திங்கள், 15 ஆகஸ்ட், 2011

ஜகாத்

ஜகாத்


624 நபி(ஸல்) அவர்கள் தம்மை யமன் நாட்டிற்கு அனுப்பியபோது ”ஒவ்வொரு முப்பது மாடுகளுக்கும் ஜகாத்தாக ஒரு வருடக் காளை அல்லது பசு வாங்க வேண்டும். வயது வந்த ஒவ்வொருவரிடமிருந்தும் ஒரு தீனார் ஜகாத்தாக வாங்க வேண்டும் அல்லது அதன் விலை மதிப்புள்ள துணி வாங்க வேண்டும்” என்று நபி(ஸல்) அவர்கள் தமக்குக் கட்டளையிட்டார்கள் என முஆத் இப்னு ஜபல்(ரலி) அறிவிக்கிறார். அஹ்மத், அபூதாவூத், நஸயீ, திர்மிதீ, மற்றும் இப்னு மாஜா



இங்கு அஹ்மதின் வாசகம் இடம் பெற்றுள்ளது. திர்மிதீயில் இது ஹஸன் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மவ்ஸூல் என்பதும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. மேலும், ஹாகிம் மற்றும் இப்னு ஹிப்பானில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.







625 ”முஸ்லிம்களிடமிருந்து அவர்களுடைய தண்ணீருக்கும் ஜகாத் வாங்க வேண்டும்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அம்ர் இப்னு ஷுஐபு தம்முடைய தந்தையிடமிருந்தும் அவர் தம்முடைய தந்தை மற்றும் பாட்டனார் வாயிலாக அறிவிக்கிறார். அஹ்மத்



”அவர்களுடைய ஜகாத்தை அவர்களுடைய வீடுகளிலிருந்து பெற வேண்டும்” என்று அபூதாவூதில் உள்ளது.







626 ”எந்த ஒரு முஸ்லிம் மீதும் அவன் (சவாரிக்காக) வைத்திருக்கும் குதிரை மற்றும் அவனுடைய அடிமைக்காக ஜகாத் செலுத்துவது கடமையல்ல” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். புகாரி



”அடிமையின் மீது ஸதக்கத்துல் ஃபித்ரைத் தவிர்த்து எந்த ஜகாத்தும் கடமை இல்லை” என்றும் முஸ்லிமில் பதிவாகியள்ளது.







627 ”காடுகளில் மேய்ந்து கொள்ளும் ஒட்டகங்களில் ஒவ்வொரு நாற்பதிற்கும் இரண்டு வருடங்கள் பூர்த்தியான ஒரு பெண் ஒட்டகம் ஐகாத் ஆகும். இதைக் கணக்கிட்டு (ஜகாத் கொடுக்காதிருக்க) அவர்கள் அவற்றைப் பிரித்துக் கொள்ளக் கூடாது. எவர் ஜகாத்தை இறைவனிடம் நற்கூலியை எதிர்பார்த்து கொடுக்கின்றாரோ, அவர் அதற்கான கூலியைப் பெற்றுக் கொள்வார். எவர் ஜகாத் கொடுக்கவில்லையோ, அவரிடமிருந்து நாம் அதைக் கண்டிப்பாக வாங்குவோம். அவருடைய சொத்தின் ஒரு பகுதி நம் இறைவனால் வலியுறுத்தப்பட்ட விஷயங்களில் ஒன்றாகும். அதில் இருந்து எதுவுமே முஹம்மதின் குடும்பத்தாருக்கு அனுமதிக்கப்பட்டதல்ல” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என, பஹஜ் இப்னு ஹகீம் தன்னுடைய தந்தை மற்றும் பாட்டனார் வாயிலாக அறிவிக்கிறார். முஸ்னத் அஹ்மத், அபூதாவூத், நஸயீ



நஸாயீ மற்றும் ஹாகிம்மில் ஸஹீஹ் எனும் தரத்திலும், ஷாஃபிஈயில் முஅல்லக் எனும் தரத்திலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.







628 ”உன்னிடம் இருநூறு திர்ஹம் இருந்து, அவற்றின் மீது வருடம் ஒன்று கழிந்து விட்டால், அவற்றிலிருந்து ஐந்து திர்ஹம் ஜகாத்(கடமை) ஆகும். உன்னிடம் இருபது தீனார்கள் வரும் வரை நீ ஜகாத் கொடுக்க வேண்டியது இல்லை. இருபது தீனார்கள் மட்டும் இருந்து, அவற்றின் மீது வருடம் ஒன்று கழிந்து விட்டால், அரை தீனார் அவற்றிலிருந்து ஜகாத் ஆகும். அதற்கு மேல் எவ்வளவு அதிகமானலும் அதைக் கணக்கிட்டு ஜகாத் கொடுப்பது கடமையாகும். வருடம் ஒன்று கழியாத எந்த ஒரு சொத்தின் மீதும் ஜகாத் கடமை இல்லை” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அலீ(ரலி) அறிவிக்கிறார். அபூதாவூத்



இது ஹஸன் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது மர்ஃபூ எனும் தரத்தைப் பெற்றுள்ளதா? என்பதில் கருத்து வேறுபாடு உள்ளது.







629 ”ஒருவர் ஒரு சொத்தைப் பெற்ற பின்பு அதன் மீது வருடம் ஒன்று கழியாமல் ஜகாத் இல்லை” என்று திர்மிதீயில் இடம் பெற்றுள்ளது.



இது மவ்கூஃப் எனும் தரத்தில் உள்ளது என்று கணிக்கப்பட்டுள்ளது.







630 ”வேலை வாங்கப்படும் காளை மாடுகளில் மீது ஜகாத் கடமை இல்லை” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என, அலீ(ரலி) அறிவிக்கிறார். அப+தாசீத், தாரகுத்னீ



இது மவ்கூஃப் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.







631 ”அநாதையுடைய சொத்துக்கு எவர் பொறுப்பேற்றுள்ளாரோ அவர் அதை வியாபாரம் (தொழில்) செய்து பெருக்கிக் கொள்ளட்டும். ஜகாத் அதை விழுங்கும் அளவிற்கு விட்டுவிட வேண்டாம்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என, அம்ர் இப்னு ஷுஐபு தன்னுடைய தந்தை மற்றும் பாட்டனார் அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) வாயிலாக அறிவிக்கிறார். திர்மிதீ, தாரகுத்னி







632 மக்கள் ஜகாத்தை நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு வந்து கொடுக்கும் போது ”யா அல்லாஹ்! இவர்களுக்கு கருணை செய்வாயாக!” என்று அவர்கள் கூறுவார்கள் என, அப்துல்லாஹ் இப்னு அபீ அவ்ஃபா(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்







633 அப்பாஸ்(ரலி) அவர்கள் தம்முடைய ஜகாத்தை அதன் நேரம் வரும் முன்பே செலுத்துவது சம்பந்தமாக கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள் அவர்களுக்கு அவ்வாறு செய்ய அனுமதி வழங்கினார்கள் என்று அலி(ரலி) அறிவிக்கிறார். திர்மிதீ, ஹாகீம்







634 ”இருநூறு திர்ஹத்திற்கும் குறைவாக வெள்ளி இருப்பின் அதன் மீது ஜகாத் இல்லை. ஒட்டகங்கள் ஐந்திற்கும் குறைவாக இருப்பின், அவற்றின் மீதும் ஜகாத் இல்லை. ஐந்து வஸ்க்கிற்குக் குறைவாக உள்ள பேரிச்சம் பழத்தின் மீதும் ஜகாத் இல்லை. என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என, ஜாபிர்(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்







635 முஸ்லிமுடைய மற்றோர் அறிவிப்பில் ”ஐந்து வஸக் அளவிற்கும் குறைவாக உள்ள பேரிச்சம்பழம் மற்றும் தானியங்களுக்கு ஜகாத் இல்லை” என்று அபூசயீத்(ரலி) அவர்கள் அறிவித்ததாக புகாரி முஸ்லிம் உள்ளது.







636 ”மழைத்தண்ணீர், ஊற்றுத் தண்ணீர் ஆகியவற்றால் பாசனம் செய்யப்படும் நிலம் அல்லது ஈரத் தன்மையுள்ள நிலத்தின் மூலம் செய்யப்படும் வேளாண்மையில் பத்தில் ஒரு பங்கு ஜகாத் கடமையாகும். தண்ணீர் இறைத்துப் பாசனம் செய்யப்படும் நிலத்திலிருந்து வரும் வேளாண்மையில் இருபதில் ஒரு பங்கு ஜகாத் (கடமை) ஆகும்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என, ஸாலிம் இப்னு அப்துல்லாஹ் தம் தந்தை இப்னு உமர்(ரலி) வாயிலாக அறிவிக்கிறார். புகாரி



தானாக விளையும் வேளாண்மைக்குப் பத்தில் ஒரு பங்கும், சால்(பை) அல்லது கால்நடைகள் மூலம் நீர்ப்பாசனம் செய்யப்படும் நிலத்தின் வேளாண்மையில் இருபதில் ஒரு பங்கும் ஜகாத் கடமை என்று அபூதாவூதில் இடம் பெற்றுள்ளது.







637 ”தானியங்களில் வாற்கோதுமை, கோதுமை, திராட்சை, பேரிச்சை ஆகியவற்றைத் தவிர்த்து வேறு எந்த வேளாண்மைக்கும் ஜகாத் வாங்க வேண்டாம்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூமூஸா அல் அஸ்அரி(ரலி) மற்றும் முஆத்(ரலி) அறிவிக்கின்றனர். தப்ரானி, ஹாம்கி







638 வெள்ளரிக்காய், தர்பூசணிப்பழம், மாதுளை மற்றும் ‘கஸப்’ எனும் ஒரு வகைப் புல் ஆகியவற்றிற்கு (ஜகாத் இல்லை) என நபி(ஸல்) அவர்கள் சலுகை அளித்ததாக முஆத்(ரலி) வாயிலாக தாரகுத்னீயில் ளயீஃப் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.







639 ”நீங்கள் (ஜகாத்தை) மதீப்பிடு செய்ய (வசூலிக்கச்) சென்றால், மூன்றில் ஒரு பகுதியை விட்டு, விட்டு (மற்றவற்றில் ஜகாத்தைப்) பெற்றுக் கொள்ளுங்கள். மூன்றில் ஒரு பங்கை விடாவிட்டால் நான்கில் ஒரு பங்கை(யாவது) விட்டு விடுங்கள்” என்று கூறினார்கள் என ஸஹ்ல் இப்னு அபீ ஹஸ்மா(ரலி) அறிவிக்கிறார். அஹ்மத், அப+ தாசீத், நஸாயீ மற்றும் திர்மிதீ



இது இப்னு ஹிப்பான் மற்றும் ஹாம்மில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.







640 பேரிச்சம் பழத்தில் ஜகாத் மதிப்பீடு செய்து (வசூலிப்பது) போன்றே திராட்சையிலும் ஜகாத் மதிப்பீடு செய்து (வசூலித்துக்) கொள்ளுமாறு நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். அப்போது அதற்குரிய ஜகாத் காய்ந்த திராட்சை (ம்ஸ்மிஸ்) ஆக வாங்கப்பட்டது என அத்தாப் இப்னு அத்(ரலி) அறிவிக்கிறார். அஹ்மத், அபூதாசீத், நஸாயீ, திர்மிதீ, மற்றும் இப்னு மாஜா.



இது முன்கதிஃப் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.







641 நபி(ஸல்) அவர்களிடம் ஒரு பெண்மணி வந்தார். அவருடன் கையில் அவருடைய மகள் இருந்தாள். அவளுடைய கையில் இரண்டு தங்க வளையங்கள் இருந்தன. நபி(ஸல்) அந்தப் பெண்மணியிடம் ”நீ இதற்கு ஜகாத் கொடுத்துவிட்டாயா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், ”இல்லை” என்றார். ”மறுமையில் அல்லாஹ் இதற்குப் பதிலாக நெருப்பினால் ஆன இரண்டு வளையங்கள் அணிவிப்பதை விரும்புகிறாயா?” என்று கேட்டார்கள். (இதைக் கேட்டவுடன்) அவர் அவற்றைக் கழற்றிக் கொடுத்து விட்டார் என்று அமீர் இப்னு ஷுஐபு தன்னுடைய தந்தை மற்றும் பாட்டனார் வாயிலாக அறிவிக்கிறார். அபூதாவூத், நஸாயீ மற்றும் திர்மிதீ



இது ஹாம்மில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.







642 தங்கத்தால் செய்யப்பட்டிருந்த ஒருவகை நகையை நான் அணிந்திருந்தேன், அல்லாஹ்வின் தூதர் அவர்கள், ”இதுவும் (சேகரித்துப் பதுக்கி வைக்கும்) புதையல் ஆகுமா?” என்று அதைப் பற்றிக் கேட்டேன். அதற்கு, ”அதனுடைய ஜகாத் செலுத்தப்பட்டிருந்தால் அது புதையல் ஆகாது” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என உம்மு ஸலமா(ரலி) அறிவிக்கிறார். அபூதாவூத், தாரகுத்னீ. இது ஹாம்மில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.







643 நாங்கள் வியாபாரத்திற்காகத் தயாரிக்கும் பொருட்களிலிருந்து ஜகாத்தை எடுத்துச் கொடுக்குமாறு நபி(ஸல்) அவர்கள் எங்களுக்குக் கட்டளையிட்டார்கள் என, ஸமுரா இப்னு ஜுன்துப்(ரலி) அறிவிக்கிறார். அபூதாவூத். இது ளயீஃப் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.







644 ”புதையலில் (மற்றும் சுரங்கப் பொருட்களில்) ஐந்தில் ஒரு பகுதி ஜகாத் ஆகும்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என, அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்







645 பாழடைந்த ஓர் இடத்திலிருந்து ஒருவருக்குக் கிடைத்த புதையலைப் பற்றி நபி(ஸல்) அவர்கள் கூறுகையில், ”அதை நீ மக்கள் வசிக்கும் பகுதியிலிருந்து பெற்றிருந்தால் (யாருடையது எனக் கேட்டு) அதை அறிவிப்புச் செய்! மக்கள் வசிக்காத பகுதியிலிருந்து அதைப் பெற்றிருந்தால் அதன் ஐந்திலொரு பங்கு ஜகாத் ஆகும்” என்று கூறினார்கள் என, அம்ர் இப்னு ஷுஐபு தன்னுடைய தந்தை மற்றும் பாட்டனார் வாயிலாக அறிவிக்கிறார். இப்னு மாஜா. இது ஹஸன் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.







646 ‘கபலிய்யா’ எனும் சுரங்கத்திலிருந்து நபி(ஸல்) அவர்கள் ஜகாத் வாங்கினார்கள் என பிலால் இப்னு ஹாரிஸ்(ரலி) அறிவிக்கிறார். அபூதாவூத்





குளிப்பு கடமையானவர்களாக

நீங்கள் குளிப்பு கடமையானவர்களாக இருந்தால் குளித்து உடல் முழுவதையும் சுத்தம் செய்துகொள்ளுங்கள். (அல்குர் ஆன் 5:6)




குளிப்புக் கடமையாகக் கூடிய சில காரியங்களை இஸ்லாம் கூறுகின்றது. ஆண், பெண்ணுக்கு அக்காரியங்கள் ஏற்படுமாயின் குளிப்பு கடமையாகிவிடும். அவை பின்வருமாறு:



விந்து வெளிப்படல்:

“இச்சை நீர்வெளிப்பட்டால் வுழூச் செய்ய வேண்டும். விந்து வெளிப்பட்டால் குளிக்க வேண்டும்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் அலி (ரழி), ஆதாரம்: திர்மிதி-114, இப்னுமாஜா-504, அபூதாவூத்-206)



இச்சை நீருக்கும் விந்துக்கும் வித்தியாசம் உண்டு. விந்து (மனீ) கடினமான வெள்ளை நிற திரவப் பொருளாகும். இச்சை நீர் (மதீ, வதீ) வெள்ளை நிறமான கடினமில்லாத சாதாரண திரவப் பொருளாகும். இது சிறுநீர் கழிக்குபோது அல்லது இலேசான உணர்வின்போது வெளியாகும்.



அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் உண்மையைக் கூற வெட்கப்படமாட்டான். பெண்ணுக்கு ஸ்கலிதம், ஏற்பட்டால் அவள் குளிப்பது அவசியமா? என்று ஒரு பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம் கேட்டபோது, ஆம்! ஈரத்தை அவள் (மேனியில், ஆடை யில்) கண்டால் குளிக்க வேண்டும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப் பவர்: உம்மு ஸுலைம் (ரழி), ஆதாரம்: புகாரி-273, முஸ்லிம்-313, அபூதாவூத்-237)



உடலுறவு கொள்ளல்:

உடலுறவு கொள்ளும்போது விந்து வெளிப்பட்டால்தான் குளிப்பு கடமை என்பது இஸ்லாத்தின் ஆரம்பகால சட்டமாக இருந்தது. பின்பு இச்சட்டம் மாற்றப்பட்டு (ஆணுறுப்பும், பெண்ணுறுப்பும் இணைந்தால் விந்து வெளிப்படாவிட்டாலும் குளிப்பு அவசியமாக்கப்பட்டு) விட்டது. (ஆதாரம்: முஸ்லிம்-348, இப்னுமாஜா-209, திர்மிதி-108,111, முஅத்தா-76)



ஒருவர் தனது மனைவியின் (இரு கால், இரு கை ஆகிய) நான்கு கிளைகளுக்கிடையில் அமர்ந்து, பின்பு (உறவுகொள்ள) முயற்சித்தால் குளிப்பு கடமையாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), ஆதாரம்: முஸ்லிம்-348, இப்னுமாஜா-610, நஸாயி-191)



மாதவிடாய் ஏற்படல்:

நபியே! மாதவிடாய்ப் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றார்கள். நீர் கூறும் அது (அசுத்தமான) ஓர் உபாதை. எனவே மாத விடாய் காலத்தில் (உடலுறவு கொள்ளாமல்) பெண்களை விட்டு விலகி இருங்கள். அவர்கள் சுத்தமாகும் வரையில் அவர்களை (உடலுறவு கொள்ள) நெருங்காதீர்கள். மாதவிடாயிலிருந்து (குளித்து) அவர்கள் சுத்தமாகி விட்டால் அல்லாஹ் உங்களை ஏவிய முறைப்படி அவர்களிடம் செல்லுங்கள். (அல்குர்ஆன் 2:222)



“மாதவிடாய் ஏற்படும்போது தொழுகையை விட்டு விடு. அது நின்றதும் குளித்து விட்டுத் தொழு” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா (ரழி), ஆதாரம்: புகாரி-310, இப்னுமாஜா-621, நஸாயி-202)



மாதவிடாய் காலங்களில் விடுபட்ட தொழுகைகளை திருப்பி (களா) தொழ வேண்டியதில்லை. (புகாரி-310) ஆனால் விடுபட்ட பர்ளான ரமழான் மாத நோன்பை திருப்பி நோற்க வேண்டும்.



தொடர் உதிரப்போக்கு:

மாதவிடாய் குறிப்பிட்ட சில நாட்களுக்கு ஏற்படும். அந்த நாட்களை கடந்த பின், தொடர்ந்தும் இரத்தம் வெளியேறுவதைத் தான் தொடர் உதிரப்போக்கு எனக் கூறப்படும். இத்தொடர் உதிரப்போக்குள்ளவர்கள் மாதவிடாய் ஏற்படும் நாட்களைக் கணக்கிட்டு விட்டு குளித்து சுத்தமாகித் தொழ வேண்டும்.



தொடர் உதிரப்போக்கைப் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கூறியபோது ”அது மாத விடாய் அல்ல. அது ஒரு நரம்பு சம்பந்தப்பட்ட நோய். (அதனால்தான் இந்த இரத்தம் தொடர்ந்து வெளியேறுகிறது) என்று கூறினார்கள். (ஆதாரம்: புகாரி-316, இப்னு மாஜா-626, முஸ்லிம்-333)



நான் சுத்தமாகாதவாறு தொடர்ந்து இரத்தப் போக்குடையவளாக இருக்கிறேன். எனவே நான் தொழுகையை விட்டு விடலாமா? என்று ஒரு பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் (இதற்கு முன் வழக்கமாக) உனக்கு மாதவிடாய் ஏற்படும் நாட்களின் அளவுக்கு தொழுகையை விட்டு விடு. பிறகு குளித்து விட்டு துணியை இறுக்கிக் கட்டி விட்டு தொழு என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: உம்முஸலமா (ரழி), ஆதாரம்: இப்னுமாஜா-623, அபூதாவூத்-286, நஸாயீ-208)



பாதிமா பின் அபீ ஹுபைஷ் (ரழி), நபி (ஸல்) அவர்களிடம் வந்து ”நான் தொடர் இரத்தப் போக்குடையவளாக இருக்கி றேன். எனவே தொழுகையை விட்டுவிடலாமா? என்று கேட்டார்கள். அதற்கு நபியவர்கள் அது மாதவிடாய் அல்ல! நரம்பு சம்பந்தப்பட்ட நோயாகும். உன் மாதவிடாய் நாட்களில் தொழுகையை தவிர்த்துக் கொள். பிறகு குளித்து விட்டு ஒவ்வொரு தொழுகைக்கும் வுழூ செய்துக் கொள். பாயில் இரத்தம் கொட்டிக் கொண்டிருந்தாலும் சரியே என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா (ரழி), ஆதாரம்: இப்னுமாஜா-624, திர்மிதி-125)



பிரசவத் தீட்டு ஏற்படல்:

பிரசவத்தின் காரணமாக இரத்தப் போக்கு ஏற்படும்போது தொழக் கூடாது. அது நின்ற பின் குளித்து விட்டு தொழ வேண்டும். அந்நாட்களில் விடுபட்ட தொழுகைகளைத் திருப்பி (களா) தொழ வேண்டி யதில்லை.



குளிக்கும் முறை:

கடமையான குளிப்பை நிறைவேற்ற முன் இரு கைகளையும் மூன்று முறை கழுவ வேண்டும். அதன் பின், மர்மஸ்தானத்தை கழுவ வேண்டும். பின்பு வுழூச் செய்ய வேண்டும். அதன் பின் தலையில் மூன்று முறை தண்ணீர் ஊற்றி (உடலை சுத்தப்படுத்தி)க் கொள்ள வேண்டும். குளிக்கும்போது வலது பக்கத்திலிருந்து தண்ணீர் ஊற்ற வேண்டும். ஆண், பெண் இவ்வாறு கடமையான குளிப்பை நிறைவேற்ற வேண்டும். நபி (ஸல்) அவர்கள் இப்படித்தான் குளிப்பை நிறைவேற்றியிருக்கிறார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கடமையான குளிப்பை நிறைவேற்றும்போது தம் இரு கைகளையும் கழுவி விட்டு தொழுகைக்குச் செய்வது போன்று வுழூ செய்வார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா (ரழி),மைமூனா (ரழி), ஆதாரம்: புகாரி-241:265, முஸ்லிம்-317, நஸாயீ-247)



நபி (ஸல்) அவர்கள் குளிப்பதற்காக நான் தண்ணீர் எடுத்து வைத்தேன். தமது முன் கைகளின் மீது தண்ணீர் ஊற்றி, இரண்டு அல்லது மூன்று முறை கழுவினார்கள். பின்பு வலக்கரத்தால் சிறிதளவு தண்ணீரை இடக்கரத்தால் ஊற்றித் தமது மர்மஸ்தலத்தைக் கழுவினார்கள். பின்பு தமது கையைத் தரையில் தேய்த்தார்கள். பின்பு வாய்க் கொப்பளித்து மூக்கையும் சுத்தம் செய்து, முகத்தை கழுவினார்கள். இரு கைகளையும் கழுவினார்கள். பின்னர் தலையை மூன்று முறை கழுவி விட்டு தம் மேனியில் தண்ணீரை ஊற்றிக் கொண்டார்கள். பின்பு (குளித்த இடத்திலிருந்து) சற்று விலகி நின்று தம் கால்களைக் கழுவிக் கொண்டார்கள். (அறிவிப்பவர்: மைமூனா (ரழி) (ஆதாரம்: புகாரி-258, முஸ்லிம்-317, நஸாயீ-253, இப்னுமாஜா-573)



நபி (ஸல்) அவர்கள் குளித்த பின் வுழூச் செய்ய மாட்டார்கள் என ஆயிஷா (ரழி) கூறினார்கள். (ஆதாரம்: திர்மிதி-108, அபூதாவூத்-250, இப்னுமாஜா-579)



அஸ்மா பின்த் ஷகல் (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து மாதவிடாய்க் குளிப்பு பற்றிக் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ”உங்களில் ஒருவர் (மாதவிடாய் குளிப்பின் போது) தண்ணீரையும் இலந்தை இலைகளையும் எடுத்து நன்கு சுத்தம் செய்து கொள்ளட்டும். பிறகு தலைக்குத் தண்ணீர் ஊற்றி நன்றாகத் தேய்ந்து தலையின் சருமம் நனையும் வரை கழுவட்டும். பிறகு உடம்புக்குத் தண்ணீர் ஊற்றட்டும். அதன் பின்னர் கஸ்தூரி தடவப்பட்ட பஞ்சுத் துண்டு ஒன்றை எடுத்து சுத்தம் செய்து கொள்ளட்டும் என்று சொன்னார்கள்.



அதற்கு அஸ்மா (ரழி) அவர்கள் ‘அதை வைத்து அவள் எவ்வாறு சுத்தம் செய்வாள்? என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் ஸுப்ஹானல்லாஹ், அதனால் சுத்தம் செய்துகொள்ளட்டும் என்று கூறினார்கள்.



உடனே நான் இரத்தம் படிந்த இடத்தில் தடவிக் கொள் என்று பிறர் காதில் விழாதவாறு அதை இரகசியமாகச் சொன் னேன்.



மேலும் அஸ்மா (ரழி) நபி (ஸல்) அவர்களிடம் பெருந்துடக்கிற்காகக் குளிக்கும் முறை பற்றிக் கேட்டார். அதற்கு நபியவர்கள் தண்ணீர் எடுத்து நன்கு சுத்தம் செய்துக் கொள். பிறகு தலைக்குத் தண்ணீர் ஊற்றி தலையில் சருமம் நனையும் அள வுக்கு நன்கு தேய்த்துக் கொள். பின்னர் உன் (மேனியின்) மீது தண்ணீர் ஊற்று என்றார்கள். (அறிவிப்பர்: ஆயிஷா (ரழி) நூல்: முஸ்லிம்-552)



உங்களில் ஒருவர் தம் மனைவியுடன் உடலுறவு கொண்டு, மறு முறையும் உட லுறவு கொள்ள விரும்பினால், வுழூ செய்து கொள்ள வேண்டும் என நபி (ஸல்) அவர் கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூ ஸயீத், ஆதாரம்: முஸ்லிம்-308, இப்னுமாஜா-587, நஸாயீ-262)



எங்களில் ஒருவர் குளிப்புக் கடமையான நிலையில் தூங்கலாமா? என்று உமர் (ரழி) நபி (ஸல்) அவர்களிடம் கேட்டபோது, ஆம் வுழூச் செய்து விட்டு தூங்கலாம் என்றார்கள். (அறிவிப்பவர்: உமர் (ரழி), ஆதாரம்: புகாரி-280, முஸ்லிம்-306, நஸாயீ-259)



மறுக்கப்படும் ஆதாரபூர்வமான ஹதீஸ்கள்

மறுக்கப்படும் ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் (பகுதி 2, தொடர் 5)

‘மூஸா நபியும், மலக்குல் மவ்த்தும்’ சம்பந்தப்பட்ட ஹதீஸைப் பல வழிகெட்ட பிரிவினரும் தப்பும், தவறுமான தர்க்க ரீதியான வாதங்களை முன்வைத்து மறுத்துள்ளனர். இந்த ஹதீஸைச் சகோதரர் பிஜே அவர்களும் பல தவறான வாதங்களின் அடிப்படையில் மறுக்கின்றார். அவரது வாதங்களை ஏற்றுக்கொண்டால் இந்த ஹதீஸை மட்டுமன்றி குர்ஆன் கூறும் பல சம்பவங்களையும் நிராகரிக்க நேரிடும் என்பதைப் பலமான ஆதாரங்களில் அடிப்படையில் நிரூபித்து வருகின்றோம். அவரது வாதமும், ஸுன்னாவை அவர் அணுகும் முறையும் தவறானது என்பதற்கு இது தக்க சான்றாக அமைகின்றது. இந்த ஹதீஸ் குறித்து அவர் முன்வைக்கும் இன்னும் சில வாதங்களுக்கான பதில்களை இங்கே நோக்குவோம்.



‘மலக்குல் மவ்த்’ தோல்வியுடன் திரும்பிச் சென்றாரா?



ஒரு வானவர் இறைக் கட்டளையை நிறைவேற்றாமல் தோல்வியுடன் திரும்பிச் சென்றார் என்று இதில் கூறப்படுகின்றது’ என்று பீஜே தனது வாதத்தை ஆரம்பிக்கின்றார்.



அடுத்ததாக வானவர்களின் பண்புகள் குறித்தும் பேசுகின்றார்.



வானவர்களைப் பொறுத்தவரையில்;



- அவர்கள் தமக்குக் கட்டளையிடப் பட்டதைச் செய்வார்கள்.



அவர்கள் தமக்கு மேலேயுள்ள தமது இரட்சகனை அஞ்சி, தமக்கு ஏவப்படுவதைச் செய்வார்கள். (16:50)



- அவனது கட்டளைப்படியே செயல்படுவார்கள்.



பேச்சால் அவனை அவர்கள் முந்த மாட்டார்கள். அவனது கட்டளைக்கேற்பவே அவர்கள் செயற்படுவார்கள். (21:27)



- தமக்கு அல்லாஹ் ஏவியதில் மாறு செய்ய மாட்டார்கள். கட்டளையிடப்பட்டதைச் செய்வார்கள்.



நம்பிக்கை கொண்டோரே! உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நரகத்தை விட்டும் பாதுகாத்துக் கொள்ளுங்கள். மனிதர்களும் கற்களுமே அதன் எரிபொருட் களாகும். அதன்மீது கடின சித்தம் கொண்ட பலசாலிகளான வானவர்கள் உள்ளனர். அவர்கள் அல்லாஹ் தமக்கு ஏவியதற்கு மாறு செய்ய மாட்டார்கள். மேலும், அவர்கள் தமக்கு ஏவப்பட்டதைச் செய்வார்கள். (66:6)



இது போன்ற குர்ஆன் வசனங்களைக் குறிப்பிட்ட பின்னர் சகோதரர் பீஜே தனது வாதத்தைப் பின்வருமாறு முடிக்கின்றார்.



இறைவன் எந்தப் பணிக்காக அனுப்பினானோ அதைச் செய்து முடிப்பதுதான் வானவர்களின் இலக்கணம். மூஸா நபியின் உயிரைக் கைப்பற்ற ஒரு வானவரை இறைவன் அனுப்பினால் அவர் அந்த வேலையைச் செய்யாமல் திரும்ப மாட்டார். இந்த இலக்கணத்திற்கு எதிரான கருத்தை அந்த ஹதீஸ் கூறுகின்றது. (பார்க்க: ‘பீஜே தர்ஜமா’ பதிப்பு:04, பக்கம்:1308)



அல்லாஹ் ஒரு வானவருக்குக் கட்டளை பிறப்பித்தால், ‘அந்தக் கட்டளை என்ன?’ என்பதை நானோ, நீங்களோ, பீஜே அவர்களோ அறிய முடியாது. அதை அறிய வேண்டுமானால் அல்லாஹ் இட்ட கட்டளையை அல்லாஹ் கூற வேண்டும் அல்லது அல்லாஹ்வின் தூதர் கூற வேண்டும் அல்லது அல்லாஹ்வும், அவனது தூதரும் கூறிய செய்தி ஒன்றை வைத்து ‘இதுதான் ஏவப்பட்டுள்ளது’ என நாம் முடிவு செய்யலாம். இதை விட்டு விட்டு நாமாக ஒரு முடிவு செய்து ஹதீஸை மறுக்க முடியாது.



அல்லாஹ் மூஸா நபியின் உயிரைக் கைப்பற்ற வேண்டும் என மலக்குக்குக் கட்டளையிட்டிருந்தால் நிச்சயமாக அவர் உயிரைக் கைப்பற்றியிருப்பார். ஏனெனில், மலக்குகள் இட்ட பணியை ஆற்றுவர். அதற்கு மாற்றம் செய்ய மாட்டார்கள். இந்த ஹதீஸில் மலக்கு அடிபட்டதும் மீண்டும் அல்லாஹ்விடம் திரும்பிச் செல்கிறார் என்றால் அந்த மலக்கு மூஸா நபியின் உயிரை உடனே கைப்பற்ற வேண்டும் என்று அல்லாஹ்வால் ஏவப்படவில்லை என்றுதான் புரிந்துகொள்ள வேண்டும். இதை விட்டு விட்டு அல்லாஹ் ஏவியதை மலக்கு செய்யவில்லை என்று இந்த ஹதீஸ் கூறுகின்றது என்று நாமாக முடிவு செய்து ஹதீஸை மறுக்க முடியாது.



இதே வேளை நபிமார்கள் அவர்களது விருப்பத்துடன்தான் மரணத்தைத் தழுவுவர் என்பதற்கான ஆதாரங்களை நாம் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளோம். நபிமார்கள் மரணத்தைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்திற்குரியவர்கள் என்பது நிச்சயமாக மலக்குல் மவ்த்துக்குத் தெரிந்தே இருக்கும். எனவே மலக்கு அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்ற முடியாமல் மூஸா நபியிடம் தோற்றுப் போனதாக இந்த ஹதீஸ் கூறுகின்றது என்பது அப்பட்டமான, அபத்தமான குற்றச்சாட்டாகும்.



வானவர் சுயமாகச் செயல்பட மாட்டார்:



ஒரு வானவர் சுயமாகச் செயல்பட மாட்டார். அல்லாஹ் ஏவியதைத்தான் செய்வார். மூஸா நபியின் உயிரைக் கைப்பற்ற வானவர் வருகிறார் என்றால் அவர் அல்லாஹ்வின் கட்டளைப்படித்தான் வந்துள்ளார் என்பது மூஸா நபிக்குத் தெரிந்திருக்க வேண்டும். இந்த அற்ப உண்மையைக் கூட அறியாதவராக மூஸா நபி இருந்துள்ளார் என இந்தச் சம்பவம் கூறுகின்றது என்ற அடிப்படையில் வாதிட்டும் இந்த ஹதீஸ் மறுக்கப்படுகின்றது. இதுவும் தவறான வாதம்தான். இதே அடிப்படையில் கேள்வி கேட்பதாக இருந்தால் குர்ஆன் கூறும் பல சம்பவங்களிலும் சந்தேகம் எழ ஆரம்பித்து விடும்.



மர்யம்(அலை) அவர்கள் குர்ஆன் சிறப்பித்துக் கூறும் ஒரு பெண்ணாவார்கள். முஃமின்களுக்கு உதாரணமாகக் கூறப்பட்ட இரு பெண்களில் இவரும் ஒருவர். அல்லாஹ்விடம் உயர்ந்த அந்தஸ்த்தைப் பெற்றவர். இவரின் பெயரில் அல்குர்ஆனின் 19 ஆம் அத்தியாயம் அழைக்கப்படுகின்றது.



மர்யம்(அலை) அவர்கள் தனிமையில் இருக்கும் போது ஜிப்ரீல்(அலை) அவர்கள் மனித ரூபத்தில் வருகின்றார்கள். அந்நிய ஆணைக் கண்ட மர்யம்(அலை) அவர்கள் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகின்றார்கள். அப்போது அவர் தான் ஒரு மலக்கு என்றும், மர்யம்(அலை) அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை கிடைக்கப் போகிறது என்றும் குறிப்பிடுகின்றார்கள். அத்துடன் அவர் நபியாக இருப்பார். அவரது பெயர் ஈஸா இப்னு மர்யம். அவர் தொட்டில் பருவத்தில் பேசுவார் என்று பல செய்திகளையும் கூறுகின்றார்கள். வந்தவர் வானவர் என்றால் மர்யம்(அலை) அவர்கள் இவர் அல்லாஹ்வின் கட்டளைப்படிதான் வந்துள்ளார். இவர் சொல்வது நிச்சயம் நடக்கும் என்று நம்பியிருக்க வேண்டும். ஆனால், மர்யம்(அலை) அவர்கள் ‘என்னை எந்த ஆணும் தீண்டியதில்லை. நான் கெட்ட நடத்தை உள்ளவளுமல்ல. இப்படி இருக்க எனக்கு எப்படி குழந்தை பிறக்க முடியும்?’ எனக் கேள்வி கேட்கின்றார்கள். அதற்கு ‘அது எனக்கு இலகுவானது என உமது இரட்சகன் கூறுகின்றான்’ என வானவர் பதிலளித்தார். (பார்க்க 19:17-21, 3:45-49)



மர்யம்(அலை) அவர்கள் ஒரு ஸாலிஹான பெண்; முஃமின்களுக்கு முன் உதாரணமாக அல்லாஹ் கூறிய பெண். அவர்கள் மலக்குகளின் பண்புகளை அறியாமல் இருந்தார்களா? அல்லது அல்லாஹ் அனைத்துக்கும் ஆற்றல் உடையவன் என்பதை நம்பாததால்தான் ‘ஒரு ஆணும் என்னைத் தீண்டாமல் எனக்கு எப்படிக் குழந்தை கிடைக்க முடியும்?’ என்று கேட்டார்களா? இப்படிச் சிந்திக்க முடியுமா?



இப்படிச் சிந்தித்தால் ஒன்றில் இந்தச் சம்பவத்தை மறுக்க வேண்டும் அல்லது மர்யம்(அலை) அவர்கள் அடிப்படை மார்க்க அறிவு கூட இல்லாதவர்களாக இருந்தார்கள் என்று கூற வேண்டும். இரண்டுமே தவறானவை என்பதால் சம்பவத்தையும் நம்பி, மர்யம்(அலை) அவர்களது மார்க்க அறிவிலும் குறை காணாமல் இருப்பதென்றால் மூஸா நபியும், மலக்குல் மவ்த்தும் சம்பந்தப்பட்ட ஹதீஸையும் ஏற்று, அது மூஸா நபியின் மார்க்க அறிவைக் குறைத்துக் காட்டாது என்றும் நம்ப முடியும்.



அன்னை சாரா அவர்களும், மலக்குகளும்:



அன்னை சாரா(அலை) அவர்கள் இப்றாஹீம் நபியின் மனைவியாவார்கள். 60:4 என்ற வசனத்தின் மூலம் அவர்களிடம் அழகிய முன்மாதிரி இருப்பதாக அல்லாஹ் கூறியுள்ளான். இவர்களும், மலக்குகளும் சம்பந்தப்பட்ட ஒரு சம்பவம் குர்ஆனில் கூறப்படுகின்றது.

(பார்க்க: 51:24-30, 15:51-60, 11:69-76, 29:31-32)



இந்தச் சம்பவத்தில் மனித ரூபத்தில் இப்றாஹீம் நபியிடம் மலக்குகள் வருகின்றனர். வந்தவர்கள் வானவர்கள் என்பதை அறியாமல் அவர் மலக்குகளுக்கு விருந்தளிக்கின்றார். அவர்கள் உண்ணாத போது ஆச்சரியப்பட்டு வினவிய போதுதான் வந்தவர்கள் வானவர்கள் என்பது அவருக்குத் தெரிகின்றது. வந்தவர்கள் தாம் இரண்டு நோக்கங்களுக்காக வந்ததாகக் கூறுகின்றனர்.



(1) இப்றாஹீம்-சாரா தம்பதியினருக்கு இஸ்ஹாக் என்ற அறிவுஞானம் மிக்க ஒரு குழந்தையைக் கொண்டு நன்மாராயம் கூறுவது. அந்தக் குழந்தைக்கு யஃகூப் என்ற ஆண் குழந்தை கிடைக்கும். அவர்கள் நபியாக இருப்பார்கள் என்ற நற்செய்தி சொல்வது.



(2) தன்னினச் சேர்க்கையாளர்களான லூத் நபியின் கூட்டத்தினரை அழிப்பது.



இந்தச் செய்திகளைக் கூறியதும் அன்னை சாரா(அலை) அவர்கள் சப்தமிட்டவராக வந்து முகத்தில் அடித்துக்கொண்டு ‘நான் மலட்டுக் கிழவியாயிற்றே!’ என்றார்கள். அதற்கவர்கள் ‘அப்படித்தான் உமது இறைவன் கூறினான். அவன் ஞானமிக்கவன்; அறிந்தவன்’ என்றனர்.

(பார்க்க: அல்குர்ஆன் 51:24-30)



மலக்குகள் வந்து ஒரு செய்தியைக் கூறினால் சும்ம தாமாக வந்து கூற மாட்டார்கள். அவர்கள் அல்லாஹ்வின் கட்டளையின்றிச் செயல்பட மாட்டார்கள். இப்படி இருக்க வானவர்கள் வந்து கூறியதும் ஒரு நபியின் மனைவி, அதுவும் அழகிய முன் உதாரணம் உண்டு என அல்லாஹ் கூறிய புகழுக்குரிய பெண் உடனே அதை நம்பி ஏற்றிருக்க வேண்டும். அதற்கு மாற்றமாக ‘நான் மலடி! கிழவி! எனக்கு எப்படிக் குழந்தை பிறக்கும்!?’ என்ற தோரணையில் பேசுகின்றார்கள். அதற்கு வந்த வானவர்கள் ‘இப்படித்தான் உமது இரட்சகன் கூறினான்!’ எனக் கூற வேண்டி ஏற்படுகின்றது. வந்தவர்கள் இப்படிக் கூறாமலேயே அன்னை சாரா அவர்கள் அதை உணர்ந்து நடந்திருக்க வேண்டும். இந்தச் சம்பவம் அதற்கு மாற்றமாகக் கூறுகின்றது. எனவே ஒன்றில், இந்தச் சம்பவம் பொய்யாக இருக்க வேண்டும் அல்லது அன்னை சாரா அவர்கள் மலக்குகள் ஒரு செய்தியைச் சொன்னால் அல்லாஹ்வின் கட்டளைப்படிதான் சொல்வார்கள். பொய் சொல்ல மாட்டார்கள் என்பதை அறியாமல் இருந்தார்கள் என்று கூற வேண்டும். பீஜே அவர்கள் ஹதீஸை அணுகும் முறையில் இந்தச் சம்பவத்தை அணுகினால் இந்த இரண்டில் ஒரு முடிவைத்தான் எடுக்க நேரிடும். ஆனால் இந்த இரண்டுமே தவறான முடிவுகளாகும். பீஜே அவர்களின் ஹதீஸ் தொடர்பான அணுகுமுறை ஆபத்தானது என்பதை இதன் மூலம் அறியலாம்.



இப்றாஹீம் நபி அறியாது இருந்தாரா?



மேற்சொன்ன செய்தி ஒரு சாதாரணப் பெண் சம்பந்தப்பட்டது. இந்தச் சம்பவத்தை மற்றோரிடத்தில் குர்ஆன் குறிப்பிடும் போது இப்றாஹீம் நபி பேசிய விதமும் இவ்வாறே அமைந்துள்ளது.



மலக்குகள் நற்செய்தி கூறியதும், எனக்கு முதுமை ஏற்பட்ட நிலையில் நீங்கள் நற்செய்தி கூறுகின்றீர்களா? எதனடிப்படையில் நீங்கள் நற்செய்தி கூறுகின்றீர்கள்? எனக் கேட்டுள்ளார்கள்.



அ(தற்க)வர் ”எனக்கு முதுமை ஏற்பட்டிருக்கும் போது நீங்கள் எனக்கு நன்மாராயம் கூறுகின்றீர்களா? எந்த அடிப்படையில் நன்மாராயம் கூறுகின்றீர்கள்?” என்று (ஆச்சரியத்துடன்) கேட்டார். (15:54)



வந்தவர்கள் மலக்குகள் என்று தெரிந்து விட்டது. அவர்கள் குழந்தை கிடைக்கும்; ஆண் குழந்தை; அறிவுள்ள குழந்தை என்றெல்லாம் கூறுகின்றார்கள். வானவர்கள் அல்லாஹ்வின் கட்டளை இல்லாமல் வர மாட்டார்கள். இரட்சகன் சொல்லாததைச் சொல்ல மாட்டார்கள் என்ற அடிப்படை அறிவு ஒரு நபிக்கு இருந்திருக்க வேண்டும். எனவே மலக்குகள் கூறியதும் உடனே மறு பேச்சின்றி ஒரு நபி ஏற்றிருக்க வேண்டும். ஆனால் இப்றாஹீம் நபி எனக்கு முதுமை ஏற்பட்டு விட்டது. இதன் பின்னர் குழந்தை கிடைக்கும் என்று கூறுகின்றீர்களா? எந்த அடிப்படையில் கூறுகின்றீர்கள்? எனக் கேள்வி கேட்கின்றார்கள். மலக்குகள் அல்லாஹ் கூறியதின் அடிப்படையில்தான் நற்செய்தி கூறுவார்கள் என்ற சாதாரண அறிவு கூட இப்றாஹீம் நபிக்கு இருக்கவில்லை என இந்தச் சம்பவம் கூறுகின்றது எனக் கூறிக் குர்ஆனை நிராகரிக்க முடியுமா? பீஜே அவர்கள் ஹதீஸ்களை அணுகும் இந்தத் தவறான வழிமுறை பிற்காலத்தில் குர்ஆனை மறுக்கும் ஒரு கூட்டத்தை உருவாக்கும் ஆபத்துள்ளது என்பதை இது உணர்த்துகின்றதல்லவா?



வானவரிடம் வாதாட்டமா?



மலக்குகள் வந்து சொன்ன ஒரு விடயத்தில் கணவன்-மனைவி இருவரும் இப்படி நடந்து கொண்டனர். அடுத்த செய்தி லூத் நபியின் கூட்டத்தினரை வந்த மலக்குகள் அழிக்கப்போகின்றனர் என்பதாகும். இதை மலக்குகள் கூறிய பின்னர் இப்றாஹீம் நபி மலக்குகளுடன் வாதாட்டம் செய்யலானார்கள் எனக் குர்ஆன் கூறுகின்றது. அப்போது வானவர்கள் ‘இப்றாஹீமே! இந்தப் பேச்சை விட்டு விடுங்கள்! அவர்களுக்கு அழிவு என்பது முடிவு செய்யப்பட்டது!’ என்று கூறுகின்றனர்.



இது குறித்துக் குர்ஆன் கூறும் போது பின்வருமாறு கூறுகின்றது;



இப்றாஹீமை விட்டும் திடுக்கம் நீங்கி, நன்மாராயம் அவரிடம் வந்த போது, லூத்துடைய சமூகத்தார் பற்றி எம்முடன் அவர் தர்க்கிக்கலானார். நிச்சயமாக இப்றாஹீம் சகிப்புத்தன்மையுடையவரும், இளகிய மனமுடையவரும், (இரட்சகன் பால்) மீள்பவருமாவார். இப்றாஹீமே! (இதை நீர்) விட்டு விடுவீராக! நிச்சயமாக உமது இரட்சகனின் கட்டளை வந்து விட்டது. தடுக்கப்பட முடியாத வேதனை நிச்சயமாக அவர்களுக்கு வந்தே தீரும். (11:74-76)



மலக்குகள் அல்லாஹ்வின் கட்டளைப்படிதான் இயங்குவார்கள். அவன் என்ன சொன்னாலும் அதைச் செய்வார்கள். லூத்(அலை) அவர்களின் கூட்டத்தை அழிக்க வந்ததாக அவர்கள் சொன்னால் அது பற்றி அவர்களிடம் தர்க்கிப்பது அர்த்தமற்ற வேலையாகும். யார் என்ன சொன்னாலும் அவர்கள் கேட்க மாட்டார்கள். இப்படி இருக்க லூத் நபியின் சமுகம் குறித்து இப்றாஹீம் நபி மலக்குகளுடன் தர்க்கம் செய்தார்கள் என்று இந்தச் சம்பவம் கூறுகின்றது. எனவே இந்தச் சம்பவத்தை ஏற்க முடியாது என்று கூறப்போகின்றனரா? மலக்குகள் அல்லாஹ்வின் கட்டளைப்படிதான் இயங்குவார்கள் என்ற சாதாரண உண்மையைக் கூட இப்றாஹீம் நபி அறியாதிருந்தார்கள் என இந்தச் சம்பவம் கூறுவதாகக் கூறப்போகின்றனரா?



மற்றுமொரு இடத்தில் இது பற்றி குர்ஆன் கூறும் போது;



(வானவர்களான) எமது தூதர்கள் நற்செய்தியுடன் இப்றாஹீமிடம் வந்த போது, ”இக்கிராமத்தினரை நிச்சயமாக நாம் அழிக்கப் போகிறோம். ஏனெனில் அதிலுள்ளோர் அநியாயக்காரர்களாக இருக்கின்றனர்” என்று கூறினர். அ(தற்க)வர், ”நிச்சயமாக அதில் லூத் இருக்கிறாரே! என்று கூறினார். அ(தற்க)வர்கள், அதில் இருப்போர் பற்றி நாம் நன்கறிவோம். நிச்சயமாக அவரையும், அவரது மனைவியைத் தவிர அவரது குடும்பத்தினரையும் பாதுகாப்போம். அவள் தங்கி (அழிந்து) விடுவோரில் ஆகி விட்டாள்’ என்று கூறினர். (29:31-32)



எனக் குறிப்பிடுகின்றது.



அல்லாஹ்வின் கட்டளைப்படி அநியாயக்கார ஊரை அழிக்க வந்த மலக்குகளுக்கு அங்கே லூத் என்ற நபி இருப்பது தெரியாது என்று இப்றாஹீம் நபி நம்பியதாக இந்த வசனம் கூறுகின்றது. இவர் அங்கே லூத் நபி இருக்கின்றார் என்று சொல்லிக் கொடுத்ததாக இந்த வசனம் கூறுகின்றது. இதை பீஜேயின் பாணியில் அணுகினால் மலக்குகளை விபரமற்றவர்களாக இப்றாஹீம் நபி நம்பியதாக இந்த இந்தச் சம்பவம் கூறுகின்றது. அத்துடன் ஒரு பணிக்காக அல்லாஹ் மலக்குகளை அனுப்பும் போது அது குறித்த முழு விளக்கத்தையும் மலக்குகளிடம் சரியாகச் சொல்லாமல் அனுப்பியுள்ளானோ தெரியாது. இவர்கள் அழிக்கும் ஊரில் ஒரு நபி இருப்பது தெரியாமல் அவரையும் அழித்து விடுவார்களோ என்ற அச்சத்தில் இப்றாஹீம் நபி பேசியதாக இந்த வசனம் கூறுகின்றது. எனவே ஆயிரம் நபித்தோழர்கள் ஏகோபித்து ஏற்றிருந்தாலும் ஒரு நபியின் அடிப்படை மார்க்க அறிவில் சந்தேகத்தை உண்டுபண்ணும் இந்த வசனங்களை ஏற்க முடியாது என்று கூற நேரிடும்.



எனவே மலக்குல் மவ்த் அல்லாஹ்வின் கட்டளைப்படிதான் வந்திருப்பார் என்ற அடிப்படை அறிவு கூட மூஸா நபிக்கு இருக்கவில்லை என இந்த ஹதீஸ் கூறுவதால் இதை மறுக்க வேண்டும் என வாதிடுவது அபத்தமானது. அப்படி வாதிட்டால் எண்ணற்ற குர்ஆன் வசனங்களை மறுக்க நேரிடும்.



எனவே மூஸா நபியும், மலக்குல் மவ்த்தும் சம்பந்தப்பட்ட ஹதீஸ் ஆதாரபூர்வமானது. அதைப் பீஜே மறுக்கும் விதம் ஆபத்தானது. இந்த வாதங்களை ஏற்றால் குர்ஆனைக் கூட மறுக்க நேரிடும். ஹதீஸ்களை மறுப்பதற்கு முன்வைக்கப்படும் அதே வாதங்களைக் குர்ஆன் விடயத்திலும் முன்வைக்க முடியும் என அவரே திர்மிதி முன்னுரையில் இந்த ஆபத்துக் குறித்து எச்சரித்துள்ளார். எனவே தவறான வாதங்களின் அடிப்படையில் ஹதீஸை மறுத்து, தொடர்ந்து குர்ஆனையும் மறுக்கும் மனநிலைக்குச் சென்று விடாமல் குர்ஆனையும், ஆதாரபூர்வமான ஹதீஸ்களையும் நிதானமாக, நடுநிலையாக அணுகி விளங்க வேண்டும். இரண்டையும் மோத விட்டு, இரண்டையும் மறுத்து விடாமல் இரண்டையும் இணைத்து விளங்கிச் செயல்பட அனைவரும் முன்வர வேண்டும்.



- மறுக்கப்படும் ஹதீஸ்கள் தொடர்பான விளக்கம் இன்னும் வரும். இன்ஷா அல்லாஹ் -





பிரிவு: பீஜே/ததஜ,மறுக்கப்படும் ஹதீஸ்கள்,மறுப்பு
4 responses so far





தொடர்புடைய பிற இடுகைகள்:

மூஸா நபியும் மலக்குல் மௌத்தும் (தொடர்-4)

மூஸா நபியும் மலக்குல் மௌத்தும் (தொடர்-3)

மூஸா நபியும் மலக்குல் மௌத்தும் (தொடர்-2)

மூஸா நபியும் மலக்குல் மௌத்தும் (தொடர்-1)

மறுக்கப்படும் ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் (பகுதி 3)



4 Responses to “மூஸா நபியும் மலக்குல் மௌத்தும் (தொடர்-5)”

ibnushaikh

on 13 Mar 2010 at 7:33 am

1ஆன்லைனில் அமைதியடைந்துவிட்டு ஏகத்துவத்தில் ஏகவசனமின்றி தமாஷ் செய்வதாக எழுதியுள்ளார் அதேபோல் பதில் என்ற பெயரில் பாதி கட்டுரை-யையும் வெளியிட்டுள்ளார். இஸ்மாயில் ஸலபி அவர்கள் சிறிது கவனம் செலுத்தவும்

அன்புடன் இப்னு ஷைக்



ஆயிஷா(ரலி) அவர்களின் கூற்று குர்ஆனில் குறையேற்படுத்துமா

எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி)


ஆயிஷா(ரலி) அவர்களின் கூற்று குர்ஆனில் குறையேற்படுத்துமா?



சகோதரர் பீஜே அவர்கள் தனது தர்ஜமதுல் குர்ஆன் விளக்கவுரையில் மறுத்த 2 ஹதீஸ்கள் குறித்த உண்மை நிலையை இது வரை 13 தொடர்களில் நாம் பார்த்துள்ளோம். அவர் மறுக்கும் மற்றுமொரு செய்தி குறித்த தெளிவை மறுக்கப்படும் ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் தொடர் மூன்றினூடாக வழங்க முற்படுகின்றோம்.



இது குறித்துச் சகோதரர் பீஜே தனது தர்ஜமாவில் குறிப்பிடும் போது பின்வருமாறு கூறுகிறார்;



ஒரு குழந்தை தனது தாய் அல்லாத வேறு பெண்ணிடம் பாலருந்தினால் அந்தப் பெண், அக்குழந்தைக்குத் தாய் என்ற அந்தஸ்த்தை அடைந்து விடுவாள் என்பதை நாம் அறிவோம்.



இது பற்றி முஸ்லிம் 2634, 2635 வது ஹதீஸ்களில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.



பத்து தடவை பாலருந்தினால் தான் “தாய்-பிள்ளை” எனும் உறவு ஏற்படும் என்று குர்ஆனில் அருளப்பட்டிருந்தது. பின்னர் இது ஐந்து தடவை என்று மாற்றப்பட்டது. இது திருக்குர்ஆனில் ஓதப்பட்டு வந்த நிலையில் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்தார்கள்.



இதை ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள்;

அதாவது ஐந்து தடவை பால் அருந்தினால் தாய் என்ற உறவு ஏற்பட்டு விடும் என்று ஒரு வசனம் குர்ஆனில் இருந்ததாகவும், இந்த வசனம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணிக்கும் வரை குர்ஆனில் இருந்ததாகவும் இந்த ஹதீஸில் கூறப்படுகிறது.



நபிகள் நாயகம் (ஸல்) மரணிக்கும் வரை குர்ஆனில் அப்படி ஒரு வசனம் இருந்திருந்தால் அந்த வசனம் இன்றும் குர்ஆனில் நிச்சயம் இருந்தாக வேண்டும்.



நபிகள் நாயகம் (ஸல்) காலத்திற்குப் பின் குர்ஆனில் உள்ள எதையும் நீக்கவோ, இல்லாததைச் சேர்க்கவோ முடியாது. நபிகள் நாயகம் (ஸல்) காலத்திலேயே குர்ஆன் முழுவதும் எழுத்து வடிவில் பதிவு செய்யப்பட்டு விட்டதாலும், ஏராளமான நபித்தோழர்கள் முழுக் குர்ஆனையும் மனனம் செய்திருந்ததாலும் குர்ஆனில் இருந்த ஒரு வார்த்தை கூட விடுபடுவதற்கு வழியே இல்லை.



ஆனால் ஆயிஷா (ரலி) கூறுவது போல் ஒரு வசனம் குர்ஆனில் காணப்படவில்லை.



இந்த நிலையில் “முஸ்லிம் நூலில் இடம்பெற்ற ஹதீஸாயிற்றே? நம்பகமான அறிவிப்பாளர்கள் வழியாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறதே!” என்று காரணம் கூறி இதை ஏற்றுக் கொண்டால் என்ன விபரீதம் ஏற்படும் என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.



“குர்ஆன் பாதுகாக்கப்படவில்லை; நபிகள் நாயகம் காலத்திற்குப் பின் குர்ஆனில் இருந்த பல வசனங்கள் நீக்கப்பட்டன” என்ற கருத்து இதனால் ஏற்படும். குர்ஆன் இறைவனின் நேரடிப் பொறுப்பில் பாதுகாக்கப்பட்டுள்ளது என்பதையே இந்தச் செய்தி கேள்விக்குறியாக்கி விடும்.



எனவே இந்த ஹதீஸை நாம் நிராகரித்துத் தான் ஆக வேண்டும்.



“முஸ்லிம் நூலில் நம்பகமானவர்கள் வழியாகப் பதிவு செய்யப்பட்டிருப்பதால் இதை நாங்கள் உண்மை என்று நம்புகிறோம்” என்ற முடிவுக்கு நாம் வந்தால் ஹதீஸை நாம் மறுக்கவில்லை என்ற பெயர் நமக்குக் கிடைக்கலாம்.



ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) மரணிக்கும் வரை குர்ஆனில் பதிவு செய்யப்பட்டிருந்த ஒரு வசனம் அவர்களின் மரணத்திற்குப் பின்னர் அனைத்து நபித்தோழர்களாலும் நீக்கப்பட்டு விட்டதாக இதன் விளைவு அமையுமே? இதற்கு என்ன பதில்?



“குர்ஆன் பாதுகாக்கப்படவில்லை; எந்த வசனத்தையும் யார் வேண்டுமானாலும் நீக்கி விடலாம்” என்ற நிலையில் தான் குர்ஆன் இருந்தது என்ற கருத்து ஏற்படுமே? இதற்கு என்ன பதில்?



இதற்கு நம்மிடம் பதில் இல்லையானால் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுவதில் எங்கோ தவறு நேர்ந்திருக்க வேண்டும். இஸ்லாத்தின் அடிப்படையையே தகர்த்து விடும் கருத்தை ஆயிஷா (ரலி) கூறியிருக்க மாட்டார்கள் என்று நல்லெண்ணம் வைப்பது தான் உண்மை விசுவாசிகளின் நிலையாக இருக்க வேண்டும். (பீஜே தமிழாக்கம், 4 ஆம் பதிப்பு, பக்கம் 1304-1305)



ஒரு பாமர மனிதன் எப்படி ஹதீஸை அணுகுவானோ, எப்படியெல்லாம் கேள்வி கேட்பானோ அதே விதத்தில் தான் சகோதரர் பீஜே அவர்களும் இந்தச் செய்தியை அணுகியுள்ளார்; கேள்விகளை அடுக்கியுள்ளார்.



இலங்கையில் ரிழ்வான் மாஸ்டர் என்பவர் தவ்ஹீத் பிரசாரம் செய்துகொண்டிருந்தார். பின்னர் அவர் கொள்கை மாறி அஹ்லுல் குர்ஆனாக மாறினார். இஸ்லாத்தின் அடிப்படைகளை ஆழமாக அறியாத அவர் திருமணம் முடித்து விபசாரம் செய்தவர்களைக் கல்லெறிந்து கொல்ல வேண்டும் என்ற வசனம் குர்ஆனில் இருந்ததாக ஹதீஸ் கூறுகின்றது. அப்படி ஒரு வசனம் குர்ஆனில் இல்லை. இந்த ஹதீஸை ஏற்றால் குர்ஆன் பாதுகாக்கப்படவில்லை; அதன் வசனங்கள் மனிதர்களால் மாற்றப்பட்டுள்ளன என்று கூற நேரிடும் என இந்த வாதத்தை முன்வைத்து ஹதீஸ்களை மறுத்தார்.



இவ்வாறே, “விடுதலை” (வெள்ளி 05-02-2010) ஏட்டில் மதவாதிகளே! பதில் சொல்லுங்கள்! என்ற தலைப்பில் அறிவுக்கரசு(?) என்ற பெயரில் ஒரு நாஸ்தீகன் எழுதிய கட்டுரையிலும் இதே தொணியில் கேள்வி கேட்கப்படுகின்றது.



குர்ஆனிய கலைகள் பற்றிய அறிவு அற்ற நாஸ்தீகர்களும், நாஸிஹ்-மன்ஸூஹ் (மாற்றியது-மாற்றப்பட்டது) பற்றிய அடிப்படை அறிவு அற்ற ரிழ்வான் மாஸ்டரும் வாதித்தது போன்றே அறிஞர் பீஜே அவர்கள் வாதிப்பது வியப்பாக உள்ளது.



இவர் தவறாக அர்த்தம் செய்து தப்பாக வாதிக்கும் இந்தச் செய்தி குறித்த விளக்கங்களை நோக்குவோம்.



நபித்தோழர் கூற்றை மறுத்தல்:

பீஜே குறிப்பிடும் இந்தச் செய்தி ஹதீஸ் அல்ல. இது ஒரு “அதர்” அதாவது ஒரு நபித்தோழரின் கூற்றாகும். இதை ஏற்பது குறித்தோ, எதிர்ப்பது குறித்தோ நாம் பெரிதாக அலட்டிக்கொள்ள வேண்டியதில்லை. இருப்பினும் இந்தச் செய்தியை சகோதரர் பீஜே அவர்கள் அணுகும் விதம் ஆபத்தானதாகும்.



எனவேதான் இது குறித்து விபரிக்க வேண்டியுள்ளது.



நியாயமற்ற அணுகுமுறை:

ஒரு செய்தியை விமர்சிப்பதென்றால் அந்தச் செய்தியில் கூறப்பட்ட கூற்றை வைத்துத்தான் விமர்சிக்க வேண்டும். இதுதான் நியாயமான பார்வையாகும். ஹதீஸில் இல்லாத அர்த்தத்தைத் தானாகத் திரித்து உண்டாக்கி விட்டு, தான் உண்டாக்கிய தப்பான விளக்கத்தின் அடிப்படையில் விமர்சித்துச் செல்வது நியாயமான வழிமுறை அல்ல.



சகோதரர் பீஜே அவர்கள் தஃலீம் தொகுப்பு குறித்து விமர்சிக்கும் வேளை, ஸகரிய்யா ஸாஹிப் பற்றிக் குறிப்பிடும் போது “இவர் முதலில் குர்ஆன் வசனத்தைத் தருவார். அதன் பின் ஹதீஸைத் தருவார். அதன் பின் தனது சொந்தச் சரக்குகளையும், நச்சுக்கருத்துக்களையும் விதைப்பார்” என்ற தொணியில் எழுதியுள்ளார்.



இங்கும் பீஜே அவர்கள் அதே பாணியில் ஹதீஸைப் போட்டு விட்டுப் பின்னர் சரியான அர்த்தத்தை எழுதி விட்டு பின்னர் தனது நச்சுக்கருத்தை விளக்கி, அந்த நச்சுக்கருத்தின் அடிப்படையில்தான் ஹதீஸ்களை மறுக்கின்றார்.



மேற்குறிப்பிட்ட செய்தியில் “இது மக்காவில் ஓதப்பட்டு வந்த நிலையில்தான் நபி (ஸல்) அவர்கள் மரணித்தார்கள்” என்ற வாசகந்தான் சர்ச்சைக்குரிய(?) வாசகமாகும்.



இதனைத் தர்ஜமாவில் பீஜே முதலில் மொழியாக்கஞ் செய்யும் போது “இது திருக்குர்ஆனில் ஓதப்பட்டு வந்த நிலையில்தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்தார்கள்” என மொழி பெயர்த்துள்ளார்.



இதே செய்தியை ஆதாரபூர்வமான ஹதீஸ்களின் இலக்கணம் தொடர் மூன்றில் இன்னும் தெளிவாக பின்வருமாறு மொழியாக்கஞ் செய்துள்ளார்.



இவ்வசனம் மக்கள் சிலரால் ஓதப்பட்டு வந்த காலத்தில்தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்தார்கள்.



இதுதான் அந்தச் செய்தியின் அர்த்தம். இதைச் சரியாகச் செய்த பீஜே இதில் இல்லாத ஒரு விஷக் கருத்தை விளக்கப் பகுதியில் கொண்டு வருகின்றார்.



அதாவது ஐந்து தடவை பால் அருந்தினால் தாய் என்ற உறவு ஏற்பட்டு விடும் என்று ஒரு வசனம் குர்ஆனில் இருந்ததாகவும், இந்த வசனம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணிக்கும் வரை குர்ஆனில் இருந்ததாகவும் இந்த ஹதீஸில் கூறப்படுகிறது.



ஏற்கனவே நாம் ஹதீஸின் மொழிபெயர்ப்பைப் பார்த்தோம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணிக்கும் வரை குர்ஆனில் அந்த வசனம் இருந்தது என அந்தச் செய்தி கூறவில்லை. அந்த வசனங்களைச் சிலர் ஓதும் நிலையில்தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்தார்கள் என்றுதான் அந்தச் செய்தி கூறுகின்றது.



குர்ஆனில் இருந்தது எனும் போது இரண்டு அட்டைகளுக்குள் அச்சிடப்பட்ட குர்ஆன் தான் மக்களின் மனக் கண் முன் வரும். நபி (ஸல்) அவர்கள் மரணிக்கும் போது முழுக் குர்ஆனும் எழுதப்பட்டிருந்தாலும் ஒரே ஏட்டில் ஒன்றாகத் திரட்டப்பட்டிருக்கவில்லை. குர்ஆனில் இருந்தது என்றதும் மக்கள் மனதில் திரட்டப்பட்ட குர்ஆன்தான் மனதில் வரும். திரட்டப்பட்ட குர்ஆனில் குறிப்பிட்ட ஒரு வசனம் இருந்ததாக ஆயிஷா (ரலி) கூறுகின்றார்கள். ஆனால் அப்படி ஒரு வசனம் இல்லையே? எனவே ஆயிஷா (ரலி) கூறிய செய்தி பொய்யானது என நியாயமில்லாமல் நிருவப் பார்க்கின்றார். ஆனால் அந்தச் செய்தி அப்படி ஒரு வசனத்தைச் சிலர் குர்ஆனாக ஓதி வரும் நிலையில் தான் நபி (ஸல்) அவர்கள் மரணித்தார்கள் என்று கூறுகின்றது. குர்ஆனில் அப்படியொரு வசனம் இருந்தது என்று கூறவில்லை. (இருந்ததென்று கூறினாலே இந்தக் கூற்றைக் கூறும் போது “இல்லை!” என்பதுதானே அர்த்தம்?).



இப்படிக் கூறும் போது கூட “அப்படியானால் அந்த வசனம் எங்கே?” என்ற கேள்வி பாமர மக்களுக்கு எழுவது இயல்பே! இது குறித்த தெளிவைப் பெற நாஸிஹ்-மன்ஸூஹ் பற்றிய அறிவு அவசியமாகும்.



நாஸிஹ் மன்ஸூஹ்:

“நாஸிஹ்” என்றால் மாற்றியது. “மன்ஸூஹ்” என்றால் மாற்றப்பட்டது என்பது அர்த்தமாகும்.



அல்லாஹ் இறக்கிய ஒரு வசனத்தை அல்லது சட்டத்தை அவனே மாற்றுவது தான் நாஸிஹாகும். மனிதர்கள் யாரும் இதைச் செய்ய முடியாது. திருக்குர்ஆனில் நாஸிஹ்-மன்ஸூஹ் உண்டு என்பதைப் பின்வரும் வசனம் தெளிவாக விளக்குகின்றது.



“ஏதேனும் ஒரு வசனத்தை நாம் மாற்றினால் அல்லது அதை மறக்கச் செய்தால் அதை விடச் சிறந்ததை அல்லது அதைப் போன்றதைக் கொண்டு வருவோம். நிச்சயமாக அல்லாஹ் யாவற்றின் மீதும் பேராற்றலுடையவன் என்பதை நீர் அறியவில்லையா?” (2:106)



“ஒரு வசனத்தின் இடத்தில் வேறு ஒரு வசனத்தை நாம் மாற்றினால், “நீர் இட்டுக் கட்டுபவரே!” எனக் கூறுகின்றனர். எ(ந்த நேரத்தில் எ)தை இறக்க வேண்டும் என்பதை அல்லாஹ் மிக அறிந்தவன். எனினும் அவர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள்.” (16:101)



திருக்குர்ஆனில் நாஸிஹ்-மன்ஸூஹ் வசனங்கள் 3 விதங்களில் இருக்கும்.



1. வசனம் இருக்கும்., சட்டம் அமுலில் இருக்காது.,

இந்த வகை வசனங்கள் தான் நாஸிஹ்-மன்ஸூஹில் அதிகமாக உள்ளவையாகும்.



உதாரணமாக, “நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் கூறுவது என்னவென்று அறியாதவாறு நீங்கள் போதையுடையோர்களாக இருக்கும் நிலையில் தொழுகையை நெருங்காதீர்கள்..” (4:43) என்ற வசனத்தின் மது குறித்த சட்டம் மாற்றப்பட்டு விட்டது. பின்னர் இறங்கிய வசனத்தில் பொதுவாக மது தடுக்கப்பட்டது. தொழும் நேரம்-தொழாத நேரம் என்ற பாகுபாடு இன்றி அதை விட்டும் முற்று-முழுதாக விலகிக்கொள்ள வேண்டும் என்ற ஏவல் வந்தது. ஆயினும் அந்த வசனம் குர்ஆனில் இருந்து கொண்டே இருக்கின்றது.



2. வசனம் நீக்கப்பட்டுச் சட்டம் அமுலில் இருக்கும்.,

வசனம் – அதாவது, வார்த்தை இருக்காது. அதன் சட்டம் இருக்கும்.



உதாரணமாக, திருமணம் முடித்தவர்கள் விபசாரம் செய்தால் அவர்கள் கல்லெறிந்து கொல்லப்பட வேண்டும் என்ற வசனம் குர்ஆனில் இருந்தது. அந்த வசனம் அல்லாஹ்வால் நீக்கப்பட்டது. ஆயினும் சட்டம் நீக்கப்படவில்லை. இதே போன்று தான் 5 முறை பால் குடித்தால் தாய்-மகன் என்ற உறவு ஏற்படும் என்ற இந்த வசனம் அல்லாஹ்வால் நீக்கப்பட்டு விட்டது. ஆனால் அதன் சட்டம் நீக்கப்படவில்லை.



3. சட்டமும், வசனமும் நீக்கப்படுவது.,

சட்டமும் மாற்றப்பட்டு, வசனமும் நீக்கப்படுவது என்பது மற்றொரு வகையாகும்.



இதற்கு குறிப்பிட்ட 10 முறை பால் அருந்தினால் தான் உறவு முறை உண்டாகும் என்ற வசனம் உதாரணமாகும். இந்த வசனமும் நீக்கப்பட்டு விட்டது. இதன் சட்டமும் 5 முறை பாலூட்டினாலும் உறவு முறை உண்டாகும் என்று மாற்றப்பட்டு விட்டது.



எனவே 10 முறை, 5 முறை பாலூட்டினால் தாய்-மகன் உறவு உண்டாகும் என்ற வசனம் அல்லாஹ்வால் நீக்கப்பட்டிருக்க, மனிதர்கள் நீக்கினார்கள் என்ற கருத்தைத் தரும் விதத்தில் விளக்கமளிக்க முற்படுவது அறிவீனமாகும்.



நபியவர்கள் மரணிக்கும் வரை நீக்கப்பட்ட வசனத்தை மக்கள் ஓதினார்களா?

ஒரு சட்டம் அல்லது வசனம் மாற்றப்பட்டால் அது உடனுக்குடன் அனைவருக்கும் தெரிந்து விடக் கூடிய ஊடக வசதிகள் அன்று இருக்கவில்லை. உதாரணமாக, சகோதரர் பீஜே அவர்கள் சூனியம் குறித்து ஆரம்பத்தில் வைத்த கருத்துக்களும், பின்னர் வைத்த கருத்துக்களும் முரண்பட்டவையாகும். அவர் பின்னர் வைத்த கருத்தை விமர்சனம் செய்த போது, அவரது முன்னைய கருத்தை மட்டும் அறிந்த சகோதரர்கள் “நீங்கள் சொல்லக் கூடிய அதே கருத்தைத் தானே அவரும் கூறியுள்ளார்?” என்று கேட்கின்றனர். இந்த நிலை ஊடக வசதிகள் பெருகிய இன்றைய காலத்திலேயே இருக்கும் போது ஒரு வசனம் அல்லது சட்டம் மாற்றப்பட்டால் அது உடனுக்குடன் அன்றிருந்த சகல முஸ்லிம்களுக்கும் தெரிந்து விடுவதற்கான வாய்ப்பு இல்லை.



இதற்கு மற்றுமொரு உதாரணத்தைக் கூறலாம். உடலுறவில் ஈடுபட்டு விந்து வெளிப்பட்டால் தான் குளிக்க வேண்டும் என்பது ஆரம்பச் சட்டமாகும். பின்னர் ஆண்-பெண் உறுப்புகள் சந்தித்து விட்டால் விந்து வெளிப்படாவிட்டாலும் குளிக்க வேண்டும் என்று சட்டம் மாற்றப்பட்டது. இந்தச் செய்தியை அறியாத பலரும் முன்னைய சட்டத்தின் படி செயற்பட்டுள்ளனர். உஸ்மான் (ரலி) அவர்களது ஆட்சி வரை இது அனைவரும் அறியாத சட்டமாக இருந்துள்ளது.



இதே போன்று 5 முறை பாலூட்டினால் தாய்-மகன் உறவு ஏற்படும் என்ற வசனம் இருந்தது. பின்னர் நபி (ஸல்) அவர்களது மரணம் நெருங்கிய சந்தர்ப்பத்தில் அந்த வசனம் நீக்கப்பட்டது. சில அறிஞர்கள் நபி (ஸல்) அவர்களது இறுதி றமழானில் ஜிப்ரீல் (அலை) அவர்களிடம் இரண்டு முறை குர்ஆனை ஒப்புவித்த காலப் பகுதியில் இது நடந்திருக்கலாம் என்று கூறுகின்றார்கள். இந்தக் கருத்தை நாம் உறுதிப்படுத்த முடியாவிட்டாலும் நபி (ஸல்) அவர்களது அந்திப காலத்தில் இது நடந்திருக்கின்றது என நம்பலாம்.



இந்த வசனம் மாற்றப்பட்ட பின்னரும் மாற்றப்பட்ட செய்தியை அறியாது மக்களில் சிலர் இதை ஓதி வந்துள்ளனர். இதைப் பீஜே அவர்களின் மொழியாக்கம் உறுதி செய்கின்றது.



இவ்வசனம் மக்கள் சிலரால் ஓதப்பட்டு வந்த காலத்தில் தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) இறந்தார்கள். (ஆதாரபூர்வமான ஹதீஸ்களின் இலட்சணம் தொடர் 03)



ஏற்கனவே அல்லாஹ்வால் நீக்கப்பட்ட வசனத்தை அது நீக்கப்பட்டது என்பதை அறியாத சில மக்கள் ஓதி வந்துள்ளனர் என்ற தகவலைத் தான் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்.



குர்ஆனில் இப்படி ஒரு வசனம் நபி (ஸல்) அவர்கள் மரணிக்கும் வரை இருந்தது என்ற கருத்தில் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறவில்லை. அப்படிக் கூறுவதென்றால் ஒரு வசனத்தை மக்களில் சிலர் ஓதி வந்தார்கள் என்று கூற வேண்டிய தேவை என்ன?



குர்ஆனில் இந்த வசனம் நபியவர்கள் மரணிக்கும் வரை இருந்தது என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள் என்று இந்தச் செய்தி கூறுகின்றது என்ற அடிப்படையில் தான் பீஜே அடுத்த வாதங்களைச் செய்கின்றார். அவரது அர்த்தமே பிழை என்னும் போது அடுத்த கட்ட வாதங்கள் அனைத்தும் அடியற்ற மரம் போல் சாய்ந்து விடுகின்றன.



நபி (ஸல்) அவர்கள் மரணித்த போது குர்ஆனில் இந்த வசனம் இருந்தது என ஆயிஷா (ரலி) கூறாததால் இந்தக் கூற்றை ஏற்றால் குர்ஆனின் நம்பகத் தன்மைக்குப் பங்கம் ஏற்படப் போவதில்லை. அந்தச் செய்தியின் உண்மையான அர்த்தத்தைப் புரிந்து கொண்டால் அந்தச் செய்தியையும் நம்பலாம் ஒன்றை ஏற்று மற்றதை நிராகரிக்கும் நிலை ஏற்படாது.



ஆணவமா? அறிவு மமதையா?

ஹதீஸ்களை ஆய்வு செய்தவர்கள் அறிவிப்பாளர் வரிசையை மட்டுந்தான் ஆய்வு செய்தார்கள். கருத்தை ஆய்வு செய்யவில்லை எனக் கூறிக் கடந்த கால ஹதீஸ் கலை அறிஞர்களையெல்லாம் முட்டாள்களாகவும், அறிவிலிகளாகவும், குர்ஆன் பற்றிய அறிவு அற்றவர்களாகவும் சித்தரிக்க முற்படுகின்றார். அத்துடன் நான்தான் அனைத்தையும் எல்லாக் கோணங்களிலும் அணுவணுவாக ஆய்வு செய்பவன் என்ற மாயத் தோற்றத்தையும் ஏற்படுத்த முற்படுகிறார் போல் தென்படுகிறது.



சகோதரர்களே!

சகோதரர் பீஜே கூறுவது போல் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய கூற்று நபி (ஸல்) அவர்களது மரணம் வரை குர்ஆனில் ஒரு வசனம் இருந்தது; ஆனால் அது தற்போது குர்ஆனில் இல்லை என்ற கருத்தைத் தான் தருகின்றது என்றால், இந்தச் செய்தியைச் “சரி!” என்று கூறியவர்களும், இதைப் பதிவு செய்த இமாம் முஸ்லிமும், இதற்கு விளக்கமளித்த அறிஞர்களும் இஸ்லாத்தின் அடிப்படைகளை அறியாதவர்களா? ஹதீஸ் பற்றிப் பேசும் செய்தி என்றால் கூட ஹதீஸ்கள் முழுமையாகத் திரட்டப்படாததால் அனைத்து ஹதீஸ்களையும் தெரிந்த ஒரு மனிதரையும் தேடிப் பிடிக்க முடியாது. எனவே தவறு நடந்திருக்கலாம் என்று கூறலாம். ஆனால் இது குர்ஆன் பற்றிப் பேசுகின்றது. அன்றிருந்த அதிகமான அறிஞர்கள் குர்ஆனை மனனம் செய்திருந்தார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள் ஒரு வசனம் குர்ஆனில் இருந்ததாகக் கூறுகின்றார்களே! அப்படி ஒரு வசனம் இல்லையே! என்று சிந்தித்திருக்க மாட்டார்களா? கடந்த காலத்தில் வாழ்ந்த அறிஞர்கள் அவைரும் முட்டாள்கள்; இவர் ஒருவர் தான் அறிஞரா?



இப்படி நாம் கேட்பது தக்லீதின் அடிப்படையில் அல்ல. இவர் கூறுவதைத் தான் அந்தச் செய்தி கூறுகின்றது என்றால் என்ன விளைவு ஏற்பட்டிருக்க வேண்டுமோ அந்த விளைவு ஏற்படவில்லை.



எனவே, கடந்த காலத்தில் வாழ்ந்த அறிஞர்கள் அந்தச் செய்தியைச் சரியாகப் புரிந்து கொண்டார்கள். எனவே, பிழை செய்தியில் இல்லை. மாறாக, தவறாகப் புரிந்து கொண்ட சகோதரர் பீஜே அவர்களின் விளக்கத்தில் தான் உள்ளது.



ஆனால், எப்போதும் அடுத்தவர்களில் தவறைத் தேடுபவர்களுக்குத் தமது தவறு தெளிவாகத் தெரியாது.



இதற்கு நம்மிடம் பதில் இல்லையானால் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுவதில் ஏதோ தவறு நேர்ந்திருக்க வேண்டும் என்று கூறுகின்றார். அல்குர்ஆனில் இந்த ஒரு வசனம் இப்போது இல்லை என்ற கருத்தை ஆயிஷா(ரழி) அவர்கள் கூறியிருக்க மாட்டார்கள். இஸ்லாத்தின் அடிப்படையையே தகர்க்கும் செய்தியை ஆயிஷா(ரழி) அவர்கள் கூறியிருந்தால், நபி (ஸல்) அவர்கள் சிறப்பித்துக் கூறிய முதல் மூன்று நூற்றாண்டுகளிலும் வாழ்ந்த அறிஞர்கள் அதைச் சரி கண்டிருக்கவும் மாட்டார்கள். எனவே நான் விளங்கிக் கொண்டதில் தான் ஏதோ தவறு நேர்ந்திருக்க வேண்டும் எனச் சிந்தித்திருந்தால் இப்படியெல்லாம் வாதித்திருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது.



முடிவாக:

ஆயிஷா (ரலி) அவர்களது கூற்று, குர்ஆனில் நபியவர்களது மரணம் வரை இருந்த வசனம் பின்னர் நீக்கப்பட்டது என்ற கருத்தைத் தரவில்லை; 5 முறை பாலூட்டினால் தாய்-மகன் உறவு ஏற்படும் என்ற வசனத்தை மக்கள் ஓதிக்கொண்டிருக்கும் நிலையில் தான் நபியவர்கள் மரணித்தார்கள் என்று தான் கூறுகின்றார்கள்.



இந்த வசனம் அல்லாஹ்வால் நீக்கப்பட்டது. அதுவும் நபி(ஸல்) அவர்களது இறுதிக்காலத்தில் நீக்கப்பட்டது. இதை அறியாத மக்கள் நபி(ஸல்) அவர்கள் மரணிக்கும் காலப்பகுதியில்கூட அது குர்ஆன் என நம்பி ஓதி வந்துள்ளனர்.



இதைத்தான் இந்தச் செய்தி கூறுகின்றது. நபி(ஸல்) அவர்கள் மரணிக்கும் வரை அல்குர்ஆனில் இந்த வசனம் இருந்தது என அர்த்தம் கொடுப்பது தவறு. நபி(ஸல்) அவர்களது மரணத்திற்குப் பின் இந்த வசனம் நீக்கப்பட்டது என்ற கருத்தை இது தருவதாகக் கூறுவதும் தவறு. குர்ஆனில் சந்தேகத்தை உண்டுபண்னுகிறது; குர்ஆனில் யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் நீக்கலாம் சேர்க்கலாம் என்ற எண்ணத்தை ஏற்படுத்திவிடும் என்பதெல்லாம் தேவையற்ற ஒப்பாரிகளாகும்.



குர்ஆனையும், ஆதாரபூர்வமற்ற ஹதீஸ்களையும் ஒருசேர ஏற்று ஒன்றை ஏற்று மற்றையதை நிராகரிக்கும் வழிகேட்டிலிருந்து விலகியிருக்க எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக!





பிரிவு: பீஜே/ததஜ,மறுக்கப்படும் ஹதீஸ்கள்,மறுப்பு
17 responses so far





தொடர்புடைய பிற இடுகைகள்:

மூஸா நபியும் மலக்குல் மௌத்தும் (தொடர்-5)

மூஸா நபியும் மலக்குல் மௌத்தும் (தொடர்-4)

மூஸா நபியும் மலக்குல் மௌத்தும் (தொடர்-3)

மூஸா நபியும் மலக்குல் மௌத்தும் (தொடர்-2)

மூஸா நபியும் மலக்குல் மௌத்தும் (தொடர்-1)



17 Responses to “மறுக்கப்படும் ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் (பகுதி 3)”

கேள்வி - ஒரு பெண்ணுக்கு மளையளவு தங்க நகைகள் இருந்தாலும் அவற்றிர்க்கு ஜகாத் கடமையில்லை என்று நபி(ஸல்) சொன்னதாகக் கூறுகிறார்களே இது உண்மையா..

கேள்வி - ஒரு பெண்ணுக்கு மளையளவு தங்க நகைகள் இருந்தாலும் அவற்றிர்க்கு ஜகாத் கடமையில்லை என்று நபி(ஸல்) சொன்னதாகக் கூறுகிறார்களே இது உண்மையா..? taj@hotmail.com




அப்படியெல்லாம் எந்த ஹதீஸையும் நம்மால் காண முடியவில்லை.



'உங்கள் செல்வத்திலிருந்து நீங்கள் அவர்களுக்கு செலவு செய்யுங்கள்' (அல் குர்ஆன் 24:33)



இங்கு இறைவன் 'உங்கள் செல்வம்' என்று செல்வத்தை அதற்குயரிவர்களுடன் சேர்த்துப் பேசுகிறான். நகைகள் மதிப்பு மிக்க செல்வம் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது. நகைகள் செல்வம் தான் என்று தீர்மானித்தால் 'உங்கள் செல்வத்திலிருந்து செலவு செய்யுங்கள்' என்ற கட்டளை நகைகளையும் உட்படுத்தி விடும்.



'(நபியே) இவர்களுடைய செல்வத்திலிருந்து தர்மத்தை வசூல் செய்து அதன் மூலம் அவர்களைத் தூய்மைப் படுத்துவீராக...' (அல் குர்ஆன் 9:103)



நகைகள் செல்வத்திற்குள் அடங்கும் என்றால் இந்த வசன அடிப்படையிலும் அவற்றின் மீது ஜகாத் கடமையாகி விடுகிறது.



'எவர்கள் தங்கத்தையும் வெள்ளியையும் சேமித்து வைத்துக் கொண்டு அவற்றை அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யாமல் இருக்கிறார்களோ அவர்களுக்கு கடுமையான வேதனையுண்டு' (அல் குர்ஆன் 9:34)



தங்கத்தை சேமித்து வைத்து செலவிடாமல் இருக்கிறார்களோ... என்ற வாசகத்தை கவனிக்கும் போது தங்கத்தின் மீதான ஜகாத் கடமையை தெளிவாக உணரலாம். தங்கக்கட்டிகளுக்கு தான் இது பொருந்தும் நகைகளுக்கு பொருந்தாது என்றெல்லாம் சிலர் செய்யும் வாதம் வெறும் அனுமானத்தின் அடிப்படையில் அமைந்ததாகும். தங்கக் கட்டிகள் தான் நகைகளாக வடிவ மாற்றம் பெறுகிறது. தங்கம் கட்டிகளாக இருப்பது ஒரு சிலரிடம் மட்டும் தான் அதிலும் குறிப்பாக நம் பெண்களிடம் தங்கத்தை கட்டிகளாக பார்ப்பது ரொம்ப அபூர்வம். 100 பவுன் மதிப்புள்ளத் தங்கம் கட்டியாகவே நம் பெண்கள் கையில் கிடைத்தாலும் அடுத்த சில தினங்களில் அவற்றை வித விதமான வடிவங்களில் நகைகளாக மாற்றி விடுவார்கள். எனவே தங்கத்தை கட்டிகள் என்று தீர்மானித்தால் நம் நாட்டு முஸ்லிம்களிடமிருந்து அவற்றிர்க்கான ஜகாத்தை பெற முடியாமலே போய்விடும்.



இன்னும் தெளிவாக சொல்லப் போனால் எந்த வசனத்தை தங்க கட்டிக்கு ஆதாரமாக்குகிறார்களோ அந்த வசனம் வெறும் தங்கம் என்று மட்டும் தான் பேசுகிறதே தவிர தங்கக்கட்டி என்று சொல்லவில்லை என்பதை நாம் கவனிக்க வேண்டும்.



தங்கக்கட்டிகள் வடிவ மாற்றம் பெறும் போது அது தன் மதிப்பை குறைத்துக் கொள்வதில்லை என்பதையும் நாம் மறந்து விடக் கூடாது.



ஒரு பெண் நபி(ஸல்) அவர்களிடம் தன் மகளை அழைத்து வந்து பேசும் போது அந்த பெண்ணின் கைகளில் இருந்த இரண்ட கணமான தங்கக் காப்புகளை கண்ட நபி(ஸல்) இதற்கு ஜகாத் கொடுத்து விட்டாயா.. என்றார்கள். அந்தப் பெண் இல்லை என்றதும் இதற்கு ஜகாத் கொடுத்து விடு இல்லையெனில் நீ நரகம் போவதற்கு இதுவே காரணமாக அமைந்து விடும் என்றார்கள். அந்தப் பெண் தன் காப்புகளை கழற்றி இதை அல்லாஹ்வின் பாதையில் கொடுத்து விடுகிறேன் என்று கூறிவிட்டது. (அம்ர் பின் ஷூஐப்(ரலி) அபூதாவூத். இது ஆதாரப்பூர்வமான ஹதீஸாகும்)



தங்கக்கட்டிகளோ அல்லது நாணயங்களோ தான் வடிவமாற்றம் பெற்று காப்பாக அந்த பெண் அணிந்துள்ளார் அதற்கு தான் இறைத்தூதர் ஜகாத்தை வசூல் செய்துள்ளார்கள். இது மட்டுமின்றி பெருநாள் தினத்தில் 'அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யுங்கள்' என்ற நபி(ஸல்) அவர்களின் உரையைக் கேட்டு விட்டு பெண்கள் தங்கள் உடம்பில் உள்ள நகைகளை கழற்றி தர்மம் செய்த செய்தி புகாரி உட்பட ஏராளமான நூட்களில் இடம் பெற்றுள்ளது. எனவே பெண்களின் நகைகளுக்கும் ஜகாத் கடமைதான். அதை யாரும் புறக்கணிக்கக் கூடாது.





--------------------------------------------------------------------------------



368)கேள்வி: ஜகாத் பற்றி விளக்கம் தேவை. நகைக்கு ஜகாத் உண்டா? சொந்த வீடு மற்றும் கடைக்கு கொடுக்க வேண்டுமா? வீட்டில் உள்ள பொருள்களுக்குக் கொடுக்க வேண்டுமா? வீட்டு மனை நிலங்கள் இருந்தால் அவைகளுக்கும் கொடுக்க வேண்டுமா? நூருல்லாஹ்.



நாம் உபயோகிக்கக் கூடிய வீடு, வீட்டுப் பொருள்கள் உட்பட எல்லாவற்றிற்கும் ஜகாத் கொடுக்க வேண்டுமா அல்லது சிலதை கழித்துவிட்டு ஜகாத் கொடுக்க வேண்டுமா என்பதுபற்றி கருத்து வேறுபாடு நிலவுகிறது. எனவே இதுபற்றி முதலில் ஒரு முடிவுக்கு வரவேண்டும்.



நாம் உபயோகிக்கும் பொருட்கள் உட்பட எல்லாவற்றிற்கும் ஜகாத் கொடுக்க வேண்டும் என்போர் அதற்குச் சான்றாக இரண்டு இறை வசனங்களைக் காட்டுகிறார்கள்.



'(நபியே) அவர்களுடைய பொருட்களிலிருந்து தர்மத்தை எடுத்துக் கொண்டு அவர்களை உள்ளும் - புறமும் தூய்மைப் படுத்துவீராக' (அல் குர்ஆன் - 9:103)



இந்த வசனத்தில் 'மின் அம்வாலிஹிம்' என்ற பதம் பயன்படுத்தப்பட்டுள்ளது. 'அம்வால்' என்றால் பொருட்கள் - செல்வம், நகைகள், கரன்ஸி, இதர நமது சம்பாத்தியத்தில் வந்த அல்லது நமக்குப் பிறர் கொடுத்த, வாரிசு முறையில் வந்த எல்லாச் சொத்துக்களையும் குறிக்கும். இறைவன் 'அம்வாலி' லிருந்து தர்மம் செய்யச் சொல்வதால், நமது வீடு அதிலுள்ள பொருள்கள் உட்பட எல்லாவற்றிற்கும் ஜகாத் கொடுக்க வேண்டும் என்று இவர்கள் கூறுகிறார்கள். இக்கருத்தை வழுப்படுத்தும் இன்னொரு வசனத்தையும் இவர்கள் கூறுகிறார்கள்.



'எந்த செல்வத்திற்கு இறைவன் உங்களை பிரதிநிதியாக்கினானோ அந்த செல்வத்திலிருந்து செலவு செய்யுங்கள்' (அல்குர்ஆன் - 57:7)



இறைவன் பிரதிநிதியாக்கியுள்ளான் என்றால் அதில் நாம் உபயோகிக்கும் பொருட்களும் அடங்கும் என்பது எல்லாவற்றிற்கும் ஜகாத் கொடுக்க வேண்டும் என்பது இவர்களின் நிலைபாடு.



இதில் நமக்கு உடன்பாடில்லை. காரணம்: 'அம்வால்' என்பதை இறைவன் எந்த அர்த்தத்தில் பயன்படுத்தியுள்ளான் என்பதை மற்ற வசனங்களைப் பார்க்கும்போது விளங்கலாம்.



'(நபியே) எதை (இறைவழியில்) செலவு செய்ய வேண்டும் என்று உம்மிடம் கேட்கிறார்கள். உங்கள் தேவைக்குப் போக மீதமுள்ளதைச் செலவு செய்யுங்கள் என்று கூறுவீராக' (2:219)



இந்த வசனம் தெளிவாகவே 'அம்வாலை' இரண்டு அர்த்தத்தில் பிரித்துவிடுகின்றன - ஒன்று முஸ்லிம்களின் சொந்தத் தேவைக்குரியவை மற்றொண்டு மேலதிகமானவை.



வாழ்வாதார தேவைக்குரியவைகளில் வீடும், வீட்டுப் பொருட்களும், வீட்டார் பயன்படுத்திக் கொள்ளும் வாகனமும் அடங்கிவிடும். குடும்பத்திற்காகச் செலவிடப்படும் தொகை ஜகாத் தொகைக்குரிய தகுதியைப் பெறாது.



முஸ்லிம்களின் சொந்தத் தேவைக்குரியது என்ன என்பதையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.



மனிதன் தன் வாழ்வாதாரத் தேவைகளை மிக வேகமாகப் பெருக்கிக் கொண்டு வந்துவிட்டான். மேற்கண்ட 2:219வது வசனம் இறங்கும்போது அந்த மக்களின் தேவை வெகு சொற்பமே. வீடும், வாகனமும், உணவும், உடையும் போக மீதி இருப்பவை அனைத்தும் மேலதிகமானதே. வளர்ச்சி பெற்ற நூற்றாண்டுகளில் குறிப்பாக இந்த நூற்றாண்டில் மனிதனின் அத்தியாவசியத் தேவை அதிகப்பட்டு விட்டது. குளிர் சாதனப் பெட்டிகள், தெலைகாட்சி, தொலைபேசி, இணையம் என்று ஒவ்வொன்றும் வசதிக்கேற்ப மனிதனுக்கு அவசியமாகி விடுகிறது. பேரரிவாளனான இறைவன் இதையெல்லாம் உள்ளடக்கியே தன்னுடைய வார்த்தையை பயன்படுத்தியுள்ளான். 'தமது தேவைக்குப் போக மீதமுள்ளதை' என்று.



தேவைகள் அதிகரித்து அதற்கேற்ப வீட்டில் பொருட்கள் 'அம்வால்' பயன்படுத்தப்பட்டால் அதற்கு ஜகாத் தேவையில்லை.



'தேவைக்குப் போக மீதமுள்ளதை தர்மம் செய்வதே சிறந்ததாகும்' என்ற நபிமொழியும் இங்கு கவனிக்கத் தக்கது. (அபுஹுரைரா ரலி - புகாரி 14:26)



வீடு இல்லாதவர்கள் சொந்த வீடு கட்டுவதற்காக நிலம் வாங்கி போட்டிருந்தால், அவை வீடு கட்டுவதற்குரிய அளவுள்ள இடமாக இருந்தால் அதற்கு ஜகாத் இல்லை. ஏனெனில், அவை நமது தேவைக்கு உட்பட்டதாகும். அதிகப்படியான நிலங்கள் மேலதிகமான சொத்தாக இருந்தால் அவற்றிற்கு ஜகாத் கொடுத்தாக வேண்டும்.



வருமானம் இல்லாமல் வீட்டு மனைகள் வாங்கப்பட்டிருந்தால் அவற்றின் மதிப்பிற்கு ஜகாத் கொடுத்தாக வேண்டும். ஏனெனில் வங்கிகளில் பணம் சேமிக்கப் படுவது போன்று இங்கு நிலங்களின் மீது பணம் சேமிக்கப் படுகிறது. மேலதிக 'அம்வால்' களுக்கு ஜகாத் கொடுக்க வேண்டுமென்ற இறைவனின் கட்டளையில் இந்த காலிமனைகள் அனைத்தும் அடங்கிவிடும்.



பெண்கள் அணியும் நககைகள், பீரோவில் உள்ள நகைகள், லாக்கரில் பூட்டப்பட்டுள்ள நகைகள் இவற்றிற்கும் ஜகாத் கொடுத்தாக வேண்டும்.



'யார் தங்கத்தையும் - வெள்ளியையும் சேமித்து வைத்து அல்லாஹ்வின் பாதையில் அவற்றை செலவு செய்யாமல் வாழ்கிறார்களோ அவர்களுக்குக் கடும் தண்டனையுண்டு' (அல்குர்ஆன் - 9:34,35)



இறைவழியில் செலவு செய்யாமல் சேமித்து வைப்போருக்குத் தண்டணையுண்டு என்று கூறுவதால் அவற்றின் மீதும் ஜகாத் கடமையாகிறது. பெண்கள் தங்கத்தைச் சேர்த்து வைக்கவில்லை, அதன் மூலம் தம்மை அழகுபடுத்திக் கொள்கிறார்கள் அதனால் அதற்கு ஜகாத் தேவையில்லை என்றெல்லாம் யாரும் சமாதானம் சொல்ல முடியாது. தம்மை அழகுபடுத்திக் கொண்டு தொழ வந்த பெண்களிடம்தான் நபி (ஸல்) அவர்கள் உபதேசம் செய்கிறார்கள். உடனே பெண்கள், தமது காது வளையங்கள், கால் மெட்டிகள், வளையல்கள் எல்லாவற்றையும் கழற்றி அவற்றை இறைவனின் பாதையில் கொடுக்கிறார்கள். (புகாரி)



பெண்கள் தமது கைகளில் அணிந்திருந்த தங்கக் காப்புகளுக்கு நபி (ஸல்) அவர்கள் ஜகாத் கொடுக்கச் சொன்ன விபரம் அமீரிப்னு ஷுஐப்(ரலி) அறிவித்து அபூதாவூதில் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, பெண்கள் தங்க நகைகளுக்கு ஜகாத் கொடுக்கத்தான் வேண்டும்.





--------------------------------------------------------------------------------



369) கேள்வி : நாங்கள் இப்போது வேளாண்மை செய்கிறோம் இதை அறுவடை செய்ய இன்னும் காலம் எடுக்கும். இப்போது அவசரமாக ஒரு சகோதரருக்கு பணம் தேவைப்படுகிறது. வேறு பணத்திலிருந்து அவருக்கு பணம் கொடுத்து விட்டு அறுவடைக்கு பின்னுள்ள ஜகாத் தொகையிலிருந்து இதை கழித்துக் கொள்ளலாமா..? இலங்கையிலிருந்து முனவ்வர் - ஹாட் மின் அஞ்சலில்.



அறுவடைக்கு பின் கொடுக்கக் கூடிய ஜகாத் எவ்வளவு என்று முன்கூட்டியே கணிப்பது சிரமம். மழை, வெயில், போதிய நீரின்மை, வீரியமற்ற விதைகள், மண்வளக் கோளாறுகள், உரத்தால் வரும் கெடுதிகள் இப்படியாக மகசூல் குறைந்துப் போகும் வாய்ப்புகள் அனேகம் உள்ளன. அறுவடைக்கு முன்னரே நிறைய மகசூல் வரும் என்று நம்பி நிறைய ஜகாத் தொகையை வழங்கிவிட்டு அறுவடைக்கு பின் மகசூல் குறைந்திருந்தால் நிலத்திற்குரியவர் நஷ்டமடைய வேண்டி வரும். இப்படி எல்லாம் சிக்கல் உருவாகிவிடக் கூடாது என்பதால்தான், அறுவடை செய்யும் காலத்தில் அதற்குரிய ஜகாத்தை கொடுங்கள் என்கிறான் இறைவன். (அல் குர்அன் 6:141)



பிறருடைய அவசர அவசிய தேவைகளுக்கு கடனாக, அன்பளிப்பாக உதவ தூண்டும் அனேக வசனங்கள் குர்ஆனில் இருக்கின்றன.



புண்ணியம் என்பது உங்கள் முகத்தை கிழக்கிலோ, மேற்கிலோ திருப்பிக் கொள்வதில் இல்லை. மாறாக புண்ணியம் என்பது அல்லாஹ்வை நம்பி...... ..இறைவன் மீதுள்ள நேசத்தின் காரணமாக சொந்தங்களுக்கும், அனாதைகளுக்கும், (வாய்திறந்து கேட்காத) ஏழைகளுக்கும், யாசிப்பவர்களுக்கும் செலவு செய்வதாகும். மேலும் தொழுகையை கடைப்பிடித்து ஜகாத் கொடுத்து வருவதுமாகும்.... (அல் குர்அன் 2:177)



இஸ்லாத்தின் எந்த ஒரு சட்டமும் அர்த்தமுள்ளவைதான் என்பதை சொல்லும் வசனங்களில் இதுவும் ஒன்றாகும்.



கஃபத்துல்லாவை நோக்கி முகத்தை திருப்பி வணங்கி வருவதால் மட்டும் புண்ணியம் கிடைத்து விடும் என்று யாரும் கற்பனை பண்ணிக் கொள்ள வேண்டாம். புண்ணியம் கிடைக்க வேண்டுமானால் உங்கள் பொருளாதாரத்தை தேவையுள்ளளோருக்காக செலவு செய்யுங்கள் என்று கூறி தேவையுள்ளோர் யார் என்பதையும் இறைவன் எடுத்துக் காட்டியுள்ளான். இவர்களுக்கு செலவு செய்வதில் புண்ணியம் உண்டு என்று கூறிவிட்டு பிறகு ஜகாத் கடமைப் பற்றியும் நினைவூட்டுகிறான்.



இதிலிருந்து ஜகாத் மட்டுமில்லாமல் பொருளாதாரத்தின் மீது இன்னும் சில கடமை உண்டு என்பதை விளங்கலாம். எனவே அறுவடைக்கு முன் ஜகாத்தை கொடுத்து சட்ட சிக்கலை உருவாக்கிக் கொள்ளாமல் இதர வழிகளில் அவருக்கு உதவுவதுதான் சரியான முறையாகும்.





--------------------------------------------------------------------------------



370) கேள்வி : என்னிடம் ஒரு லட்ச ரூபாயை கொடுத்து ஜகாத்தாக வினியோகிக்க சொல்லப் பட்டால் அதை ஏழாக பிரித்து அதிலிருந்து ஒரு பகுதியை நான் எடுத்துக் கொள்ளலாமா.. நான் ஏழையல்ல என்பதும் இங்கு குறிப்பிடத் தக்கது. எங்களூரில் பைத்துல்மால் எதுவுமில்லை. முழு தொகையையும் ஏழைகளுக்கு கொடுத்து விடவேண்டுமா.. அல்லது ஒரு பங்கை மட்டும் தான் கொடுக்க வேண்டுமா..? புதுப்பட்டினம் - அவ்ரங்கசீப், அல் குரையாத்.



ஜகாத் வசூலிப்பவர்கள் அந்த தொகையிலிருந்து கூலி பெறலாம் என்று குர்ஆன் வசனம் கூறுகிறது. (பார்க்க 9:60) இதை அடிப்படையாகக் கொண்டு அந்த தொகையிலிருந்து ஒருப் பகுதியை நீங்கள் எடுத்துக் கொள்ளலாமா.. என்றால் 'கூடாது' என்பதே சரியாகும். அந்த வசனத்தில் கூலி பெறும் தகுதியை இறைவன் கூறும் போது 'ஆமிலீன அலைஹா' என்று கூறுகிறான். இதற்கு அதன் மீது நியமிக்கப்பட்ட அதிகாரிகள் - வேலையாட்கள் என்பது பொருள். ஜகாத்தை கணக்கிட்டு வசூல் செய்வதற்காக அரசால் நியமிக்கப்படும் அதிகாரிகளையும், இந்த துறையின் விஸ்தீரனத்திற்கேற்ப உடன் வேலை செய்யும் ஊழியர்கள், எழுத்தர்கள். கணக்கர்கள்.. என்று பலரை அந்த சொற்கள் கட்டுப்படுத்துகிறது. ஜகாத்தை வசூலிக்க நியமிக்கப்பட்டவர்களுக்கு நபி(ஸல்) கூலி கொடுத்துள்ளார்கள் என்பதற்கு புகாரி - முஸ்லிமில் சான்றுகள் கிடைக்கின்றன.



ஜகாத் வசூலின் மீது நியமிக்கப்படாமல் பிறர் நம்மிடம் கொடுத்து வினியோகிக்க சொல்லும் தொகையிலிருந்து வசூலிப்பதற்குரிய கூலியை நாம் எடுக்க முடியாது. ஏனெனில் இந்த பணிக்காக நாம் நியமிக்கப்படவில்லை.



இதுவல்லாமல் மற்ற ஆறுபேருடைய தகுதிகளில் ஏதாவது ஒன்று நம்மிடம் இருந்தால் அப்போது அதிலிருந்து தேவைக்கேற்ப தொகையை பிரித்தெடுக்கலாம்.



உண்மையில் ஜகாத் என்பது வறுமையை கட்டுப்படுத்துவதற்குரிய திட்டமாகும். ஜகாத் தொகையை பலருக்கு பிரித்து கொடுத்து சில வேளை பசியைப் போக்குவதை விட தேவைக்கேற்ப ஒருவருக்கு கொடுத்து அவரது சுமையிலிருந்து அவரை மீட்டெடுப்பதே முக்கியமாகும். நபி(ஸல்) காலத்தில் தேவைக்கேற்ப ஜகாத் வழங்கப்பட்டுள்ளதை நாம் கவனத்தில் எடுக்க வேண்டும்.



இஸ்லாமிய ஆட்சி நடக்காத இடங்களில் வாழும் முஸ்லிம் செல்வந்தர்கள் தாமாக முன் வந்து ஜகாத் தொகையை சம்மந்தப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டும். அல்லது அந்த நற்பணியில் ஈடுபடுபவர்களிடம் கொடுத்து வினியோகிக்க சொல்லி விட வேண்டும். இந்தியா போன்ற நாடுகளில் பைத்துல் மால் ஏற்படுத்தும் அவசியத்தை முஸ்லிம்கள் அதிகம் வாழும் ஒவ்வொரு ஊர் மக்களும் உணர வேண்டும். இதன் மூலம் வறியவர்கள் ஓரளவாவது முன்னுக்கு வர முடியும்.





--------------------------------------------------------------------------------



371) கேள்வி - ஒருவர் இஸ்லாமிய முறைப்படி வியாபாரம் செய்து அதற்குரிய ஜகாத்தையும் கொடுத்து வருகிறார். மேற்கொண்டு அரசாங்கம் வருமானவரி, விற்பனை வரி என்று வரியை திணிப்பது அவர் போன்றவர்களுக்கு சுமையை ஏற்படுத்துகிறது. அப்படி பெறப்படும் வரி மக்களுக்கு சரியாக போய் சேருவதும் இல்லை. இந்நிலையில் அந்த வியாபாரி தனது வருமானத்தைப் பற்றிய முழு விபரத்தையும் அரசாங்கத்திடம் கொடுக்காமல் ஒரு குறிப்பட்ட பகுதியை மட்டும் காண்பித்து அதற்குரிய வரியை மட்டும் கட்டுகிறார் என்று வைத்துக் கொள்வோம். இப்போது அவர் அரசாங்கத்தை ஏமாற்றுகிறார். இத்தகையோர் பற்றி இஸ்லாத்தின் நிலைப்பாடு என்ன என்பதை தெளிவு படுத்தவும். சிக்கந்தர் - இ,டி,எ அஸ்கான் மெயில் வழியாக.



அரசாங்கத்திடம் திருட்டு கணக்கு காண்பிக்கும் அளவிற்கு போகிறவர்களுக்கு வருமானம் எவ்வளவு இருக்கும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். தங்கள் தேவைக்கு போக மேலதிகமாக சில லட்சங்களை வைத்திருப்பவர்கள் திருட்டு கணக்கு காண்பிக்க வேண்டும் என்றெல்லாம் சிந்திக்க மாட்டார்கள். பல லட்சங்களையும் கோடிகளையும் வைத்திருப்பவர்களே இத்தகைய போக்கை மேற் கொள்வார்கள். அரசாங்க வரி சுமையை ஏற்படுத்துகிறது என்று எண்ணும் அளவிற்கு இவர்களிடம் இருக்கும் பொருளாதாரம் குறைவானதல்ல. எனவே அரசிடம் தங்ககள் சொத்தை குறைத்து காண்பிக்கலாம் என்ற கருத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.



முஸ்லிம்களிடம் இருக்கும் சொத்திற்கு கணக்கு பார்த்து ஜகாத் வழங்கி விட்டால் போதும் மேற் கொண்டு அந்த சொத்திற்காக எந்த செலவும் இல்லை என்றெல்லாம் முடிவு செய்துக் கொள்வதால் தான் இந்த சிந்தனைகளெல்லாம் எழுகின்றன. பொருளாதாரத்தின் மீதிருக்கும் பேராசையே இந்த சிந்தனைக்கு அவர்களைத் தள்ளுகிறது.



திருக்குர்ஆன் எந்த ஒரு இடத்திலும் பொருளாதாரத்தின் மீது ஜகாத் மட்டும் தான் கடமை என்ற கருத்தை சொல்லவேயில்லை. ஜகாத் பற்றி பேசும் பல்வேறு வசனங்களில் ஜகாத்தை குறிப்பிட்டு விட்டு பொருளாதாரத்தின் மீதிருக்கும் இதர செலவீனங்களையும் சுட்டிக் காட்டவே செய்கின்றது. உதாரணத்திற்கு ஒரு வசனத்தைப் பார்ப்போம்.



புண்ணியம் என்பது உங்கள் முகங்களைக் கிழக்கிலோ, மேற்கிலோ திருப்பிக்கொள்வதில் இல்லை. ஆனால் புண்ணியம் என்பது அல்லாஹ்வின் மீதும், இறுதி(த் தீர்ப்பு) நாளின் மீதும், மலக்குகளின் மீதும், வேதத்தின் மீதும், நபிமார்கள் மீதும் ஈமான் கொள்ளுதல், (தன்) பொருளை இறைவன் மேலுள்ள நேசத்தின் காரணமாக, பந்துக்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(ஏழை)களுக்கும், வழிப் போக்கர்களுக்கும், யாசிப்பவர்களுக்கும், (அடிமைகள், கடனாளிகள்) போன்றோரின் மீட்புக்காகவும் செலவு செய்தல்;. இன்னும் தொழுகையை ஒழுங்காகக் கடைப்பிடித்து, முறையாக ஜகாத் கொடுத்து வருதல்(இவையே புண்ணியமாகும்) இன்னும் தாம் வாக்களித்தால் தம் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோரும்; (வறுமை, இழப்பு போன்ற) துன்பத்திலும், (நோய் நொடிகள் போன்றவற்றின்) கஷ்டத்திலும், யுத்த சமயத்திலும், உறுதியுடனும், பொறுமையுடனும் இருப்போரும்தான் நன்னெறியாளர்கள்; இன்னும் அவர்கள் தாம் முத்தகீன்கள்(பயபக்தியுடையவர்கள்). (அல் குர்ஆன் 2:177)



இந்த வசனத்தில் ஜகாத் என்ற கடமையை சுட்டிக் காட்டுவதற்கு முன்பே ஒருவர் தம் பொருளாதாரத்திலிருந்து விரும்பி செலவு செய்ய வேண்டிய இதர வழிகளை இறைவன் இங்கு சுட்டிக் காட்டுகிறான். இது போன்று ஏராளமான வசனங்களை குர்ஆனில் பார்க்கலாம்.



ஜகாத் என்பது எட்டு வகையினரை மீட்டெடுப்பதற்காக ஒதுக்கப்பட வேண்டிய தொகையாகும். அவர்கள் மட்டுமே உலகில் பொருளாதார தேவையுள்ளவர்கள் வேறு எவருக்கும் பொருளாதார தேவையில்லை என்று முடிவு செய்ய முடியுமா?



பொருளாதாரத்தின் மீது ஜகாத் போக இதர பொறுப்புகளும் உண்டு என்பதை சுட்டிக் காட்டவே இந்த விளக்கமாகும்.



அரசாங்கங்கள் விதிக்கும் வரி என்பது ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு இன்றியமையாததாகும். அரசாங்கங்கள் வரியை வசூலித்து அதை முறையாக பல்வேறு துறைகளுக்குப் பகிர்ந்தளிக்கா விட்டால் (உதாரணமாக கல்வி - வறுமை ஒழிப்பு) என்ன விளைவு ஏற்படுமோ அதே விளைவு வரி ஏய்பு செய்யும் போதும் நடக்கும். எனவே அரசின் முறைகேடுகளை காரணம் காட்டிக் கொண்டு வளர்ச்சிப் பணிகளுக்கு பயன்படும் வரித் தொகையை நாம் ஏப்பம் விடக் கூடாது.



இஸ்லாமிய ஆட்சியாளர்கள் இல்லாத இடத்தில் ஜகாத் கடமையில்லை என்று எப்படி நாம் முடிவுசெய்ய முடியாதோ, ஜகாத் தொகையை முறையாக செலவு செய்யாத இஸ்லாமிய ஆட்சியாளர்கள் இருந்தால் 'இவர்களிடம் நான் ஜகாத் கொடுக்க மாட்டேன்் என்று எவ்வாறு முடிவு செய்ய முடியாதோ அதே போன்று தான் இதுவும்.



செல்வந்தர்களிடமிருந்து ஜகாத் தொகையை வசூல் செய்து வறுமையை ஒழித்த நபி(ஸல்) அவர்கள் நாட்டு பாதுகாப்பிற்காக பல்வேறு சந்தர்பங்களில் நிதி வசூல் செய்துள்ளார்கள் என்பதையும் வெற்றிக்குப் பின் கிடைக்கும் போர்தளவாடங்கள் மீது வரி விதித்துள்ளார்கள் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.



ஒரேயொரு சந்தர்பத்தில் மட்டும் தமது சொத்து விபரத்தை முறையாக வெளியிடாமல் இருக்கலாம். அதாவது எந்த ஒரு அரசாவது சொத்துக்கு உச்சவரம்பு விதிக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அரசு விதித்த உச்சவரம்பை கடந்து சொத்துக்கள் இருந்தால் அதை அரசு பறிமுதல் செய்து அரசு சொத்தாக அறிவிக்கும் நிலை இருந்தால் அப்போது சொத்துக்குரியவர் தமது சொத்து விபரம் முழுவதையும் வெளியிட வேண்டும் என்கிற அவசியமில்லை. ஏனெனில் இஸ்லாம் சொத்துக்கு உச்சவரம்பு எதையும் நிர்ணயிக்கவில்லை. எத்துனை கோடிகளுக்கு வேண்டுமானாலும் ஒரு முஸ்லிம் அதிபராக இருக்கலாம். சொத்திற்கான ஜகாத், இதர நற்பணிகளில் அவர் தமது சொத்திலிருந்து செலவு செய்தால் போதும்.



சொத்திற்கு உச்சவரம்பு இல்லை என்றால் எந்த ஒரு செல்வந்தரும் தமது சொத்தை பினாமி பெயரில் வைத்துக் கொண்டு வரி ஏய்பு செய்வது நியாயமில்லை.





--------------------------------------------------------------------------------



372) கேள்வி - எனக்கு திருமணம் முடிந்து பத்து வருடங்கள் கழித்த பிறகுதான் சென்ற வருடம் நகைகளுக்கு கணக்கிட்டு அந்த வருடத்திற்குரிய ஜகாத்தை கொடுத்தேன். பத்து வருடங்கள் ஜகாத் கொடுக்கவில்லை. இப்போதுள்ள சந்தேகம் பத்து வருடத்திற்குரிய ஜகாத்தையும் மொத்தமாக கொடுத்துவிட வேண்டுமா...(அவ்வளவு பெரிய தொகையை புரட்டுவது சிரமம்) அல்லது வரும் ஆண்டுகளுடன் சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக கொடுத்து விடலாமா... அப்துல் பாரி - ஹாட்மெயில் வழியாக.



ஜகாத் என்பது செல்வந்தர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள கடனாகும். அந்தக் கடனோடு ஒருவர் மரணித்தால் அவர் இறைவனிடம் பெரும் பிரச்சனைகளை - விசாரணைகளை சந்திக்க வேண்டி வரும். எனவே விரைவில் கடந்தக் காலத்திற்கான ஜகாத் தொகையை வழங்கிவிடுவதுதான் நல்லது. ஒரே நேரத்தில் பெரிய தொகையை கொடுப்பது சாத்தியமில்லை என்றால் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அந்த கடமையை பூர்த்தி செய்து விடுங்கள். தொழுகையை மட்டும் தான் களா செய்ய அனுமதியில்லை. பிற நோன்பு - ஜகாத் போன்ற கடமைகளை உரிய நேரத்தில் செய்யமுடியாமல் போயிருந்தால் அவசியம் களா செய்ய வேண்டும்.





--------------------------------------------------------------------------------



373) கேள்வி - ஜகாத் பணத்தின் ஒரு சிறு பகுதியை கூட்டாக சேர்த்து வட்டியிலிருந்து விடுப்படும் நோக்கில் ஒரு இஸ்லாமிய வங்கி ஆரம்பிக்கலாமா... இலங்கையிலிருந்து அபூ ஆதிப் - ஹாட் மெயில் வழியாக.



நபி(ஸல்) ஜகாத் நிதியை சேமித்து வைத்திருந்தார்கள் அதற்கு பாதுகாவலரை நியமித்திருந்தார்கள் என்பதெற்கெல்லாம் ஆதாரங்கள் உள்ளன. ஜகாத் தொகை வசூலிக்கப்பட்டவுடன் தாமதமின்றி அவற்றை செலவிட்டு விட வேண்டும் என்றெல்லாம் சட்டமில்லை. அதற்கான அவசியங்களின் போது மட்டுமே அது செலவிடப்பட வேண்டும். ஜகாத் பணம் தேவையுள்ளவர்ள் இருக்கும் போது அவர்களைக் கண்டுக் கொள்ளாமல் ஜகாத் தொகையை சேமித்து வைக்கக் கூடாது. தேவையுள்ளவர்கள் இருக்கும் போது தன்னிடம் இருந்த ஜகாத் பங்கை வினியோகிப்பதில் நபி(ஸல்) காலதாமதம் செய்ததில்லை. இன்றைக்கும் தேவையுள்ளவர்களின் நிலை நீடிப்பதால் வங்கிக்காக அந்த பணத்தை முடக்குவதில் சாத்தியக் கூறுகள் குறைவாகும்.



மட்டுமின்றி வங்கி என்பது குறிப்பிட்ட சாராருக்கு மட்டும் பயன்படக் கூடியதல்ல. அது அனைத்துத் தரப்பு மக்களும் பயன்பெறும் தளமாகும். அங்கு ஜகாத் பணத்தை முடக்கும் போது பல்வேறு நிலைப்பாடுகளை நாம் ஆய்வு செய்யவேண்டி வரும். இஸ்லாமிய வங்கியில் பற்றிய கட்டுரை வரும் போது இதன் சாத்தியக் கூறுகளை அலசலாம் இன்ஷா அல்லாஹ்.





--------------------------------------------------------------------------------



374) கேள்வி - ஒரு தொழிலில் இரண்டு லட்சம் முதலீடு செய்கிறோம் என்றால் முதலீட்டுக்கும் வருமானத்திற்கும் சேர்த்து ஜகாத் கொடுக்க வேண்டுமா..? வீடு, வாகனம், நிலம், தங்கம் இவற்றில் எதற்கு ஜகாத் கொடுக்க வேண்டும். தங்கம் 11 பவுனுக்கு மேலிருந்தால் அதிகப்படியான தங்கத்திற்கு மட்டும் கொடுக்க வேண்டுமா.. அல்லது முழுமைக்குமா... புதிய வருமானங்களுக்கு எப்படி ஜகாத் கொடுப்பது? ஜக்கி தாஜூத்தீன் - ஹாட் மெயில் வழியாக.



எவற்றின் மீது ஜகாத் கடமையாகும் என்பதை 'ஜகாத் சட்டங்கள்' கட்டுரையில் விரிவாக விளக்கியுள்ளோம்.



ஜகாத் சட்டங்களுக்கு இங்கு கிளிக் செய்யுங்கள்.



தொழிலில் முதலீடு செய்யும் தொகை அன்றாட குடும்ப செலவுக்காகத்தான் என்ற நிலை இருந்தால் அந்த தொகைக்க ஜகாத் கடமையாகாது. ஏனெனில் செய்யப்பட்ட முதலீடு சேமிப்பிற்கான முதலீடல்ல. செலவீனத்திற்கான முதலீடேயாகும். சேமிப்பிற்கான முதலீடு என்றால் முதலீட்டிற்கும் வரும் வருமானத்திற்கும் சேர்த்து ஜகாத் கொடுக்கத்தான் வேண்டும். செலவீட்டிற்காக முதலீடு செய்யப்பட்டு அதிலிருந்து சேமிக்கும் அளவிற்கு வருமானம் கிடைக்கின்றதென்றால் இப்போது அந்த சேமிப்பு ஜகாத் கடமையாகும் தகுதிக்குள் வந்து விடும்.



11 பவுனுக்கு மேல் எவரிடம் இருக்கிறதோ அவர்கள் அந்த 11 பவுன் உட்பட அனைத்திற்கும் ஜகாத் கொடுக்க வேண்டும். குடும்ப செலவு போக 87 கிராம் தங்கம் அல்லது அந்த மதிப்பிற்கான தொகை. (வேறெந்த செல்வமும் இல்லாமல்) ஓராண்டு காலம் இருந்தால் அந்த மொத்த மதிப்பின் மீது ஜகாத் கடமையாகி விடும். இதற்கான ஆதாரங்களை நாம் ஜகாத் சட்டங்கள் தொடரில் வெளியிட்டுள்ளோம். மற்ற செல்வங்கள் இருந்தால் அப்போது இந்த ஓராண்டு காலம் என்பது அடிப்பட்டுப் போய்விடும். (மேலதிக விளக்கம் ஜகாத் தொடரில் காண்க. இதுவரை வெளிவந்த ஜகாத் தொடர் முழுவதையும் படித்தால் உங்கள் ஐயங்கள் விலகும்)



Aug 31st 2007அந்நஜாத் விமர்சனம் விளக்கம் "ஜகாத்"

Aug 31st 2007அந்நஜாத் விமர்சனம் விளக்கம் "ஜகாத்"








விமர்சனம்: 1986லிருந்து இதுநாள்வரை மார்க்கம் என்றால் குர்ஆன், ஹதீஸ் மட்டும்தான். மனித அபிப்பிராயத்திற்கு மார்க்கத்தில் அணுவளவும் இடமே இல்லை என்று சொல்லி வந்த நீங்கள், இப்போது ஜகாத் விஷயத்தில் உமர்(ரழி) அலீ(ரழி) போன்றோரின் சொந்தக் கருத்துக்களை ஆதாரமாக வைத்து, ஜகாத் கொடுத்த பொருளுக்கே மீண்டும், மீண்டும் வருடா வருடம் ஜகாத் கொடுக்க வேண்டும் என்று கூறி வருவது, உங்களின் முன்னைய கூற்றுக்கு முரண்படுவதாகப் பரவலாகச் செய்தி பரப்பப்பட்டு வருகிறதே? இதுபற்றிய உங்களின் பதில் என்ன? A. கமால், திருச்சி.







விளக்கம்: மார்க்கம் என்றால் குர்ஆன், ஹதீஸ் மட்டும்தான். நபி(ஸல்) அவர்களின் மறைவுக்குப் பிறகு மார்க்கத்தில் ஓர் அணுவளவும் கூட்டவோ குறைக்கவோ மனிதர்களில் யாருக்கும் அதிகாரமில்லை என்று கூறும் 7:3, 33:36,66,67,68 இறைக்கட்டளைகளில் எமக்குத் துளியும் சந்தேகமில்லை. மேலும் 9:34 இறைக்கட்டளைப்படி சேமித்து வைக்கும் பொருளுக்கு வருடாவருடம் கொடுத்த பொருளுக்கே மீண்டும், மீண்டும் ஜகாத் கொடுப்பது நபி(ஸல்) அவர்களின் நடைமுறையில் இருந்ததையே உமர்(ரழி), அலீ(ரழி) போன்றோர் எடுத்துக் கூறுகிறார்கள் என்பதில் சுயநலமற்ற, உலகத்தை மறுமையைவிட அதிகமாக நேசிக்காத, நடுநிலையாளர்கள் உணர்ந்தே செயல்படுத்தி வருகிறார்கள.







ஜகாத் ஹிஜ்ரி 2-ல் கடமையாக்கப்பட்டது. நபி(ஸல்) அவர்களின் மரணம் ஹிஜ்ரி 11; சுமார் பத்து(10) வருடங்கள் நபி(ஸல்) அவர்கள் செல்வந்தர்களிடமிருந்து ஜகாத் வருடாவருடம் கொடுத்த பொருளுக்கே மீண்டும், மீண்டும் வசூலித்ததை தங்கள் கண்களால் அதுவும் ஒன்றிரண்டு வருடங்கள் அல்ல, சுமார் 10 ஆண்டுகள் நேரடியாகப் பார்த்து அறிந்தவர்கள் நான்கு கலீஃபாக்களும், நபிதோழர்களும் ஆவார்கள். அந்த நடைமுறையே இதுகாலம் வரை எவ்வித கருத்து வேறுபாடும் இல்லாமல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. நபி(ஸல்) அவர்களின் சொல்லும், செயலும் இரவும் பகலைப்போல் தெள்ளத்தெளிவானது. எந்தப் புரோகிதனினதும் சுயநலத்துடன் கூடிய மேலதிக விளக்கம் தேவையே இல்லை!







கொடுத்த பொருளுக்கு மீண்டும் ஜகாத் கொடுக்கத் தேவை இல்லை என்பது உண்மையானால், நபி(ஸல்) அவர்கள் ஜகாத் வசூலிக்க அனுப்பியவர்களிடம், தெளிவாக நேரடியாக, இதுவரை ஜகாத் வசூலிக்காத பொருள்களில் மட்டும் ஜகாத் வசூலித்து வாருங்கள் என்று கட்டளையிட்டே அனுப்பி இருப்பார்கள். நபி(ஸல்) அவர்கள் ஜகாத் வசூலிக்க அனுப்பிய காலகட்டங்களை நேரில் கண்ணால் பார்த்தவர்கள் நபித்தோழர்கள். இந்த அடிப்படைகளில் நபி(ஸல்) அவர்கள், ஜகாத் கொடுத்த பொருளுக்கே மீண்டும், மீண்டும் ஜகாத் வசூலித்ததையும், அதுவும் வருடாவருடம் வசூலித்ததையும் 10 வருட காலகட்டத்தில் நேரடியாகத் தங்கள் கண்களால் கண்டதை வைத்தே ஜகாத் வருடா வருடம் கொடுத்த பொருளுக்கே மீண்டும் மீண்டும் கொடுப்பது கடமை என்பதை மக்களுக்கு எடுத்துச் சொல்லி இருக்கிறார்கள். இவை நபி(ஸல்) அவர்களின் நடைமுறைக்கு முரணானவை அல்ல. அதற்கு மாறாக இவை நபி(ஸல்) அவர்களின் நடைமுறை இல்லை என்று நிலைநாட்ட விரும்புகிறவர்கள், இதற்கு முரணான, அதாவது ஜகாத் கொடுத்த பொருளுக்கே மீண்டும் மீண்டும் கொடுக்கவேண்டியதில்லை; பொருள் கிடைத்தவுடன் ஜகாத் கொடுக்க வேண்டும், ஒரு வருடம் நிறைவு பெற்ற பின்னர்தான் கொடுக்கவேண்டும் என்பதில்லை என்பதற்கு நேரடியான, ஆதாரபூர்வமான ஹதீஸை எடுத்து வைத்து தங்களின் புதிய வாதத்தை நிறுவ வேண்டும். இப்படித்தான் விளங்கமுடியும், விளங்கவேண்டும் என்ற இவர்களின் யூகங்கள் மார்க்கமாகாது. குப்பைத் தொட்டியில் எறிய வேண்டியவை.







குர்ஆன் வசனங்களை ஒன்று சேர்ப்பதில் சில கருத்து வேறுபாடுகள் இருந்து, ஆலோசனை செய்யப்பட்டு அதன் பின்னர் முடிவெடுத்து ஒன்று சேர்த்ததாகப் பல அறிவிப்புகள் காணப்படுகின்றனவே, அதுபோல் ஜகாத் வருடாவருடம் கொடுக்க வேண்டும், கொடுத்த பொருளுக்கே மீண்டும் மீண்டும் கொடுக்க வேண்டும் என்ற விவகாரத்தில் கலந்தாலோசனை செய்யப்பட்டு முடிவெடுத்ததாக ஒரு அறிவிப்புக் கூட இல்லையே! இதுவே ஜகாத் வருடா வருடம் கொடுக்க வேண்டும் என்பது ஆதாரமற்றது என நிரூபிக்கிறது என்ற வாதத்தை வைக்கின்றனர். இதுவும் அவர்களின் வாதம் அறிவீனமானது, மிகத் தவறானது என்பதையே நிலை நாட்டிக் கொண்டிருக்கிறது.







நபி(ஸல்) அவர்களின் காலத்திலேயே வஹீ மூலம் அறிவிக்கப்பட்டு அனைத்து குர்ஆன் வசனங்களும், தோலிலும், எலும்புத்துண்டுகளிலும், அன்றிருந்த எழுத வசதிப்பட்ட பொருள்களிலும் எழுதப்பட்டு அவை பலரிடம் இருந்து வந்தன. நபி(ஸல்) அவர்களது காலத்தில் அவற்றை ஒன்று திரட்டி ஒரே நூல் வடிவில் ஆக்கப்படவில்லை என்பதுதான் உண்மை. அதற்குக் காரணமும் உண்டு. நபி(ஸல்) அவர்கள் காலத்தில் வஹீ முற்றுப்பெறவில்லை. தொடர்ந்து வந்து கொண்டிருந்தது. எனவே ஒரே நூலாகக் கோர்ப்பது சாத்தியமற்ற நிலையில் இருந்தது. ஆனால் நபி(ஸல்) அவர்களின் மரணத்தோடு 'வஹி' முற்றுப்பெற்றுவிட்டது. மார்க்கம் நிறைவு பெற்றுவிட்டது. மேலதிகமாக குர்ஆனில் சேர்ப்பதற்கு எதுவும் எஞ்சியிருக்கவில்லை. எனவே அந்த நிலையில்தான் அல்குர்ஆன் வசனங்கள் அனைத்தையும் ஒன்று சேர்த்து ஒரே நூலாக ஆக்கும் கட்டாயம் ஏற்பட்டது. இது நபி(ஸல்) அவர்களது காலத்தில் நடைபெறாத ஒரு காரியம்தான்.







எனவேதான் அதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, கடுமையான கலந்தாலோசனைகளுக்குப் பிறகு, இது மார்க்கத்தில் புதிதாகப் புகுத்தும் ஒரு 'பித்அத்' அல்ல, நபி(ஸல்) அவர்களுக்கு வஹி மூலம் இறக்கி அருளப்பட்ட குர்ஆன் வசனங்கள் அனைத்தும், சில சில வசனங்களாக பிரிந்து பலரிடம் இருப்பதை ஒன்று சேர்த்து ஒரே நூலாக ஆக்குவதுதான் நமது பணி. அதுவும் இது மிகமிக அத்தியாவசியமானது. அப்படிச் செய்தால்தான் பின்னர் இடைச்செருகலுக்கு இடம் இல்லாமல், அல்குர்ஆன் அது இறக்கப்பட்ட அதன் தூய வடிவில் பாதுகாக்கப்படும். இல்லை என்றால் தவ்றாத்திலும், இன்ஜீலிலும், ஜபூரிலும் இந்தப் புரோகித வர்க்கத்தினரால் கலப்படம் செய்யப்பட்டு அவற்றின் புனித நிலை மாசுபடுத்தப்பட்டது போல், அல்குர்ஆனும் மார்க்கத்தை மதமாக்கி அதையே பிழைப்பாகக் கொண்டுள்ள புரோகிதர்களின் கரம்பட்டு மாசு பட்டுவிடும் என்பதைப் புரிந்து கொண்டு, இது மார்க்கத்தில் புதிதாகப் புகுத்தும் பித்அத்தான ஒரு செயல் இல்லை என்பதை திட்டமாகத் தெரிந்து கொண்டு, குர்ஆனை ஒன்று சேர்க்கும் முயற்சியில் இறங்கினார்கள்.







இங்குதான் நாம் நிதானமாகச் சிந்திக்க வேண்டும். நபி(ஸல்) அவர்கள் காலத்திலேயே வஹீ மூலம் அறிவிக்கப்பட்ட அனைத்து குர்ஆன் வசனங்களும் சில பல வசனங்களாக சிலரிடம் இருந்ததை ஒன்று சேர்த்து ஒரே நூலாக ஆக்கும், மார்க்கத்தில் புதிதாகப் புகுத்தும் 'பித்அத்' அல்லாத ஒரு செயலையே செய்வதற்கு அஞ்சி, பலமுறை மீண்டும் மீண்டும் ஆலோசனைகள் செய்து, அது 'பித்அத்' அல்ல என்ற முடிவுக்கு ஏகோபித்து வந்த கலீஃபாவும், நபிதோழர்களும், ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான ஜகாத்தை எப்படி வசூலிப்பது? எந்த கால கட்டத்தில் வசூலிப்பது? என்பது நபி(ஸல்) அவர்களது காலத்தில் இல்லாதிருந்து, நபி(ஸல்) அவர்களின் மறைவுக்குப் பிறகு கலீஃபாவும், நபிதோழர்களும் அதை முடிவு செய்வதாக இருந்தால், அதுவும் இன்று புதிதாக மார்க்கச் சட்டம் சொல்லும் நவீன முஜ்தஹித்(?) P.J. சொல்வதுபோல் பித்அத்தான வருடாவருடம் ஜகாத் வசூலிப்பதை, கொடுத்த பொருளுக்கே மீண்டும் மீண்டும் ஜகாத் வசூலிப்பதை, எவ்வித கருத்து வேறுபாடும் இல்லாமல் செய்திருக்க முடியுமா? இது அறிவுக்குப் பொருந்தி வருகிறதா?







அதுவும் பித்அத்தே அல்லாத பிரிந்துகிடந்த குர்ஆன் வசனங்களை ஒரே நூலாக ஆக்குவதிலேயே 'பித்அத்' ஆகிவிடுமோ என அஞ்சி, பயந்து பலமுறை மடக்கி மடக்கி ஆலோசனை செய்து, அது 'பித்அத்' அல்ல என்று தீர்க்கமான முடிவுக்கு வந்து அதைச் செய்தவர்கள், உண்மையிலேயே பித்அத் ஆகிவிடும் இந்த ஜகாத் விஷயத்தில் அஞ்சாமல், பயப்படாமல், கருத்து வேறுபாடு கொள்ளாமல், கலந்தாலோசனைகள் செய்யாமல் தான்தோன்றித்தனமாக நடைமுறைப்படுத்திவிட்டார்கள் என்று சொல்ல வருகிறாரா இந்த நவீன இமாம்(?) (நவூதுபில்லாஹ்) இப்படிக் கனவில் கூட ஓர் உண்மை விசுவாசி நினைத்துப் பார்க்கமாட்டான்.







நபி(ஸல்) அவர்களின் தெள்ளத்தெளிவான நடைமுறையை பத்து(10) வருட காலமாக தங்கள் அனுபவத்தில், தங்கள் கண்களால் கண்டபடி, அதில் எவ்வித கூடுதல் குறைவு இல்லாமல் கலீஃபாக்களும், நபிதோழர்களும் ஜகாத் வருடாவருடம் கொடுக்க வேண்டும், கொடுத்த பொருளுக்கே மீண்டும் மீண்டும் கொடுக்க வேண்டும் என்று நடைமுறைப்படுத்தி இருக்கிறார்கள் என்றே நேர்வழி நடப்பவர்கள் விளங்க முடியும். கோணல் வழிகளில் நடப்பவர்களுக்கே இது விஷயத்தில் கோணல்புத்தி ஏற்பட்டு, தன்னை நம்பியுள்ளவர்களை வழிகெடுக்கும் சிந்தனை ஏற்படும்.







எனவே 9:34 இறைக்கட்டளைப்படி செல்வங்களை தங்களுக்காகவும், தங்களின் வாரிசுகளுக்காகவும் சேமித்து வைப்பவர்கள், அந்த செல்வங்களுக்காக வருடாவருடம், கொடுத்த செல்வத்திற்கே மீண்டும் மீண்டும் ஜகாத் கொடுக்கக் கடமைப்பட்டுள்ளார்கள். அப்படிக் கொடுக்கத் தவறினால் 9:35 அல்குர்ஆன் வசனம் கூறுவதுபோல் அவை பழுக்கக் காய்ச்சப்பட்டு அவர்களின் நெற்றிகளிலும், முதுகுகளிலும், விலாக்களிலும் சூடு போடப்பட்டு அதன் வேதனையை மீண்டும் மீண்டும் அனுபவிக்கச் செய்யப்படுவார்கள் என்பதை மனதில் இருத்திக் கொள்ளட்டும்.







நான்கு கலீஃபாக்களிலிருந்து, அனைத்து நபிதோழர்களும் ஒட்டுமொத்தமாக நபி(ஸல்) அவர்களின் நடைமுறையைப் புறக்கணித்து விட்டு, முதுகுக்குப் பின்னால் தூக்கிப் போட்டுவிட்டு, புதிதாக ஒரு நடைமுறையை அதாவது பித்அத்தை மார்க்கத்தில் புகுத்தினார்கள் என்ற எண்ணத்தைவிட ஒரு கேடுகெட்ட எண்ணம், ஷைத்தானியத்தான எண்ணம் ஒரு உண்மையான இறை நம்பிக்கையாளனுக்கு ஒரு போதும் ஏற்படாது. அழிந்து நாசமாகி நரகில் சென்று விழும் வழிகேடர்களுக்கே ஒட்டுமொத்த நபிதோழர்கள், கலீஃபாக்கள் நபியின் நடைமுறைக்கு மாறாக நடந்துள்ளார்கள் என்ற தீய எண்ணம் ஏற்பட முடியும்.







எனவே சேமிக்கும் செல்வத்திற்கு ஒரு வருடம் பூர்த்தியான பின்னரே ஜகாத் கடமையாகும்; வருடாவருடம் கொடுத்த பொருளுக்கே மீண்டும் மீண்டும் கொடுத்து வர வேண்டும் என்பது நபி(ஸல்) அவர்களின் நடைமுறையே அல்லாமல் உமர்(ரழி) அவர்களின் சுய கருத்தோ, அலீ(ரழி) அவர்களின் சுய கருத்தோ இல்லை என்பதே தெள்ளத் தெளிவான சந்தேகமற்ற முடிவாகும்.







புதிதாக மார்க்கச் சட்டம் இயற்றும் நவீன முஜ்தஹித்(?) இமாம்(?) இன்று புதிதாகக் கூறுவது போல் அவை உமர்(ரழி) அலீ(ரழி) இவர்களின் சுய கருத்து என்றே ஒரு வாதத்திற்காக ஏற்றுக்கொண்டு பரிசீலித்துப்பாருங்கள். அப்போதும் இந்த நவீன இமாமும், அவரை கண்மூடிப் பின்பற்றுகிறவர்களுமே வழிகேடர்கள் என்பது உறுதியாகும். அந்த விபரங்களையும் பார்ப்போம்.







அல்குர்ஆனில் ஜகாத் கொடு என்றுதான் இருக்கிறது. காலம் குறிப்பிடவில்லை. ஹதீஸிலும் இல்லை என்ற P.J.யின் தவறான வாதத்தை வைத்தே சிந்திப்போம். ஒருவருக்கு ரூபாய் ஆயிரம் கொடு என்றால் அது ஒரு முறை கொடுப்பதுதான் என்றே விளங்க வேண்டும் என்பது அவரின் புதிய வாதம். வருடா வருடம் கொடுப்பது என்று விளங்குவதாக இருந்தால் மாதா மாதம் கொடுப்பது, வாராவாராம் கொடுப்பது, தினசரி கொடுப்பது என்று பொருள் கொள்ள அதில் இடம் இருக்கிறது. அதை யாராலும் மறுக்க முடியாது என்பது P.J.யின் வாதம். இதிலிருந்தே ஒருமுறை உடனடியாகவோ, ஒரு வருட அவகாசத்திலோ ஒரு பொருளுக்கு ஜகாத் கொடுப்பதோடு கடமை முடிந்து விட்டது என்பது திட்டமான உறுதியான சொல் இல்லை என்பதை அவரே ஒப்புக் கொண்டு விட்டார். இது அவரது சொந்தக் கருத்து என்பது திட்டமாக வெளிச்சத்திற்கு வந்து விட்டது.







இப்போது நாம் சிந்திப்போம். ஒரு பொருளுக்கு ஒரு வருடம் பூர்த்தியான பின்னரே ஜகாத் கடமையாகும். வருடா வருடம் கொடுத்த பொருளுக்கே மீண்டும் மீண்டும் ஜகாத் கொடுக்கவேண்டும் என்பது நேர்வழி நடந்த கலீஃபாக்களான உமர்(ரழி) அலீ(ரழி) இருவரின் சொந்தக் கருத்து. (இது P.J.யின் கூற்று; வாதத்திற்காக ஏற்றிருக்கிறோம்) அதற்கு மாறாக ஒரு பொருளுக்கு ஒரு முறை ஜகாத் கொடுத்தால் கடமை நிறைவேறிவிட்டது. மீண்டும் மீண்டும் கொடுக்க வேண்டியதில்லை. அதை உடனடியாகவும் கொடுக்கலாம். ஒரு வருட அவகாசத்திலும் கொடுக்கலாம். இது P.J.யின் சொந்தக் கருத்து.







இப்போது நாம் அலசுவோம். P.J.யின் கருத்துப்படி குர்ஆன், ஹதீஸில் நேரடி ஆதாரமில்லை. இப்படித்தான் விளங்க முடியும் எனும்போது, நம் முன்னால் இருப்பது குர்ஆன், ஹதீஸ் அல்லாத மூன்றாவது கருத்தாக உமர்(ரழி) அலீ(ரழி) இருவரின் சொந்தக் கருத்து அதற்கு மாறாக நவீன இமாம் P.J.யின் சொந்தக் கருத்து; இப்போது P.J.யின் வாதப்படி நம் முன்னால் இருக்கும் குர்ஆன் ஹதீஸில் இல்லாத நிலையில் உமர்(ரழி) அலீ(ரழி) இருவரின் சொந்தக் கருத்தான மூன்றாவது கருத்தை ஏற்பதா? அல்லது P.J.யின் சொந்தக் கருத்தான மூன்றாவது கருத்தை ஏற்பதா? குறைந்த மதிபடைத்த முஸ்லிமும் இங்கு P.J.யின் சுய கருத்தை நிராகரித்துவிட்டு, இரண்டு நேர்வழி நடந்த கலீஃபாக்களின் சுய கருத்தைத்தான் ஏற்க வேண்டும் என்று சிறிதும் சலனமின்றி கூறி விடுவார்கள்.







உமர்(ரழி), அலீ(ரழி) ஆகிய இருவரும் நபி(ஸல்) அவர்களோடு நீண்ட காலம் நெருங்கிப் பழகியவர்கள். நபி(ஸல்) அவர்களின் செயல்பாடுகளை, நடைமுறைகளை நேரடியாக கண்டு உறுதிப்படுத்திக் கொண்டவர்கள். இது அல்லாமல் அந்த இருவருக்கும் தனிப்பட்ட பல சிறப்புகள் உண்டு. சுவர்க்கத்து நன்மாராயம் பெற்றவர்கள்; பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டவர்கள். அவர்களின் பாவங்களில் சில நன்மையாக மாற்றிக்கொடுக்கப்பட்டவர்கள். உமர்(ரழி) அவர்களின் நாவில் அல்லாஹ் பேசுகிறான் என்று நபி(ஸல்) அவர்களால் புகழ்ந்து கூறப்பட்டவர்கள். அவர்களது விருப்பப்படியே சில குர்ஆன் வசனங்கள் இறங்கின. நபி(ஸல்) அவர்களுக்குப் பிறகு நபி இல்லை. அப்படி நபி வருவதாக இருந்தால் அதற்குரிய தகுதியைப் பெற்றவர் உமர்(ரழி) என்பது நபிவாக்கு.







அலீ(ரழி) அவர்கள் நபி(ஸல்) அவர்களின் மகள் ஃபாத்திமாவை திருமணம் முடித்த மறுமகன். சின்னஞ்சிறுவராக இருக்கும்போதே இஸ்லாத்தை தழுவி நபி(ஸல்) அவர்கள் கூடவே இருந்து அவர்களின் சகல செயல்பாடுகளையும் மிக உன்னிப்பாகக் கவனித்து வந்தவர். பல சந்தர்ப்பங்களில் நபி(ஸல்) அவர்களால் சிறப்பித்துக் கூறப்பட்டவர். நேர்வழி நடந்த சிறப்புக்குரிய நான்காவது கலீஃபா. அந்த இருவரும் எந்தச் சந்தர்ப்பத்திலும் பொய் பேசாதவர்கள். மற்றவர்கள்மீது அநியாயமாக அவதூறு கூறாதவர்கள். அல்லாஹ்வும் அவர்களைப் பொருந்திக் கொண்டான். அவர்களும் அல்லாஹ்வைப் பொருந்திக் கொண்டார்கள். நபி(ஸல்) அவர்களால் மிகச் சிறந்த தலைமுறை என்று கூறிய சிறந்த தலைமுறையைச் சேர்ந்தவர்கள். அந்த இரண்டு நேர்வழி நடந்த கலீஃபாக்களின் முன்னால் நவீன இமாம்(?) P.J.ஒன்றுமே இல்லை. அவர்களின் கால்தூசு பெறமாட்டார் இந்த P.J. அதுவும் இந்த P.J. நல்லவராக, பொய் சத்தியம் செய்யாதவராக, மற்றவர்கள்மீது அநியாயமாக அவதூறு கூறாதவராக இருந்தால்தான் இந்த நிலை.







ஆனால் P.J. பற்றி சிறிது சுயசிந்தனை உடையவனும் அறிந்து கொண்டுள்ள உண்மைகள். அவர் துணிந்து பொய் பேசக் கூடியவர். பொய் சத்தியம் செய்பவர்; சிறிதும் தயக்கமின்றி அல்லாஹ்மீது ஆணையிட்டே பொய் சத்தியம் செய்பவர்; மற்றவர்கள்மீது அபாண்டமாக அவதூறுகளை அள்ளி இறைப்பவர்; குர்ஆன், ஹதீஸுக்கு முரணாக தனது பொய்வாதங்களை நிலைநாட்ட முபாஹலாவுக்கு துணிந்து அழைப்பவர். தன்னுடைய சாபத்தின் காரணமாக தன்னுடைய மனைவி மக்களையும் “ஒருவருடைய சுமையை இன்னொருவர் சுமக்கமாட்டார்” என்ற அல்குர்ஆனின் கட்டளைக்கு மாறாக சம்பந்தப்படுத்துபவர்.







இப்படி ஒரு சாதாரண, நடுத்தர முஸ்லிமிடம் கூட காணப்படாத இழிகுணங்கள் அனைத்தையும் ஒட்டுமொத்தமாக கொண்ட P.J.யின் சொந்தக் கருத்து, ஜகாத் ஒரு பொருளுக்கு ஒருமுறை கொடுத்தால்போதும்; அது தூய்மையாகிவிட்டது. மீண்டும் மீண்டும் ஜகாத் கொடுக்க வேண்டியதில்லை என்பதாகும்.







இப்போது சொல்லுங்கள் P.J.யின் வாதப்படி குர்ஆன், ஹதீஸில் இல்லாத மனிதக் கருத்தை ஏற்பதாக இருந்தால், நேர்வழி நடந்த, சுவர்க்கத்து நன்மாராயம் பெற்ற, அல்லாஹ் பொருந்திக் கொண்ட இரண்டு கலீஃபாக்களின் சொந்தக் கருத்தை ஏற்பதா? அல்லது அவர்களின் கால்தூசுகூட பெறாத நவீன இமாம்(?) P.J.யின் சொந்தக் கருத்தை ஏற்பதா? அப்படிப்பார்த்தாலும் ஜகாத் வருடாவருடம் கொடுத்த பொருளுக்கே மீண்டும் மீண்டும் கொடுக்க வேண்டும் என்பது நிலைநாட்டப்பட்டு விடும்.







உண்மையில் குர்ஆன், ஹதீஸை முறைப்படி ஆய்வு செய்து, ஜகாத் பற்றிய சட்டத்தை இவர் சொல்லவில்லை. அப்படிச் சொல்வதாக இருந்தால், ஒரு பொருளுக்கு ஒரு முறை ஜகாத் கொடுத்தால்போதும் மீண்டும் மீண்டும் ஆண்டுதோறும் அப்பொருளுக்கு ஜகாத் கொடுக்க வேண்டியதில்லை என்பது உண்மையாக இருந்தால், அதற்குறிய நேரடி குர்ஆன் வசனத்தையோ, ஹதீஸையோ எடுத்து வைத்திருப்பார். அவரது இந்த கருத்திற்கு ஆதாரமாக நேரடி குர்ஆன் ஆயத்தையோ, ஹதீஸையோ எடுத்து வைத்து விட்டால், நேர்வழி நடக்கும் முஸ்லிம்கள் உடனடியாக அதைப்பற்றிப் பிடிக்கக் கடமைப்பட்டவர்கள். அப்போது நான்கு கலீஃபாக்கள் நடைமுறைப்படுத்தியது, இது காலம் வரை நடைமுறையில் இருந்து வருவது இவை அனைத்தும் ஆதாரமாக நிற்காது. இவரது இழிகுணங்களும் கருத்தில் கொள்ளப்பட்டது. குர்ஆன் ஹதீஸ் மட்டுமே ஆதாரமாக நிற்கும்.







ஆனால் அப்படிப்பட்ட குர்ஆன் வசனத்தையோ, ஹதீஸையோ அவர் தரவில்லை. அது மட்டுமல்ல; அதற்குரிய குர்ஆன், ஹதீஸ் ஆதாரத்தை நான் தர வேண்டியதில்லை. எனது சுய கருத்தை மறுக்கிறவர்களே ஆதாரம் தர வேண்டும் என்று விதண்டாவாதம் செய்கிறார்.







இதில் இன்னும் பெரிய வேடிக்கை, ஒரு சட்டத்தை நிறுவுகிறவர்கள்தான் ஆதாரம் தர வேண்டும் என்பதை நிலைநாட்டி அதற்காக பல ஆதாரங்களையும், அரபியிலும், தமிழிலும் விவாத அரங்கில் எடுத்து வைத்தவர், கடைசியில் அவர்கள்தான் நிறுவுகிறார்கள்; நான் அதை மறுக்கிறேன்; எனவே நான் ஆதாரம் தர வேண்டியதில்லை; அவர்கள்தான் ஆதாரம் தர வேண்டும் என்று கூறி ஒரு அந்தர்பல்டி அடித்தார். இதையும் அவரது ஆதாரவாளர்கள் ஏற்கிறார்கள் என்றால் அவர்களின் அறியாமையை எடை போட்டுக்கொள்ளுங்கள்.







ஜகாத் வருடாவருடம் கொடுத்த பொருளுக்கே மீண்டும் மீண்டும் கொடுப்பது இன்று 1426 ஆண்டுகளாக நடைமுறையில் இருப்பது. இதுதான் நிறுவுவது என எந்த அடிமுட்டாளும் கூறமாட்டான். காரணம் இதுவரை இல்லாத ஒன்றை புதிதாக எடுத்து வைப்பதுதான் நிறுவுவதாகும். உதாரணமாக ஒரு நிறுவனம் நிறுவப்பட்டது (Established) 1986 என்றால் அதற்கு முன்னர் அந்த நிறுவனம் இல்லை என்பதை அடிமுட்டாளும் விளங்குவான். இப்போது புதிதாக நிறுவுவது, “ஒரு பொருளுக்கு ஒரு முறை ஜகாத் கொடுத்தால்போதும்; மீண்டும் மீண்டும் கொடுக்க வேண்டியதில்லை” என்பதேயாகும். இதை திருவாளர் P.J.தான் நிறுவுகிறார். எனவே அதற்குரிய ஆதாரத்தைக் கொடுக்க கடமைப்பட்டவர் அவரே. இதற்கு அவர் ஆதாரம் கொடுக்காதவரை இக்கருத்து அவரது சொந்தக் கருத்து. எனவே அவரின் இந்த சொந்தக் கருத்து குப்பைத் தொட்டியில் போட வேண்டிய கால்காசு பெறாத சுத்தமான உளறலாகும்.







அரசர்களையும், ஆட்சியாளர்களையும் திருப்திப்படுத்தி அவர்களிடமிருந்து அற்பக் காசுகளை பெறும் கெட்ட நோக்கத்துடன், இந்தப் புரோகிதரின் ஆபாக்களான முன்னோர்கள், புரோகிதர்கள், அரசர் விபச்சாரம் செய்தால் அதற்கு தண்டனை இல்லை; ஆட்சியாளர்கள்தான் ஜும்ஆ நடத்த முடியும் போன்ற மூடத்தனமாக சட்டம் இயற்றினார்களே அதுபோல், இவரை கண்முடி ஆதரித்து இவரது காலடியில் காசை கொட்டுகிறார்களே அந்த செல்வந்தர்களைத் திருப்திப்படுத்தும் தீய நோக்கத்துடன் இவரது கற்பனையில் உருவானதே ஒரு பொருளுக்கு ஒருமுறை ஜகாத் கொடுத்தால் போதும். மீண்டும் மீண்டும் கொடுக்க வேண்டியதில்லை என்ற குருட்டுச் சட்டம்.







இவர் இந்த குருட்டுச் சட்டத்தை இயற்றிக் கொண்டு முன்னாள் புரோகிதர்களைப் போல் அதற்குரிய ஆதாரங்களைத் தேடி அழைந்தார். அதனால்தான் “மீண்டும் மீண்டும் ஜகாத் கொடுப்பதால் செல்வந்தன் பாப்பராகி பிச்சைக்காரனாக ஆகிவிடுவான்,” “ஜகாத் என்பது பொருளை சுத்தப்படுத்துவது ஒரு முறை சுத்தப்படுத்துவதால் அது சுத்தமாகிவிட்டது, மீண்டும் மீண்டும் சுத்தப்படுத்த வேண்டியதில்லை, “மீண்டும் மீண்டும் ஜகாத் கொடுக்கச் சொல்வதால்தான் செல்வந்தர்கள் ஜகாத் கொடுப்பதில்லை; ஒருமுறை ஜகாத் கொடுத்தால் போதும் என்று சொன்னால் செல்வந்தர்கள் அனைவரும் தவறாமல் ஜகாத் கொடுத்துவிடுவார்கள்” என்று குர்ஆன் ஹதீஸுக்கு முரணான இவரது சொந்தக் கற்பனைகளை அவிழ்த்து விட்டார். இவை அனைத்தும் உரிய குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்களுடன் முறியடிக்கப்பட்டபின், இந்த ஆதாரங்களை கைவிட்டு புதிய புதிய ஆதாரங்களைத்தேடி அலைகிறார். அந்த அவரது முயற்சியில் தான் ஜகாத் பற்றிய ஆதாரபூர்வமான ஹதீஸ்களை பலவீனம் என உளறுகிறார். இன்னும் எத்தனை உளறல்களை எடுத்து ரீல் விட்டு தனது பக்தர்களை ஏமாற்றப் போகிறாரோ?







தொழுகையில் பிஸ்மியை சப்தமிட்டு ஓதும் விஷயத்தில் ஆமீன் மிக பலத்த குரலில் சப்தமிட்டுக் கூறும் விஷயத்தில், நெஞ்சில் கைகட்டும் விஷயத்தில், இருப்பில் விரலாட்டும் விஷயத்தில், இன்னும் இவைபோல பல விஷயங்களில் பலவீனமான ஹதீஸ்களையும் சந்தேகத்திற்குரிய ஹதீஸ்களையும், அஃதர்களையும் தூக்கி நிறுத்த வரிந்து கட்டிக்கொண்டு வாதாடுகிறவர், ஜகாத் விஷயத்தில், இது உமர்(ரழி) அவர்களின் சுயகருத்து, இது அலீ(ரழி) அவர்களின் சுயகருத்து, அப்துல்லாஹ் பின் முஆவியா அல்காழிரீ. நபிதோழர் என்பதற்கு போதிய ஆதாரமில்லை என்றெல்லாம் உளறி வருடாவருடம் ஜகாத் கொடுக்க வேண்டும், கொடுத்த பொருளுக்கே மீண்டும் மீண்டும் கொடுக்க வேண்டும்; ஒரு வருடம் பூர்த்தியானால்தான் ஜகாத் கடமை, பொருளை சேமித்து வைப்பவர்களே அதற்குரிய ஜகாத்தைக் கொடுக்க வேண்டும் போன்ற ஹதீஸ்களை மறுத்து வருகிறார்.







இவற்றிலிருந்து என்ன தெரிகிறது? அற்ப உலக ஆதாயத்திற்காக, முழுக்க, முழுக்க தனது சுயநலத்திற்காக, செல்வந்தர்களின் தயவுக்காக ஜகாத் பற்றிய ஒரு குருட்டுச் சட்டத்தை வகுத்துக்கொண்டு, அதற்குரிய ஆதாரங்களைத் தேடி, நாளுக்கொரு ஆதாரத்தை மாறி மாறி தந்து கொண்டிருக்கிறார் என்பது வெளிச்சத்திற்கு வந்துவிட்டது. தனது தவறான சட்டங்களை நிலைநாட்ட, 1986-ல் “குர்ஆனோடு விளையாடும் குர்ஆனின் குரல்” என்று ஒரு மாத இதழைத் தாக்கி எழுதிய P.J. இன்று அதேபோல் “குர்ஆனோடு விளையாடும் P.J.” என்ற இழிநிலைக்கு ஆனாகி நிற்கிறார். 9:34 இறைவாக்கில் “எவர்கள் பொன்னையும், வெள்ளியையும் சேமித்து வைத்துக்கொண்டு அவற்றை அல்லாஹ்வின் பாதையில் செலவிடாதிருக்கிறார்களோ” என்று “யக்னிஸூன” என்ற அரபி பதம் தெள்ளத்தெளிவாக நேரடியாக இருக்கிறது. ஜகாத் கடமையாவதற்கு அடிப்படையான சேமிப்பு என்ற பதத்தை இருட்டடிப்புச் செய்துவிட்டு, “எவர்கள் பொன்னையும், வெள்ளியையும் அல்லாஹ்வின் பாதையில் செலவிடாதிருக்கின்றார்களோ” என்று எழுதி தனது ஆதரவாளர்களை ஏமாற்றி இருக்கிறார்.







இப்படி குர்ஆனிலும், ஹதீஸிலும் இருப்பதை உள்ளது உள்ளபடி மொழி பெயர்க்காமல், தனது குருட்டு வாதத்திற்குத் தருந்தால்போல் அவற்றைத் திரிப்பது, வளைப்பது, மறைப்பது அவரது வாடிக்கையாகும். 2:159-162, இறைக்கட்டளைகளைப் பற்றிய அச்ச உணர்வு அவருக்கு சிறிதும் இருப்பதாகத் தெரியவில்லை. JAQH, TNTJ போன்ற பிரிவுகள் கூடாது என்று ஆரம்பத்தில் நடந்த விவாதத்தில் அல்குர்ஆன் 22:78-ல் அல்லாஹ்வாகிய அவனே உங்களுக்கு 'முஸ்லிம்' என பெயர் சூட்டினான்–“ஹுவ ஸம்மாக்குமுல் முஸ்லிமீன்” என்றிருப்பதை அவனே உங்களுக்கு 'முஸ்லிம்' என்று கூறினான் – சொன்னான் என்று அழுத்தமாக மீண்டும், மீண்டும் கூறியது, பிறை விவாதத்திலும், எழுதியதிலும், வாகனக் கூட்டத்தார் பற்றிய ஹதீஸில் “ஷஹித” என்ற அரபி பதத்திற்கு சாட்சி சொன்னார்கள் என்பதிலுள்ள சாட்சியை மறைத்துவிட்டு சொன்னார்கள், சொன்னார்கள் என்று அந்த ஹதீஸ் இடம் பெற்ற பல இடங்களில் மறைத்து எழுதியதும், இந்த ஜகாத் பற்றிய ஹதீஸில் சேமிப்பு என்ற பதத்தையும், உங்கள் சேமிப்புகளில் சிறந்தது நல்ல மனைவியே என்ற பகுதியையும் இருட்டடிப்பு செய்ததும் இதற்குப்போதிய ஆதாரமாகும். எனவே இவர் திட்டமிட்டே சத்தியத்தை மறைத்து, அவரை நம்பி அவர் பின்னால் கண்மூடிச் செல்பவர்களை வழிகேட்டில் இட்டுச்செல்கிறார் என்ற ஐயத்தை உண்டாக்குகிறதா? இல்லையா?







எனவே அபூஅப்தில்லாஹ் இதுகாலம் வரை குர்ஆன், ஹதீஸ் மட்டுமே மார்க்கம் என்று சொல்லிக் கொண்டிருந்தவர் இப்போது பல்டி அடித்து குர்ஆன், ஹதீஸ், கலீஃபாக்கள், நபிதோழர்கள் கருத்து என்று மூன்றை மார்க்க ஆதாரமாகக் கூறி வருகிறார் என்று அவரும், அவரின் ஆதரவாளர்களும் அவதூறு பரப்புவது முற்றிலும் தவறாகும். அவை உமர்(ரழி) அவர்களின் கருத்தோ, அலீ(ரழி) அவர்களின் கருத்தோ அல்ல; நூற்றுக்கு நூறு நபி(ஸல்) அவர்களின் சுமார் பத்து வருட நடைமுறையை கண்ணால் கண்டு அதன்படி அவர்கள் அறிவிப்பதாகும். P.J. நிராகரிக்கும் அந்த மூன்று ஹதீஸ்களும் எவ்வித சந்தேகத்திற்கும் இடமில்லாமல் ஏற்கத்தக்கவையே. அவரது பேச்சை நம்பி வருடாவருடம் கொடுத்த பொருளுக்கே மீண்டும் மீண்டும் ஜகாத் கொடுக்காமல் இருப்பவர்கள் நாளை மறுமையில் அவர்களது செல்வங்கள் நெருப்பிலிட்டு காய்ச்சப்பட்டு அவர்களது நெற்றிகளிலும், விலாப்புறங்களிலும், முதுகுகளிலும் சூடுபோடப்பட்டு, இவைதான் நீங்கள் சேமித்து வைத்தவை; அவற்றின் சுவையை சுவைத்துப் பாருங்கள் என மீண்டும் மீண்டும் வேதனை செய்யப்படுவார்கள் என்று அல்குர்ஆன் அத்.9.வச.35 கூறுவதை எடுத்து எச்சரித்து முடிக்கிறோம்.



இங்கிலாந்தின் கற்தூண்கள் : ஓர் வரலாற்று அதிசயம்

இங்கிலாந்தின் கற்தூண்கள் : ஓர் வரலாற்று அதிசயம்

E-mail
இன்றைய மனித சமூகம் இதுவரை விடைகாண முடியாமற் போன பலவிடையங்கள் புவியில் உண்டு. அதில் ஒன்று தெற்கு இக்கிலாந்தில் காணப்படும் கற்தூண்கள், இற்றைக்கு 5000 வருடங்களுக்கு பழமை வாய்ந்த ஒரு வரலாற்று சின்னம். எகிப்தின் பிரமிட்டுக்கள் வளர்ச்சியுற்ற காலப்பகுதியில் இது இப்பகுதியில் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும் எனப்படுகின்றது. வரலாற்றில் பல சமூகங்களும் இப்பணியில் குறிப்பிடத்தக்களவு பங்கு கொண்டிருக்கின்றன. பல்லாயிரக்கணக்கான மக்களால் பல...
மில்லியன் கணக்கான மணித்தியாலங்கள் செலவு செய்யப்பட்டு இச்செயற்றிட்டம் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும் என நம்பப்படுகின்றது.
அதிகபட்டசம் ஒவ்வொன்றும் 4 தொன் எடையுடைய 82 வரையான நீல பளிங்கு கற்கள் ஏறக்குறைய 240 மைல்களுக்கு அப்பால் உள்ள பிரசெலி மலைத்தொடரில் இருந்து எவ்வாறு இப்பகுதிக்கு கொண்டுவரப்பட்டன என்ற வினாக்கள் இதுவரை தெளிவாக அறியப்படவில்லை. 82 வரையான நீல பளிங்கு கற்களால் அமைந்த முதலாவது வட்டம் கி.மு 2150 வருடங்களுக்கு முன்பு முற்றுப்பெற்றிருக்க வேண்டும் என நம்பப்படுகின்றது. பின்னர் 150 வருடங்கள் கழித்து மேல் உள்ள கற்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. அதவாது கி.மு 2000 ம் ஆண்டளவில் இது நடைபெற்றிருகின்றது.
இத்தகைய பிரமிப்பு ஊட்டும் செயற்றிட்டம் தொழில்நுட்ப வசதிகள் எதுமற்றிருந்த அக்காலத்தில் உருவாக்கப்பட்டதன் பின்னணியில் அதிகளவான மனித வலு பயன்பட்டிருக்க வேண்டும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். எனினும் இராட்சத விலங்குகள், அபூர்வ சக்திகள் இதற்கு பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற கற்பனைக்கதைகளும் இதன் பின்னணியில் உள்ளன. இத்துணை சிரமங்களோடு இக்கற்தூண்களால் வடிவமைக்கப்பட்ட வட்டம் ஏன் உருவாக்கப்பட்டது என்பது இதுவரை உறுதியாக அறியப்பட்டிருக்கவில்லை. பெருமளவான வரலாற்று ஆய்வாளர்கள் கருதுவதுபோல் அது ஒரு முக்கிய சமய வழிபாட்டு ஸ்தலமாக இருக்கலாம் என்ற கருத்துக்களே மேலோங்கியிருக்கின்றன. எனினும் இது வரலாற்றில் ஓர் நிர்வாக மையம், பாதுகாப்பு அரண், ஆய்வகம் போன்று இருந்திருக்க வேண்டும் என்ற கருத்துக்களும் உண்டு.
எப்படியிருந்த போதும் எந்த மதமும் உரிமைகோராத ஒரு வரலாற்று சின்னமான இது ஆதி சமூகங்களின் அசைக்க முடியாத நம்பிக்கை ஒன்றின் பின்னணியில் உருவாக்கப்பட்டது என்பது மறுப்பதற்கில்லை.

இக்கட்டுரை..

  • வாசகர் பார்வை: 1643
  • இணைக்கப்பட்டது: Saturday, 28 August 2010 15:23 இணைத்தவர் Administrator [Rathees]
  • கட்டுரை இல: 238
Last Updated on Saturday, 28 August 2010 15:49  

உங்கள் கருத்துக்கள்..

அரிய பணியொன்றை மேற்கொண்டுள்ளீர்கள்...தங்கள் சேவைக்கு நன்றிகள்....மென்மேலும் வளரவாழ்த்துக்க...
Monday, 08 August 2011
வணக்கம்.நான் அஜிமிர்.எனது ஊர் ஓட்டமாவடி.இது வாழைச்சேனையில் உள்ளது.உங்களின் சேவை பாராட்டத்த...
Monday, 09 May 2011
This website is realy superb,this is more useful to students.pls tell how can I register t...
Friday, 15 April 2011
உன் சேவை வளர என் வாழ்த்துக்கள்  
Thursday, 24 March 2011
unga sevai alappariyathu
Friday, 25 February 2011

add to favorites..

YOU ARE WELCOME..

Enter Email addresses:
* உங்களுடைய: உங்கள் நண்பருடைய:

VOICE OF THE DAY..

மற்றவரைப்போல் இருப்பதில் அல்ல, உங்கள் தனித்துவத்தை வளர்ப்பதிலேதான் வெற்றி தங்கியிருக்கிறது.
- வெற்றிக்கு

Who's Online

தற்போது 16 வாசகர்கள்  இணைப்பில்

VISITORS RECORD

mod_vvisit_counterToday667
mod_vvisit_counterYesterday700
mod_vvisit_counterThis week667
mod_vvisit_counterThis month14582
mod_vvisit_counterAll453367

SEARCH WITH US..

(தமிழில் தேடுங்கள்)

Welcome Editors

USER NETWORK..

Click here to see more stats!

காப்புரிமை: 2008 - 2011, தமிழில் கல்வி இணையம். கட்டுரைகளை வெட்டி வேறு இணையங்களில் ஒட்டுதல் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.