வெள்ளி, 19 ஆகஸ்ட், 2011

1 வரலாற்றில் வகுப்புவாதம்


1 வரலாற்றில் வகுப்புவாதம்

ஐயம்-1: இந்த நாட்டின் மீது படையெடுத்து வந்தவர்கள்தானே இஸ்லாமியர்கள்? வந்தேறிகளுக்கு வக்காலத்து வாங்குவதுதான் உங்கள் நோக்கமா?

வரலாற்று நூல்கள் உங்களுக்கு அப்படி போதிக்கின்றன. ஆனால் வரலாற்றை ஆழமாக ஆராய்ந்து பார்த்தோமானால் இன்று இஸ்லாமியரை வந்தேறிகள் என்று சொல்லும் பலரும் வந்து குடியேறியவர்கள்தான் என்பது விளங்கும். வடமொழி வேதங்களில் (கிமு 1500 - கிமு 500)தஸ்யுக்கள் என்னும் உள்நாட்டு மக்களைப்பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்கள் படையெடுத்து வந்த ஆரிய மொழி இனத்தவரால் அடிமையாக்கப்பட்டார்கள். இந்த ஆரியர்கள் ரிக் வேத காலத்தில் கால்நடை வளர்க்கும் மேய்ச்சல் இனத்தவராக ஈரான் வழியாக இந்தியாவில் புகுந்து இங்கிருந்த விவசாய மக்களை போரிட்டு அடிமையாக்கி சூத்திரர்களாகவும் தீண்டத்தகாதவர்களாகவும் ஆக்கினார்கள்.

ராஜபுத்திரர்கள் கூட துருக்கியர் குடியேறிய காலத்தில் இங்கு குடியேரியவர்கள்தான். செளகான்,பரிகரர்,சோலங்கி எல்லாம் வந்தேறிகள்தான் எனில் இஸ்லாமியரை மட்டும் வந்தேறிகள் எனச் சொல்வது என்ன நியாயம்? ஆரியர்கள் வருகை எனச் சொல்லும் நம் பாடநூல்கள் இஸ்லாமியர் படையெடுப்பு எனச்சொல்வது பிஞ்சு நெஞ்சில் வகுப்பு வாதத்தை பதிப்பதில்லையா? வகுப்பு வாதத்தை பதிப்பதில்லையா? இங்குள்ள கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் இந்த நாட்டு குடிமக்களாக இருந்து மதம் மாறியவர்கள் தான்.

யாருக்கும் வக்காலத்து வாங்குவதல்ல நமது நோக்கம். அரசியல் நோக்கில் இங்கே பரப்பப்பட்டுள்ள மதவெறியானது பல்லாயிரக்கணக்கானோர் கொன்று குவிக்கக் காரணமாகியுள்ளது. இளைஞர்களும் பொதுமக்களும் படித்தவர்களும் உண்மையான பிரச்சனையிலிருந்து தங்களின் கவனத்தை திருப்பி வகுப்பு வெறிக்குப் பழியாவதற்கு இஸ்லாமியர் பற்றி மதவெறியர்களாலும் பத்திரிக்கைகளாலும் கல்ல்வியாளர்களாலும் திட்டமிட்டுப் பரப்பப்படும் கட்டுக்கதைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

எனவே இந்தக் கட்டுக்கதைகளை ஆராய்ந்து உண்மை நிலையைக் கண்டறிவது ஜனநாயக உணர்வுடைய ஒவ்வொருவரின் கடமை. இந்நிலையில் வரலாற்று ஆதாரங்கள் ஆராய்ச்சிக் கட்டுரைகள், புள்ளி விவர நிறுவனங்கள் தொகுத்துள்ள செய்திகள் ஆகியவற்றின் அடிப்படையில் உண்மை நிலையைக் கண்டறிவதுதான் நமது நோக்கம். இங்கே சொல்லப்பட்டவற்றை ஆதாரங்களுடன் மறுத்தால் ஏற்றுக்கொள்கிறோம்.

ஐயம்-2: இஸ்லாமியர் படையெடுத்து வந்து இந்து கோயில்களை இடித்து சிதைத்தார்கள் என்பதற்குத்தான் ஆதாரம் இருக்கின்றதே?

கஜினி முஹமது பதினேழு முறை சோமநாதபுரம் கோயிலை இடித்து நொறுக்கினார் என்று உங்களுக்கு பாடநூல்கள் சொல்லியுள்ளன. இல்லையா?

இந்தியாவில் கோயில்கள் என்பது சாமி கும்பிடுகின்ற இடம் மட்டுமல்ல. மன்னர்களின் கோட்டைகளாகவும் நிதிக்களஞ்சியங்களாகவும் அவை திகழ்ந்தன. இல்லாவிட்டால் தஞ்சை பெரிய கோவிலைச் சுற்றி இவ்வளவு பெரிய அகழி ஏன்? பண்டை மன்னர்கள் நடத்திய போர்கள் பெரும்பாலும் கொள்ளையடிப்பதற்காக நடத்தப்பட்டவைதான்.

இந்த அடிப்படையில்தான் கஜினிமுஹம்மது படையெடுத்ததும்.

கோயிலுக்குள் ஒளிந்து கொண்ட எதிரி மன்னர்களை கொல்லவும், ஒளித்து வைக்கப்பட்ட செல்வங்களைக் கொள்ளையிடவும், எதிரியின் பண்ணாட்டு ஆளுமையை அழிக்கவும்தான் கோயில்கள் மீது படையெடுக்கப்பட்டன.

எந்த இஸ்லாமிய மன்னனும் தனது எல்லைக்குள் இருந்த இந்து கோயில்களையோ, தனது பாதுகாப்பில் இருந்த இந்து மன்னர்களின்  கோயில்களையோ இடித்ததில்லை. அவுரங்கசீப் ஆட்சிகாலத்தில் அப்படித்தான். அவுரங்கசீப்புக்கு எதிராக சூழ்ச்சிசெய்தவர்களின் கோட்டைகளும் கோயில்களும்தான் இடிக்கப்பட்டன. மற்றபடி முழுமையான மத சுதந்திரம் இருந்தது. அவுரங்கசீப் ஆட்சிகாலத்தில் தான் தமிழ்நாட்டிலிருந்து குமரகுருபரர் காசிக்கு சென்று முப்பது ஆண்டுகள் சமய பொழிவும் செய்து அங்கே குமாரசாமி மடம் ஒன்றையும் நிறுவினார்.

இன்னொன்றையும் யோசித்துப்பாருங்கள். தஞ்சை பெரிய கோயில் உட்பட இன்றுள்ள பல கோயில்கள் சமண / புத்த கோயில்களை இடித்து கட்டப்பட்டவைதானே! இராசராசன் இலங்கையிலுள்ள அநுராதபுரம், பொலனருவை ஆகிய இடங்களில் இருந்த புத்த கோயில்களை இடித்து தரைமட்டமாக்கி அந்த ஊருக்கு ஜனநாத மங்களம் என்று தனது பெயரைச் சூட்டவில்லையா?

சுபதாவர்மன் (கிபி 1193 1210) என்ற பார்மரா மன்னன் குஜராத்தைத் தாக்கி அங்கிருந்த சமண கோயில்களை கொள்ளையிடவில்லையா?

காஷ்மீர் இந்து மன்னன் ஹர்ஷன் ஆட்சியில் கோயில்களை இடிப்பதற்கென்றே தெய்வங்களை நிர்மூலம் செய்கின்ற அதிகாரி (தேவோத்வத நாயகன்) என்று ஒரு அதிகாரி நியமிக்கப்பட்டிருந்ததாக கல்ஹணன் எழுதிய ராஜதரங்கிணி-யில் குறிப்பிடப்பட்டுள்ளதே?


எனவே கோயில் இடிப்பு என்பதை எந்த ஒரு குறிப்பிட்ட மதத்தை பின்பற்றும் மக்களின் செயலாகவும் கருத வேண்டியதில்லை.

ஐயம்-3: ஆனால் இஸ்லாமியர் கட்டாயமாக மதம் மாற்றினரே? இந்துக்களாக இருந்தவர் மீது ஜிஸ்யா என்னும் தண்டனை வரி விதிக்கப்பட்டதாகப் பாட நூல்களில் படித்திருக்கின்றோமே?

மறுபடியும் பாடநூல்களா? சரி! மன்னர்கள் எந்த மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தபோதும் அவர்கள் மக்களின் எதிர்ப்புகள் தான் ஏதாவது ஒன்றைச் சொல்லி மக்களை கொள்ளையடித்தவர்கள்தான். இஸ்லாமிய மன்னர்கள் இந்துக்கள் மீது ஜிஸ்யா வரி சுமத்தியது உண்மைதான். ஆனால் இந்த வரி இந்துக் கோவில்களை பராமரிக்க என்று சொல்லப்பட்டது. இஸ்லாமிய மக்கள்மீது வரி இல்லையென நினைத்து விடாதீர்கள். ஜகாத் என்ற பெயரில் அவர்களிடமும் வசூலிக்கப்பட்டது. ஜிஸ்யா வரியும் கூட பெண்கள், குழந்தைகள், பார்ப்பணர்களிடம் வசூலிக்கப்படவில்லை. இந்து மன்னர்கள் யூத குடியினரிடமிருந்தும் ஜிஸ்யா வசூலித்தர்கள் என்று பதினான்காம் நூற்றாண்டு பயணி ஒருவர் குறிப்பிடுகின்றார்.

ஹிஸ்யாவுக்காக பயந்துகொண்டு இந்துக்கள் மதம் மாறினார்கள் என்று நினைத்துவிடாதீர்கள். எந்த இஸ்லாமிய மன்னரது காலத்திலும் இந்த மக்கள் கட்டாயமாக மதம் மாற்றப்படவில்லை. இதன் பொருள் மத மாற்றங்களே இல்லை என்பதல்ல இரண்டு வகையில் மதமாற்றங்கள் நடை பெற்றன.

1) எல்லோரும் சகோதரர்களே என்ற சூஃபி துறவிகளின் பிரச்சாரத்தால் ஈர்க்கப்பட்டு இந்து மத சாதிக் கொடுமையினால் வெறுப்புற்று அடிநிலை மக்கள் இஸ்லாத்திற்கு மாறினார்கள்.

2) அரசியல் ரீதியாக ஆளும் வர்க்கமாக இருந்த புதிய மன்னர்களைத் தங்கள் விசுவாசத்தால் அசத்த விரும்பியவர்களாகவும் மதம் மாறியுள்ளனர். ஆனால் அந்த நிலையிலும் சாதாரண மக்கள் கட்டாய மதம் மாற்றப்படவில்லை. அரசியல் காரணங்களுக்காக சில சமயங்களில் சந்தேகத்திற்கிடமான சில ஜமீன்தாரர்கள் மதம் மாற்றப்பட்டிருக்கலாம்.

ஐயம்-4: அலாவுதீன் கில்ஜி ஜமீந்தார்களை ஒடுக்கினாரே?

அவர் இந்துவல்லாத இஸ்லாமிய இக்தாதர்களையும் தான் ஒடுக்கினார். மதவெறியன் என அவரை தூற்றுகின்றீர்கள். ஆனால் அவர் காலத்திய இஸ்லாமிய வரலாற்றாசிரியர் ஜியாபரணி என்ன சொல்கின்றார் தெரியுமா? இஸ்லாம் மதத்திற்காக கில்ஜி ஒரு அரசன் என்ற முறையிலோ, தனி வாழ்விலோ எதுவும் செய்யவில்லை எனத் தூற்றினார். திருப்பித் திருப்பி சொல்கின்றோம் என நினைக்காதீர்கள். அரசியல் காரணங்களாக சில தனிநபர்களை இஸ்லாத்திற்கு மாற்ற அவுரங்கசீப் போன்ற மன்னர்கள் செய்த சில முயற்சிகளை பெரும் மக்களை கட்டாயமாக மதம் மாற்றினார்கள் என நாம் புரிந்து கொள்ளக்கூடாது. அரசியல் நோக்கத்திற்காக குறுநில மன்னர்களோடு கட்டாயமாக மண உறவுகளை இந்து மன்னர்கள் ஏற்படுத்தி கொண்டது  பற்றி  வரலாற்றிலும் சங்கப் பாடல்களிலும் படிக்கின்றோம் இல்லையா? அப்படித்தான் இதுவும்.  இது எல்லாம் சரி என நான் சொல்ல வரவில்லை. எத்தனையோ தலைமுறைகளுக்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட அதிகார வெறிபிடித்த மன்னர்களின் நடவடிக்கைகளை அவற்றிக்குறிய சூழலிலிருந்து விலகிப் பூதகப்படுத்தி இன்றைய தலைமுறையைச் சேர்ந்த அப்பாவி மக்கள் மீது இரத்த வெறிகொண்ட பகையை ஏற்படுத்த பயன்படுத்தக்கூடாது.

ஐயம் 5:   இந்து மன்னர்கள் எத்தனையோ கொடுமைகள் செய்திருக்கலாம் ஆனால் ஓரிருவரைக்கூட மதம் மாற்றியதில்லையே?
  
a. நாம் சில அடிப்படைகளை நாம் புரிந்துகொள்ளவேண்டும். முதலில் இஸ்லாம் கிறித்துவம் பேன்றவை பரப்புவதற்குரிய மதங்கள் (Missionary religions). இந்து மதம் அப்படிப்பட்டதல்ல. முற்பிறவியில் அவர் செய்த கரும விளைவிற்கேற்ப இப்பிறவியில் அவர் குறிப்பிட்ட பிறவியில் பிறந்து இழிவுகள் அல்லது பெருமையை அடைகின்றார் என்கின்றது இந்துமதம். எனவே வேற்று மதத்திலிருந்து இந்து மதத்திற்கு மாற்றினால் அவரை எந்த மதத்தில் வைப்பது என்பதும் ஒரு பிரச்சினை.

b. இங்கேயுள்ள வைதிக, சனாதன, வர்ணாசிரம மதத்திற்கு இந்துமதம் என்ற பெயர் சமீபத்தில் ஏற்பட்டது தான் என்பதை சங்கராச்சாரி, விவேகானந்தர், பாரதி உட்பட சகலரும் ஏற்றுக்கொள்கின்றனர். வரலாறு முழுமையும் பல்வேறு சுதந்திரமான இன குழு மக்களை அவர்களுக்கு ஒரு சாதி பெயர் கொடுத்து தனது ஆட்சிகளுக்குள் சாதியாக ஏற்றதாழ்வுகளும் இந்து மன்னர்கள் பார்ப்பனர்களின் துணையோடு கொண்டு வந்தனர். இதன் மூலம் அந்த சுதந்திர மக்கள் மீது பெரும்பாலான சுரண்டல்களும் சாதிக் கடமைகளும் திணிக்கப்பட்டு அவர்கள் என்றென்றும் அடிமைகளாக்கப்பட்டனர்.

c. மதம் மாற்றியதில்லையே தவிர மற்ற மதங்களை இழிவு செய்வதிலும் அரசு அதிகாரத்தின் துணையோடு பிற மதத்தவரை இரக்கமில்லாமல் கொன்று குவித்ததிலும் இந்து மதம் வேறெந்த மதத்திற்கும் சளைத்ததில்லை. இந்து சமயச்சாரிகளின் துணையோடும் பாண்டிய மன்னன் எண்ணாயிரம் சமணர்களை ஆசன வாயில் இரும்பை சொருகிக் கொன்றதை தமது பக்தி இலக்கியங்கள் பாராட்டியுள்ளதை நீங்கள் அறிவீர்கள். "பாசிப்பல் மாசுமெய்யர்", "ஊத்தவாயார்" "மந்திபோல் திரியும் அந்தகர்கள்" என்றெல்லாம் திருநாவுக்கரசர் சமணர்களைத் திட்டியுள்ளதை தேவாரத்தில் காணலாம். சமணர்களையும், சாக்கியர்களையும் "கூடுமேல் தலையை அறுப்பதே கருமங்கண்டாய் அரங்கமா நகருளானே" திண்டரடிப்பொடி ஆழ்வார் வேண்டினார். எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற்போல சாக்கிய பெண்களைக் கற்பழிக்க திருவுள்ளம் வேண்டுமென சம்பந்தர் பாடினார். பாடியது மட்டுமல்ல, சோழ, பாண்டிய அரசின் துணையோடு இவை எல்லாம் நிறைவேற்றப்பட்டதற்கான சான்றுகள் உள்ளன.  

d. இந்து மதம் பரப்புவதற்குறிய மதமில்லை என்ற போதிலும் பல்வேறு இன குழு மக்கள் இந்து மதத்திற்குள் கொண்டுவரப்பட்டு சாதீய படிநிலையில் இருத்தப்பட்டது பற்றி சற்றுமுன் கண்டோம். இது தவிர சாதீய கொடுமைகளுக்கு எதிராக கிறிஸ்தவத்துக்கும், இஸ்லாத்திற்கும் மதம் மாறிய பழங்குடியினரை மீண்டும் இந்துமதத்திற்குள் கொண்டுவருவதற்காக இன்று பெரிய அளவில் இந்துத்துவவாதிகள் குஜராத் முதலான இடங்களில் இயக்கம் நடத்துவதை நாம் மறந்துவிடக் கூடாது. சமீபத்தில் (1998-99) கிறிஸ்தவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு பின்னணியாக இத்தகைய இந்து மத மாற்ற இயக்கங்கள் இருந்துள்ளதை பத்திரிக்கைகள் (Frontline outlook Jan-99 ) முதலான இதழ்கள் சுட்டிக்காட்டியுள்ளன. தவிரவும் "ஹரே கிருஷ்ணா ஹரே ராமா" முதலானையக்கங்கள் வெளிநாடுகளில் இந்துமத மாற்றங்களை மேற்கொண்டு வருவதையும் இங்குள்ள இந்துத்துவவாதிகள் அவற்றோடு நெருக்கமான உறவு வைத்திருப்பதையும் நாம் மறந்து விடக்கூடாது.

ஐயம் 6 : பிற்கால நாயக்க, மராட்டிய மன்னர்கள் காலத்தில் இஸ்லாமிய கோயில்களை பராமரிப்பதற்கு உரிமை இருந்திருக்கிறது. பல இஸ்லாமியர் இந்து மன்னர்களின் படைத் தலைவர்களாகக் கூட இருந்திருக்கின்றார்களே?

உண்மைதான். நாம் முன்பே குறிப்பிட்டபடி இவை எல்லாமே அரசியல் நோக்கில் செய்யப்பட்டவைதான். இஸ்லாமிய மன்னர்களின் காலத்திலும் இந்து கோயில்கள் பராமரிக்கபட்டதால்தான் இன்றளவும் பழமையான கோவில்கள் நாடெங்கும் இருக்கின்றன என்பதை மறந்து விடாதீர்கள்.

ராஜபுத்திரர் பார்ப்பணர் போன்ற இந்து மத ஆதிக்க சக்திகள் இஸ்லாமிய மன்னர்களிடம் உயர் அதிகாரிகளாக இருந்திருக்கின்றனர். அக்பரிடம் அதிகாரியாக இருந்த ராஜாமான்சிங் பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும். முஹம்மது பின் துக்ளக் காலத்தில் அலிஷா நாது எனும் இஸ்லாமிய குறுநிலத் தலைவன் தனக்குட்பட்ட பகுதியில் கொடுமைகள் செய்வதாகப் பரான் என்ற இந்து நிலப் பிரபு முறையிட, இந்தப் பகுதி நாதுவிடமிருந்து பறிக்கப்பட்டு பரானிடம் வழங்கப்பட்டது. இதற்காக நாது சகோதரர்கள் துக்ளக்கை எதிர்த்து கலகம் செய்தனர்.

அயோத்தியிலுள்ள அனுமான் கோயில் தொடர்பாக சுன்னி இஸ்லாமியர்களுக்கும், இந்து சாதுகளுக்குமிடையே பிரச்னை வந்தபோது டில்லி மன்னன் வாஜித் அலிஷா இந்துக்களுக்கு ஆதரவாக செயல்பட்டார். இது தொடர்பாக அலிஷா மேற்கொண்ட இராணுவ நடவடிக்கையில் சுமார் முன்னூறுக்கும் அதிகமான இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டனர் என்ற செய்தியும் உள்ளது.

ஐயம் 7. பழைய சங்கதிகள் கிடக்கட்டும் சமீபத்திய வரலாற்றுக்கு வருவோம். இந்தியா, பாகிஸ்தான் பிரிவினைக்கு முஸ்லிம் லீக் கட்சிதானே காரணம்?

நாடு என்றால் என்ன, நாட்டுப்பற்று என்பதெல்லாம் எவ்வாறு மக்கள் மத்தியில் கட்டமைக்கப்படுகின்றது. இந்தியா என்றொரு நாடு ஆங்கிலேயோர் வருவதற்கு முன்பு இருந்ததுண்டா? எந்த ஒரு பகுதி மக்களும் தாங்கள் பிரிந்து சுதந்திரமாக வாழவேண்டுமென விரும்பினால் அதனை நிறைவேற்றுவது தானே நியாயம்? என்பன போன்ற கேள்விகளிலிருந்து தொடங்கி மிகவும் விரிவாகப் பேசப்பட வேண்டிய விசயம் இது. விரிவாகப் பேசுவதற்கு இங்கே அவசியம் இல்லாததால் நேரடியாக நீங்கள் கேட்டதற்கு வந்துவிடலாம்.

ஆங்கில ஏகாதிபத்தியத்திற்கெதிராக தொடக்கக் காலத்தில் எந்த வேறுபாடுகளும் இல்லாமல் இந்துக்களும் இஸ்லாமியர்களும் இணைந்தே நேரடியாக போராடினர். குறிப்பாக 1857 முதல் சுதந்திரப்போரில் இஸ்லாமிய மன்னர்களின் பங்கு குறிப்பிடத்தக்கது. ஆனால் ஆங்கிலேயருக்கு எதிரான அகில இந்திய தேசிய உணர்வு என்பதை முதற்கட்ட இந்து தலைவர்கள் உருவாக்கியபோது ஆங்கிலேய ஆட்சியின்
"புதிய இழிவு" களுக்கெதிராக இந்தியப் பழமையை அவர்கள் உயர்த்திப் பிடித்தனர். இந்தியப் பழமை என்பதை இந்து பழமையாகவே முன்வைத்த இவர்கள் இந்த அடிப்படையில் ஆரிய சமாஜம், வர்ணாசிரம சபை, இந்து மகாசபை போன்ற புத்துயிர்ப்பு நடவடிக்கைகளில் இறங்கினர். இன்றைய 'இந்துத்துவம்' 'இந்து ராஷ்டிரம்' ஆகிய கருத்தாக்கங்கள் முதன் முதலில் முன்வைக்கப்பட்டது இந்து மகாசபையில்தான் என்பது இன்று அவர்களே ஏற்றுக்கொள்ளும் உண்மை. சவர்க்கார், பாய் பரமானந்தர் போன்றவர்களால் தலைமை தாங்கப்பட்டு இயங்கிய இவ்வமைப்பு இந்துக்கள் மத்தியில் முக்கியமான கருத்தியல் சக்தியாக விளங்கியது. குறிப்பாகக் காந்தியின் வருகைக்கு முன்பு இதன் பங்கு குறிப்பிடத்தக்கது.

இந்து மகாசபையின் தலைவராக இருந்த பாய் பரமானந்தர் பிரிவினைக்கு முற்பட்ட இந்தியாவை மத அடிப்படையில் இரு நாடுகளாக பிரிக்கவேண்டும் என முதன்முதலில் சொன்னவர்களில் ஒருவர். இப்போதுள்ள பாகிஸ்தான் பகுதியைச் சிந்துவிற்கு அப்பாற்பட்ட ஆப்கானிஸ்தான் முதலியவற்றோடு இணைந்து ஒரு மாபெரும் முஸ்லிம் பேரரசு உருவாக்கப்படவேண்டும்.

அங்குள்ள இந்துக்கள் இங்கே வந்துவிடவேண்டும். இங்குள்ள இஸ்லாமியர்கள் அங்கே போய்விட வேண்டும் என்றார். தனக்கு 1905-ஆம் ஆண்டு வாக்கிலேயே இக்கருத்து தோன்றியது எனவும் அவர் கூறினார். பின்னர் 1937- ஆம் ஆண்டு அகமதாபாத்தில் நடைபெற்ற இந்து மகாசபை மாநாட்டில் அப்போது தலைவராக இருந்த சவர்க்கார் இந்தியாவை நாம் ஒற்றை தேசமாக நாம் கருத முடியாது. முக்கியமாக இரண்டு தேசங்கள் இந்தியாவிற்குள் உள்ளன. ஒன்று இந்துக்களின் தேசம்; மற்றது இஸ்லாமியர்களின் தேசம்; என்றார்.

இங்கொன்றை நீங்கள் கவனிக்க வேண்டும். இஸ்லாமியருக்கு தனிநாடு வேண்டுமென்ற கோரிக்கை முஸ்லிம் லீக்கால் முதன் முதலில் எப்போது வைக்கப்பட்டது தெரியுமா? 1940- ஆம் ஆண்டு லாகூர் மாநாட்டில்தான். அதற்கு முன்பே இந்துமகாசபை இந்த கோரிக்கையை முன்வைத்து விட்டது என்பதுதான் உண்மை.

ஐயம் 8. தாங்கள் பெரும்பான்மையாக உள்ள ஒரு நாட்டைப் பிரிக்கவேண்டும் என்று இந்துக்கள் சொன்னார்களா? நம்பமுடியவில்லையே! அவர்களுக்கு இதில் என்ன லாபம்?

இந்துக்கள் சொன்னார்கள் என்று நான் சொல்லவில்லை. இந்து மகாசபைத் தலைவர்கள் சொன்னார்கள். சாதாரண மனிதனுக்கு தான் ஒரு இந்து என்ற உணர்வே கிடையாது, அவனுக்கு ஏதாவது உணர்வு இருக்கிறதென்றால் சாதி உணர்வு வேண்டுமென்றால் இருக்கலாம். உயர் சாதி இந்து ஆதிக்க சக்திகள் வெள்ளையரிடமிருந்து ஆட்சி அதிகாரத்தைப் பறித்துத் தாங்கள் வைத்துக்கொள்ள விரும்பியபோது சாதிகளாய் பிளவுகொண்டிருந்த மக்களை 'இந்துக்கள் ' என்ற பெயரில் ஒன்றிணைக்க வேண்டியிருந்தது . எனவே 'இஸ்லாமியர்' என்றொரு எதிரியைக் காட்டி தங்களிடமிருந்து அந்நியமாகியிருந்த தாழ்ந்த சாதி மக்களை தங்களோடு இணைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் உயர்சாதியினருக்கு இருந்தது.

இன்னொன்றையும் நீங்கள் வரலாற்றுரீதியாகப் புரிந்துகொள்ள வேண்டும். ஆங்கிலேயரின் வருகையோடு தேர்தல் அரசியலும், மக்கள் தொகை கணக்கீடும்(1911) இங்கே நுழைந்தது. இந்தக் கணக்கீட்டில் இஸ்லாமியர், கிறித்தவர், சாதி இந்துக்கள், தாழ்த்தப்பட்டவர் என தனித்தனியாகவே விபரங்கள் சேகரிக்கப்பட்டன. இச்சூழலில் பாகிஸ்தானும் இந்தியாவோடு இணைந்திருந்தால் இஸ்லாமியர் மற்றும் தாழ்த்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை இந்துக்களின் எண்ணிக்கையை விட அதிகமாய்ப் போய் தேர்தல் அரசியலில் தங்களுக்குப் பாதிப்பு ஏற்படும் அபாயத்தை இந்துத் தலைவர்கள் உணர்ந்தார்கள். இந்நிலையை எதிர்கொள்ள அவர்கள் இரண்டு வழிகளை மேற்கொண்டனர்.

ஒன்று: தாழ்த்தப்பட்டவர்களையும் இந்துக்களாக கருதவேண்டும் என்ற கருத்தைப் பரப்புவது, 1934 பிப்ரவரியில் அலகாபாத்தில் கூட்டப்பட்ட இந்து மகாசபையின் சிறப்புக் கூட்டமொன்றில் இக்கருத்து விவாதிக்கப்பட்டது. ஆரிய சமாஜிகளும் இதர சனாதனிகளும், தாழ்த்தப்பட்டவர்களையும் இந்துக்களாக கருதவேண்டும் என்ற கருத்தை எதிர்த்தனர். எனினும் அரசியல் லாபம் கருதி தலைவர்கள் இக்கருத்தை வற்புறுத்தினர். இறுதியாக தாழ்த்தப்பட்டவர்களுக்கு பொதுக்கிணற்றில் நீர் இறைக்கும் உரிமை போன்றவற்றை மறுக்கக்கூடாது என்ற தீர்மானத்தை நிறைவேற்றிய இந்துமகாசபை "இருந்தாலும் அவர்கள் யக்ஞோபவீதம் (பூணூல்) அணியக்கூடாது " என அறிவித்தது.

இரண்டு: இஸ்லாமியர் பெரும்பான்மையாக உள்ள பகுதிகளைப் பிரித்து தனிநாடாக்கிவிட்டால் எஞ்சிய பகுதியில் 'இந்து ராஜ்யம்' அமைத்து அதில் தாங்கள் ஆட்சி செலுத்த முடியும் என உயர்சாதி இந்துக்கள் நினைத்தனர்.

உண்மை இப்படியிருக்க நாட்டுப் பிரிவினைக்கு முஸ்லிம் லீக் மட்டுமே காரணம் என்று எனச் சொல்வது அபத்தம்.

தப்லீக் அன்றும் இன்றும்


தப்லீக் அன்றும் இன்றும்
(நபியே) நீர் (மனிதர்களை) நளினமாகவும் அழகான நல்லுபதேசத்தைக் கொண்டும் இறைவனின் வழியின்பால் அழைப்பீராக! அன்றி அவர்களுடன் (தர்க்கிக்க நேரிட்டால்) நீர் (கண்ணியமான) அழகான முறையில் தர்க்கஞ் செய்வீராக! அவனுடைய வழியிலிருந்து தவறியவர்கள் எவர்கள் என்பதை நிச்சயமாக உம் இறைவன் நன்கறிவான். நேரான வழியிலிருப்போர் யார் என்பதையும் அவன்தான் நன்கறிவான் (16:125)
தஃவாப் பணி என்பது இஸ்லாத்திற்கு புதிதல்ல. இது அண்மைக்காலமாக ஆரம்பிக்கப்பட்ட வேலையுமல்ல. நபிமார்கள் பூமிக்கு அனுப்பப்பட்ட பரியந்தம் தனிநபராகவும், ஜமாஅத்தாகவும் இப்பணி நடந்து கொண்டுதான் இருக்கின்றது. மறந்துபோன இத்தூதுத்துவச் செய்தியை மனித சமூகத்திற்கு நினைவூட்டி, இறைவழியில் நெறிப்படுத்த, காலத்திற்கு காலம் தனிநபர்களும் இயக்கங்களும் நிறுவன ரீதியாக தோன்றி செயற்பட்டு வருகின்றன.
தற்போது தஃவாப்பணியில் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டுள்ள இயக்கங்களும் எதிர்காலத்தில் தோன்றவிருக்கின்ற அமைப்புக்களும் முஸ்லிம் உம்மத்திற்கு புதியதுமல்ல. சிறிய கருத்து வேறுபாடுகள், சந்தர்ப்ப சூழல் என்பன காரணமாக முஸ்லிம்கள் மத்தியில் காலத்துக்கு காலம் பல இயக்கங்களும், அமைப்புக்களும் தோன்றுவதுண்டு. இவற்றில் அல்லாஹ்வுக்காக தோற்றுவிக்கப்பட்டவை மட்டுமே நின்று பிடிக்கும். ஏனையவை அல்குர்ஆன் கூறுவது போல் களங்கம் ஏற்படுத்திவிட்டு மறைந்து விடும்.
'தங்கள் இதயங்களில் சந்தேகத்துடன் அவர்கள் கட்டிய கட்டடம் அவர்களின் இதயங்கள் துண்டு துண்டாகும் வரை அவற்றை உறுத்திக் கொண்டே இருக்கும்.
இப்பணியில் மனத்தூய்மையுடனும், அர்ப்பணிப்புடனும் செயற்பட்டு வெற்றிகண்ட மேதைகளின் வரலாறு தற்கால தாயிகளின் மன வலிமைக்கும் உத்வேகத்திற்கும் உரமூட்டுவதாய் உள்ளது. அவர்களின் தூய சிந்தனை, விடா முயற்சி, தாராள மனப்போக்கு, மென்மையான அணுகுமுறை, அக புறவாழ்வின் மாசுவறுவற்ற தொழிற்பாடு, இறையச்சம் போன்ற உயர் குணங்கள் அவர்களின் வெற்றிக்கும் இயக்கத்தின் வளர்ச்சிக்கும் வித்திட்டது.
சமூகத்தில் கொள்கை ரீதியாக ஏற்படும் கருத்து வேறுபாடுகள் மிகச்சில. ஏனையவை தனிப்பட்ட நோக்கங்கள் உடையன. ஆனால் ஆரம்பத்தில் தனிப்பட்ட காரணங்களுக்காக ஏற்படும் கருத்து வேறுபாடுகளும் நாளடைவில் அவற்றுக்கென்று சில கொள்கைகளை வளர்த்துக் கொள்வதுண்டு. இதனால் சில சந்தர்ப்பங்களில் அவற்றால் நீண்டகாலம் தாக்குப்பிடிக்கவும் முனைவதுண்டு. உண்மையில் இவ்வித கருத்து வேறுபாடுகளும் அமைப்புக்களும் அடிப்படையிலேயே கொள்கை ரீதியானவைகளாக அமைந்திருக்குமானால் அவை ஒவ்வொன்றும் தனித்துச் செயற்பட துணிந்திருக்காது. மாறாக ஏற்கனவே உள்ள இயக்கங்கள் அமைப்புக்கள் என்பவற்றில் மிகவும் பொருத்தமான ஒன்றுடன் இணைந்து செயற்பட்டிருக்கும்.
கடந்த நூற்றாண்டில் சத்திய இஸ்லாத்தை சரிவரப்புரிந்து செயல்வடிவம் கொடுத்து உழைத்தவர்கள் பலர். அவர்களில் மௌலானா இல்யாஸ் (ரஹ்), மௌலானா அபுல்அஃலா மௌதூதி, ஹஸனுல் பன்னாஹ் போன்ற மேதைகளை குறிப்பிடலாம். எனினும் பாமர மக்களை நெறிப்படுத்தி அவர்களிடத்தில் இஸ்லாத்தின் அடிப்படை விழுமியங்களை பயிற்றுவித்ததில் மௌலானா இல்யாஸ் (ரஹ்) அவர்ள் (ஹி 1303-1363) முதன்மை பெறுகின்றார்கள். தப்லீக்கின் வளர்ச்சியை ஆய்வுசெய்வோர் இவ்வுண்மையை புரிந்து கொள்ள முடியும்.
'தரீகே ஈமான்' என்ற பெயரில் இவ்வியக்கத்தை ஆரம்பித்த  மௌலானா 1939 இல் தப்லீக் ஜமாஅத் என்ற பெயர் மாற்றத்தோடு மேவாத் பகுதியில் அத்தீவிர ஈடுபாட்டுடன் உழைக்கலானார்கள். இதுபற்றி மௌலானா இல்யாஸ் (ரஹ்) அவர்கள் குறிப்பிடும் போது.....
....'இஸ்லாமிய சேவையில் பொதுமக்களையும் ஈடுபடுத்தி, அவர்களையும் இப்பணியில் பக்குவப்படுத்த வேண்டும் என்ற அடிப்படையைக் கொண்ட இப்புதிய திட்டத்திற்குத்தான் 'தப்லீக்' என்று பெயர். இத்திட்டத்தை ஆதரித்து அமுல்படுத்துவதற்காக முன் வரக்கூடிய சகோதரர்களுக்கு தப்லீக் ஜமாஅத் என்றும் சொல்லப்படுகிறது.' நூல்: மௌலானா இல்யாஸ் (ரஹ்), பக்கம்: 24 பதிப்பு: 1955
இப்பணியில் முதற்கட்ட நடவடிக்கைகளை காந்தலா என்ற பின் தங்கிய கிராமத்தில் இருந்து ஆரம்பித்து நெறிப்படுத்திய பின் அயற்கிராமங்களுக்கும் பிராச்சாரப் பணியை விஸ்த்தாரமாக்கினார்கள்.
தனது இருபது வருடகாலப் பணியில் இதன் வெற்றிக்கு துணையாக உலமாக்களையும் கற்றறிந்த அறிஞர்களையும் அரவணைத்து அவர்களின் வழிகாட்டலின் கீழ், இப்பணியை செய்ததாக மௌலானா அவர்களே வாக்குமூலம் தருகிறார்கள்.
....'மதக்கல்வி கற்ற உலமாக்களை இவ்வியக்கத்தில் பங்கெடுத்துக் கொள்ளச் செய்தால் தான் இவ்வியக்கம், பொது மக்களிடையே பரவி முன்னேற்றமடையும்'...
நூல்: மௌலானா இல்யாஸ் (ரஹ்) பக்கம் : 64
மௌலாவின் இந்த அபிலாஷை, இலட்சிய வேட்கை, ஆகியவற்றை தற்கால தப்லீக் ஜமாஅத்தினர் அலட்சியப் படுத்துவதுடன், உலமாக்கள், தூய்மையான தீனை முன்வைக்கும் போது, அவற்றைப் புறக்கணிப்பதுடன், எதிராக செயற்படுவதையும் அவதானிக்க முடிகிறது. இயக்கத்தின் உயர் வெற்றிக்குத் தகுதிவாய்ந்த உலமாக்களின் அணுசரணை கவனத்திற் கொள்ளப்படாமையும் பிரதான காரணமெனலாம்.
இயக்கத்திற்குள் தற்போது இருக்கும் சில உலமாக்கள் மேட்டுக்குடியினரின் தீர்மானங்களுக்கு தலையாட்டுபவர்களாகவும், தப்லீக் ஜமாஅத்தின் தவறுகளையும் வன்முறைசார் பண்புகளையும் அனுமதித்து, தார்மீக அங்கீகாரத்தை வழங்கக் கூடியவர்களாகவுமே இருக்கின்றனர். இவ்வுயர் இயக்கத்தின் இலட்சியக் கொள்கையை மௌலானா அவர்கள் குறிப்பிடும் போது இவ்வாறு கூறுகின்றார்கள்.
...'தப்லீக் இயக்கமானது மக்களை தொழுகைக்கு மாத்திரம் அழைக்கக் கூடிய இயக்கமென்று சிலர் நினைக்கிறார்கள். அறியாமை, அந்தகாரம், மௌடீகம், பிற்போக்கு, முதலியவைகளால் சீரழிந்து கிடக்கும் முஸ்லீம் சமுதாயத்தை தட்டி எழுப்பி, இஸ்லாத்தின் உணர்ச்சியும் ஈமானின் ஜோதியும் ஆத்மீக சக்தியும் நிறைந்த வளங்கள் கூடிய ஒரு சிறந்த சமுதாயமாக சிருஷ்டிப்பதே தப்லீக் இயக்கத்தின் உயர்ந்த இலட்சியமாகும்'
மௌலானா இல்யாஸ் (ரஹ்), பக்கம் : 83
தப்லீக் இயக்கத்தின் அதிஉயர் சாசனமாக இப்பிரகடனம் முழங்குகின்றது. எனினும் ஜமாஅத்தினரால் மேற்கூறிய எந்தப் பணியும் பிரச்சாரப்படுத்தப்படுவதில்லை. தொழுகைக்கு அழைப்பது, இன்னும் பிற ஆத்மீக பயிற்சி என்பதுடன் தஃவாவை மட்டுப்படுத்தி வருகின்றனர்.
தப்லீக் ஜமாஅத்தின் மூலவேர் பாமரர்கள் தான். பள்ளிவாயிலை பிரதான தளமாகக் கொண்டியங்கும் இவர்களால் மூடிக்கிடந்த பள்ளிகள் அமல்களால் அலங்கரிக்கப்பட்டன. மதுப்பிரியர்கள் மனந்திருந்தி வாழ தப்லீக் அரிய பங்களிப்பை நல்கியது. நல்கி வருகின்றது. ஐங்கால தொழுகை உட்பட, இன்னும் பிற மங்கிப் போன சுன்னத்துக்களும் உயிர் பெற்றன. தனது சொந்தப் பணத்தில் பாகுபாடின்றி கிராமந்தோறும் அலைந்து திரிந்து மக்களை இறை இல்லத்தின்பால் அழைத்து, தக்வாவையும் பக்குவத்தையும் ஊட்டியது.
படிப்பறிவே இல்லாத பலர் சிறந்த இஸ்லாமிய தாயிகளாக உருவாக்கியதில் அபரித வெற்றி கண்டது தப்லீக், இவற்றை எவரும் மறுத்து விடமுடியாது. எனினும் இப்பணிகள் மட்டும் தான் இஸ்லாம் என்ற மாயையில் தஃவாவை சுருக்கிக் கொண்டது தான் வேதனைக்குரியது.
தப்லீக் சரியான விதத்தில் பரவவேண்டுமானால் கீழ் கண்ட திட்டங்களை அமுல் நடத்த வேண்டியது அவசியமென மௌலானாவே வாக்கு மூலம் தருகின்றார்கள்.
1. தப்லீக் இயக்கத்தின் திட்டங்களை பிரச்சாரம் செய்வதற்கு சிறந்த பேச்சாளர்களை, உலமாக்களை தயார் செய்து அவர்கள் மூலம் தப்லீக் பிரச்சாரம் செய்தல்.
2. தப்லீக் இயக்கத்தின் நோக்கங்களை அறிவிப்பதற்காக குறைந்த பட்சம் ஒரு சிறந்த வாரப்பத்திரிகையை நடத்துதல்.
பக்கம் : 128
இந்த இலட்சியத்துடன் இன்றைய தப்லீக் முரண்பட்டு நிற்கிறது. சஞ்சிகை, புத்தகம், பத்திரிகை மூலமாக தஃவாச் செய்வோரை தமது பயான்களில் சிலர் பரிகஷிப்பதும், அவற்றினால் பயனில்லை என்பதுடன் நின்று விடாமல், அவற்றை படிக்க தடை விதிப்பதையும் சில பிரதேசங்களில் அவதானிக்க முடிகின்றது.
ஓர் இயக்கமோ அமைப்போ நீண்ட காலம் தொடர்ச்சியாகச் செயற்பட்டு வரும் போது அதன் இலக்கு நோக்குடன் மற்றவையும் கலந்து விடுகின்றன.
பல்வேறு நோக்கங்கள், எண்ணங்கள் அதனுள் புகுந்து விடுகின்றன. எனவே இயக்கத்தின் உடல் எஞ்சி நிற்க, அதன் உயிரோட்டம் காணாமல் போய்விடுகின்றது.
அதன் அமைப்பு விதிகளில் குறிக்கோளும் இலகும் தெளிவான வார்த்தைகளில் காணப்படும். அதேவேளை நடைமுறை வாழ்விலிருந்து அது அழிந்து விடுவதை அவதானிக்கலாம். இத்தகைய பாரிய அழிவை நோக்கியே தப்லீக் ஜமாஅத் சென்று கொண்டிருக்கிறது.
வெறும் கொள்கை முழக்கம், புறத்தோற்றம் மாற்றம், 'வக்தில்' செல்லுதல், தினசரி அமல்களில் ஈடுபடல் மட்டும் தான் தப்லீக் என்ற பிரமை அதன் அடிமட்ட, ஏன் சில உயர் மட்ட உறுப்பினர்களிடம் கூட, வேரூன்றி உள்ளது.
ஒரு கருத்தை, அல்லது ஒரு குறிப்பிட்ட சொல்லை, மிக அதிகமான மக்கள் கையாளும் போது அந்த சொல்லின் கருத்துக்கள் நாளடைவில் தேய்ந்து போகின்றன. தப்லீக்கிற்கும் இவ்வபாயம் தான் ஏற்பட்டிருக்கின்றது. நீண்ட கால உழைப்பில் கட்டியெழுப்பப் பட்ட, இஸ்லாமிய இயக்கமொன்று வெறும் சடங்கு வாத சிந்தனைகளால் சிக்குண்டு, திணறுகின்றது. தனிப்பட்ட மனிதர்கள் தப்லீகில் தம் தனித்தன்மையை (ஐனநவெவைல) வளர்த்துக் கொள்கின்றனர். இன்னும் சிலர் தப்லீக் ஏகாதிபத்திய வாதிகளாகவும், (ஐஅpநசயைடளைவiஉ) தனது மேலாண்மையை நிலைநிறுத்திக் கொள்ள, தமது செயற்பாடுகளை நியாயப்படுத்த கூடியவர்களாகவும் இருக்கின்றனர்.
மேலும் இன்றைய தப்லீக் ஜமாஅத்தில் வேரூன்றி வருகின்ற அபாயகரமான வியாதியாக 'ஜமாஅத்துவாதத்தை' குறிப்பிடலாம். சகோதர தஃவா இயக்கங்களை அடக்கி ஒடுக்க நினைப்பதும், அவர்களின் தஃவா நடவடிக்கைகள் பள்ளிவாயலை மையமாகக் கொண்டு செயற்பட தடை விதிப்பதும் வெள்ளிடை மலை. (சில இடங்களில் விதிவிலக்கு) சகோதர இயக்கமொன்றின் அனுகூலங்களை விடுத்து, குறைபாடுகளை மட்டும் விமர்சிக்கும் பண்பு தப்லீக் தவிர்ந்த பிற இயக்க உறுப்பினர்களிடமும் காணப்படுகின்ற பொதுக்குணமென்பதையும் ஈண்டு குறிப்பிடாமல் இருக்க முடியாது.
இது இயக்கத்தை வணங்குவதன் உச்சக்கட்ட எதிர்வினையாகும். நாங்களே சரி, எங்கள் ஜமாஅத்தே அல்லாஹ்வால் அங்கீகரிக்கப்பட்டதென்றமுடிவுக்கு ஜமாஅத்துவாதிகள் வருவதற்குக் காரணம் மேல் மட்ட தலைமைத்துவம். இது குறித்து சரியான அறிவுறுத்தல்கள் கலந்துரையாடல்களை ஏற்படுத்தாமையே! சகோதர இயக்கமொன்றுடன் கருத்துப் பரிமாற்றம் அல்லது அவர்களுடன் இணைந்து இஸ்லாத்தின் பொது விரோதிகளை எதிர்ப்பதில் ஒத்துழையாமை போன்ற இன்ன பிற செயற்பாடுகளால், தப்லீக் பிற இயக்கங்களுடன் தனக்குள்ள ஒவ்வாமையை வெளிப்படுத்துகின்றது.
இவ்வராஜரகப் போக்கு மௌலானா இல்யாஸ் அவர்களின் காலப்பிரிவில் வாழ்ந்து பாமர 'ஜமாஅத்து வணங்கி'களிடமும் ஏற்பட்டது. எனினும் மௌலானா அவர்கள் அவற்றை எங்கனம் எதிர்கொண்டார்கள் என்பதை நாம் கவனிக்க வேண்டும்.
'தப்லீக் இயக்கத்திற்கும் ஜமா அத்து இஸ்லாமிய இயக்க  அங்கத்தினர்களுக்குமிடையே ஒரு பிளவு ஏற்ப்பட்ட போது, மௌலானா அவர்கள் ஒழுங்குபடுத்தி ஒருவர் மீது ஒருவர் பாஸத்தோடும் பரிவோடும் பழகும் சூழ்நிலையை ஏற்படுத்தினார்கள்.
பார்க்க: மௌலானா இல் பக்கம்: 101
மௌலானாவிற்குப் பின் தப்லீக் பணிசெய்த புரிந்துணர்வற்ற பாமரரும் சில இயக்க எழுத்தாளரும் இப்பணியின் மகிமையையும் தாற்பரியத்தையும் சிதைக்க முற்பட்டதுடன் இயக்க வேறுபாட்டையும் தோற்றுவித்தனர்.
'இப்பணியில் ஈடுபடாதவர்கள் மிகவும் கேவலமாகக் கருதப்பட்டார்கள். சுருங்கக் கூறுமிடத்து, அவர்கள் ஒரு பொருட்டாகக் கூட மதிக்கப்படாது போய் விட்டார்கள். மேற்படி நூல் பக்கம்: 89
என்றெல்லாம் எழுதி ஜமாஅத்துவாதம் வேரூன்றி வித்திட்டனர். இவ்வன்முறை சிந்தனைப் போக்குக் குறித்து மௌலானா அவர்கள் கூறுவதை நோக்கற்பாலது.
'.....எங்கு மக்களின் ஒத்துழையாமையும், வெறுப்பும் தெரிய வருமோ அங்கு அவர்களை நிரபராதிகள் என்று ருசுப்படுத்துவதற்காக அவர்களைப்பற்றி நல்ல வார்த்தை கூற வேண்டும். இன்னும் சன்மார்க்கம் பயனடையவும், அனுகூலங்களை அடையவும் எண்ணங்கொண்டு அவர்கள் சமூகத்திலே செல்ல வேண்டும்.
மணிமொழிகள் பக்கம்: 91
எந்த ஓர் இயக்கமாயினும் அதன் ஸ்தாபகரையும் அவருடன் தோள்நின்று உழைத்தோரையும் புகழ்வதென்பது தவிர்க்க முடியாதது. எனினும் துரதிஷ்ட வசமாக தப்லீக் ஜமாஅத்தினுள் குருபூசை ஊடுருவி, அவர்கள் அறியாமலேயே, ஈமானின் கோட்பாடு அம்சங்களை சிதைத்துக் கொண்டிருக்கின்றது. மகான்கள், பெரியோர்கள் என்ற மாயைக்குள் அகப்பட்டு அவர்களின் மூலம் நடைபெற்றதாக இட்டுக்கட்டப்பட்ட சித்து விளையாட்டுக்களையும் கதை கப்ஸாக்களையும், அவிழ்த்து விட்டு, பயான்களில் ஹக்குடன், 'பாதிலை' இரண்டறக்கலந்து, வெறும் ஊகங்களுக்கும், வெளிக்கலாச்சார கப்பாஸ்களுக்கும், இஸ்லாமிய வடிவம் கற்பிக்க முயல்கின்ற தான் தோன்றித்தனமான, தீவிர போக்கையிட்டு தப்லீக் ஜமாஅத்தினர் சிந்திக்க வேண்டும்.
மார்க்கத்தை பிரச்சாரப்படுத்த பொய்யும், புரட்டும் கற்பனைக் கதைகளும் தேவையில்லை. எண்ணிலடங்கா தூய்மையான வரலாறும், நபிமொழிகளும் நம் வசமுண்டு. நபிகளார் கூறுவதை பாருங்கள்.
'உங்களை நான் மிக வெண்மையான வழியில் விட்டுச் செல்கிறேன். அதன் இரவும் பகலைப் போன்று வெளிச்சம் நிறைந்தது. எனக்குப் பின் நான் விட்டுச் சென்ற அந்த வழியை விட்டும் வழி தவறுகிறவன் தான் நாசமாகக் கூடியவன் என்கிறார்கள்.'
இர்பான் இப்னுஸாரியா, இப்னுமாஜா
மேலும் நபி(ஸல்) அவர்கள், 'நான் சொல்லாததைச் சொன்னதாக எவன் சொல்லுகிறானோ அவன் நரகத்தில் தன் இருப்பிடத்தை அமைத்துக் கொள்ளட்டும்.' என்று நவின்றுள்ளார்கள்(முஸ்லிம்)
'நபியவர்கள் சொன்னார்கள், இது ஸஹீஹானரிவாயத்', என்று அப்பட்டமான போலி ஹதீதுகளையும், 'மௌலுஆன', நபிமொழிகளையும் மிக அழுத்திப் பிரசங்கம் செய்து வரும், தப்லீக் ஜமாத் நபிகளாரின் இன்னொரு எச்சரிக்கையையும் கவனத்திற் கொள்ள வேண்டும்.
மூன்று விடயங்களை அல்லாஹ் உங்களுக்கு வெறுக்கிறான். அவை:
1. (இன்னார்) சொன்னார், (இப்படி) சொல்லப்பட்டது, என்று சொல்வதையும்,
2. பணத்தை வீணாக அழிப்பதையும்,
3. அதிகமாகக் கேள்வி கேட்பதையும், என நபியவர்கள் கூறுகிறார்கள்.
புஹாரி, முஸ்லிம்
இதில் வெறுக்கப்பட்ட, முதலாவது விடயம் தப்லீக் ஜமாஅத்தினரால் போற்றப்படும் பண்பெனக் கொள்ளலாம். அவர் சொன்னார், இவர் சொன்னார், ஒரு பெரியார் கூறினார், சொல்லப்பட்டது என்ற இறை வெறுப்பு வாசகங்களை தமது பயான்களில் ஒரு விதியாகவும், நழுவல் போக்காவும், தொடர்ந்தும் கடைப்பிடித்து வருகின்றனர். நபிவழியே நம் வழி என்ற சித்தாந்தத்தில் உழைக்கும் ஓர் இயக்கம், அந்த நபியை இழிவுப்படுத்துமாற் போல், அவர் சொல்லாத செய்யாத விடயங்களை, 'பிரபல்யமான' பெயரில் செய்து வருவதை சர்வசாதாரணமாக அவதானிக்கலாம்.
இதில் வேடிக்கை என்னெவென்றால் விற்காத சரக்கிற்கு விளம்பரம் தேடமுனைவது போல், நியாஸ் மௌலவி, ரிஸ்விமுப்தி போன்ற பிரபலங்களை சொல்லி கப்சாக்களை அவிழ்த்து விடுவதுடன், இந்த இயக்கத்தில் டொக்டர், என்ஜினியர் போன்றோரும் இணைந்துள்ளனர் எனத்தனிநபர் துதிபாடி ஆள் சேர்ப்பதும், ஓர் அம்சமாகி விட்டது. இல்யாஸ் ரஹ் அவர்களின் தஃவாப்பணியை நுணுகிப்படிக்கும் எவரும் இத்தகைய இழிபண்பினையையும், விளம்பரத்தையும் கண்டு கொள்ளல் சிரமமென்பதையும் காணலாம்.
வேதனை யாதெனில், கொள்கைக்கு முக்கியத்துவம் தராமல் தனி நபர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தல் அவர்களை மிதமிஞ்சிப் புகழ்தல், இவர்களின் கருத்தும் முடிவும் மாற்றமுடியாதெனக் கருதல் இவ்வாறான தனிநபர் பூஜை அண்மையிற்தான் தப்லீக்கில் தொற்றிக்கொண்ட நோயெனலாம்.
பிரபலங்களின் குறைபாடுகளை சுட்டிக் காட்டுபவர்கள் 'ஜமாஅத் விரோதி' என ஒதுக்கப்படுகின்றனர். இது மௌலானாவின் தூய்மையான ஏகத்துவ கொள்கைக்கு முற்றிலும் முரண்பட்டது. தனிநபர் பூசையும் கண்மூடித்தனமான பின்பற்றதலும் இஸ்லாத்தின் தௌஹீத் கொள்கைக்கே வேட்டுவைக்ககூடிய அம்சங்களாகும்.
இது குறித்து மௌலானா அவர்கள் என்ன கூறுகின்றார்கள் என்பதை நோக்குங்கள்.
'நமது வேலை தீனுடைய அடிப்படை வேலை நமது இயக்கம் உண்மையில் ஈமானுடைய இயக்கம் தற்சமயம் பொதுப்படையாக கூட்டு முயற்சியுடன் நடைபெறும் வேலைகளில் எல்லாம் அவைகளைச் செய்யக் கூடியவர்கள் ஈமானுடைய அஸ்த்திவாரம் உறுதியாக இருப்பதாகக் கட்டடம் கட்டுகின்றார்கள்.'
மழ்பூஜாத் : 92
சிந்தனைச் சுதந்திரம், கருத்துச் சுதந்திரம், பேச்சுச் சுதந்திரம், எல்லாவகை சுதந்திரங்களையும் மார்க்கம் அனுமதிக்கின்றது. மனிதனால் தோற்றுவிக்கப்பட்ட எதுவும் விமர்சனத்துக்குட்பட்டவைதான். குதர்க்கவாதம் பேசமுற்படும்  இயக்க உறுப்பினர்களை நோக்கி மௌலானா இவ்வாறு சொல்கின்றார்கள்.'
மார்க்க மேதைகள் ஏதேனும் உங்களிடம் கேட்டால் மட்டும் பதில் கூறுங்கள். நீங்களாகவே, அவர்களிடம் பேச்சை வளர்த்து தர்க்கித்துக் கொள்ளாதீர்கள்.
தப்லீக் தோன்றிய வரலாறு 
பக்கம் : 76
உண்மையில் தப்லீக்கின் உன்னதம் குறித்து மௌலானா  அவர்களினதும் அவர்களைப் பின் பற்றி இயக்கத்தை வழி நடத்திச் சென்ற மேதைகளினதும் இலட்சிய வேட்கையை முற்றாகப் புறக்கணித்து, ஒரு சடங்கு வாத தப்லீக் அமைப்பைத்தான் இன்று நாம் தரிசிக்க முடிகிறது. 
நபி (ஸல்) அவர்கள் கொண்டுவந்த சட்டதிட்டங்களை மக்களிடத்தில் கூறுவதும் அதை எடுத்து நடப்பதும் தான் தப்லீக் ஜமாஅத்தின் வேலையின் நோக்கமென மௌலானா கூறுவதை தப்லீக் சிந்திக்க வேண்டும்.
இந்த உம்மத்தை எந்த நிலையில் நபிகளார் விட்டுப் போனார்களோ, அந்த நிலைக்கு இந்த உம்மத்தை உயர்த்துவதற்கு உழைப்பது தான் இப்பணியின் இலட்சியம் என்றார்கள். ஆனால் துரதிஷ்ட வசமாக இச்சித்தாந்தத்திற்கு முற்றிலும் முரண்பட்ட ஓர் இயக்கமாகவே தற்கால தப்லீக் மதிப்பிடப்படுகிறது.
தீன்பணி செய்யும் பிற இயக்க சகோதரகளை இழிவாக நோக்கல், காழ்ப்புணர்வு, இறுக்கமான கருத்துப் போக்கு அத்தஹிய்யாத்தில் விரலசைத்து, நெஞ்சின் மீது தக்பீர் கட்டுகின்ற சகோதரர்களை பள்ளயை விட்டே விரட்டல், அல்லது நோவினை செய்தல், தன் இயக்கத்திற்கு ஒவ்வாத நபர்களை 'வஹ்ஹாபி பூச்சாண்டி காட்டி மிரட்டல் போன்ற கீழ்த்தரமான செயற்பாடுகளில் இருந்து தப்லீக் ஜமாஅத் விடுபடுவதென்பது கடின முயற்சியுமல்ல.
மௌலானா கூறுவதைப் போல 'தப்லீக் வேலையின் நோக்கம் வக்து கொடுப்பது அல்ல' (மல்பூஜாத்: 49) என்பதிலிருந்து இதன் நோக்கம் மனிதனை ஒழுக்க மாண்பு, தூய சிந்தனை, தாராள வாதம், இங்கிதம், அடக்கம், தயாள குணம் போன்ற உயர்நெறயாளனாக பயிற்றுவிப்பதே என்பதைப் புரிந்து கொள்ள முடியும். எனவே, 'வக்து' செல்வதால் ஒருவன் பண்பாளனாக மாறிவிடுகின்றான் எனக் கருத முடியாது. அவன் புறச்சுழலில் ஏற்படுகின்ற தாக்கம் ஈமானியச் சுடர், அகச் சுழலை தூய்மைப்படுத்துகின்றதா என்பதே இங்கு முக்கியம். தப்லீக்கின் இலட்சியம் 'வக்தல்ல' மனிதனின் அகமிய எண்ணங்களில், தக்வா வடிவம் கொடுக்க வேண்டும். இதுவே, இந்த வேலையின் குறிக்கோள்.
இஸ்லாம் என்றால் தொழுகை, திக்ர் போன்ற அனுஷ்ட்டானங்களுடன் முற்றுப்பெறுகின்ற மார்க்கம் என்ற தவறான மனப்பிராந்தியை தப்லீக் ஜமாஅத் ஏற்படுத்த முனைகின்றது. இது இல்யாஸ் (ரஹ்) அவர்களின் கொள்கைக்கே வேட்டு வைக்கும் முயற்சியாகும். இது இயக்க வழிபாட்டால் ஏற்பட்ட துர்ப்பாக்கியமாகும்.
பொதுவாக மனிதனுடைய பலஹீனம் இரண்டு வகைப்படும்.
1.அடிப்படை விபரங்களை அறியாதிருத்தல்
2. அறிந்திருந்தாலும் அதனைக் குறித்து அலட்சியமாக இருத்தல், அல்லது மறந்து விடுதல் சரியான அறிவு    புகட்டாமலும், இயக்கத்தை சரிவர நடத்தாமலும், அழைப்பை சுலபமாக எடுத்துரைக்க முடியும் என்ற அபிப்பிராயத்தாலும் இத்தவறுகள் நடந்து விடுகின்றன.
அத்துடன், இலங்கை தப்லீக், ஜமாஅத், வளைகுடா போன்ற அரபு நாடுகளில், இருந்து வரும், ஜமாஅத்துக்குமிடையே, பாரிய கருத்து முரண்பாட்டை அவதானிக்க முடிகிறது. இந்தியா, பாகிஸ்த்தான், ஜமாஅத்துக்கள், இலங்கை தப்லீக் இயக்கத்தின் தீவிரத்தன்மையிலிருந்து பாதுகாக்கப்பட்ட அமைப்புக்களாக இயங்குகின்றன.
மத்திய கிழக்கிலிருந்து வருகை தரும் ஜமாஅத்தினர், அத்தஹிய்யாத்தில் விரலசைப்பதையும், நெஞ்சின் மீது தக்பீர் கட்டுவதையும் கூட்டுத்துஆ ஓதாமலிருப்பதையும் இங்குள்ள ஜமாஅத்தினர் அலட்டிக்கொள்வதில்லை. அதே நேரம் இலங்கையர் ஒருவர் இதே கிரிகைகளை செய்யும் பட்சத்தில், அதைப் பிரச்சனைக்குரியதாக மாற்றி விடுகின்றனர். (அட்டுலுகம இஜ்திமாவின் போது ஹஜ்ரத்ஜீயின் மகன் ஜும்ஆ தொழுகை நடத்தி விட்டு, கூட்டுத்துஆ ஓதாமல் எழுந்து சுன்னத் தொழுதது ஈண்டு குறிப்பிடத்தக்கது)
இது குறித்து, தீர்க்கமான இணக்கப்பாடொன்றை தப்லீக் ஜமாஅத்தின் உலமாக்கள் கூட இதுவரை முன்வைக்கவும் இல்லை. இவ்வனுஷ்ட்டானங்கள் தொடர்பாக, போதிய சிந்தனைத் தெளிவை போதிக்க வேண்டிய சில அறிஞர்கள் எரியும் நெருப்பில் நெய்யூற்றும் கைங்கரியத்தைத்தான் கவனமாகச் செய்து வருகின்றனர். தமது உறுப்பினர்களை ஹதீதுடன் பரிச்சயப்படுத்தி இவ்வாறான, விடயங்களில் விட்டுக்கொடுத்து செல்வதன் அவசியம் பற்றி வற்புறுத்த வேண்டும். நபியின் சுன்னத்தை உயிர்ப்பிக்கப்பாடுபடும் ஓர் இயக்கம் நபி வழிக்கெதிராக செயற்படுவதை அவ்வியக்கத்தின் அதி உத்தம உலமாக்கள் தடுக்காதிருப்பதும், விசனத்திற்குரியதாகும்.
இவ்வாறான பிணக்குகள் சமூகத்தில் ஏற்படும் போது, மௌலானா நடந்து கொண்ட இங்கிதமான பண்பாட்டை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். மௌலானா கூறுகின்றார்கள்.
....'தனி நபர்களுக்கிடையிலும், கூட்டத்தார்க்கிடையிலும் ஏற்படுகின்ற பிணக்குகள் யாவும் அபிப்பிராய பேதங்களாலேயே ஏற்படுகின்றன. அபிவிருத்தியடைகின்றன. முஸ்லீம்களின் சகல கூட்டத்தார்களையும் தீனுடைய வேலையில் ஈடுபடுத்திவும், சன்மார்க்க சேவையே அவர்களின் மேலான நோக்கமாக ஆக்குவதற்கும், அவர்களின் உணர்ச்சிகளும், செயல் முறைகளும் ஒன்று படுமாறு முயற்சி செய்ய நாடுகின்றோம். இந்தக்காரியமே விரோதங்களை அன்பாக மாற்றிட இயலும் இருமனிதரிடையே நேஸபாவத்தை உண்டாக்கி வைப்பதில் எத்துணை பெரிய நற்பயனுண்டு என்பதைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.
மல்பூஜாத் : 102
இலங்கை தப்லீக் ஜமாஅத் அவசரமாக புணர் நிர்மானம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்திற்குள்ளாகி உள்ளது. அதன் எழுதப்படாத சித்தாந்தங்களை மீள்பார்வைக்குட்படுத்தி, சகோதர இயக்கங்களை அனுசரிக்கும் பண்பினை வளர்ப்பதற்கு உழைப்பதும், அதன் தஃவா வரலாற்றில், புறக்கணிக்க முடியாத அம்சங்களாகும். ஏனெனில் குர்ஆன் கூறுகின்றது. 'அல்லாஹ் உங்களுக்கு இலகுவான கட்டளைகளை கொடுக்க விரும்புகிறானே தவிர, கஷ்டத்தைக் கொடுக்க விரும்பவில்லை.' (அல்குர்ஆன் 2:185)
உடம்பின் தேவைகளைப் பொருட்படுத்தாது அதனைத் துயருறுத்தி ஆன்மாவை தூய்மைப்படுத்தும் முனைவுகளில் ஈடுபடுவதை இஸ்லாம் விரும்புவதில்லை. ஆனால் ஏனைய தர்மங்கள், இவற்றைப்போதித்து வருகின்றன. தப்லீக், இஸ்லாம் போதிக்காத இத்தகைய வெற்றுக் கோசங்களையும், உளுத்துப்போன மரபுகளையும் பேணி வருவதுடன், பள்ளியே கதி, அல்லாஹ்வே விதியென ஒரு மந்த வாழ்வை பயிற்றுவிக்கிறது. 
குடும்பத்தை ஒழுக்க நெறியில் இட்டுச்செல்ல உழைத்தல், சமூக்கடமை, தார்மீகப்பொறுப்பு, சமூக நலன்களில் பங்கெடுத்தல் போன்ற கடமைகளும் ஓர் 'இபாதத்' என்பதை தப்லீக் ஜமாஅத் உணர்ந்து செயற்பட வேண்டும். 
அத்துடன் எந்த ஓர் அமைப்பாயினும் தலைமைத்துவம் என்பது ஒரே அமீரின் கீழ் இயங்கி வருவதுதான் சுன்னாவாகும். உயர்மட்ட ஆலோசனை குழுவுடன் அமீர் தன் இயக்க நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதுதான் மரபு. நபி அவர்கள் காலத்திலும் சரி, பிற்கால கலீபாக்களின் காலமாயினும் சரி இந்த மரபு தான் பேணப்பட்டது. பேணப்பட்டு வருகிறது.
தப்லீக்கின் ஒழுங்கமைப்பில் தற்போது ஐந்துபேர் அமீர்களாக செயற்பட்டு வருகின்றனர். ஏன் விட்டுக்கொடுத்து ஒருவரை தலைமைத்துவத்திற்கு தெரிவு செய்யக்கூடாது. அத்துடன் 'அமீர்பதவி' யில் இருப்பவர்களில் உலமாக்கள், புத்திஜீவிகள் எவரும் நியமனம் பெறவில்லை என்பதும் இங்கு நோக்கற்பாலது. தகுதி வாய்ந்த உலமாக்கள் தப்லீக் ஜமாஅத்தில் புறக்கணிக்கப்பட்டுள்ளதுடன், தொடர்ந்து சிலமோட்டுக்குடி, வியாபாரிகளே, அமீர்களாக நியமிக்கப்பட்டு, அம்மரபைத்தான் காலங்காலமாகப் பேணியும் வருகின்றனர்.
இஸ்லாமியப் பிரச்சார இயக்கமொன்றிற்கு தலைமை தாங்கும் ஒருவருக்கு ஷரிஆவின் நுனுக்கமான சட்டதிட்டங்கள் தெரிந்திருக்க வேண்டும். குர்ஆனுடனும், நபிமொழியுடனும் ஆழமான பரிச்சயம் வேண்டும். கடந்த கால, நிகழ்கால பிக்ஹ் சட்டவாக்கம் வரலாற்று நிகழ்வுகள் தேசிய சர்வதேச, நிகழ்வுகளுக்கு முகம் கொடுக்கும் பேராற்றல் இவை எல்லாம் ஒருங்கே பெற்ற 'தக்வா' உள்ள ஒருவர் தான் தலைமைக்கு தகுதியானவர் இவ்வனைத்து தகுதியினையும் இழந்த 'லேபல், அமீர்கள் தான் தப்லீக்கை தற்போது இழுத்துச் செல்கின்றனர்.
குறைந்த பட்சம் மஹல்லாக்களில் அமீராக இருப்பவர், நான்கு மாதம், அல்லது ஒரு 'சில்லா' (40 நாள்) முடித்தவராக இருக்க வேண்டுமென தப்லீக்கின் உயர்மட்டம் எதிர் பார்க்கின்றது. இதனால் அதிருப்தியுற்ற உலமாக்கள் தப்லீக்கை விட்டும் நழுவி, அதை விமர்சிக்கக்கூடியவர்களாக மனம் சோர்ந்துள்ளனர்.
அமீர் என்பவர் வெறுமனே இயக்கத்தை வழிநடத்தும் இழுவை மாடல்ல: அவரிடமிருந்து, சமூகத்திற்கு பல அரிய பணிகளை இஸ்லாம் எதிர்பார்க்கின்றது. 'நவீன உலகுடன் ஒன்றி தஃவாவை செப்பனிடவியலா புராதன சிந்தனைப் போக்குடன் தான் தப்லீக்கின் அமீர் சாஹிப்புகள் இவ்வியக்கத்தை வழிநடத்திச் செல்கின்றனர்.
தஃலீத் தொகுப்புத் தவிர்ந்த பிற இஸ்லாமிய அறிஞர்களின் நூற்களைப் படிப்பதைக்கூட தடை விதிக்கும் சில பொறுப்பதிகாரிகள் இங்கு இல்லாமலில்லை. எனினும் ஆரம்ப கால தப்லீக் ஜமாஅத்தினரிடம் தீனை விளங்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. 1970 இல் இலங்கை வந்த பெங்களுர் இப்ராஹீம் மௌலானா அவர்கள் ஒரு ரமழானின் ஒவ்வொரு நாளும் சுபுஹுத் தொழுகையின் பின் வேகந்தபள்ளியில் குர்ஆன் விளக்கம் செய்தார்கள். 1962 இல் மக்h சென்ற ஸஈத்கான் மௌலானா மக்கா ஹரம் சரீபில் பிரதி அஸர் தொழுகையின் பின் குர்ஆன் வியாக்கினம் செய்துவந்தார்கள். ஆனால் இன்றைய தப்லீக் ஜமாஅத்தினர்களுக்கு குர்ஆன் விளக்கவுரை ஹதீஸ் தெளிவுரை வகுப்புக்கள் என்றாலே அலர்ஜியாக இருக்கின்றது, என்பதுடன் அவ்வாறு செய்பவர்களும் கடுமையாக தாக்கப்படுகின்ற அவலத்தையும் நாம் இலங்கையில் நிதர்சனமாகக் காண்கின்றோம் சகோதர இயக்கமொன்றின் எத்தகைய சொற்பொழிவுகளையும் செவிமடுக்கக் கூடாதென்ற இறுக்கமான விதிகளும் சில தாயிகளிடம் வேரூன்றியுள்ளது. இவற்றின் மூலம் இஸ்லாத்தை சரிவரப்பின்பற்ற முனையும் ஒருவனிடம் ஆர்வத்தை முடக்குவதுடன், மீறிப்போவோர்கெதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகளும் சிலரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தப்லீக் தன்னிடமுள்ள பெரும்பான்மை உறுப்பினர்கள், ஆதரவாளர்களை நிரூபித்து தனது தவறான செயற்பாடுகளுக்கு நியாயம் கற்பிக்க முனைவதானது, கண்டிக்கப்பட வேண்டிய அம்சமாகும். குர்ஆன் கூட பெரும்பான்மையை கண்மூடித்தனமாக பின்பற்றுவோரை கண்டித்து எச்சரிக்கை விடுக்கின்றது. 2:243, 7:187, 11:17, 3:110, 5:103, 6:11 போன்ற இன்னும் அனேக வசனங்களிலும் இறை கோபம் தொனிப்பதை படித்துணரலாம்.
உண்மையில் இஸ்லாமிய பண்பாட்டினையும், அதன் கலாச்சார விழுமியங்களையும் ஆத்மீக லௌகீக வரையறைகளையும், இன்னும் தப்லீக் ஜமாஅத் உணராதிருப்பது வேதனைக்குரியது. இஸ்லாம் குறித்த மேலெழுந்த சிந்தனைப் போக்கே இந்நெறி பிறழ்வுக்கு காரணமெனலாம். எனவே தப்லீக் புணரமைக்கப்படுவதற்கு முன், அதன் தலைமைத்துவ மாற்றம் குறித்து ஆரோக்கியமான தீர்மானத்திற்கு வரவேண்டும். தலை சிறந்த உலமாக்கள் இஸ்லாமிய தஃவாத்துறையில் அனுபவமும் பாண்டித்தியமும் பெற்ற புத்தி ஜீவிகள், மூலமாக இம்மாற்றம் நிகழவேண்டும்.
இன்னும் தெளிவாகக்கூறின், தூய்மையான தீன் செழிக்க தகுதி வாய்ந்த உலமாக்கள் கொண்ட 'மஸுராசபை'யே தலைமைத்துவத்தை ஏற்க வேண்டும். வழி தவறிச் செல்லும் தப்லீக் ஜமாஅத்தை நெறிப்படுத்த இது ஒன்றுதான் உகந்த வழியெனப்படுகின்றது.
இலங்கை வரலாற்றில் 1952-53 காலப்பகுதியில் தப்லீக் அறிமுகமானதாக குறிப்புகள் உள்ளன. தாவூத் மௌலானா மேவாத்தி என்பவர் 1953இல் ஒருஜமாஅத்துடன் இலங்கைக்கு வந்தார்.  அதற்குமுன் 1952இன் இறுதிப்பகுதியில் சிங்கப்பூரில் வேலை செய்துவிட்டு அப்துல் மலிக் மவுலானாவும், குழுவினரும் கொம்பனித்தெரு வேகந்த பள்ளியில் தங்கியிருந்து தப்லீக்கை அறிமுகப்படுத்தியதாக வரலாறு கூறுகின்றது.
இலங்கை தப்லீக் அமைப்பு 169 பிரதேசங்களாகவும், 12 கொத்தணிகளாகவும் பிரிக்கப்பட்டு செயற்பட்டு வருகிறது. இவ்வளவு பழமையும், திட்டமிட்ட ஒழுங்கும் உள்ள ஓர் இயக்கம், தன் இயக்கத்தை நம்பி, அதனை எதிர்கேள்வியின்றி, கண்மூடித்தனமாய் பின்பற்றும் பல்லாயிரக்கணக்கான பாமர அப்பாவிகளை, ஏமாற்றிவருவது அனுமதிக்க முடியாத வரலாற்றுத் துரோகமாகும். தப்லீக்கின் தலைமையும், அதன் தலையாட்டி உலமாக்களும் இதற்கு பதில் சொல்லியாக வேண்டும்.
மக்களின் ஏமாளித்தனத்தைப் பயன்படுத்தி சத்தியத்துடன் அசத்தியத்தைக் கலந்து விற்கும் மட்டரக சரக்காக தப்லீக்கை சில மேட்டுக்குடி உரிமையாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த எதேச்சதிகாரப் போக்கையிட்டு மௌலானா அவர்கள் மனங்குமுறுவதை இவர்கள் கவனிக்க வேண்டும்.
ஆரம்ப விஷயங்களை இறுதியென்றும் வழிவகைகளை குறிக்கோள்கள் என்றும் அந்தஸ்து அளிக்கப்படுகிறது. ஆழ்ந்து நோக்குவார்களாயின் தீனுடைய சர்வகிளைகளிலும் இந்த தவறு நுழைந்து விட்டிருக்கிறது என்பதும் இதுவே ஆயிரக்கணக்கான தீமைகளுக்கு அடிப்படையாக இருக்கிறது என்பதும் விளங்கும். 
மல்பூஜாத்: 104
இதே தொடரில் மௌலானா கூறுவதைக் கவனிக்க வேண்டும். குர்ஆன், ஹதீதின் கருத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நடைமுறைக்கேற்ப விளங்கிக் கொள்ள முயற்சிக்கப்பட்டால் இன்ஷா அல்லாஹ் ஒருபோதும் தவறான விளக்கம் ஏற்பட்டுவிடாது.
பக்கம்: 105
இன்று தவறான விளக்கங்களாலேயே தப்லீக் பரிணாமம் பெற்று வளர்கிறது. இல்யாஸ் ரஹ் அவர்கள் தோற்றுவித்த தூய்மையான தப்லீக்பணி சந்தர்ப்பவாதிகளின் கைபட்டு அதன் பெறுமானத்தை இழந்து நிற்கின்றது. சுயநலமிகளும் வன்முறையாளர்களும் மூளைச்சலவை செய்யப்பட்டவர்களுமாக அதன் சடங்கு ரீதியான வடிவம் மட்டுமே எஞ்சி நிற்கின்றது. இங்கு வலியுறுத்தவிரும்புவதெல்லாம் தப்லீக் பழமைக்குத்திரும்ப வேண்டும் என்பதே!
பழமை என்பது மௌலானாவின் காலத்தில் எந்த உயிர்ப்பு நிலையில் பிரகாசித்ததோ, அந்த இயல்பான நபிவழிக்குத்திரும்ப வேண்டும். ஆரோக்கியமான விமர்சனங்களை ஏற்க வேண்டும். தஃலீம் தொகுப்பை பரிசீலித்து தூய்மையான நபிமொழிகளும் உணர்வுட்டும் ஸஹாபாக்களின் கலப்பற்ற வரலாறும் இணைக்கப்பட வேண்டும். பிற அறிஞர்களின் நூற்களை படிப்பதுடன் அது பற்றிய விவாதம் கருத்துப் பரிமாற்றம் என்பனவும் நிகழவேண்டும். தஃலீம் தொகுப்புக்கு குர்ஆனிய அந்தஸ்த்து வழங்கப்படுவதை விடுத்து, அதன் தவறுகள் திருத்தப்பட வேண்டும். அதில் தவறுகள் உள்ளதாக தப்லீக்கின் முக்கிய உலமாவான ரிஸ்விமுப்தியே ஏற்றுக் கொண்டுள்ளதை, ஜமாஅத்தினர் கவனிக்க வேண்டும்.
வான்சுடர் ஆகஸ்ட்-செப்டம்பர் 97 பக்கம் 21
சிலசந்தர்ப்பங்களில் தன் தவறினை நியாயப்படுத்த இதே ரிஸ்விமுப்தி போன்ற உலமாக்கள் தஃலீம் தொகுப்பை ஆறு ஹதீஸ் கிரந்தங்களுக்குச் சமனாகத் தூக்கிப்பிடித்து வாதாட முற்படுவதையும் பார்க்கிறோம். தீனின் பாதுகாப்பை விட தனது சுயநலத்தையும் தன்மானத்தையும் பாதுகாக்க, எத்தகைய இழிசெயலையும் அவர்கள் செய்யப் பின் நிற்பதில்லை என்பதைத்தான் இது நிரூபிக்கிறது.
1960 இல் இலங்கை வந்த அல்லாமா அபுல்ஹஸன் அலிநத்வி அவர்கள் கொழும்பு கொள்ளுப்பிட்டி பள்ளிவாயலில் (அதுதான் அன்றைய மர்கஸ்) ஜுமைராத்தில் பேசும் போது
'ஏ தப்லீக்காரரே! ஆறு நம்பருக்கு அப்பால் உள்ள விசயங்களையும் படியுங்கள்' என்றார்கள். இந்த அறிவுரையை அமுல் படுத்த தப்லீக்கின் உறுப்பினர்கள் தயாரில்லை என்பதுடன் ஆறு நம்பர் என்ற பங்கருக்குள் விழுந்து, மூர்ச்சையுறும் 'லேபல் தீன் தவளைகளாகவே இறுதிவரை இருப்போம் என பிடிவாதமாகவும் இருக்கின்றனர். அத்துடன் பிரதி வெள்ளிக்கிழமை இரவு தோறும் பிரதேச ரீதியான 'ஜுமேராத்' இரவுகளில் அங்கு குழுமியிருக்கும் நூற்றுக்கணக்கான மக்களுக்கு எத்தகைய செய்தி சொல்லப்படுகின்றது என்பதையும் நோக்குவது சிறந்தது. உண்மையில் இஸ்லாத்திற்கு அப்பாற்பட்ட கப்சாக்களும் கீறல் விழுந்த ஒலிப்பேழையாய் தூசிதட்டிய ஆதிகாலப் புராணங்களுமே, அங்கு மீட்டப்படுகின்றது. (சில உலமாக்களின் சொற்பொழிவு தவிர) அந்த இரவுகளில் வந்து கூடும் சமூகத்திற்கு தப்லீக் புதிதாக எத்தகைய அறிவையும் தேடலையும் கொடுப்பதில்லை என்பதுடன் அத்தகைய ஒன்று கூடலில் தான் சகோதர இயக்கங்களுக்கெதிராக சதியாலோசனைகளும் சிலரால் தீட்டப்படுகின்றது.
சுன்னத் என்றவுடன் குறிப்பிட்ட நடை, உடை, பழக்கவழக்கங்கள்தான் என்ற மாயையிலிருந்து விடுபட வேண்டியதும் காலத்தின் தேவையாகும்.
முக்கியமாக இலங்கையில் செயற்படும் பிற தஃவா இயக்கங்களுடன் இறுக்கமான உறவினையும் தொடர்பினையும் வளர்த்துக் கொள்ள முனைய வேண்டும். தப்லீக்கை சர்வதேச பயங்கரவாதிகள் என 'ஜனஉய' சிங்களப்பத்திரிகை தாக்குதல் நடத்திய போது அவற்றுக்கெதிராக போர்க்குரல் எழுப்பியது சகோதர இயக்கங்கள்தான் என்பதை தப்லீக் மறந்திருக்காது. அடிக்கடி சகல உறுப்பினர்களையும் ஒன்றிணைத்து சகோதர இஸ்லாமிய தஃவா இயக்கங்களின் நிகழ்வுகளில் பங்கு கொள்ளச் செய்வதன் மூலம் மௌலானாவின் வேணவாபோல் அன்பையும் ஆதரவையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். தப்லீக் இயக்கத்தின் சமூகமயப்படுத்தலையும், பாமர அங்கீகாரத்தையும் துஷ்பிரயோகம் செய்து அதற்கு அபகீர்த்தியை ஏற்படுத்த முனையும் தப்லீக் வேடதாரிகளை அதன் இயக்க நடவடிக்கையிலிருந்து முற்றாக இடைநிறுத்துவதன் மூலம் தப்லீக் அதன் பெயரை தக்க வைத்துக் கொள்ள முனைய வேண்டும்.
சமூகப்பணிகள் கல்வி நடவடிக்கைகள் போன்ற பொதுப்பணிகளில் ஈடுபடுவதுடன் கலாச்சார விழுமியங்களை பேணும் கலை நிகழ்வுகளிலும் தப்லீக் தன்பங்களிப்பை செலுத்த முன்வர வேண்டும். தப்லீக் தான் இட்டுக் கொண்ட விலங்கினை உடைத்து புதிய உலகுடன் ஐக்கியமாகி மறுமலர்ச்சிகொண்ட முற்போக்கு இயக்கமாக மாற்றிக் கொள்ள ஆவன செய்ய வேண்டும்.
ஷிர்க்கும் பித்அத்தும் மலிந்திருக்கும் மௌட்டீக சமுகத்தை தூய்மையான இஸ்லாமியப் பிரசாரத்தின் மூலம் ஆற்றுப்படுத்த வேண்டிய கடப்பாடும் அதற்குண்டு. அதன் தலைமைத்துவம் சுயநலன் கருதியும் இயக்கவாதம் பேசியும் இத்தகைய மறுமலர்ச்சிக்கு தடையாக உள்ளது குறைந்தபட்சம் சமூகப்புனரமைப்பில் ஈடுபட்டுள்ள சகோதர இயக்கங்களை எதிர்காமல் இருக்க முடியாதா?
நடமாடும் பல்கலைக்கழகங்கள் என மார்தட்டிக் கொள்ளும் தப்லீக் ஒரு நாற்பது நாளில் பயிற்றுவித்த ஆன்மீகப் பயிற்சியினை ஆராயும் போது ஏமாற்றமே மிஞ்சுகிறது. வெறும் திக்ர், தொழுகை, தியானம் மட்டுமா இபாதத்?
இலங்கை முஸ்லிம்கள் எதிர் கொள்ளும் காதியாணி, ஷீயா, வஹ்ஜதுல்வுஜுத், கபுறு வணக்கம் முஸ்லிம்களின் கல்விப் பாரம்பரிய வளர்ச்சி, அரசியல் சுரண்டல்கள், சமூக நோய்கள் பற்றிய விழிப்புணர்வு ஆகிய எத்துறையாயினும் அவற்றை தப்லீக் அலட்சியப்படுத்தியே வருகின்றது.
தப்ஸீர், ஹதீஸ், பிக்ஹ் கலைபற்றிய கருத்தரங்குகள், பயிற்சிகள் சமூகத் தொண்டு எதிலும் பட்டுக்கொள்ளாமல் இதுவெல்லாம் இஸ்லாத்தின் கொள்கைக்கு அப்பாற்பட்ட அனுஷ்டானங்கள் என்ற தவறான கணிப்பீடு அனுமதிக்க முடியாத வரலாற்றுத் துரோகமாகும்.
இன்னும் சில சிந்தனைகளை முன்வைத்து இச்சிறுநூலை முடிக்கலாம் எனக் கருதுகின்றேன். நமது தவறு யாதெனில் மார்க்கத்தை இயக்க ரீதியாக கூறுபோட்டுக் கொண்டதாகும். குறிப்பிட்ட இயக்கம் ஒரு குறிப்பிட்ட துறையில்தான் தஃவாச் செய்ய வேண்டுமென்ற விதியினை மீறி முழுமையாக இஸ்லாமியப் பிரசாரத்தை முன்னெடுத்துச் செல்லும் திடசங்கற்பம் நமக்கேற்பட வேண்டும்.
சன்மார்க்கம் என்பது தனிமனிதனினதும் அவன் சார்ந்த சமூகத்தினதும் தியாக சிந்தனையிலிருந்து தான் விரிவடைகிறது. வலியுறுத்த விரும்புவது, தப்லீக்கின் தியாகம் அர்ப்பணிப்பு போன்றவற்றுடன் ஒன்றுபட்டு, பிற இயக்கங்களும் சாதாரண மக்களுடன் தங்களை ஐக்கியப்படுத்திக் கொள்ள கடுமையாக உழைக்க வேண்டும்.
பள்ளியைத் தளமாக கொண்டியங்க தப்லீக் அவர்களுக்கு எவ்வித இடையூறும் செய்யாமல் இருக்க ஆவண செய்ய வேண்டும். எனவே தப்லீக் பிற சகோதர இயக்கத்தை அகீதாவில் ஒருங்கிணைந்த ஒரே 'தஃவா வர்க்கம்' என்பதை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.
சிற்றில் சிந்தனை மாற்றங்கள் கருத்து வேறுபாடுகள் ஒரு சக முஸ்லிடமிருந்து தன்னை விடுவித்துக் கொள்வதற்குரிய நியாயமான காரணங்களாகா. கலிமாவின் கொடியின் கீழ் திரண்டிருக்கும் இம்மாபெரும் உம்மத்தை நமது குறைமதியின் தவறன கணிப்பீட்டினால் தள்ளிவைத்தல் மிகப்பெரிய பாவமாகும்.
கொள்கையினாலும் இலட்சியத்தினாலும் ஒன்றுபட்ட சகோதர இயக்கமொன்றின் உள்ளார்ந்த செயற்பாடுகளை தப்லீக் ஜமாஅத் உணர்ந்து செயலாற்ற வேண்டியது அவசியமெனக் கருதுகின்றேன். மறுமைக்கான நீண்ட பயணத்தில் அல்லாஹ்வின் திருப்பொருத்தம் ஒன்றைக் குறிக்கோளாக கொண்ட தஃவா இயக்கங்களின் அகவய செயற்பாடுகளை தப்லீக் நிராகரிக்கவோ வன்முறையின் மூலம் அவற்றின் பணிகளை அடக்கி ஒடுக்கவோ அதற்கு எத்தகைய தார்மீகக் கடமையும் கிடையாது. தீமையாயினும் அதைத்தடுக்கும் அணுகுமுறைகள் குறித்து நபியவர்கள் குறிப்பிடுவதை நாம் கவனிக்க வேண்டும்.
பிற இயக்கத்தினரைவிட தன்னை சகல முனைவுகளிலும் மிகப் பெரிய மகானாக ஒருவன் கற்பணித்துக் கொள்வதன் வெளிப்பாடுதான் இயக்க அராஜரகமாகும்.
எனவே, தப்லீக்கின் புத்தி ஜீவிகள், அறிஞர்கள், உலமாக்கள் சகல தரப்பினரையும் தாழ்மையுடன் வேண்டுவது என்னவெனில் "நடுநிலையாக சிந்தியுங்கள்". விமர்சனங்கள் ஆலோசனைகளை அங்கீகரித்து இயக்கத்தை நெறிப்படுத்துங்கள். அது ஒன்றுதான் தப்லீக்கின் வளர்ச்சியை மேம்படுத்தும். குறுகியவாத சிந்தனைப் போக்கிலிருந்து நெகிழ்ந்து தஃவாப் பணியை பன்முக சிந்தனைத் தெளிவுடன் முன்னெடுத்துச் செல்ல தப்லீக் நீண்ட காலம் உழைக்க வேண்டியுள்ளது என்பது மட்டும் வெள்ளிடை மலை.
முஸ்லிம்கள் யாவரும் ஒற்றுமையாக ஒரே ஜமாஅத் சமூகமாக வாழவேண்டும என்பதே அல்லாஹ் மற்றும் அவனது தூதர் அவர்களின் கட்டளையாகும். முஸ்லிம்கள் பிளவுபட்டு வேற்றுமையைக் கற்பித்துக் கொள்வதை அவர்கள் வன்மையாக கண்டித்துள்ளார்கள்.
நல்ல விஷயங்களிலும் அல்லாஹ்வுக்கு அடிபணிந்து நடப்பதிலும் நீங்கள் ஒருவரோடொருவர் ஒத்துழையுங்கள். பாவமான காரியங்களிலும், சண்டை சச்சகரவுகளிலும் நீங்கள் ஒருவர் மற்றவருடன் ஒத்துழைக்க வேண்டாம் (அல்குர்ஆன் 5:2)
அன்பு, பற்று, பாசம் என்பதில்தான் முஸ்லிம்கள் ஒரே உடலைப் போன்றவர்கள். உடலின் ஏதாவது ஓர் உறுப்புக்கு நோய் ஏற்பட்டால் அதன் எல்லா உறுப்புக்களுமே உறக்கமின்றியும் காய்ச்சலால் பீடிக்கப்பட்டும் கஷ்டத்தை ஏற்றுக் கொள்கின்றன. (அல் ஹதீஸ்)
ஒரு கட்டடத்தின் ஒரு பகுதி அதன் மற்றப் பகுதிகளை தாங்கிக் கொள்வதுபோல் ஒரு மூஃமின் மற்ற முஸ்லிமுக்கு பக்கபலமாக இருப்பான் என்று கூறிய நபி ஸல் அவர்கள் தங்கள் விரல்களை இறுக்கமாக கோர்த்துக் காட்டினார்கள்.
மேலே கண்ட நபிமொழிகள் உணர்த்துவது போல புரிந்துணர்வு சகோதரத்துவம், கட்டுப்பாடான அமைப்பு என்பன முஸ்லிம்கள் மத்தியில் காணப்படுவது அவசியமாகும். இவ்விதமான சூழலை ஏற்படுத்த முயற்சிப்பதே இஸ்லாமிய இயக்கங்கள் அமைப்புக்கள் என்பவற்றின் தலையாய கடமையாகும். ஏனெனில் முஸ்லிம் சமூக அமைப்பும் அதுநிலைப்பதற்கு துணைபுரியும் சூழலும் இல்லாதவிடத்து இஸ்லாமிய ஷரிஅத் சட்டங்களை பின்பற்றி முழு அளவில் வாழ்வது சாத்தியமற்றது.
நீங்கள் தீனை இஸ்லாமிய வாழ்க்கை முறையைப் பூரணமாக நிலை நாட்டுங்கள் அதில் (பல பிரிவுகளாகப்) பிரிந்து விடாதீர்கள் என்று இஸ்லாமிய சகோதரத்துவம் ஐக்கியம் என்பன பற்றி அல்குர்ஆனில் பல இடங்களில் வலியுறுத்தப்பட்டிருப்பதன் நோக்கம் "இவையன்றி இஸ்லாத்தை பூரணமாக பின்பற்ற முடியாது" என்பதை உணர்த்துவதாகும்.
எனவே, சமூக ஒருமைப்பாடு ஐக்கியம் என்பவற்றில் தப்லீக் கரிசனை கொள்ள வேண்டும். மிகப் பயங்கர வீழ்ச்சியையும், தோல்வியையும் எதிர்கொண்டு நீச்சலடிக்கும் தப்லீக் ஜமாஅத் திறந்த மனதுடன், சமூக ஒற்றுமையை பேணிக் கொள்ள வேண்டும்.
இன்றைய நிலைப்பாட்டிலிருந்து தப்லீக் தன்னை விடுவித்துக் கொள்ளாமல் இதே பிற்போக்குத்தனத்தில் செல்லுமாயின் தப்லீக் என்ற பெயரைத் தவிர வேறொன்றும் வரலாற்றில் எஞ்சி நிற்காது என்ற எச்சரிக்கையை அது கவனத்திற் கொள்ளட்டும். பல நூற்றுக்கணக்கான மக்களின் ஆன்மீக வறுமைக்கு தப்லீக்கின் உலமாக்கள் அல்லாஹ்விடம் பதில் சொல்லியாக வேண்டும்.
ஆதலால் நீங்கள் உங்களுக்கு இட்டுக் கொண்ட விலங்குகளை உடைத்தெறியுங்கள். இயக்கத்திலிருந்து சன்மார்க்கத்தை எடைபோடுவது இருக்கட்டும். தப்லீக்கின் கட்டுப்பாடுகளை தகர்த்தி சற்று உலகை விழித்துப் பாருங்கள். நிச்சயமாக உங்களால் பரந்த இஸ்லாமிய ஞானத்தை பருக முடியும். இது ஒன்றுதான் மௌலானா இல்யாஸ் (ரஹ்) அவர்களுக்கு தப்லீக் செலுத்தும் மகத்தான நன்றிக் கடனாகவும் இருக்கும். இறுதியாக ஒரு சிந்தனையுடன் இந்நூல் முற்றுப் பெறுகிறது.
உம்மத்தவரிடையே நியாயமான காரணங்களுக்காகவேனும் எழும் கருத்து வேறுபாடுகளை விசாலமாக்க ஒருபோதும் ஒருவரும் முயற்சிக்கக்கூடாது. ஏனெனில் இவ்வாறு ஏற்படும் ஒரே குடும்ப உறுப்பினர்களிடையே சிற்சில காரணங்களுக்காக அவ்வப்போது ஏற்படும் கருத்து வேறுபாட்டைப் போன்றதாகும். எனவே ஊர்மட்டத்திலும், மஸ்ஜிதுகளிலும், ஏனைய இடங்களிலும் ஏன் வெளிநாடுகளிலும் கூட இவ்வித பிளவுகளை வளர்க்க முயற்சிப்பது மிகவும் பெரிய கொடுமையாகும். முஸ்லிம்களாகிய எங்களுக்கிடையில் இவ்வாறு நிகழ்வது இஸ்லாத்தின் போதனைகளை விளங்கி அது தரும் பயிற்சிகளால் பயனடையாதவர்களும் எம் மத்தியில் இருக்கிறார்கள் என்பதையே காட்டுகின்றது.
இஸ்லாமாகிய சகோதரத்துவத்தின் இயல்புகள் ஒருவர் தனது சகோதரரான அடுத்த முஸ்லிமைப் பற்றி நல்லெண்ணம் உடையவராய் இருப்பது. இஸ்லாமிய சகோதரத்துவத்தின் ஆகக்குறைந்த தரமாகும். முஸ்லிம்கள் அனைவருமே ஒரே உடலைப் போன்றவர்கள். அவர்கள் ஒவ்வொருவரும் மற்றவர்களின் நலன் காக்கப் பாடுபடவேண்டும்.
இஸ்லாத்தின் எதிரிகளை இனங்கண்டு அவர்களை வெற்றிக்கொள்ள அனைவரும் ஒரே அணியாகச் செயல்பட வேண்டும் என்பன போன்ற இஸ்லாமிய போதனைகளை அறியாதவர்களும் எங்களுக்கு மத்தியில் இருக்கிறார்கள் என்பதையே இப்பிரிவுகள் உணர்த்துகின்றன.
- ஷெய்க். நாதிர் அந்நூரி -

சத்தியம் செய்யலாமா?

சத்தியம் செய்யலாமா? print Email
இஸ்லாம் - இஸ்லாமிய நூல்கள்
சனி, 06 மே 2006 06:29
ஆசிரியர் : கே. எம். முகம்மது முகைதீன் - கணனியாக்கம் : S. B. பாத்திமா ருக்ஷானா

அனைத்து மக்களிடமும் நேர்ச்சை செய்தல் எப்படி வழக்கமாக உள்ளதோ, அது போல் சத்தியம் செய்தலும் உள்ளது. தன்னை, தான் கூறும் வார்த்தைகளில், செய்யும் செயல்கள் உண்மையானவன் தான் எனக் காட்டிட இறைவன் மீது சத்தியமாக! என் தாயின் மீது சத்தியமாக! என் கண் மீது சத்தியமாக! இந்த வேதத்தின் மீது சத்தியமாக! என் குழந்தை மீது சத்தியமாக! என்று பல்வேறு முறைகளில், பலர் சத்தியம் செய்வர். சிலர் குழந்தைகளை தரையில் போட்டு அதை தாண்டி சத்தியம் செய்வர். இது போன்ற சத்தியம் செய்யும் பழக்கத்தில் முஸ்லிம்களும் விதிவிலக்கல்ல. குர்ஆன் மீதும், அன்னத்தின் (உணவின்) மீதும், அல்லாஹ் ரசூலுக்கு பொதுவில் என்றும், சத்தியம் செய்தல் இப்படி பலவிதமாக முஸ்லிம்களிடம் உள்ளன. இந்த சத்தியம் செய்யும் விஷயமாக இஸ்லாம் என்ன சொல்கிறது? என்பதை குர்ஆன் ஹதீஸ் ஒளியில் காண்போம்.

சத்தியம் செய்தல் ஆதி காலம் முதல் தொன்று தொட்டு வரும் பழக்கங்களில் உள்ளதாகும். இது மனிதனின் இயற்கை குணாதிசயங்களில் ஒன்றாகவும் உள்ளது. தான் கூறும் வார்த்தைகளை அம்மக்கள் நம்ப மறுக்கிறார்களே என்பதற்காக, இறுதியில் இதன் மீதாவது சத்தியம் செய்து நம்பச் செய்வோம் என்று கருதி, சத்தியம் செய்வதுண்டு, அல்லது சில விஷயத்தை வலுப்படுத்துவதற்காக சத்தியம் செய்வதுண்டு. சில அத்தியாவசிய தேவைகளுக்காக சத்தியம் செய்வதை இஸ்லாம் வலியுறுத்துகிறது.

உதாரணமாக ஒருவன் பொருளை மற்றொருவன் அபகரித்துக் கொண்டான். பொருளைப் பறி கொடுத்தவனிடம் போதிய சான்று இல்லை. சாட்சிகள் இல்லையாயின் பொருளை தன் பொருள் தான் என உறுதிப்படுத்த சத்தியம் செய்யச் சொல்கிறது இஸ்லாம்.

எமன் நாட்டில் உள்ள நிலத்தில் எனக்கும் இன்னொருவருக்கும் வழக்கு இருந்தது. நான் நபி (ஸல்) அவர்களிடம் இந்த வழக்கை கொண்டு சென்றேன். உன்னுடையதுதான் என்பதற்கு உன்னிடம் ஆதாரம் உண்டா? எனக் கேட்டார்கள். நான் இல்லை என்றேன் அப்படியானால் உன்னுடைய எதிரி (யின் கைவசத்தில் அந்த நிலம் இருப்பதால்) அது தன்னுடையதே என்று சத்தியம் செய்யக் கோருவதே வழி என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்படியானால் அவர் சத்தியம் செய்யட்டும் என்று நான் கூறினேன்.
அறிவிப்பவர் :- அஷ்அஸ் (ரலி), நூல் :- முஸ்லிம்

இதுபோன்ற மிக அவசியமான சந்தர்ப்பங்களில் சத்தியம் செய்வதை இஸ்லாம் அனுமதித்தாலும், சில ஒழுங்கு முறைகளை இதில் வலியுறுத்துகிறது.

சத்தியம் செய்யும் முறை!

      சத்தியம் எந்தப் பொருள் மீது வேண்டுமானாலும் எவர் மீது வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலையை இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கிறது. அல்லாஹ் மீது மட்டுமே சத்தியம் செய்யக் கட்டளையிடுகிறது.

      ஒருவர் அல்லாஹ் அல்லாத (மற்ற)வை மீது சத்தியம் செய்தால் அவர் காஃபிராகி விட்டார் என்று நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர் :-  இப்னு உமர் (ரலி), நூல் :- அபூதாவூத், திர்மிதீ, ஹாகிம்

      ஒருவர் சத்தியம் செய்தால், அல்லாஹ் மீது தவிர சத்தியம் செய்ய வேண்டாம் என்று நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர் :- இப்னு உமர் (ரலி) நூல்கள் :- புகாரி, முஸ்லிம்

      அல்லாஹ்வைக் கொண்டே தவிர சத்தியம் செய்யாதீர்கள் என்று நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர் :- அபூஹ{ரைரா (ரலி) நூல்கள் :- அபூதாவூத், நஸயீ, இப்னுஹிப்பான், பைஹகீ

      உமர் (ரலி) அவர்கள் தன் தந்தையைக் கொண்டு சத்தியம் செய்வதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள், நிச்சயமாக அல்லாஹ் உங்கள் தந்தைகள் மீது சத்தியம் செய்வதைத் தடை செய்து விட்டான். ஒருவர் சத்தியம் செய்தால், அவர் அல்லாஹ்வைக் கொண்டே சத்தியம் செய்யட்டும். அல்லது மவுனமாய் இருக்கட்டும்| என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் :- இப்னு உமர் (ரலி) நூல்கள் :- முஸ்லிம், அஹ்மத், நஸயீ

      ஒரு யூதப் பெண் நபி (ஸல்) அவர்களிடம் வந்து கஃபாவின் மீது சத்தியமாக|என்றும், அல்லாஹ்வும் நீங்களும் நாடினால்.... என்று உங்களை நோக்கி உங்கள் தோழர்கள் கூறுகிறார்கள். (இதன் மூலம்) நீங்கள் இணை வைக்கிறீர்கள் என்று கூறினார்கள். இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள் கஃபாவின் ரப்பின் மீது சத்தியமாக என்று கூறும்படியும் அல்லாஹ்வும் நாடி, அதன் பின் நீங்களும்  நாடினால்..|என்று தம்மை நோக்கி கூறும் படியும் அவர்களுக்கு (ஸஹாபாக்களுக்கு) கட்டளையிட்டார்கள்.

அறிவிப்பவர் :- குதைலத் பின்த் ஸைஃபீ (ரலி) நூல்கள் :- அஹ்மத் நஸயீ, இப்னுமாஜா

      ஒருவர் தான் சத்தியம் செய்யும் போது, லாத் உஸ்ஸா||வை (மக்கா காஃபிர்களின் தெய்வங்களை) கொண்டு சத்தியம் செய்தால் அவர் (ஈமான் இழந்து விட்டார். எனவே) லாயிலாஹ இல்லல்லாஹ்| என்று கூறட்டும்! என்று நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர் :-  அபூஹ{ரைரா (ரலி) நூல் :- புகாரி

      சிலைகள் மீதும், உங்கள் தந்தைகள் மீதும் சத்தியம் செய்யாதீர்கள் என்று நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர் :- அப்துர் ரஹ்மான் இப்னு ஸமுரா (ரலி) நூல் :- முஸ்லிம்

      மேற்கொண்ட ஹதீஸ்கள் யாவும் இறைவன் பெயர் கொண்டு மட்டுமே சத்தியம் செய்ய அனுமதிக்கிறது. எனவே இன்று முஸ்லிம்கள், அந்த அவ்லியா மீது சத்தியமாக! இன்ன நாதா மீது சத்தியமாக! குழந்தை மீது சத்தியமாக! உணவு மீது சத்தியமாக! என்றெல்லாம் சத்தியம் செய்கின்றனர். அல்லாஹ் அல்லாத எந்தப் பொருளின் மீது சத்தியம் செய்தாலும் அவை கூடாது. அப்படிக்கூறி சத்தியம் செய்வது மாபெரும் குற்றம் என்பதையும் அறியலாம். எனவே அல்லாஹ்வின் பெயர் கூறி மட்டுமே சத்தியம் செய்ய வேண்டும்.

குர்ஆன் மீது சத்தியம் செய்தல்!

      குர்ஆன் என்பது இறைவன் இறக்கிய திருமறை தானே அதில் சத்தியம் செய்தால் தவறா? என்ற எண்ணம் தவறாகும். இன்றும் கூட நீதிமன்றங்களில் முஸ்லிம்கள் விசாரிக்கப்படும் போது, அதற்கு முன்பாக குர்ஆன் மீது சத்தியம் செய்யச் சொல்லி கேட்கிறார்கள். இவ்வாறு குர்ஆன் மீது சத்தியம் செய்வது கூடாததாகும். ஆனால் குர்ஆனை இறக்கியருளிய ரப்பின் மீது சத்தியமாக!|| என சத்தியம் செய்வது தவறில்லை. இதை மேற்கண்ட குதைலத் பின்த் ஸைஃபீ (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ் மூலம் நாம் விளங்கிக் கொள்ளலாம்.

நபி (ஸல்) அவர்களின் சத்தியம்!

நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு சத்தியம் செய்துள்ளார்கள் என்பதை பின்வரும் ஹதீஸ்கள் தெளிவு படுத்துகின்றன.

நபி (ஸல்) அவர்கள் இதயங்களை புரட்டுபவன் மீது சத்தியமாக! என்ற வார்த்தையை சத்தியம் செய்யும் போது அதிகம் குறிப்பிடுவார்கள்.

அறிவிப்பவர் :- இப்னு உமர் (ரலி) நூல்கள் :- இப்னுமாஜா, புகாரி, திர்மிதீ, அபூதாவூத் நஸயீ

முஹமமத் (ஸல்) சமுதாயமே! அல்லாஹ்வின் மீது சத்தியமாக நீங்கள் (மட்டும்) நான் அறிந்தவற்றை அறிந்தால் அதிகம் அழுவீர்கள். குறைவாக சிரிப்பீர்கள்|| என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் :- ஆயிஷா (ரலி) நூல் :- புகாரி

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தோம். உமர் (ரலி) அவர்கள் கையை, அவர்கள் பிடித்திருந்தார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் இறைத்தூதர் அவர்களே! என்னை நான் விரும்புவது தவிர, மற்ற எல்லா விஷயங்களையும் விட, நீங்கள் எனக்கு மிக விருப்பமானவர்கள்! என்று கூறினார்கள். ~அப்படி அல்ல! என் உயிர் எவன் கையில் இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக| உம்மையும் விட நான் உமக்கு மிக விருப்பம் உள்ளவராக இருக்க வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதும், அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீங்களே எனக்கு என்னை விட மிக விருப்பமானவர்கள்! என்று உமர் (ரலி) கூறினார்கள். உமரே! இப்போது தான் (நீர் சரியாகக் கூறினீர்) என்று நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர் :- அப்துல்லா இப்னுஹிஷாம் (ரலி) நூல் :- புகாரி

நபி (ஸல்) அவர்கள் சத்தியம் செய்துள்ளபடி அல்லாஹ்வின் மீதும் அல்லது அல்லாஹ்வின் தன்மைகள் மீதும் சத்தியம் செய்யலாம் என்பதை அறிய முடிகிறது.

நபி (ஸல்) அவர்களிடம் ஒரு கிராமவாசி வந்து இஸ்லாத்தை பற்றி சில கேள்விகள் கேட்டனர். நபி (ஸல்) அவர்கள் அதற்கு விளக்கம் தந்தார்கள். அதன் பின் அந்த கிராமவாசி இதைவிட நான் எதனையும் அதிக மாக்கவும் மாட்டேன் குறைக்கவும் மாட்டேன்|என்று சொன்னார். இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள் இவருடைய தந்தையின் மீது சத்தியமாக! இவர் உண்மை கூறினால் வெற்றியடைந்து விட்டார் என்று குறிப்பிட்டார்கள். (ஹதீஸ் சுருக்கம்)

அறிவிப்பவர் :- தல்ஹா இப்னு உபைதுல்லா (ரலி) நூல் :- முஸ்லிம்

இந்த ஹதீஸ்படி நபி (ஸல்) அவர்கள் ~தந்தை மீது சத்தியம் செய்து உள்ளார்களே? என்ற கேள்வி எழலாம். அல்லாஹ்வை தவிர வேறு எதன் மீது சத்தியம் செய்தல் கூடாது என்று ஹதீஸ்கள் உள்ளதாலும் பின்வரும் ஹதீஸை கவனிக்கும் போது மேற்கூறிய சம்பவம் தடை செய்யப்படுமுன் நடந்தது என்பது தெளிவாகிறது.

ஒரு யஹ{தி நபி (ஸல்) அவர்களிடம் வந்து நீங்களும் அல்லாஹ்வுக்கு இணை வைக்கிறீர்கள் (எவ்வாறெனில்) கஃபாவின் மீது ஆணையாக! என்றெல்லாம் குறிப்பிடுகிறீர்களே? என்று கேட்டார். அதன்பின் நபி (ஸல்) அவர்கள் (கஃபாவின் மீது ஆணையாக! என்று சொல்லாமல்) கஃபாவின் இறைவன் மீது ஆணையாக! என்று கூறும்படி தோழர்களுக்கு கட்டளை யிட்டனர். (ஹதீஸின் சுருக்கம்)

அறிவிப்பவர் :- குதைலா (ரலி) நூல்கள் :- அஹ்மத், நஸயீ, இப்னுமாஜா.

ஆரம்ப காலங்களில் அல்லாஹ் அல்லாதவை மீது சத்தியம் செய்யும் பழக்கம் இருந்து பின்பு அது மாற்றப்பட்டது என்பதற்கு இந்த ஹதீஸ் சான்றாகும்.

அல்லாஹ்வின் சத்தியம்

அல்லாஹ்வின் மீதும் அவனது தன்மைகள் மீதும் தான், மனிதர்கள் சத்தியம் செய்ய வேண்டும். நபி (ஸல்) அவர்களும் அப்படித்தான் சத்தியம் செய்துள்ளனர் என்பதை மேலே குறிப்பிட்டோம். ஆனால் அல்லாஹ்வோ, காலம், குதிரை, அத்தி, ஸைத்தூன், ஸினாய்மலை, மக்கா, முற்பகல், இரவு, சூரியன், சந்திரன், வானம், பூமி, ஆத்மா, நட்சத்திரம், மறுமை நாள் இவைகள் மீது சத்தியம் செய்து 85, 86, 91, 93, 95, 100, 103 ஆகிய அத்தியாயங்கள் மற்றும் பல வசனங்களில் பல்வேறு செய்திகளை கூறுகிறான்.

திருமறை நாள்வழிகாட்டி என்பது அனைத்து முஸ்லிம்களும் ஒப்புக் கொண்ட உண்மையாகும். திருமறையி;ல் அல்லாஹ் செய்து காட்டியபடி நாம் ஏன் அல்லாஹ் அல்லாத மற்றவைகள் மீது சத்தியம் செய்யக்கூடாது|| என சிலர் கேட்கின்றனர்.

இதற்குரிய பதிலை அறியும் முன், ஒரு முக்கிய விஷயத்தை விளங்கிக் கொண்டோமானால், பதில் தெளிவாக தெரிந்து விடும். சத்தியம் செய்தல் என்பது நம்மை விட உயர்வான ஒன்றைக் காட்டி அதன் மீது சத்தியமாக என்று கூறுவதாகும். இதன்படி நம்மை விட உயர்ந்த வல்ல அல்லாஹ்வின் மீது தான் நாம் சத்தியம் செய்ய வேண்டும். ஆனால், அல்லாஹ்வை விட வேறு சிறந்த பொருள் இல்லை. எனவே அல்லாஹ்வே சூரியன், சந்திரன் போன்ற தன் படைப்புகள் மீது சத்தியம் செய்கிறான் என்றால் சத்தியம் செய்தபின் கூறப்படும் சட்டத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தவே, இந்த அபூர்வ படைப்பின் மீது சத்தியம் செய்து கூறுகிறேன். கியாமத் நாள் உண்மை என நம்புங்கள்|என்று குறிப்பிடுகிறான். இருப்பினும் இறைவன் கூறும் பின்வரும் வசனமே இதற்கு பதிலாகவும் அமையும்.

அவன் செய்பவைபற்றி எவரும் அவனைக் கேட்க முடியாது. ஆனால், அவர்கள் தாம் (அவர்கள் செய்யும் செயல்கள் பற்றி) கேட்கப்படுவார்கள். (அல்குர்ஆன்:21:23)

எல்லா வல்லமையும் நிறைந்த அல்லாஹ்வின் செயல் பற்றி அவனது அடிமைகளான நாம் கேள்வி எழுப்ப இயலாது. எனவே, அவனது தூதர் நபி (ஸல்) அவர்கள் இறைவனல்லாத எந்த பொருள் மீதும் சத்தியம் செய்ய அனுமதிக்காததால் நாமும், அல்லாஹ்வின் மீதும் அவனது தன்மைகள் மீதும் மட்டும் சத்தியம் செய்ய வேண்டும்.

சத்தியத்தின் பலவகை

சத்தியம் செய்வது என்பது செய்யத் தகுதியுள்ள செயல் முறைதான், என்றாலும் கூட எதற்கெடுத்தாலும் சத்தியம், எதைப் பேசினாலும் சத்தியம் என்ற நிலை இருக்கக்கூடாது. இவ்வாறு அடிக்கடி சத்தியம் செய்யும் பழக்கம் பொய்யனிடம் மட்டும் இருக்கும் என்பது மறுக்க முடியாத உண்மையாகும். இதுபற்றி அல்லாஹ்வும் கூறுகிறான்.

மேலும் இழிவு உள்ளவனான, அதிகம் சத்தியம் செய்யும் ஒவ்வொருவனுக்கும், வழிபடாதீர். (அத்தகையவன்) குறை கூறித்திரிபவன் - கோள் சொல்லிக் கொண்டு நடப்பவன். (அல்குர்ஆன்: 68:10,11)

எனவே, எந்த செயல் செய்தாலும், எந்தப் பேச்சு பேசினாலும் சத்தியம் செய்தல் என்பது கூடாது.

சத்தியத்தின் வகைகளை பற்றி தெரிந்து கொண்டு விட்டால் சத்தியத்தை அடிக்கடி பயன்படுத்தும் செயல் குறைய வாய்ப்புண்டு. வீண் சத்தியம், பொய் சத்தியம், முறையான சத்தியம் என்று மூன்று நிலைகளாக சத்தியத்தை பிரிக்கலாம்.

1. வீண் சத்தியம்

அடிக்கடி சிலர், அல்லாஹ்வின் மீது சத்தியமாக நான் இதைத் தருகிறேன், செய்கிறேன் என்று வார்த்தைக்கு வார்த்தை சத்தியம் செய்ய வேண்டும் என்ற எண்ணமின்றி@ அல்லது கோப நிலையில் சத்தியத்திற்கு பயன்படும் வார்த்தைகளை கூறுவர்.

சத்தியம் என்பது இதைச் செய்தால் ஒழிய நம்ப மாட்டார்கள் என்ற நிலையில் மட்டுமே செய்யப்பட வேண்டிய ஒன்றாகும். எனவே சத்தியம் செய்வதற்கு நிய்யத்|அவசியமாகும்.

நிச்சயமாக! செயல்கள் அனைத்தும் எண்ணங்கள் கொண்டே (கவனிக்கப்படும்) என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் :- உமர் (ரலி) நூல் :- புகாரி

எனவே சத்தியம் செய்யும் எண்ணம் (நிய்யத்) இன்றி செய்யப்படும் சத்தியம் அனைத்தும் வீண் சத்தியங்களாகும். இவைகள் சத்தியம் என்ற கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது.

(யோசனையின்றி எண்ணமின்றி) நீங்கள் செய்யும் வீணான சத்தியங்களுக்காக அல்லாஹ் உங்களை குற்றம் பிடிக்கமாட்டான். (அல்குர்ஆன்: 2:22,5:89)


2. பொய் சத்தியம்

தவறான செயல்களை செய்து, அதை உறுதிப்படுத்த சத்தியத்தை பயன்படுத்துவதும், பொய்யான ஒரு செய்தியைக் கூறி அது உண்மையானதுதான் என கூற சத்தியத்தை பயன்படுத்துவதும், பிறர் பொருளை அபகரிக்க, ஒருவன் மீது அவதூறு கூற, பொய்க்குற்றச் சாட்டுசுமத்த, இப்படி தவறான காரியங்களை நிறைவேற்ற சத்தியத்தை பயன்படுத்துவதும் கூடாது. இது போன்ற நிலைகளில் பயன்படுத்தப்படும் சத்தியமே பொய் சத்தியம்| எனக்கூறப்படும். அல்லாஹ்வினாலும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களாலும் கடுமையாக கண்டிக்கப்பட்ட செயல்பாடுகளில் இதுவும் ஒன்றாகும்.

“ஒரு சமூகத்தார் மற்றொரு சமூகத்தாரை விட அதிகமானவர்களாக இருக்கிறார்கள் என்றால், நீங்கள் உங்கள் சத்தியங்களை உங்களுக்கிடையில் ஏமாற்றுவதற்கு சாதங்களாக்கிக் கொள்ளாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் உங்களை சோதிப்பது எல்லாம் இதன் மூலமாகத்தான்...” (அல்குர்ஆன்:16:92)

நீங்கள் உங்களுக்கிடயில் (சதி, துரோகம்) ஆகியவற்றுக்கு காரணமாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். (அவ்வாறு செய்தால்) நிறைபெற்ற உங்களுடைய பாதம் சறுகி விடும். (அல்குர்ஆன்:16:94)

யார் அல்லாஹ்விடத்தில் செய்த வாக்குறுதியையும், தம் சத்தியப்பிரமாணங்களையும் அற்ப விலைக்கு விற்கிறார்களோ, அவர்களுக்கு நிச்சயமாக மறுமையில் (யாதொரு) நற்பாக்கியமும் இல்லை. அன்றியும், அல்லாஹ் அவர்களுடன் பேசமாட்டான். இன்னும் மறுமையில் அவர்கள் (கருணையுடன் பார்க்கவும் மாட்டான், அவர்களை (பாவத்தை விட்டும் பரிசுத்தமாக்கவும் மாட்டான், மேலும் அவர்களுக்கு நோவினை மிக்க வேதனையும் உண்டு.

(அல்குர்ஆன்:3:77)

(பொய்) சத்தியம் செய்து ஒரு முஸ்லிமுடைய உரிமையை யார் பறிக்கிறானோ, அவனுக்கு அல்லாஹ் நரகத்தை விதியாக்கி விடுவான். மேலும் சுவர்க்கத்தை அவனுக்கு ஹராமாக்கி விடுவான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் :- அபூஉமாமா (ரலி) நூல்கள் :- முஸ்லிம், அல்முஅத்தா (மாலிக்)

ஒரு முஸ்லிமுடைய பொருளைப் பறித்துக் கொள்வதற்காக யார் பொய்யான சத்தியம் செய்கிறாரோ, அவர் மீது அல்லாஹ் கோபமடைந்த நிலையில் தான் அவர் அல்லாஹ்வை சந்திப்பார் என்று நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர் :- அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது (ரலி) நூல் :- முஸ்லிம்

அல்லாஹ்விற்கு இணை வைத்தல், பெற்றோரை நோவினை செய்தல், (அநீதமாக) கொலை செய்தல், பொய் சத்தியம் செய்தல் ஆகியவை பெரும் பாவங்களாகும் என்று நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர் :- அப்துல்லா இப்னு உமர் (ரலி) நூல் :- புகாரி

3. முறையான சத்தியம்

அடுத்து, முறையான சத்தியத்தை நாம் விளக்கவே தேவை இல்லை. முறையான சத்தியம் செய்ய தடை இல்லை என்பதற்கு போதிய சான்றுகளாக நாம் மேலே குறிப்பிட்ட வசனங்கள், ஹதீஸ்களே அமைந்துள்ளன. எனவே, ஒருவர் பொய் சத்தியம் செய்யக்கூடாது. எதற்கெடுத்தாலும் சத்திய வார்த்தைகளை கூறவும் கூடாது. பயன்படுத்தினால் அவை வீண் சத்தியங்களாகத் தான் கருதப்படும்


சத்தியத்தை முறிக்கலாமா?

அவசியமான சந்தர்ப்பங்களில் சத்தியம் செய்யும் நிலை ஏற்பட்டால் சத்தியத்தில் உறுதியாக இருக்க வேண்டும். சத்தியத்தை இடையில் முறிந்திட தடை வந்துள்ளது.

இன்னும் நீங்கள் அல்லாஹ்வின் பெயரால் செய்யும் உடன்படிக்கையை நிறைவேற்றுங்கள். அல்லாஹ்வை சாட்சியாக வைத்து சத்தியம் செய்து, அதனை உறுதிப்படுத்திய பின்னர் அச்சத்தியத்தை முறிக்காதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிவான். நீங்கள் (சத்தியத்தை முறிக்கும் விசயத்தில் நூலை நூற்று நன்கு முறுக்கேறிய பின் அதை துண்டு துண்டாக்கிவிடும் (மதிகெட்ட) பெண்ணுக்கு ஒப்பாகி விடாதீர்கள்.

(அல்குர்ஆன்:16:91,92)

ஒரு முறை நபி (ஸல்) அவர்கள் தங்கள் மனைவியரை ஒரு மாதத்திற்கு நெருங்க மாட்டேன் என்று சத்தியம் செய்து விட்டு பின்பு 29வது நாளிலேயே மனைவியாரிடம் செல்கிறார்கள். அருகிலிருந்தோர், இறைத்தூதர் அவர்களே! ஒரு மாதம் முடியவில்லையே! என்று கூற இம்மாதம் 29 நாள் மட்டும் தான்|| என்று நபி (ஸல்) கூறினார்கள் என்ற கருத்தில் அனஸ், உம்முசலமா, இப்னு அப்பாஸ் (ரலியல்லாஹ{ அன்ஹ{ம்) அவர்களால் அறிவிக்கப்பட்டு புகாரி, முஸ்லிம், அஹ்மதில் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஹதீஸ்படி சத்தியத்தை நிறை வேற்றுவதில் நபி (ஸல்) அவர்களுக்கும், அவர்களின் தோழர்களுக்கும் இருந்த ஆர்வத்தை நம்மால் விளங்க முடிகிறது.

இருப்பினும் சில வேளைகளில் சத்தியத்தை முறித்திட இஸ்லாம் அனுமதிக்கிறது. அதாவது ஒருவன், ~நான் இதைத் தவிர வேறு எதையும் வாங்க மாட்டேன்| என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து கூறி விடுகிறான். அதன் பனி அதை விட சிறந்த ஒரு பொருள் அவன் வசம் கிடைக்கிறது. என்றால், தான் செய்த சத்தியத்தை முறித்து விட்டு, அதற்கான பரிகாரம் செய்துவிட்டு, சிறந்த பொருளை வாங்கிக் கொள்ளலாம். அனைத்து விஷயங்களுக்கும் சத்தியத்தை முறிப்பதில் நாம் கூறிய இந்த உதாரணம் பொருந்தும்.

இன்னும் நீங்கள் அல்லாஹ்வைக் கொண்டு சத்தியம் செய்வதனால் நீங்கள் நற்கருமங்கள் செய்தல் இறைபக்தியுடன் நடத்தல், மனிதர்களிடையே சமாதானம் செய்து வைத்தல் போன்றவற்றில் அவனை ஒரு தடையாக செய்து விடாதீர்கள். அல்லாஹ் (அனைத்தையும்) கேட்பவனாகவும், அறிபவனாகவும் இருக்கிறான்.(அல்குர்ஆன்:2:224)

அல்லாஹ் உங்களுடைய சத்தியங்களை (சிலபோது தக்க பரிகாரங்களுடன்) முறித்து விடுவதை உங்களுக்கு ஏற்படுத்தியிருக்கிறான். மேலும், அல்லாஹ் உங்கள் எஜமானன், மேலும் அவன் நன்கறிந்தவன், ஞானம் மிக்கவன். (அல்குர்ஆன்:66:2)

நீ (ஒரு விஷயத்தில்) சத்தியம் செய்து அதைவிட சிறந்ததாக மற்றொன்றை நீ அறிந்தால், அந்த சிறந்ததை செய், உன் (முறித்த) சத்தியத்திற்கு பரிகாரம் செய்! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் :- அப்துர்ரஹ்மான் இப்னு ஸமுரா (ரலி) நூல் :- புகாரி, முஸ்லிம், நஸயீ, அபுதாவூத்

உங்களில் ஒருவர் சத்தியம் செய்து, அதைவிட சிறந்ததாக மற்றொன்றை கண்டால் அவர் சத்தியத்திற்கு பரிகாரம் செய்து விட்டு, அந்த சிறந்த செயலை செய்யட்டும் என்று நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர் :-அதீ இப்னு ஹாதிம் (ரலி), அபூஹ{ரைரா (ரலி) நூல் :- முஸ்லிம், அஹ்மத், திர்மிதீ

எனவே, சத்தியம் செய்தால் அதில் உறுதியாக இருக்க வேண்டும். சில நேரங்களில் அவசியம் என்ற நிலை இருப்பின் முறித்துவிடுவதில் தவறில்லை.

சத்தியத்தை முறித்தால்....!

ஒருவர் தான் செய்த சத்தியத்தை முறித்திட வேண்டியது ஏற்பட்டால், அவர் தான் செய்த சத்தியத்திற்கு பரிகாரமாக, பத்து ஏழைகளுக்கு உணவளித்தல் வேண்டும். அல்லது அவர்களுக்கு ஆடைதர வேண்டும். அல்லது ஒரு அடிமையை விடுதலை செய்ய வேண்டும். இம்மூன்றுக்கும் இயலாது எனில்@ மூன்று நாட்கள் நோன்பு நோற்க வேண்டும்.

சத்தியத்தின் பரிகாரமாவது, நீங்கள் உங்கள் குடும்பத்தினருக்கு கொடுத்து வரும் ஆகாரத்தில் நடுத்தரமானதை - பத்து ஏழைகளுக்கு அளிக்க வேண்டும். அல்லது (அவ்வாறே) அவர்களுக்கு ஆடையளிக்க வேண்டும். அல்லது ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும். (இதற்கான வசதியை ஒருவன் பெற்றிருக்காவிட்டால், மூன்று நாட்கள் நோன்பு நோற்க வேண்டும். நீங்கள் சத்தியம் செய்யும் பொழுது@ இதுவே உங்கள் சத்தியங்களின் பரிகாரமாகும். உங்கள் சத்தியங்களை (முறித்து விடாமல்) பேணிக்காத்துக் கொள்ளுங்கள். நீங்கள் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் பொருட்டு அவன் தன் அத்தாட்சிகளை - ஆயத்களை உங்களுக்கு இவ்வாறு விளக்குகின்றான். (அல்குர்ஆன்:5:89)

சத்தியம் செய்யும் எண்ணத்துடன், அத்தியாவசிய சந்தர்ப்பங்களில் செய்யப்படும் முறையான சத்தியங்களை முறித்தால் தான் பரிகாரம் காண வேண்டும். அது அல்லாத மற்ற வீணான சத்தியங்களை செய்தால் பரிகாரம் தேவை இல்லை. இருப்பினும் பொய் சத்தியம் செய்தால் இறைவனிடம் தவ்பா| செய்வதைத் தவிர வேறு வழி இல்லை. காரணம் அது மிகப் பெரும் பாவமாகும்.

(யோசனையின்றி) நீங்கள் செய்யும் வீணான சத்தியங்களுக்காக அல்லாஹ் உங்களைக் குற்றம் பிடிக்க மாட்டான். ஆனால், உங்களுடைய இதயங்கள் (வேண்டுமென்றே) சம்பாதித்துக் கொண்டதைப் பற்றி உங்களைக் குற்றம் பிடிப்பான். இன்னும் அல்லாஹ் மன்னிப்பவனாக பொறுமையுடையவனாக இருக்கிறான். (அல்குர்ஆன்:2:25)

சத்தியங்களில் வீணானவற்றிற்காக அல்லாஹ் உங்களைக் குற்றம் பிடிக்கமாட்டான். எனினும் (ஏதாவது ஒன்றை) உறுதிப்படுத்தச் செய்யும் சத்தியங்களுக்காக (அவற்றில் தவறினால்) உங்களைப் பிடிப்பான்.(அல்குர்ஆன்:5:99)

பொய் சத்தியம் செய்தல் பெரும் பாவமாகும் என்று நபி (ஸல்) கூறியதாக இப்னு உமர் (ரலி) கூறுகிறார்கள்.

(புகாரியில் உள்ளதின் சுருக்கம்)

இன்ஷா அல்லாஹ் கூறினால்....!

சத்தியம் செய்யும் போது ஒருவர், அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இன்ஷா அல்லாஹ் இதைச் செய்வேன் என்று இன்ஷா அல்லாஹ் (அல்லாஹ் நாடினால்) என்ற வார்த்தையை சேர்த்துக் கூறினால் அவர், தான் செய்த சத்தியத்திற்கு மாற்றமாக நடந்து கொண்டாலும் தவறில்லை. அவர் சத்தியம் செய்தாலும் கூட இன்ஷா அல்லாஹ் கூறியதால், அல்லாஹ் நாடவில்லை@ அதனால் தான் அதைச் செய்யவில்லை| என்று கூறிவிட வாய்ப்புண்டு.

நிச்சயமாக| என் மனைவியிடம், ஒரே இரவில் (உடலுறவுக்காக) சுற்றி வருவேன். அவர்கள் ஒவ்வொருவரும் இறைவழியில் பாடுபடும் குழந்தையை பெற்றெடுப்பர் என்று அல்லாஹ்வின் நபி சுலைமான் (அலை) அவர்கள் கூறினார்கள். (அருகிலிருந்த) அவரது தோழர் அல்லது மலக்கு, இன்ஷா அல்லாஹ் என்றும் கூறுங்கள் என்று கூறினார். ஆனால் சொல்ல மறந்துவிட்டார்கள். இருப்பினும்@ அந்த பெண்களில் ஒருவரைத் தவிர மற்ற எவரும் குழந்தை பெறவில்லை. (அந்த ஒரு பெண்ணும்) ஊனமுற்ற குழந்தையைப் பெற்றார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறிவிட்டு, சுலைமான் (அலை) அவர்கள் மட்டும் இன்ஷா அல்லாஹ் கூறி இருந்தால் சத்தியத்தை முறித்தவராக ஆகமாட்டார்கள். அவருக்கு அவரது தேவையில் ஒரு வழி இருந்திருக்கும் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் :- அபூஹ{ரைரா (ரலி) நூல் :- முஸ்லிம்