளை அங்கே ஜின்களும் குடியிருக்கிறார்கள் என்பதனாலேயே கழிப்பறையும் சேர்த்தே இந்த ஹதீஸில் சொல்லப்பட்டுள்ளது.
காற்று மண்டலம்:
    ஜின்கள் மனிதர்களிடமிருந்து வித்தியாசப்படுவது அதன் பறக்கும் சக்தியாகும். அவை முதல் வானம் வரை பறந்து செல்லும் சக்தி கொடுக்கப்பட்டுள்ளது.
   'நிச்சயமாக நாம் வானத்தைத் தொட்டுப் பார்த்தோம் அது கடுமையான காவலாளிகளாலும் தீப்பந்தங்களாலும் நிரப்பப்பட்டிருப்பதை நாங்கள் கண்டோம்' என்று ஜின்கள் கூறின. (அல்குர்ஆன் 72:8)
தெருக்கள்:
    '(மாலையும் இரவும் சந்திக்கும்) அந்தி நேரத்தில் உங்கள் குழந்தைகளை வீட்டினுள் வைத்திருங்கள், அது ஷைத்தான் வெளிவரும் சமயம் ஆகும்' நபி (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி), நூல்: முஸ்லிம்)
திறந்த வெளி:
    '...(சிறுநீர் கழித்த பின்) சுத்தம் செய்வதற்காக சிறுகற்களை எடுத்துக் கொள்ளும், விட்டைகளையும் எலும்புகளையும் எடுக்காதீர்...' என்று அபூஹுரைரா (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரி)
அடர்ந்த காடுகள்:
    (மனிதர்கள் மலம், ஜலம், கழிக்க ஒதுங்குகின்ற) இந்த பேரீத்தமரங்கள் அடர்ந்த காடுகள் (ஜின், ஷைத்தான்கள் அடிக்கடி) வந்து போகும் பகுதிகளாகும். எனவே உங்களில் ஒருவர் (அப்படிப்பட்ட) கழிப்பிடத்திற்கு வரும்போது, அவர், 'அவூது பில்லாஹி மினல் குபுஸி வல்கபாயிஸி' என்று கூறுவாராக! என அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: அபூதாவூது 6)
    இந்த ஹதீஸை இப்னுமாஜா அவர்களும், நஸயீ அவர்கள் தனது ஸுனன் அல்குப்ராவிலும் பதிவு செய்துள்ளார்கள்.
குளியலறைகள்:
    ஒரு மனிதன் அவனுடைய குளிக்குமிடத்தில் சிறுநீர் கழித்திட நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். வஸ்வாஸ் (எனும் மன ஊசலாட்டம்) இதனால் தான் ஏற்படுகிறது என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு முகப்பல் (ரலி), நூல்: அபூதாவூது 27, திர்மிதி 21, இப்னுமாஜா, நஸயீ, அஹ்மத்)
    குளியலறையும் அடக்கத்தலத்தையும் தவிர நிலப்பரப்பு முழுவதும் தொழுமிடமாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி), நூல்: திர்மிதி 316)
    பதுங்கியிருந்து வஸ்வாஸ் எனும் வீண் சந்தேகங்களை உண்டாக்குபவனின் (ஷைத்தானின்) தீங்கை விட்டும் (இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்). அவன் மனிதர்களின் இதயங்களில் வீண் சந்தேகங்களை உண்டாக்குகிறான். (இத்தகையோர்) ஜின்களிலும், மனிதர்களிலும் இருக்கின்றனர். (அல்குர்ஆன் 114:4-6)
பொந்துகள்:
    பொந்துக்குள் சிறுநீர் கழிப்பதை நபி (ஸல்) அவர்கள் தடுத்தார்கள் என்று அப்துல்லாஹ் பின் சார்ஜில் அறிவிக்கிறார்கள். பொந்துக்குள் சிறுநீர் கழிக்க தடை செய்யப்பட்டதன் காரணம் என்ன என்று (அறிவிப்பாளர்) கதாதா அவர்களிடம் கேட்கப்பட்டது. பொந்துகள் ஜின்கள் வசிக்கும் இடம் என்று சொல்லப்பட்டதாக அவர் பதில் சொன்னார். (நூல்: அபூதாவூது 29)

இஸ்லாமின் அடிப்படை கலிமா

இசுலாம்http://tawp.in/r/2in

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இசுலாம் - இறைவன் ஒருவனே
உலகில் இசுலாமியர் பரவல்
இசுலாம் உள்ளடக்கங்கள் சுருக்கமாக
Allah-eser-green.png
அடிப்படை நம்பிக்கைகள்
அல்லா ரசூல் (சல்)
மலக்குகள் இறைதூதர்கள்
இறை வேதங்கள்
மறுமை கலாகத்ர்
கட்டாயக் கடமைகள்
இறை நம்பிக்கை தொழுகை
நோன்பு ஜக்காத்து ஹஜ்ஜு
இசுலாமிய வரலாறு
இஸ்லாமிய வரலாறு சஹாபா
ரசூத்தீன் கலிபாக்கள்
ஷியா இமாம்கள்
நூல்களும் சட்டங்களும்
குர்ஆன் ஹதீஸ்
இஸ்லாமிய பிரிவுகள்
சன்னி சியா
பண்பாடு
கலை நாள்காட்டி குழந்தைகள்
மக்கள் பரவல் பண்டிகைகள்
மசூதிகள் மெய்யியல்
அரசியல் அறிவியல் பெண்கள் ஸல்
 பா    தொ
இசுலாம் அல்லது இஸ்லாம் (Sound الإسلام, அரபு: الإسلام; al-'islām, Islam) என்பது ஏழாம் நூற்றாண்டில் சவுதி அரேபியாவில் தோன்றிய சமயமாகும். இது கிறித்தவம், யூதம் போன்று ஓர் ஆபிரகாமிய சமயம் ஆகும். இச் சமயம் முகம்மது நபி என்பவரால் பரப்பப்பட்டது. இசுலாமின் மூலமான திருக்குர்ஆன் இவரை முதல் மனிதர் ஆதாம் முதல் அனுப்பப்பட்டு வந்த இறை தூதர்களில் இறுதியானவராக அடையாளப்படுத்துகிறது. உலகம் முழுவதும் 180 கோடி மக்கள் இச் சமயத்தைப் பின்பற்றுகிறார்கள்[1]. இசுலாம் கிறித்தவத்துக்கு அடுத்தபடியாக உலகில் இரண்டாவது பெரிய சமயமாகும்.

பொருளடக்கம்

[மறை]

[தொகு] சொல்-வேர்

இஸ்லாம் , மூன்று வேர் கொண்ட ஸ்-ல்-ம் கொண்ட ஒரு வினை பெயர் சொல் . அது அராபிய வினைச் சொல் `அஸ்லாமா` விலிருந்து திரிபு ஆகிறது. அஸ்லாமா ஏற்றுக்கொள்ளுதல், சரணடைதல், கீழ்படிதல் முதலிய பொருள்களில் வரும். அதனால் இஸ்லாம் கடவுளை ஏற்றுக் கொண்டு சரணடைதல் ஆகும்,; நம்பிக்கையாளர்கள் கடவுளை வணங்கி நம்பிக்கையை காட்டி, அவர் கட்டளைகளை நிறைவேற்றி, பலதெய்வ வணக்கத்தை ஒதுக்க வேண்டும். இஸ்லாம் என்ற சொல் குர்ஆனில் பல பொருள்களை கொடுக்கப்பட்டுள்ளது. சில செய்யுள்களில் (ஆயாத்துகள்), இஸ்லாம் உள் மனத்தின் திட நம்பிக்கையாக அழுத்தம் கொடுக்கப் பட்டுள்ளது. ”கடவுள் யாருக்கு நேர்வழி காட்ட நாடுகிறானோ அவர்களுடைய மனதை விசாலமாக்குகிறான்.”[2]. மற்ற செய்யுள்கள் இஸ்லாத்தையும் மார்கத்தையும் ஒன்றாக்குகிரன,. “இன்று நான் உங்கள் மார்கத்தை முழுமையாக்கிவிட்டேன்; உங்கள் மீது என் ஆசியை பூர்த்தியாக்கி விட்டேன், இன்னும் உங்களுக்காக நான் இஸ்லாத்தை மார்க்கமாக ஆக்கினேன்” [3]. சொல்லளவில் மார்கத்தை வற்புறுத்துவதற்கு மேலே போய், இன்னும் சில செய்யுள்கள் இஸ்லாத்தை கடவுள் பக்கம் திரும்புவதற்கு ஈடாக்குகின்றன. இஸ்லாமிய சிந்தனையில், இஸ்லாம் ஈமான் (நம்பிக்கை), இஹ்சான் (செம்மை) உடன் மூன்றாவதாக சொல்லப் படுகிறது [4]. . அது இஸ்லாம் கடவுள் வணக்க செயல்கள் (இபாதாஹ்) மற்றும் இஸ்லாமிய நீதி (ஷரியா) இவற்றை காண்பிக்கிறது [5] .

[தொகு] இசுலாமிய நம்பிக்கை

இசுலாமின் நம்பிக்கையின்படி இந்த பிரபஞ்சத்திலுள்ளவைகள் அனைத்தும் இறைவனால் படைக்கப்பட்டதாகும். மேலும் அடிப்படையில் நம்பிக்கைக் கொள்ள வேண்டிய விடயங்கள் ஆறாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. அவைகளாவன;

[தொகு] இறைவன் ஒருவனே அவனது தூதர் முஹம்மத் (சல்)

அரபு மொழியில் "லாஇலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரசூலுல்லாஹ்" என கூறப்படும் "வணக்கத்துக்குரிய நாயன் ஏக ஒருவனைத் தவிர வேறு இல்லை; முஹம்மது (சல்) அவர்கள் இறைவனின் திருத்தூதர் ஆகும்" என்பதை உளப்பூர்வமாக ஏற்றுக்கொள்வதே இஸ்லாமியர் என்பதற்கான அடிப்படை தகுதியாகும்.[6].இதை உறுதிபட ஏற்றுக்கொண்டவன் திருக்குர்ஆனிலுள்ள ஏனைய மறைவான விடயங்களை ஏற்றுக்கொள்வது கடமையாகிறது.

[தொகு] மலக்குகள்.

மனிதனது புலனுறுப்புகளால் புரிந்து கொள்ள முடியாத, இறைவனது கட்டளைகளை செயல்படுத்துவதற்காக மட்டும் ஒளியைக் கொண்டு படைக்கப்பட்ட சக்திகளை (திருகுர்ஆன் பிரயோகம்மலக்குகள்) நம்புவது.

[தொகு] முன்னைய வேதங்கள்.

முகம்மது (சல்) அவர்களுக்கு முன்னர் வாழ்ந்த இறைதூதர்களுக்கு வேதங்கள் கொடுக்கப்பட்டது உண்மையே என நம்புதல்.

[தொகு] முன்னைய இறைதூதர்கள்.

முன்னர் வாழ்ந்த இறைத்துதர்களை நம்புவது. திருக்குர் ஆன் பின்வருமாறு கூறுகிறது: அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் நம்முடைய தூதர் வராத எந்தச் சமுதாயத்தினரும் பூமியில் இருக்கவில்லை(திருக்குர்ஆன்: அல்-பாதிர்: 24)இவ்வாறு கூறப்பட்டவர்களில் 25 தூதர்களுடைய பெயர்கள் திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளன.

[தொகு] இறப்பின் பின் வாழ்க்கை.

இறப்பிற்கு பின்னுள்ள வாழ்க்கையை நம்புவது. திருக்குர் ஆன் பின்வருமாறு கூறுகிறது: இறந்தவர்களை அல்லாஹ் (உயிர்ப்பித்து) எழுப்ப மாட்டான் என்று அவர்கள் அல்லாஹ்வின் மீது பிரமாணமாகச் சத்தியம் செய்கிறார்கள். அப்படியல்ல! (உயிர் கொடுத்து எழுப்புவதான அல்லாஹ்வின்) வாக்கு மிக்க உறுதியானதாகும். எனினும் மக்களில் பெரும்பாலோர் இதை அறிந்து கொள்வதில்லை (திருக்குர்ஆன் 16:38.).

[தொகு] விதி.

"கலாகத்ர்" என திருக்குர் ஆனில் கையாளப்பட்டுள்ள இச்சொல் தமிழில் "விதி" என மொழி பெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. பிரபஞ்சத்திலுள்ள அனைத்தும் இறைவன் வகுத்த விதியின் அடிப்படையிலேயே செயல்படுகின்றன என இதற்கு விளக்கம் தரலாம். இவ்விதி குறித்து திருக்குர்ஆன் கூறும் போது "உனக்குக் கிடைக்கும் எந்த நன்மையும் அல்லாஹ்விடமிருந்தே கிடைக்கிறது (இது இறைவன் ஏற்படுத்தியுள்ள நியதி). இன்னும், உனக்கு ஏதாவது ஒரு தீங்கு ஏற்பட்டால் அது உன்னால் தான் வந்தது. (நபியே!) நாம் உம்மை மனிதர்களுக்கு (இவற்றை எடுத்துக் கூறுவதற்காகத்) தூதராகவே அனுப்பியுள்ளோம் - அல்லாஹ்வே போதுமான சாட்சியாக இருக்கின்றான்.(4:79)" என கூறுகிறது. இதன் விளக்கமானது காரணங்களிலாமல் காரியங்களில்லை என்பதாகும் ஆகும். உதாரணம் : ஒருவன் வீதியை கடக்க எத்தனிக்கிறான்; அந்நேரம் குறுக்கே ஒரு வாகனம் வருகிறது. அவன் சிந்தித்து நிதானித்து கடப்பானானால் அவனுக்கு காயம் ஏற்படாது என்பதே விதி. மாறாக, அவனது அறிவு குறைபாட்டினால் வாகனத்தின் முன் செல்வானானால் அவனுக்கு காயம் ஏற்படும் என்பதே விதி.

[தொகு] திருக்குர்ஆன்

திருமறை - குரான்

முதன்மைக் கட்டுரை: திருக்குர்ஆன்
திருக்குர்ஆன் என்பது முகம்மது நபிக்கு இறைவனால் அருளப்பட்ட வேதம் ஆகும். இதில் உள்ள அனைத்து வாக்கியங்களும், சொல்களும் இறைவனால் கூறப்பட்டவைகள் ஆகும். இதை இறைவன், மலக்குகள் தலைவன் சிப்ரயீல் (அலை) அவர்கள் மூலமாக முகம்மது நபிக்கு அறிவித்தான். குரானே உலகின் உள்ள அனைத்து புனிதங்களுள் புனிதமானது ஆகும்.

[தொகு] கடமைகள்

கடமைகள் என பார்க்கும்பொழுது இஸ்லாம் பல கடமைகளை மக்களுக்கு கொடுத்துள்ளது. இவைகளின் மிக முக்கியமான ஐந்து கடமைகள் இஸ்லாத்தின் ஐந்து தூண்கள் என விளிக்கபடுகின்றன . மற்ற கடமைகள் பொதுவாக ஷரியத் சட்டங்கள் என அழைக்கப்படுகின்றன.

[தொகு] நம்பிக்கை (கலிமா)

சவூதி அரேபியா நாட்டு கொடியில் பொறிக்கப்பட்டிருக்கும் இஸ்லாமின் அடிப்படை கலிமா
"இறைவன் ஒருவனே. அவனே அல்லாஹ், முஹம்மது அவரது தூதர்." என மனதளவில் ஒவ்வொறு முஸ்லிமும் நம்பவேண்டும்.இது இறை நம்பிக்கை (ஈமான் ) என அழைக்கபடுகிறது. இதுவே இசுலாமின் முதல் மற்றும் மிக முக்கியமான கடமை ஆகும். இந்த நம்பிக்கை கொண்ட ஒருவனே இசுலாமியன் ஆகிறான்.

[தொகு] பிரார்த்தனை (தொழுகை)

1865ம் ஆண்டு ஓவியம் - எகிப்து தலைநகர் கெய்ரோவில் தொழுகை புரியும் இசுலாமியர்கள்.
ஒவ்வொரு முஸ்லிமும் தினமும் ஐந்து முறை தொழுகை நடத்த வேண்டும். மேலும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையன்றும் மற்றவர்களுடன் சேர்ந்து கூட்டமாக ஜும்மா தொழுகையை நிறைவேற்ற வேண்டும். நோயாளிகள் , எட்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், தீட்டு பட்ட பெண்கள் மற்றும் பிரயாணம் செய்பவர்கள் ஆகியோருக்கு மட்டுமே இந்த ஐந்து வேளை தொழுகையில் இருந்து விலக்கு அளிக்கப்படுகின்றது.

[தொகு] நோன்பு

ஒவ்வொரு முஸ்லிமும் கண்டிப்பாக ரமலான் மாதத்தில் பகல் வேளையில் உண்ணா நோன்பு இருந்தும், இரவில் கண் விழித்து இறைவனை துதித்த வண்ணமும் இருக்க வேண்டும். நோயாளிகள் , எட்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், தீட்டு பட்ட பெண்கள் மற்றும் பிரயாணம் செய்பவர்கள் ஆகியோருக்கு மட்டுமே இந்த இருந்து விலக்கு அளிக்கப்படுகின்றது.

[தொகு] தானம் (ஜக்காத் - Jakkath)

ஒவ்வொரு முஸ்லிமும் ஆண்டுக்கு ஒருமுறை தனது மொத்த செல்வத்தில் நாற்பதில் ஒரு பங்கை(௧௦௦ க்கு ௨.௫௫) ஏழை எளியோருக்கு தானம் செய்ய வேண்டும். மொத்த சொத்து 85 கிராம் தங்கத்திற்கும் அல்லது 595 கிராம் வெள்ளிக்கும் குறைவாக இருக்கும் ஒருவனுக்கு இந்த கட்டாய தானம் கடமை ஆகாது.

[தொகு] புனித பயணம் (ஹஜ்)

புனித காபா
வசதி வாய்ப்பு படைத்த ஒவ்வொரு முஸ்லிமுக்கும், தனது வாழ்நாளில் ஒருமுறை உலகின் முதல் ஆலயமான சவுதி அரேபியாவின் மக்கா நகரில் உள்ள காபாவை தரிசிப்பது என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மற்ற நான்கு கட்டாய கடமைகளில் இருந்து இதற்கு சற்று தளர்வு கொடுக்கப்பட்டுள்ளது. சாமானிய மற்றும் நோய்வாயப்பட்ட மக்களுக்கு இந்த கடமையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.பயணம் செய்ய உடல் தெம்பும் பொருளாதாரமும் உள்ளவர்களுக்கே இது கடமை.

[தொகு] மற்ற கடமைகள்

[தொகு] இறைவனை நினைவுகூர்தல்

இசுலாம் தனது மக்களை, தமது வாழ்வில் அனைத்து நிலைகளிலும் இறைவனை நினைவு கூற வழியுருத்துகிறது.நம்மையும் அண்ட சராசரங்களையும்,மற்றும் அணைத்து உயிருள்ள,உயிரற்ற..அசையக்கூடிய,அசையாத படைப்புகளை படைத்து,உணவளித்து,பரிபாலனம் செய்து...வழி நடத்தும் வல்லமை வாய்ந்த இறைவனை நம்மால் பார்க்க முடியாவிட்டாலும்,அவன் சதாவும் நம்மை அவதானித்துக் கொண்டிருக்கிறான் என்ற சிந்தனையை..அதன் அச்சப்பாட்டை உள நிறுத்துவது!.. இது மக்களை பாவம் செய்வதில் இருந்து தடுப்பதாக இசுலாம் கூறுகின்றது. இதன்படி ஒவ்வொரு இசுலாமியரும் மற்ற இசுலாமியரை பார்க்கும்பொழுது அஸ்ஸலாமு அலைக்கும் ( உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்) என கூறவேண்டும். இவ்வாறே ஒருவர் சந்தோசமாக இருக்கும் பொழுது அல்லாஹு அக்பர் (இறைவன் மிகப்பெரியவன்) என்றும் துக்கமாக இருக்கும்பொழுது இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன் (நாம் இறைவனிடம் இருந்தே வந்தோம், மேலும் அவனிடமே திரும்பிசெல்பவர்களாக இருக்கிறோம்) என்றும் கூற வேண்டும். இவ்வாறு தும்மும்போதும், கொட்டாவி விடும் பொழுதும், பிறருக்கு உதவி செய்யும் பொழுதும், பிறருக்கு நன்றி சொல்லும் பொழுதும் என அனைத்து நிலைகளிலும் இறைவனை நினைக்க வேண்டும். மேலும் பொதுவாக எந்த செயலை செய்ய ஆரம்பிக்கும் பொழுதும் பிஸ்மில்லாஹ் (இறைவனின் திருப்பெயரால்) என கூறி ஆரம்பிக்கவேண்டும்.

[தொகு] உணவு மற்றும் உடை

உணவுகளில் விலக்கப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும். இவை ஹராம் என வழங்கப்படுகின்றன. பன்றி இறைச்சி, குருதி, மாமிசந்தின்னிப் பறவைகளின் இறைச்சி, சாராயம் போன்றவை ஹராமான உணவுகள் ஆகும். பொதுவாக அனைத்து சைவ உணவுகளும், தாவர உண்ணிப் பறவைகளின் இறைச்சியும், மீன் வகைகளும் ஹலால் என அழைக்கப்படுகின்றன. இதற்கு 'அங்கீகரீக்கப்பட்டவை' எனப் பொருளாகும்.
உடைகளைப் பொருத்தவரை ஆண்கள் எளிமையான மற்றும் வெண்மையான ஆடைகளை அணிய அறிவுறுத்தப்பட்டனர். மேலும் கைகளில் மணிக்கட்டு வரையும் கால்களில் கணுக்கால் வரையிலும் ஆடை அணிய அறிவுறுத்தப்பட்டனர். பட்டாடைகள் அணிவது ஆண்களுக்கு தடைசெய்யப்பட்டுள்ளது. பெண்களைப் பொருத்த வரையில் அவர்கள் உடல் முழுவதையும் மறைக்கும் படி ஆடை அணிய அறிவுறுத்தப்பட்டனர். ஆனால் முகத்தை மறைப்பது கட்டாயமாக்கப்படவில்லை.

[தொகு] வரலாறு


முதன்மைக் கட்டுரை: இசுலாமிய வரலாறு
இசுலாமிய வரலாற்றைப் பொருத்தமட்டில், அது முகம்மது நபியால் அறிவிக்கப்பட்ட நாள் முதல் வளர்ச்சியையே கண்டுள்ளது. முகம்மது நபியின் வாழ்நாளிலேயே அது அரேபிய தீபகற்ப்பம் முழுவதும் பரவியது. அவ்வாறு பரவிய அனைத்து இடங்களும் முகம்மது நபியின் ஆட்சியின் கீழ் வந்தது. இது தவிர மற்ற பகுதிகளிலும் இசுலாம் பரவ தொடங்கியது. முகம்மது நபிக்கு பிறகு வந்த ரசூத்தீன் கலிபாக்கள், உமய்யா கலிபாக்கள், அப்பாசிய கலிபாக்கள், ஒட்டாமன் பேரரசு மற்றும் பல இசுலாமிய பேரரசுகளின் காரணமாக இசுலாம் உலகின் அனைத்து பகுதிகளிலும் பரவியது. இந்த இடைப்பட்ட காலங்களில் இசுலாம் தனது புகழ்நுனியை அடைந்தது. இதன் பிறகு ஐரோப்பிய நாடுகளின் வளர்ச்சி காரணமாக ஒட்டாமன் மற்றும் மொகலாய பேரரசுகள் வீழ்ச்சியடைந்தன. இது இசுலாமிய வளர்ச்சியில் ஒரு தேக்கத்தை ஏற்படுத்தியது. 21ம் நூற்றாண்டில்ம் உலகின் அதி வேகமாக வளரும் சம்யமாக இசுலாம் உள்ளது.

[தொகு] குடும்பமுறை

குடும்பங்களை பொருத்த மட்டில் கணவனே குடும்ப தலைவன் ஆவான். குடும்பத்தின் பொருளாதார தேவைகளை பூர்த்தி செய்வது அவனது கடமை ஆகும். மனைவி அவனது உரிமையில் நிகரானவலாக இருக்கிறாள் என்பதுடன் கணவனது சொத்துக்களுக்கு அவளே பொறுப்பாவாள். ஒரு ஆண் அதிகப்பட்சம் நான்கு மனைவிகளை திருமணம் செய்யலாம். ஆனால் அதர்க்கு முன்பு அவன் நான்கு பெண்களையும் மனதளவிலும், பொருளாதார அளவிலும் சமமாக நடத்தும் பக்குவமும், வசதியும் பெற்றிருக்கவேண்டியது கடமையாகின்றது. ஆனால் பெண் ஒரு நேரத்தில் ஒரே கணவனுடன் வாழ மட்டுமே அனுமதி உள்ளது. மேலும் விதவை மறுமணமும் அங்கீகரீக்கப்பட்டுள்ளது

[தொகு] இசுலாமியப் பிரிவுகள்

இசுலாம் மதம் பொதுவாக சுன்னி (Sunni) மற்றும் சியா என்ற இரண்டு பெரும் பிரிவாக உள்ளார்கள். இதை தவிர சுஃபி போன்ற சில பிரிவுகளும் உள்ளன.

[தொகு] சுன்னி இசுலாம்


முதன்மைக் கட்டுரை: சுன்னி இசுலாம்
சுன்னி இசுலாம், இசுலாமிய பிரிவுகளில் உள்ள மிகப்பெரிய உட்பிரிவு ஆகும். இது மொத்த இசுலாமிய மக்கள் தொகையில் 85 சதவிகிதத்தை கொண்டுள்ளது. சுன்னி என்பதற்கு அராபிய மொழியில் 'முகம்மதை பின்பற்றுதல்' என்று அர்த்தமாகும்.இராக் மற்றும் இரான் ஆகிய நாடுகளை தவிர்த்து மற்ற அனைத்து இசுலாமியர்கள் வாழ் நாடுகளிலும் சுன்னி இசுலாம் பெரும்பான்மையாக உள்ளது. இந்த பிரிவு தன்னகத்தே மேலும் நான்கு உட்பிரிவுகளை கொண்டுள்ளது. ஃஅனபி, சாபி, மாலிக்கி மற்றும் ஃஅம்பிலி என்ற இவைகள் மத்ஃகப்புகள் என அழைக்கப்படுகின்றன. மற்ற பிரிவுகளைவிட சுன்னி இசுலாமே, தீவிரமாக இசுலாமிய கொள்கைகளை பின்பற்றுகின்றது.

[தொகு] சியா இசுலாம்


முதன்மைக் கட்டுரை: சியா இசுலாம்
சியா இசுலாம், இசுலாமிய பிரிவுகளில் உள்ள இரண்டாவது மிகப்பெரிய உட்பிரிவு ஆகும். இது மொத்த இசுலாமிய மக்கள் தொகையில் 2% சதவிகிதத்தை கொண்டுள்ளது. இராக், இரான் ஆகிய நாடுகளில் பெரும்பான்மையாக இருக்கும் இந்த பிரிவு, மற்ற இசுலாமிய நாடுகளிலும் கணிசமான அளவில் இருக்கின்றது. சியா இசுலாம் தன்னகத்தே அனேக உட்பிரிவுகளை கொண்டுள்ளது. இதில் 'பன்னிருவர் பிரிவு' முதன்மையாக உள்ளது. இதை தவிர இசுமாலி, செய்யதி போன்ற பிரிவுகளும் கணிசமான அளவில் உள்ளன. பன்னிருவர் பிரிவின் அனேக நடைமுறைகள் சுன்னி இசுலாம் முறையுடன் ஒத்துப்போகின்றன.

[தொகு] சூஃபிசம்


முதன்மைக் கட்டுரை: சூஃபிசம்
சூஃபிசம் என்பது மத்திய காலத்தில் ஏற்பட்ட ஒரு பிரிவு ஆகும். மற்ற பிரிவுகளில் இருந்து மாறுபட்டு மிகவும் மாறுபட்ட சுதந்திர உணர்வை கொண்டவர்கள் இவர்கள். தனியே தங்களுக்கான சட்டங்கள், பிரார்த்தனை முறைகள் ஆகியவற்றை கொண்டிராத இவர்கள், பொதுவாக சுன்னி மற்றும் சியா இசுலாம் முறைகளையே பின்பற்றுகின்றனர்.

[தொகு] இவற்றையும் பார்க்கவும்

[தொகு] மேற்கோள்கள்